Tamil Baby Names

Female – Tamil Baby Names [அழகிய தமிழ் – பெண் குழந்தைகள் பெயர்]

Male – Tamil Baby Names [அழகிய தமிழ் – ஆண் குழந்தைகள் பெயர்]

பொதுவாகவே நாம் ஒருவரை பார்க்கும்போது இன்ன மொழி பேசும் இனத்தார் என ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள முடியும் அல்லது நம் மொழி.

மொழி பேசும் இனத்தவர் அல்ல என்று எவரும் ஊகிக்க முடியும். ஏட்டில் பெயர் பட்டியலை பார்க்கும்போதும் இன்ன பெயரைக்கொண்டவர் இன்ன மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதையும் சொல்லிவிடலாம். ஆனால் தமிழரை மாத்திரம் பெயரை வைத்து (பிற மொழி தாங்கியவர்)தமிழர் என்று இனம் காணமுடியாமல் உள்ளது.மற்றும் நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக கேட்டால் பிற மொழி இனத்தவர் பெயரை தாங்கி இருப்பார்.இந்த குறைப்பாடு பிறமொழி இனத்தவரிடமில்லை.தன்னை மறந்தும் தமிழ் பெயர்களை யாரும் தங்களுக்குள் சூட்டிக்கொள்வதில்லை.ஒவ்வொரு மொழிக்குடும்பத்தினரும் தம்மொழி உணர்வுடன் தம் நிலைப்பாட்டில் பிடிப்புடன் இருக்கும்வேளை தமிழர்கள் மட்டும் தமிழ் மொழி இனவுணரற்ற `இலையிலேயே உள்ளனர்.ஏற்கனவே மணிப்பவள நடையால் தமிழ் சீரழிந்ததை சூரிநாராயண சாஸ்திரி தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று மாற்றி அடிக்கோளினாலும் ,வேதாச்சலம் என்னும் மறையடிகளாரால் நிலை நிறுத்தப்பட்டது.மொழிஞாயிறு தேவநேய பாவாணர் தனது ஐம்பது ஆண்டுக்கால சீரிய மொழி ஆராய்ச்சினால் உலக மூத்தக் குடி தமிழன் அவன் பிறந்தகம் கடலில் மூழ்கி போன குமரிக்கண்டம் என்றும்,தமிழ் பிற மொழி துணையின்றி இயங்கவல்லது ,சமற்கிறதம் முதல் ஏனைய மொழிகளில் தமிழின் பங்களிப்புள்ளது என்று தம் மொழி ஆராய்ச்சினால் மெய்ப்பித்துள்ளார்.

தமிழர் அரசர்கள் ஆரியரிய இந்துமதக் கோட்பாட்டில் மதி மயங்கி

அவர்களுக்கு இடம் கொடுத்ததால் அதன் பிறகு தமிழர் வாழ்வில் தாழ்நிலைக்கு வித்திட்டது.சேர,சோழ,பாண்டிய வலுமிக்க அரசுகள்

இருந்தக் காலத்தில் தி.பி. இரண்டாம் நூற்றாண்டு இறுதியில்

இளங்கோவடிகள் குறிப்பிட்டது போல் கண்ணகி தனியாக மதுரையை

அழித்தால் என்பது நம்புவதற்கில்லை.இதில் ஆரியரின சூழ்ச்சியும்

கலந்திருக்க வேண்டும்.இது ஆராய்ச்சிக்குரியது. ஏனெனில் இதன் பிறகுதான் களப்பிரர் தமிழகத்தை தம் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.

ஏறக்குறைய முன்னூற்றயம்பது ஆண்டுகள் இவர்கள் பிடிக்குள் தமிழகம் இருந்த்து.இவர்க்கு பின் பல்லவர்கள் ஆட்சியை கைப்பற்றினர்.ஆக ஏழ

நூறு ஆண்டுகள் தி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் அரைததமிழான இராஜராஜ சோழன் கைப்பற்றுவரையில் அவர்கள் ஆட்சியில் தமிழகம்

இருந்தது.அதன்பின் பாண்டியர் எழுச்சிப் பெற்றாலும் மாறவர்மன் சுந்தர

பாண்டியன் தன் பதவ ஆசையால் , தம் மைந்தனை ஆட்சிக்கட்டிலிருந்து

இறக்க வடநாட்டிலிருந்த மாலிக்காப்பூரின் உதவியை நாடியதன் பலன்

மாறவர்மன் சுந்தர பாண்டியன் மைந்தன் கொல்லப்பட்டான். சுந்தரப்பாண்டியன் அரசனான்.ஆனால் மாலிக்காப்பூர் தமழகத்து செல்வங்களை கொள்ளையடித்துசென்றான்.இதுமட்டுமல்லாது மேலும் இரண்டாம் முறையிம் தமிழகம் வந்து கோயில்களிலும் நுழைந்து ஏராளமான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.அத்தோடு முகமதியர் தமிழகத்தில் வேறூன்ற வழிவகுத்து,இதன் பின் ஓய்ளர்கள் அவர மூலம் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டு பாண்டியர ஆட்சிக்கும்முடிவு கட்டப்பட்டது.ஆக கன்னடர்,தெலுங்கர்,மராட்டயர்,முகமதியர் ஆட்சிகள் ஏற்பட்டது.அதன்பின் போர்த்துகீசியர், ஒல்லாந்தர், பிரஞ்சுக்காரர், ஆங்கைலேயர் ஆட்சிகளுக்குட்டு இன்று இந்தி ஏகாதிக்கம் மற்றும் சிங்கள பேரினவாதிக்கன் கிழ் தமிழர்கள் அகப்பட்டு அல்லறுகின்றனர். இதை குறிப்பிடுவதற்கு காரணம் கடந்த ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக இவ்ர்கள் ஆட்சியில் தமிழ் ஆட்சிக்கட்டிலில் இல்லை.

அது இன்றும் தொடர்கிறது.இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்

தமிழகத்தில் அனைவருக்கும் தமிழ்ப்பெயர்கள்.அதன் பிறகு களப்பிரர் முதல் தமிழ் பெயரை யாரும் இட்டுக்கொள்ளாத அவல நிலையைக் காண்கிறோம்.

குறிச்சொற்கள்: குழந்தை பெயர்கள், அழகிய தமிழ் பெயர், நாகரீகமான பெயர், அழகான பெயர், பொருள்நிறைந்த தமிழ் பெயர்கள், தூயத் தமிழ் பெயர்கள், Tamil Baby Names – Boys & Girls. பெண் குழந்தைகள், உயிரெழுத்து

Close

Disclaimer

We are not affiliated or endorsed by any celebrity or their management. All images