Movie: Ravanan
Actors: Vikram, Aishwarya Rai, Prithviraj, Prabhu, Karthik, Priyamani
Director: Mani Ratnam
Producer : Maniratnam
Camera : V. Manikandan, Santosh Sivan
Music director : A.R Rahman
Distribution : BIG Pictures
Singers : Vijay Prakash, Mustafa Kutoane, Keerthi Sagathia, A. R. Rahman, A. R. Reihana, Tanvi Shah, Benny Dayal, Shreya Ghoshal , Karthik, Mohammed Irfan, Shankar Mahadevan, Anuradha Sriram
Language: Tamil
First things first. ‘Raavanan‘ is not what everyone thought so. It isn’t a contemporary adaptation of Ramayana. Instead, it’s the Valmiki’s epic meeting Shakespeare’s Othello. The master filmmaker Mani Ratnam has apparently taken inspiration from these greatest works to narrate a gripping story in his own inimitable style.
‘Raavanan’, right from the day it went to floors, has been rising a huge hype and hoopla. And expectations soared a never before high before its release. Does the end product lived up to all? To this question, the answer is- With a huge star cast chipping in with their best, mesmerising shots, crisp editing and riveting music, ‘Raavanan’ ends up satisfying the appetite of the masses.
All credits to Mani for rendering a movie that is engrossing and entertaining from the very word go. With Vikram around, his job seems to have simplified. The duo end up giving sheen and shine to every scene, which unfolds at good pace. With the best of best in the business like A R Rahman (music) and Santosh Sivan (cinematography) joining hands with Mani, the battle seems to have been won even before it began.

If Mani can be considered the captain of the team, it’s Vikram who helps make all his dream a reality. As Veera, he comes out with one of his finest performances. He is not just ruthless, but at times emotional, sentimental and humourous. Veera is an epitome of emotions, which Vikram has brought out well.
Aishwarya Rai Bachchan is not far behind. She catches up with Vikram frame-to-fame. As a bewildered Ragini, who is kidnapped by a mighty man, she brings out the right emotions. Worked hard for her role, running in jungles, sliding from cliff. Prithviraj as Superintendent of Police looks stylish and apt for role.
The storyline is nothing new to Tamil cinema. It is basically a revenge drama. But what is entertaining is the way Mani has made the script and screenplay. Man of many accomplishments, he has ensured that it has class and mass elements in them.
The movie begins with Veera (Vikram), a dreaded don and his men fighting cops and taking away Ragini (Aishjwarya Rai). Ragini’s hubby Dev (Prithviraj) is Superintendent of Police in Thirunelveli district who is already behind Veera who has over 60 cases pending against him. But he is ala Robinhood in the forest for his kind heart.
The cat and mouse begins between them. Dev is joined by a DSP (John Vijay) and they enter the forest. They get the help of a former forest guard Gnanaprakasam (Karthik), who knows the nook and corner of the jungle.

Meanwhile, Veera keeps shifting Ragini from one place to another with his elder brother Singam (Prabhu) and younger sibling Sakkarai (Munna) helping him. Veera is also helped by the villagers in every act of his. Ragini even attempts to end her life, but Veera saves her. In the meantime, Veera and his brothers manage to catch hold of the DSP and physically harass and torture him.
Angered at their act, Ragini pours angry words. When she questions as to why he has kidnapped her and is abusing a cop, an agitated Veera narrates the reason for all his acts. In a flashback, it is revealed that the death of his sister Vennila (Priyamani) had provoked him to do so.
Vennila along with her brothers lead a happy life until her marriage is fixed. On the day of her wedding, Dev and his men enter the wedding hall and attempts to bump off Veera, who along with his brothers flee from the place hoping that Vennila would be protected by her husband. However fearing life, the bridegroom runs away leaving her. Her modesty is outraged and she is forced to end her life. Brothers then vow to avenge Dev.
Now cut to present, Ragini starts to sympathise Veera. The hot chase by cops for Veera continues until Gnanaprakasam prefers to come all alone and broker peace with Veera. In return, Sakkarai goes to meet Dev and agrees to end everything. But he is killed.
Now it is all up to an angered Veera to go hammer and tongs and teach a lesson to cops. At one point of time, Veera allows Ragini to go with her husband. But Dev makes sure Ragini meets Veera once again. What is his motive and what happened to Veera is the climax.
It has been a gripping narration from the very first frame. After ‘Sethu’ and ‘Pithamagan’, another side of Vikram’s acting credentials is exposed. As Veera, he is at free touching almost every aspect of acting.

Aishwarya is pretty and comes out with her best. Prithviraj and Priyamani have taken the challenge of being part of a Mani Ratnam’s film and delivered their best. John Vijay walks away doing a negative role.
Karthik as forest guard fits the role to T. His expression and body language are something interesting. Equally attracting is Prabhu. Munna as Vikram’s younger sibling gets a meaty role to play, which he utilises well.
The shots especially in the huge jungle, water falls, hot chase and stunts have been canned at their best. The tone and texture is amazing. All credits go to Santosh Sivan. Rahman’s music is the highlight and it gets more sheen with the way it has been shot. ‘Veera Veera…’ and ‘Usure Pogudhey…’ still chime in our hearts even as we walk out of theatres.
Running for little more than two hours, ‘Raavanan’ will go down in the history of Tamil cinema as one of the finest and best. Cheers Madras Talkies and Mani Ratnam for rendering a class movie that is racy and entertaining too.

Making of Raavanan
http://www.youtube.com/watch?v=3zNqV8rf4os

Raavanan Review
http://www.youtube.com/watch?v=YdeGRg7yHWI
Raavanan Movie Making – Interview
http://www.youtube.com/watch?v=uhLkVPrSngY
http://www.youtube.com/watch?v=SnHvZhEJOKw






Click here to View more information


























இரண்டேகால் மணித்தியாலங்களுக்குள் வேற்று உலகில் சஞ்சரிக்க ஆசையா? முதல்ல ராவணன் திரைப்படத்தை போய்ப்பாருங்க.
இதுதான் ‘ராவணன்’ கதை என்பது முன்னரே எல்லோருக்கும் தெரியும் என்பதால் திரைக்கதை மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, மணிரத்தினம் கிட்டத்தட்ட அந்த எதிர்பார்ப்பை 90 வீதம் பூர்த்தி செய்துள்ளார் என்றுதான் சொல்வேன். அர்ஜுனன் இருக்க கர்ணனை ஹீரோவாக்கி வெற்றிகண்ட மணிரத்தினம் இந்தத்தடவை ராமன் இருக்க ராவணனை ஹீரோவாக்கி இதிலும் ஜெயித்துள்ளார் என்றே கூறுவேன்.
கதை,திரைக்கதை,வசனம் மற்றும் இயக்கம்.
விக்ரமின் தங்கை பிரியாமணியின் சாவிற்கு காரணமாக இருந்த போலிஸ்அதிகாரி பிரித்விராஜ்ஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துகிறார், கடத்திய இடத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யாராய் மீது தாபம் ஏற்படுகிறது. இறுதியாக பிரித்விராஜ் தன் மனைவியை மீட்கிறாரா? விக்ரம் ஐஸ்வர்யா மீது கொண்ட தாபம் என்னவாகிறது? என்பவற்றுக்கான விடையை வெள்ளித்திரையில் காணுங்கள்.
ஊருக்கே தெரிந்த கதை, அதை விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்திவிராஜ்,பிரபு என்னும் நான்கு முக்கிய காதாபாத்திரன்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை அணுகாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்தினம். முதல்ப்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை போல வேகம் அதிகமில்லாவிட்டாலும் எந்த இடத்தலும் அலுப்பை தரவில்லை. மணிரத்தினம் இம்முறை ஆயுத எழுத்தில் விட்ட தவறை விடவில்லை, அதாவது திரைக்கதையில் ‘இடியப்பம்’ புளியாமல் பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார்.
வசனங்கள் ஏனைய மணிரத்தினம் படங்களை போலல்லாது அதிகமாகவே பேசப்படுகின்றது. விக்ரம்,பிரபு பேசும் வசன உச்சரிப்பு வழமையான மணி படங்களில் இருந்து வேறுபட்டாலும் ரசிக்க வைக்கிறது. விக்ரமின் தம்பியாக வருபவர் இறந்தபின்னர் வரும் காட்சிகளிலும், அவர் இறந்தவுடன் இடம்பெறும் கலவரத்திலும் அழுத்தம் போதவிலையோ என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படி ஓரிரு இடங்களை தவிர்த்துப் பார்த்தால் தான்தான் இன்னமும் தமிழ்சினிமாவின் இயக்குனர்களுக்கு ‘தளபதி’ என்பதை மீண்டுமொருதடவை மணிரத்தினம் நிரூபித்துள்ளார் என்று அடித்துக் கூறலாம்.
நடிப்பு
விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். உடல்மொழி , வசன உச்சரிப்பு என்பவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார். நடிப்பு , அக்ஷன், பாடல்கள் என ராவணனில் விக்ரம் தனது வேலையை நூறு சதவிகிதம் சிறப்பாக செய்துள்ளார் என்பதை விக்ரமை பிடிக்காதவர்களும் ஒத்துக்கொள்வார்கள்.
ஐஸ்வர்யாராய் அழகு பற்றி எழுதுவது சின்னப்புள்ளை தனமானது என்பதால் படத்தில் அவரது பங்கை பார்த்தால் விக்ரமிற்கு போட்டியாக நடிப்பிலும் விக்ரமைவிட அதிகமாக ரிஸ்க் காட்சிகளிலும் ஐஸ்வர்யாராய் சிறப்பாக நடித்துள்ளார். மணிரத்தினம் படங்களில் நடிப்பதாலோ என்னவோ தெரியவில்லை இன்றைய நடிகைகள் அனைவரையும்விட ஐஸ் அழகையும் தாண்டி சிறப்பானவாராக தெரிகிறார், பிரித்விராஜ்சுடன் ‘கள்வரே’ பாடலில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, காரணம் பொறாமையா? இல்லை ஐஸ் அபிசேக்பச்சனின் மனைவி என்பது படத்தையும் தாண்டி மனதில் பதிந்ததாலோ என்னவோ தெரியவில்லை.
பிரபு வெளுத்து வாங்கியிருக்கிறார், டைமிங் காமடியிலும் ஹீரோயிசத்திலும் தூள் கிளப்புகிறார், இப்படியான கதாபாத்திரங்களுக்கு இன்றைய ஒரே தெரிவு பிரபுதான். கார்த்திக்கிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக காட்சிகள் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்தளவிற்கு பங்களித்திருக்கிறார்.பிரித்திவிராஜ் கதாபத்திரத்திற்கு வேறுயாரவது நடித்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.தனது நடிப்பில் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் படங்களினை இவர் ஞாபகப்படுத்துகிறார். அரவாணியாக வரும் வையாபுரி, விக்ரமின் தம்பியாக வருபவர் தவிர ஏனைய யாரும் மனதில் நிற்கவில்லை. இன்றைய தேதியில் ரஜினியை விட திரையரங்கில் அதிக கைதட்டு வாங்குமளவிற்கு செல்வாக்கான ஒரே ஒருவர் ‘நித்தி’ புகழ் ரஞ்சிதாதான், இவர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் விசில் வானை பிளக்கிறது.
இசை, ஒளிப்பதிவு கலை மற்றும் எடிட்டிங்
ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலமடைந்திருந்தாலும் ‘கோடுபோட்டா’ தவிர வேறெந்தப்பாடலும் படத்தில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, பாடல்கள் போலவே ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது. இசைபோலவே எடிட்டிங்கில் சேகர் பிரசாத்தும் காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார், திரைக்கதை வேகத்திற்கு இவருக்கு ஒரு ஒ.. போடலாம். தொங்குபாலமும், காட்டுக்குள் போடப்பட்ட குடில்களும் கலையின் உச்சக்கட்ட சிறப்பு, ஒன்றும் தேவையில்லை கலையை(Art) பற்றி ஒரேவார்த்தையில் சொல்வதேனால் “சார் தேசியவிருதுக்கு தயாராக இருங்க”.
படத்தின் இன்னுமொரு நாயகன் இல்லையில்லை நாயகர்கள் சந்தோஸ்சிவனும் மணிகண்டனும், யார்யார் எந்தெந்த காட்சிகளை படமாக்கினார்கள் என்று தெரியவில்லை ஆனால் அத்தனை காட்சியளிலும் ஒளிபதிவு சூப்பரோ சூப்பர், அண்மைக் காலங்களில் இப்படி ஒரு ஒளிப்பதிவை எந்தத் தமிழ்ப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. குறிப்பாக ஐஸ்வர்யாராய் மலையிலிருந்து குதிக்கும் காட்சியை விபரிக்க வார்த்தைகளே இல்லை. ஒளிப்பதிவு பிரேமுக்கு பிரேம் அருமை,என்னவென்று சொல்வது? சொல்லப்போனால் ஒளிப்பதிவு நூற்றுக்கு நூற்றிப்பத்து வீதம் சிறப்பாக இருந்ததென்றே சொல்லாம்.
இப்படி எல்லாமே சிறப்பாக இருந்தால் குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். படத்தில் சில குறைகள் இருக்கலாம், இருக்கலாமென்ன நிச்சயம் இருக்கும், ஆனால் அவற்றை கண்டு பிடிப்பதற்கு நான் இன்னும் குறைந்தது இரண்டு தடவையாவது படத்தை பார்க்கவேண்டும்.
மொத்தத்தில் ராவணன் – வசீகரம்
ஊருக்கே தெரிஞ்ச கதை, அதைப்பற்றி எதுக்கு நான் திரும்பவும் சொல்லிக்கிட்டு.. இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறார் இயக்குனர் மணிரத்தினம்.
மணிரத்னம்.
ஆறு வருடங்களுக்கு பின் நேரடி தமிழ்ப் படம் . ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார். புராணக் கதைகளை இவ்வளவு தைரியமாக படமாக்குவதில் மணிரத்தினத்திற்கு நிகர் எவரும் கிடையாது. படத்திற்கு சுகாசினி வசனம் எழுத்தியுள்ளார். மற்ற மணிரத்தினம் படங்களை போல் அல்லாமல் வசனங்கள் கொஞ்சம் அதிகம்.அவருடைய கதையும், கதாப்பாத்திரங்களும் இயக்குனருடைய உழைப்பை எடுத்துச் சொல்கின்றன.
விக்ரம்.
முரட்டு உடம்பு, கோபம் நிறைந்த கண்கள், சோகம், வெறி என தனித்து நிற்கிறார் விக்ரம். தங்கையின் கதை கேட்டு அழுவது, தனக்குள் இருக்கும் காதலை முகபாபத்தால் வெளிப்படுத்துவது, காதலை சொல்லும் விதம் என எல்லா இடங்களிலும் உடல் மொழியிலும், முகபாபத்திலும் கலக்குகிறார்.
ஐஸ்வர்யா ராய் பச்சன்.
வயது கூடக் கூட அழகும் அதிகமாகிக் கொண்டிருக்கும் அழகுச் சிலை. அழகு, நளினம், கம்பீரம் கொண்ட ஐஸ்வர்யா ராய் கண்ணுக்குள் நிற்கிறார். மலையிலிருந்து குதிக்கும் காட்சி, மலையேறும் காட்சி என எல்லா காட்சிகளிலும் விக்ரமுக்கு இணையாக நடித்திருக்கிறார். பிளாஷ் பேக்கில் வரும் பாடல் காட்சியில் கிறங்க வைக்கிறார்.
சந்தூஷ் சிவன் & v . மணிகண்டன்.
உண்மையாகச் சொன்னால் இவர்கள் தான் படத்தின் நாயகர்கள்.படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை வெளுத்து கட்டியிருக்கிறார்கள். படத்தின் 90 % காட்சிகள் ஈரப்பதமாக காண்பிக்கப்படுகிறது. (கண்டிப்பாக பார்ப்பவர்கள் கண்ணுக்கும் குளிர்ச்சியாகத் தான் இருக்கும்.) முதல் காட்சியில் ஹீரோ மலையிலிருந்து குதிக்கும் காட்சி, ஐஸ்வர்யா ராய் குதிக்கும் காட்சி, பெட்ரோல் டாங்கில் சீனி கொட்டும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி என ஒவ்வொரு காட்சியிலும் பிரேமுக்கு பிரேம் செதுக்கியிருக்கிறார்கள். உசுரே போகுதே பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை. படத்தின் வெற்றிக்கு இவர்களின் ஒளிப்பதிவு ஒரு முக்கிய காரணமாக அமையும்.
பிரித்விராஜ்.
இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத பிரித்விராஜ். கொடுத்த கதாப்பாத்திரத்தை அருமையாக செய்த்திருக்கிறார். ரொமான்டிக் பாடல் காட்சியில் பொறாமைப் பட வைக்கிறார்.
ப்ரியாமணி.
படத்தில் பத்து நிமிடம் தான் வந்தாலும் மனதில் பதிகிறார்.தனக்கு நேர்ந்த கொடுமையை விக்ரமிடம் சொல்லி அழும் காட்சி மனதை தொடுகிறது. பருத்திவீரனில் மொத படத்தில் நடித்ததை ராவனானில் பத்து நிமிடத்தில் நடித்திருக்கிறார்.
பிரபு & கார்த்திக்.
பிரபு விக்ரமின் அண்ணனாக நடித்து அசத்தியிருக்கிறார். கார்த்திக் படத்தில் சொல்லிகொள்ளும் படியான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் அருமை.
ரஞ்சிதா.
படத்தில் ரஞ்சிதா எதற்கென்றே தெரியவில்லை, ஆனால் முகம் காட்டும் போதெல்லாம் பலத்த சத்தம். (எல்லா புகழும் நித்தியானந்தாவுக்கே)
A . R . ரஹ்மான்,
அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. படத்துடன் பார்க்கும் போது மேலும் அழகாக உள்ளது. கோடு போட்டா பாட்டு மட்டுமே படத்தில் முழுமையாக வருகிறது. மற்றவை தேவைகேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ராவணன் – விஸ்வரூபம். கண்டிப்பா பாருங்க..
உலகமெங்கும் உள்ள பலகோடி இந்திய சினிமா ரசிகர்காளால் எதிர்பார்க்கப்பட்ட ராவணன் இன்று 18 ஆம் தேதி உலகின் மூலை முடுக்கெங்கும் திரையிடப்படவிருக்கிறது…(இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது நேரம் 18 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி). எந்த ஒரு பிரம்மாண்ட விளம்பரங்களுமில்லாது பிரம்மாண்டங்களின் படைப்பில் ஆர்வங்களை தூண்டிய திரைப்படம்.. மணிரத்னம்,ஏ.ஆர்.ரஹ்மான்,வைரமுத்து,விக்ரம்,ஐஸ்வர்யா பச்சன்,பிரபு,கார்த்திக் என்று பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாத கூட்டணியாக பலரைப்போலவும் எனக்கும் எதிர்பார்ப்பை தூண்டிய திரைப்படம்.
18 ஆம் தேதியே வெளியாகின்றபோதும் முதல்நாள் இரவுக்காட்சி ஒன்று VIP show என்றபெயரிலே (அதுக்கு நீ ஏன் போனீ? எண்டு கேக்காதீங்கோ. நம்மள மாதிரி ஆக்கள்தான் இப்போ VIP -விரிவு தெரியும்தானே) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் முந்தியடித்து இரண்டு நாளைக்குமுதலே பதிந்துவைத்த டிக்கெட்டுடன் திரையரங்கு போயாச்சு. படத்தைப்பற்றிய பாசிட்டிவான எதிர்பார்ப்புகள் அதிகமாவே இருந்தபோதும் அண்மைக்காலத்தில் அதிகமாக எதிர்பார்த்து VIP show போன படங்கள் ஊத்திக்கிட்டதால் என்னவோ ஒரு கலக்கம். ஆனாலும் படம் தொடங்கியதும் அந்த கலக்கத்துக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது.
ஆரம்பகாட்சியிலேயே சேறுபூசி, முறுக்கு மீசையுடன் அறிமுகமாகிறார் விக்ரம்,தொடர்ந்து அடுத்தடுத்த வினாடிகளில் ஐஸ்வர்யா ராயின் அறிமுகம் இதற்கிடையில் குழப்பமான தொடர்ச்சியற்ற காட்சிப்பிணைப்புகள் ரசிகர்மனத்தில் கதைக்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக. ஐஸ்வர்யாராயின் முதல் காட்சியிலேயே படகில் வந்து கொண்டிருக்கும் அவரை விக்ரம் படகை மோதி உடைத்து ஆக்ரோஷமாக கடத்தும் காட்சி..
. படத்தின் கதையோட்டத்தில் முற்கதை பிற்கதைகளின் இணைப்புப்பாலமாக அமையவிருக்கும் இக்காட்சியினோடு இடைநிறுத்தி எழுத்தோட்டம்… தொடர்ச்சியாக பிரம்மாண்டங்களின் பெயர்களை வீரா பாடல் இசை தூக்கி வருகிறது.. ரஹ்மான் பெயர்வந்ததும் விசில்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே பறந்தது..
தொடர்ந்து துடிப்பான சிரேஷ்ட போலிஷ் அதிகாரியாக பிரிதிவிராஜ் அறிமுகமாகிறார். போலிஷ் அதிகாரிக்கே உரித்தான கம்பீரமான உடல், வசீகரமான முகம். படத்தின் சூப்பர் ஹீரோ இவர்தானோ என்ற பிம்பத்தை மனதில் யோசிக்க வைக்குது.. அப்போது ப்ரிதிவிரஜ்கு வரும் கட்டுப்பாட்டக அறிவிப்பில் அவரது மனைவி கடத்தப்பட்டதாக சொல்லப்பட விக்ரம் கூட்டத்தை நோக்கிய ப்ரிதிவிராஜின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. இனிதான் காட்சிகளின் மசாலா கலவை, ஒரே நேரத்தில் பல சம்பவங்களின் கோர்வை, ஒரே காட்சியில் முற்கதை பிற்கதை நிகழ்கதை, ரசிகர்களை சிந்தித்து குழப்பும் காட்சிகள், சீரியஸ் நேர சிரிப்புகள் , கதை சொல்லும் காட்சிகள் என மணிரத்னத்தின் வேலை ஆரம்பமாகிறது..
‘வீரா’ பெயரில் ஒரு ஊரின் கதாநாயகன், இல்லை வில்லன், இல்லை சாக்கலேட் ஹீரோ, இல்லை கோபக்காரன் எதுவென்று தனித்து சொல்லமுடியாத, கதைகளில் இயக்குனரால் முடிவாக சொல்லப்படாத பாத்திரம்தான் விக்ரம். கொலை செய்வதற்காக கடத்தப்பட்ட ஐஸ்வர்யாராய் ஒரு காட்டு பிரதேசத்தின் நடுவே கடத்திச்செல்லப்படுகிறார். இந்நிலையில் விக்ரமின் தமையனாக இவர்களின் கூட்டத்தலைவனாக பிரபுவின் தோற்றம். அதோடு விக்ரமின் தம்பி கதாபாத்திரமும் பிளஸ் டூ வரை படித்தவராக சித்தரிக்கபடுகிறது. காட்டில் மலை உச்சியொன்றுக்கு கொண்டுவரப்படும் ஐஸ்வர்யாராய் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீராவின் துப்பாக்கி முனைகளில் நிறுத்தப்படுகிறார். ஆக்ரோஷமாய் கொலைவெறியாக பேசி சுடதயாராகும் விக்ரமை கம்பீரமும் கவர்ச்சியும் நிறைந்த வார்த்தைகளால் கட்டிபோட நினைக்கிறார். முடியாது போகவே ‘என்னுடைய உயிரை பறிக்கும் உரிமை உனக்கில்லை’ என்று சொல்லி அருவி கொட்டும் மலை உச்சியில் இருந்து கீழே சட்டென பாய்கிறார். அனைவரது உள்ளத்தையும் கப்சிப் என்று ஆகிவிட்டது. ‘அடிபாவி மவளே’ என்று சொல்லி எல்லோர் மனசும் சுர்ர்.. என புல்லரிக்கும் வகையில் மலைவழியே சறுக்கிக்கொண்டு பாய்கிறார்.
ஐஸ்வர்யாராயை தேடும் விக்ரமின் கண்களில் இறுதியாக தென்படுகிறார் ஒரு மர கிளைகளில் சிக்குப்பட்டு மயக்கமுற்றவராக. தொடர்ந்தே கீழே விழும் ஐஸ்வர்யாராயின் காட்சியை அப்படி தத்ரூபமாக படம்பிடித்திருப்பார்கள். இக்காட்சியை பார்க்கும் போதுதான் எதையும் 100% திருப்தியுடன் செய்யும் மணிரத்னத்தின் இயக்கமும், அர்பணிப்புடன் நடித்துள்ள விக்ரம் , ஐஸ்வர்யாராயின் முயற்சியும் புரிகிறது.. அந்த அர்பணிப்புக்கும் கஷ்டத்திற்கும் பல மனங்களின் சத்தமின்றிய கைதட்டலை பெற்றது அந்த காட்சி. இப்படியே சொல்லிக்கொண்டு போனால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உளறிவிடுவேன்.( அப்டினா இதுக்குமுதல் வியய் பட விமர்சனம் எல்லாம் முழுகதையையும் சொன்னீங்களே எண்டு கேக்கலாம். அது மத்தவங்களும் படத்த பார்த்து கஷ்டப்படகூடாதேண்டுறதுகாக சொல்லுறது.. ஆனா இது மத்தவங்களும் பார்த்து ரசிக்க வேண்டிய யோசிக்க வேண்டிய படம்)
தொடர்ந்து வரம் காட்சிகளில் ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியாக கார்த்திக்கின் அறிமுகம். அதுவும் சும்மா இல்ல காட்டில் ஐஸ்வர்யாராயை மீட்க தேடிவரும் ப்ரிதிவிராஜின் போலீசுக்கு மரத்துக்கு மரம் தாவி ஆட்டம் காட்டுகிறார். பின்னர் ப்ரிதிவிராஜின் விசேட அதிரடிப்படைகுழு காட்டின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்த கார்த்திக்கையும் அழைத்துக்கொண்டு புறப்படுகிறது. வழியினில் விக்ரம் விதைத்துவைத்த மர்மங்களுடனும் கார்த்திக்கின் நகைச்சுவைகளுடனும் நகர்கிறது காட்சிகள். அதேவேளை மறு புறம் ஐஸ்வர்யாராய் மேல் விக்ரமிற்கு காதல்.. அதை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் போராட்டங்கள்.. அருகில் அமிர்தமிருந்தும் அதை தொடக்கூட முடியாது தவிக்கும் விக்ரம்.. என காட்சிகள்… இடைவேளை வரையும் அதை தொடர்ந்தும்…
பின்னர் ஒரு நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு விக்ரமின் பழிவாங்கல்களுக்கான காரணங்கள் சொல்லபடுகிறது..(இப்போதுதான் ரசிகர்களுக்கும் சொல்லப்படுகிறது பிளாஷ்பாக்) ஒரு ஊரில் சந்தோசமாக வாழ்ந்துவரும் விக்ரம் குடும்பம்… அந்த ஊரில் அவவருக்கு ராவணன் என்று ஒரு பெயரும் உண்டாம்.(ராவணன் நல்லவனா கெட்டவனா??? கடைசில யோசிப்பம்) யாருக்கும் அடங்காதவன் இவன்.. அனால் அவனை அதட்டும் ஒரே ஆள் இவன் தங்கை ப்ரியாமணி.. இவர்கள் இருவருக்குமிடையிலான சம்பாசனைகளில் இயக்குனர் பாசம் ஊறிய அதட்டல் மொழிகளை பயன்படுத்தி இயல்பான உணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதே ஊருக்கு மேலதிகாரியாகவரும் பிரிதிவிராஜ் வீராவை கொல்ல திட்டம் தீட்டுகிறார். இதேவேளையில் ப்ரியாமணிக்கு திருமணம் நிச்சயிக்க படுகிறது.. திருமண நிகழ்வில் திடீரென நுழையும் பிரிதிவிராஜ் விக்ரமை துப்பாக்கியால் சுட்டுவிடவே கதையின் திருப்பங்கள் தொடங்குகிறது.. அவ்விடத்திலிருந்து ஒருவாறாக தப்பிக்க வைக்கப்படுகிறார் விக்ரம். அதனால் போலிஷ் ப்ரியாமணியை விசாரணைக்காக அழைத்து செல்கிறது. இந்நிலையில் ஒரு சம்பாசனையில் ப்ரியாமணியிடம் ப்ரிதிவிராஜின் தம்பிபோன்ற நம்பிக்கைக்குரிய போலிஷதிகாரியால் ”உன் அண்ணா எங்கு இருக்கிறான்” என கேட்க.. அதற்கு கோபபட்டு சொல்ல முடியாது என்று கூறும் ப்ரியாமணியை அவள் மூக்கை பிடித்து அதை அறுத்துவிடுவேன் என கூறுகிறார் (இக்காட்சியை நான் கூறுவதற்கு காரணம் படத்தின் ஓட்டத்தை நீங்களும் கொஞ்சம் ஊகிக்க வேண்டும் என்பதற்காக).. திரைப்படத்தின் ஒவ்வொரு வினாடி காட்சிகளும் பல விடயங்களை உணர்த்துகின்றன.. பின்னர் போலிஷ் சாவடியில் கற்பழிக்கப்படும் ப்ரியாமணி தற்கொலை செய்துவிடவே நடந்த அனைத்து சம்பவங்களுக்கும் ஐஸ்வர்யாராயின் கடத்தலுக்கும் காரணம் சொல்லப்படுகிறது..
தொடர்ந்துவரும் காட்சிகளில் கார்த்திக் ஐவர்யாரயிடம் தூது வரும் காட்சி, விக்ரமின் படித்த தம்பி அண்ணனிடம் ‘அவளை விடுவித்து மேலதிகாரியுடன் இணங்கி போவோமென்’ என்று அறிவுரை சொல்லும் காட்சி… பின்னர் சமாதானம் பேச செல்லும் விக்ரமின் தம்பியை ஏமாத்தி பிரிதிவிராஜ் கொன்று விடவே இறுதிகட்ட மோதல் நிகழ்கிறது.. அதில் விக்ரமின் கை ஓங்கிவிடவே ஐஸ்வர்யாராய் தன்கணவனை கொல்ல வேண்டாமென கெஞ்ச அதற்கு விக்ரம் ” நீ இங்கேயே இருந்துவிடுவதாக சொன்னால் உன்கணவன் உயிரை விட்டுவிடுவேன்” என சொல்ல அதற்கு ஐஸ்வர்யாராயும் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்கிறாள். வீராவும் வானத்துக்கும் தரைக்குமாய் மகிழ்ச்சியில் குதிறான்.. இறுதியில் விக்ரம் ப்ரிதிவிராஜை கொன்றார? ஐஸ்வர்யா விக்ரமுடன் சேர்ந்தாரா? என்பதை எதிர்பார்கைகளுக்கும் மேலாக சரித்திரம் பிழைக்காமல் அழகாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர்.. இதுவரை நான் திரையரங்குகளில் பார்த்த படங்களில் ராவணன் படத்துக்குதான் பட முடிவின் போதும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பார்த்திருக்கிறேன்…
இத்திரைப்படத்தின் பிளஸ் என்று சொல்லப்போனால் திரைக்கதை அமைப்பு.. அதைப்பற்றி மேலும் கதைக்க தேவையில்லை. அடுத்தபடியான முக்கிய காரணி பின்னணி இசை மற்றும் பாடல்கள்.. பாடல்கள் என்றைக்கோ வெளிவந்து பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்புகின்றன. ரஹ்மான் மீண்டும் தன்னுடைய ஆஸ்காருக்கு முந்திய இன்னிசை மழையை தூவியிருக்கிறார்.அடுத்த விசேசம் பாடல் வரிகள்..அதிலும் என்போன்றோர் வைரமுத்துவின் வரிகளை ரசித்து ரசித்து அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறோம்..
படத்தின் அடுத்த சிறப்பம்சமாக சொல்லகூடியது இயற்கைகாட்சிகளையும், சண்டைகாட்சிகளையும், முக்கியமாக மலையிலிருந்து ஐஸ்வர்யா குதிக்கும் காட்சி,தொங்குபாலம் ஒன்றில் விக்ரம் ப்ரிதிவிராஜின் இறுதிகட்ட சண்டை ஆகியவற்றை அற்புதமாக வித்தியாசமான கோணங்களில் பதிவு செய்திருக்கும் மணிகண்டன், சந்தோஷ் சிவன் ஆகியோரின் ஒளிப்பதிவு..
அடுத்து படத்தின் கதை. திரைக்கதையை தீட்டியிருபவர் மணிரத்னம். அவ்வாறாயின் கதை வான்மீகி, கம்பருக்குரியது.. அதால கதையை பற்றி ஆராய நம்மயாருக்கும் வயசோ,அறிவோ காணாது.. படத்தில் சுந்தரகாண்டம்,யுத்த காண்டம்,அயோத்திகாண்டம் அடங்கலாக அனுமன் தூது,விபீடணன் தூது என யாதும் உண்டே.
மற்றது படத்துல கைதட்டல் வாங்கிய சீன்களில ஒண்டை சொல்லாம விட்டுடன். படத்துல பிரபுவின் மனைவியாக வருபவர் நம்ம ‘காத்து வாறதுக்கு கதவ துறந்துவிட்ட நடிகை’ அவங்க வாற சீன் எல்லாமே கைதட்டலும் விசிலும் காது ஜவ்வ கிளிசுடுது. ஸ்பெசலா சொல்லபோனா ஒரு சீன்ல விக்ரமுக்கு மசாஜ் பண்ணி விடுறாங்க இவங்க அதுக்கு வந்த கதைகளை சொல்லவும் வேணுமா………அடுத்து திரைக்கதையோடு ஒட்டி அரவாணியாக வாழ்ந்திருக்கும் வையாபுரியும் படத்தில் மற்றுமொரு சிறப்பு…
மொத்தத்தில் ராவணன் மீளப்புரப்பட்ட ஒரு சரித்திரத்தின் நாயகன். ராவணன் நல்லவனா கெட்டவனா என்பதற்கான விடைகள் யாவற்றையும் இயக்குனர் ரசிகர்களை யோசிக்கும் படி செய்து விட்டார்.. இந்த சரித்திர படைப்பு இன்னொரு முறை பார்க்கப்பட வேண்டியது..பல தகவல்களை திரட்டவும்…சிந்திக்கவும்…
ராவணன் – ரொம்ப எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம்… கதைக்காக மணிரத்னம் ரொம்ப மெனக்கெடவில்லை… ராமாயணத்தின் கதை தான்…. ராமன் (?) = பிருத்விராஜ், ராவணன்(?) = விக்ரம், சீதை(?) = ஐஸ்வர்யா, அனுமார்(?) = கார்த்திக், இப்படியும் எடுத்துக்கலாம்.
காவல்துறை உயர் அதிகாரியான பிருத்விராஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துவதுடன் படம் தொடங்குகின்றது.. அதில் நனைய ஆரம்பித்த ஐஸ் அதற்கு அடுத்து படம் முழுவதும் நீரில் நனைந்து கொண்டே இருக்கின்றார்… மணிரத்னத்தின் இருட்டுக்குப் பதில் மழை இந்த படத்தில்.
ஏன் ஐஸ்வர்யாவை விக்ரம் கடத்த வேண்டும்…. அதே ராமாயணக் கதைப் படி தங்கை(சூர்ப்பனகை = பிரியாமணி)க்கு ஏற்ப்பட்ட களங்கத்துக்கு பழிவாங்க… ஐஸைக் கடத்திய விக்ரமுக்கு ஐஸ் மீது ஒரு ஈர்ப்பு உருவாக.. கடைசியில் ஐஸை விடுவிக்கிறார் விக்ரம்.. விடுதலையான ஐஸின் நடத்தைக் குறித்து பிருத்விராஜ் சந்தேகம் எழுப்ப ஐஸ் கணவனைப் பிரிந்து விக்ரமைத் தேடி வருகின்றார்…. இறுதியில் என்ன நடந்தது என்பதே டிவிஸ்ட்.
படத்தின் கதை ஓட்டம் குறித்து முன்பே அனுமானிக்க முடிந்து இருப்பதால் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் படம் ஆரம்பிக்கின்றது.. ஜெட் வேகம்.. படம் போவதே தெரியவில்லை. நல்ல இயக்கம். ( ஒருவேளை எங்க கல்ஃப் சினிமா ஆப்ரேட்டர் ‘கை’ தேர்ந்தவரோ? படம் 2 மணி நேரத்தில் முடிந்ததால் டவுட்டு.. ;-) )..
படம் முழுவதும் காட்டில் தான்.. அழகான இடங்கள்.. நல்ல ஒளிப்பதிவு. கண்ணுக்குள் குளுமை நிற்கின்றது.. காட்சிகளில் வன்முறைக் காட்சிகள் மிகக் குறைவே.. நீர்வீழ்ச்சி காட்சிகள், பாலத்தில் கடைசி சண்டைக் காட்சி, மலை உச்சி பிரமிக்க வைக்கின்றது.
விக்ரம்.. இது போல் நரம்பு புடைக்க கத்தி நடிப்பதை பல படங்களில் பார்த்தாச்சு.. அவரே சொன்னது போல் பல படங்களில் அவர் நடித்ததின் கலவை.. ஆனாலும் நிறைய உழைத்து இருக்கின்றார்.
பிருத்விராஜ்.. போலிஸ் அதிகாரி… குழந்தைத் தனமான முகத்தில் இதுவரைப் பார்த்து வந்த நமக்கு இந்த கடுமை புதுசு.. எல்லாரும் இவரை இந்த வேடத்தில் ஏற்றுக் கொள்வார்களா எனத் தெரியவில்லை.
கார்த்திக் காமெடியாக ஆரம்பித்தாலும் நல்லவேலையாக காமெடி ரோல் செய்யவில்லை. சிம்பிளாக கலக்குகின்றார். பிரியாமணி அதே கிராமத்து கில்லி… வழக்கம் போல் வண்புணர்வு செய்யப்படுகின்றார்.
பிரபு குண்டாக வருகின்றார்.. ஆரம்ப பில்டப்புகள் மட்டுமே.. ரஞ்சிதா சீனுக்கு வந்ததுமே ஒரே சத்தம் தியேட்டரில்.. அதுக்கு அப்புறம் வேலையே இல்லை… வையாபுரி பெண் வேடத்தில்… ம்ஹூம்.
சொல்ல வேண்டியவர்கள் இன்னும் இருவர்.. ஒன்று ஐஸ்வர்யா… இத்தனை வயசாகி(?)யும் இன்னும் மிரட்டுகின்றார்.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போள் இருக்கின்றது.. இரண்டே இரண்டு காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகளில் மேக்கப் இல்லாதது போல் தோற்றம்… காட்டில் கஷ்டப்பட்டும் இடங்களில் நன்றாக நடித்துள்ளார்… இப்போது தான் முதன் முறைய தியேட்டரில் ஐஸைப் பார்ப்பதால் வந்த பிரமிப்பாக இருக்கலாம்.. ஐஸ்வர்யாவிற்கு முன்னால் விக்ரம், பிருத்விராஜ் இருவருக்குமே கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி எதும் வேலை செய்யவில்லை.. ஐஸ் இஸ் கிரேட்.
இரண்டாவது ஏஆர் ரஹ்மான்… இப்போதெல்லாம் நிறைய மலையாள படங்கள் பார்க்கும் வழக்கம் ஆகி விட்டதால், தமிழ் பட அதிரடி பிண்ணனி இசை பயமாகி விட்டது. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு படத்தை பார்க்கத் துவங்கினேன். சில நிமிடங்களில் அதை நீக்கி விட்டேன்.. இதமான பிண்ணனி இசை.. எந்த கர்ண் கொடூரமும் இல்லை.. விக்ரமின் சத்தம் தவிர
உசிரே பாடல் என்னை ரொம்ப கவர்ந்தது… ஆனால் அழகான அந்த பாடல் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் கொஞ்சம் உறுத்தியது. மற்ற பாடல்களும் ரசிக்கலாம்.. கெடா கறி பாட்டு கலக்கல். எந்த பாட்டுக்கும் யாரும் எழுந்து வெளியே செல்லவில்லை.
விக்ரம் ஏமாற்றினாலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார்… பிருத்வி வேடத்தில் விக்ரம்… அதில் எப்படி இருக்கின்றது எனக் காண ஆவல்.. விக்ரமை அபிஷேக் முந்தி இருப்பார் என்று நினைக்கின்றேன்.
விக்ரம் ஒடுக்கப்பட்ட தன் மக்களுக்காக போராடுகிறார். சில போலிஸ்காரர்களைப் போட்டுத்தள்ளுகிறார். காட்டுக்குள் ஒரு அரசாங்கம் நடத்துகிறார்கள் விக்ரமும் அவரது அண்ணன் பிரபுவும். அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் எஸ்.பி பிருத்விராஜ் தன் அழகான மனைவி ஐஸ்வர்யாராயுடன்.
விக்ரம் தங்கை பிரியாமணி திருமணத்தில் தடாலடியாக உள்ளே நுழைந்து விக்ரமை சுட்டுவிட்டு பிரியாமணியை தூக்கிச்செல்கிறார் பிருத்விராஜ். விக்ரம் தப்பிவிடுகிறார். ப்ரியாமணியை போலிஸ் ஸ்டேசனில் வைத்து சின்னாபின்னமாக்கின்றனர் சில காவல்துறை அதிகாரிகள். பிரியாமணியின் தற்கொலையால் கோபப்படும் விக்ரம் ஐஸ்வர்யாராயை கடத்திச்செல்கிறார். 14 நாட்கள் காட்டுக்குள் சிறைப்பட்டு கிடக்கிறார் ஐஸ்.
ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் பண்ணும் ஐஸ்வர்யாராய் விக்ரமின் பிளாஷ்பேக் தெரிந்து அமைதி ஆகிறார். ஐஸின் அழகில் மெல்ல மனதை பறிகொடுக்கிறார் விக்ரம். இதற்கிடையில் விக்ரமை தேடி தன் படையுடன் காட்டில் அலைகிறார் பிருத்விராஜ் பாரஸ்ட் கைட் கார்த்திக் உதவியுடன் .
ஆனால் ப்ரியாமணியை நாசம் செய்த போலிஸ்காரர்களை ஒவ்வொருவராக கொடுரமாக கொலை செய்கிறார் விக்ரம். பிருத்விராஜ் மட்டுமே பாக்கி. கடைசியில் இருவரும் நேருக்குநேர் மோதுகிறார்கள். ஐஸ்வர்யாராய் தன் கணவணை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார்.
தன் மனம் கவர்ந்த ‘காட்டுசிறுக்கிக்காக’ இருவரையும் விட்டுவிடுகிறார் விக்ரம். இதோடு படம் முடிந்திருந்தால் ஒரு சராசரி படமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு பிறகு(தான்) நிமிர்ந்து உட்காரவைக்கிறார் மணிரத்னம். கடைசி 15 நிமிடங்கள் படத்தின் முந்தைய தொய்வுகளை போக்கிவிடுகிறது. ஆரம்பம் முதல் ஆர்ப்பாட்டமாகவே நகரும் படத்தின் கடைசி நேர காட்சிகள் அமைதியானது.
விக்ரம் ,ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். பிருத்விராஜ் கம்பீரமாக வலம் வருகிறார். அவர் முகத்தில் தெரியும் ஒரு சீரியஸ்னெஸ்ஸை படம் முழுக்க மெயின்டென் பண்ணுகிறார். நிச்சயமாக அவருக்கு இந்த படம் ஒரு மைல்கல். ஐஸ்வர்யாராய் வரும் காட்சிகளில் அந்த பிரேம் முழுக்க அவரே ஆக்ரமித்திருக்கிறார். பின்னால் தெரியும் ரம்யமான காட்சிகள் கூட ராயின் அழகில் காணாமல்போய்விடுகின்றன.
விக்ரம் நடிப்பில் பிரமாதப்படுத்திருந்தாலும் இயக்குனர் பாலா அளவிற்கு இவரை யாரும் உபயோகப்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. மற்றபடி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் விக்ரம் . ஐஸிடம் வழியும் காட்சிகளில் அவரது கேரக்டர் கொஞ்சம் சறுக்கவே செய்கிறது.
படத்தின் முதல்பாதியில் பெரிதாக கதை என்று எதையும் காணோம். விக்ரமின் கடத்தல்,பிருத்வியின் தேடுதல்,ஐஸின் தவிப்பு இவை மட்டுமே முன்பாதியில். பின்பாதியில் வரும் பிளாஷ்பேக்கை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இதற்கு முந்தைய மணிரத்னம் படங்களைப்போல இசைக்கு முக்கியத்துவம் இல்லை இப்படத்தில். பிண்ணனி இசையில் பின்னியெடுத்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன். பாடல்கள் கேட்க கேட்க பிடிக்கலாம். இப்படி சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் படத்தின் பிரம்மாண்டம் வியக்கவைக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்டுப்பகுதி அருவிகள் என அசத்தலான இடங்களில் படமாக்கப்பட்டிருக்கின்றன. அந்த மலை பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி ஆங்கில படங்களுக்கு நிகரானது.
மணிரத்னம் படத்திற்கேன ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வித்யாசமான ஒளிப்பதிவு, சுருக்கமான வசனம் மற்றும் காட்சிகள் என இவரது ஸ்டைல் தனி. ஒரு ஊரில் ஒரு ராஜா என்றெல்லாம் பாமரனுக்கும் புரிகிற மாதிரி ஆரம்பித்து கதை சொல்ல இவருக்கு தெரியாது. மொத்தத்தில் மணிரத்னம் இந்த முறை தன் ரசிகர்களை(மட்டும்) ஏமாற்றவில்லை என்றே தோன்றுகிறது.
மணிரத்னத்தோட டிஜிட்டல் ராமாயணம்.! வால்மீகிக்கும் கம்பருக்கும் இந்த படத்த ப்ரிவியு போட்டு காமிச்சிருந்தா நெறைய சீன்ல எந்திரிச்சு நின்னு கைதட்டிருப்பாங்க..நல்லாருக்கு வாத்யாரே…கண்டிப்பா பார்க்கலாம்..ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்ல கை வெக்காம இந்த அளவுக்கு ஒரு படம் எடுக்க மணிரத்னத்தால மட்டும்தான் முடியும்.!
விக்ரம்..! நெஜமாவே ராவணன்..நடிப்பு ராட்சஷன்…என்ன ஒரே நெருடல்..நெறைய சீன்ல அபிஷேக் பச்சன வெச்சு ஷூட்டிங் முடிச்சிட்டு, என்ன விக்ரம் பார்த்தீங்கள்ள அதே மாதிரியே நடிங்கன்னு மணி சொல்லிருபாறு போல…அபிஷேக் நடிப்பு நெறைய விக்ரம் முகத்துல தெரியுது…ஆனா, அது ஒரு பெரிய விஷயம் இல்ல..பையன் பட்டய கெளப்பிருக்காப்ள ..!
ஐஸ்வர்யா ராய் பச்சன்…! ஐஸ்வர்யா ராய நிமிந்து கூட பார்க்க மாட்டேன்னு என் பொண்டாட்டிகிட்ட சத்தியம் பண்ணிட்டுதான் நான் தியேட்டருக்குல்லையே நுழைஞ்சேன்..ஆனா பாருங்க அந்த புள்ள நடிப்புல தியேட்டர விட்டு வெளில வந்தொன்னதான் எனக்கு என் பொண்டாட்டி ஞாபகமே வந்துச்சு..அப்பறம் எப்டி சத்தியம் மட்டும் ஞாபகம் இருக்கும்..மொதொள்ள அபிஷேக் பச்சன்கிட்ட சொல்லி புள்ளைக்கு சுத்தி போடணும்… பயபுள்ள என்னமா நடிக்கறா…!
ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் எப்டி இருக்குன்னு எழுதற அளவுக்கு நான் வொர்த் இல்ல சார்…மெட்ராஸ் டாக்கீஸ் படங்கள்ல கேமராவும் மியூசிக்கும் நல்லாருக்குன்னு சொல்றது எல்லா விஜய் படங்களும் மொக்கயாதான் இருக்கும்னு சொல்றமாதிரி…ஊருக்கே தெரிஞ்ச விஷயம்…இந்த படத்துல இன்னும் நல்லா இருக்கு….
படத்த நல்லா என்ஜாய் பண்ணி பார்க்கணும்னு ஆசபடரவங்க ஹிந்தில பாருங்க…தமிழ்ல சுகாசினி வசனம் எழுதறேன் பேர்வழின்னு பண்ற டார்ச்சர் தாங்க முடியல..எரிச்சலா வருது நெறைய சீன்ல…!
மொத்தத்துல ராவணா., செல்லுலாயிட் ராமாயணம்..!
ஆனா விஜய் படங்களையும் அருமை அண்ணன் அஜித்தோட மொக்கை படங்களையும் விசில் அடிச்சு பார்க்கற என்னை மாதிரி மசாலா மண்டயணுகளுக்கு இந்த படம் இப்போ சுத்தமா புடிக்காது..ஏன்னா நாங்கல்லாம் அன்பே சிவம் நல்ல படம்னு படம் ரிலீஸ் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சுதான் கண்டுபுடிச்சோம்…
எங்கள விட்டுத்தள்ளுங்க மணி சார்…
திரைக்கதை, இயக்கம்: மணி ரத்னம்
நடிப்பு: விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிருத்விராஜ், பிரபு, கார்த்திக், பிரியாமணி
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்
சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.
திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா – தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா…). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.
வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.
முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.
வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.
அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.
மணி ரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.
ராமாயண காவியத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம்.
வால்மீகி ராமாயணத்தில் ராமன் நல்லவராக இருப்பார்… ராவணன் கொடுமைக்கார வில்லனாக இருப்பார். மணிரத்தினத்தின் படைப்பில் ராவணனாக காட்டப்படும் விக்ரம் தரப்பின் நியாயங்கள் காட்சிகளாக்கப் பட்டிருக்கின்றன. ராவணனை கிட்டதட்ட ஒரு ஹூரோவாகவே காட்டியிருக்கிறார் மணி!
மேகமலைப் பகுதியில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்படும் வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வரும் போலீஸ் எஸ்.பி. தேவ்ஆனந்தாக பிரித்விராஜ். எஸ்.பி.யின் மனைவி ராகினியாக ஐஸ்வர்யாராய். வீராவின் அண்ணனாக பிரபுவும், தங்கை வெண்ணிலாவாக பிரியாமணியும் கதையோடு இணைந்து வருகிறார்கள். ஃபாரஸ்ட் கார்டாக கார்த்திக் ரீ எண்ட்ரியின் கவனத்தை ஈர்க்கிறார்.
வீராவைக் கண்டுபிடிக்க அவனுடைய தங்கை வெண்ணிலாவை திருமணக் கோலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் அழைத்துச் செல்கின்றனர். காதலித்து கைப்பிடித்த மேல்குடியைச் சேர்ந்த கணவன் போலீசைப் பார்த்து ஓடிவிட… ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வெண்ணிலாவை காவலில் வைத்து ஒட்டுமொத்த போலீசும் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகின்றனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் தப்பிய வீராவுக்கு, தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லிவிட்டு கிணற்றில் விழுந்து உயிரை விடுகிறாள் வெண்ணிலா.
தன் தங்கையைப் பாழாக்கிய அதிரடிப்படை போலீஸ் கும்பலையும் அதன் தலைவரான எஸ்.பி. தேவ்ஆனந்தையும் பழிவாங்க கிளம்புகிறான் வீரா. எஸ்.பி.யின் மனைவி ராகினியை கடத்திச் செல்கிறான். மேகமலையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராகினியை சிறைபிடிக்கிறான் வீரா. மனைவியை மீட்க சிறப்பு அதிரடிப்படையோடு புறப்படுகிறார் தேவ் ஆனந்த். 14 நாட்கள் நீடிக்கும் இந்த சேசிங் படலத்திற்கு இடையே வீராவுக்கு எஸ்.பி.யின் மனைவி ராகினி மீது காதல் வருகிறது. இறுதியில் தன்னைத் தேடிக் கண்டுபிடித்த அதிரடிப்படையை மொத்தமாக அழித்த வீரா… எஸ்.பி. தேவ்ஆனந்தை மட்டும் கொல்லாமல் விடுகிறான். என் கணவரின் உயிருக்கு உத்தரவாதம் கொடுத்தால் நான் இங்கேயே இருந்திடுவேன் என்று ஒரு கட்டத்தில் ராகினி சொல்ல… அதையே தனக்குக் கிடைத்த வெற்றியாக நினைத்து ராகினியை விட்டுவிடுகிறான் வீரா.
ரயிலில் ராகினியோடு ஊர் திரும்பும் எஸ்.பி. தேவ் ஆனந்த்… 14 நாளில் வீரா உன்னைத் தொடவே இல்லையா? என்று சந்தேகப்பட, ரயிலை நிறுத்தி இறங்கிவிடுகிறாள் ராகினி. மீண்டும் வீராவைத் தேடி, அவன் இடத்துக்கு வந்து அவனிடம்… என்னைப்பற்றி என் கணவரிடம் என்ன சொன்னாய் என்று கேட்கிறாள். கணவன் தன்னைச் சந்தேகப்பட்டதாக ராகினி சொன்னதும், எஸ்.பி.யின் திட்டத்தை புரிந்துகொள்கிறான் வீரா. ராகினியின் மூலம் தன்னைப் பிடிக்க திட்டமிட்டிருக்கிறார் எஸ்.பி. என்பதை உணர்ந்துகொள்கிறான் வீரா. அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படையுடன் வந்த எஸ்.பி. தேவ் ஆனந்த் ராகினியின் எதிர்ப்பையும் மீறி வீராவைச் சுட்டுக் கொல்வதுடன் முடிகிறது ராவணன்.
ராமனாக எஸ்.பி.கதாபாத்திரத்தையும், சீதையாக ராகினி கதாபாத்திரத்தையும், ராவணனாக வீரா கதாபாத்திரத்தையும், வெண்ணிலாவை சூர்ப்பநகையாகவும், ஃபாரஸ்ட் கார்டு கார்த்திக்கை ஆஞ்சநேயராகவும் நினைக்க வைக்கின்றன காட்சிகளும், வசனங்களும்.
சொந்தக் குரலில் பேசியிருக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சியைப் பாராட்டலாம். உலக அழகிக்கான தகுதி இப்போதும் இருக்கிறது என சொல்லாமல் சொல்கிறார் ஐஸ்வர்யா. பேசும் கண்களை அத்தனை அழகாய் கேமராவில் சிறை பிடித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் போதும்… அவர் தப்பு செய்ய மாட்டார் என உறுதியாக சொல்லும் போதும் தேவ் மீதான காதலை அழகாக வெளிப்படுத்துகிறார். வீராவின் தங்கை வெண்ணிலாவுக்கு நேர்ந்த கொடுமையை அறியும்போது கண்களில் நீர்வழிய துக்கம் தொண்டை அடைக்க அழும்போது நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். படம் முழுக்க வந்து மொத்தமாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஐஸ்.
வீராவாக வந்து, வர்க்க ரீதியான இடைவெளிகளைப் பற்றி, கூர்மையான வசனங்களை பேசும் விக்ரமின் நடிப்பும் பிரமாதம். உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் விக்ரமுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. உயிருக்குப் பயப்படாமல் அருவியில் விழுந்துகிடக்கும் ஐஸ்வர்யா மீது உருவாகும் காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். சஞ்சலப்பட்ட மனதோடு கஷ்டப்படுவதை வெளிப்படுத்தும் காட்சிகளில் பின்னியிருக்கிறார்.
எஸ்.பி. மேல எனக்கு பொறாமையா இருக்கு. அவர் முந்திக்கிட்டாரே… என்று தன் விருப்பத்தை ராகினி ஐஸ்வர்யாவிடம் வெளிப்படுத்தும்போதும், இங்கேயே இருந்திடுறீங்களா? என்று கேட்கும் போதும் தன் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துகிறார். மேட்டுக்குடி மீதான தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. நரம்புகள் முறுக்கேறுகின்றன.
அறிமுகக் காட்சியிலேயே தன்னுடைய ஆஞ்சநேய சேஷ்டைகளைக் காட்டும் கார்த்திக்கும் ரசிக்க வைக்கிறார். கண்டேன் சீதையை என்கிற ரீதியில் எஸ்.பி.யிடம்… பார்த்துட்டேன்… பார்த்துட்டேன் சார் என்று உற்சாகப்படும் இடங்களில் அவரின் டச் தெரிகிறது. சமாதானமாக போயிடு வீரா…இல்லைன்னா அழிவு வரும் என்று சமாதானம் பேசும்போதும் கார்த்திக் அழுத்தமாக தெரிகிறார். காட்சிகள் குறைவென்றாலும் மனதில் நிற்கிறார் பிரியாமணி. பிரபுவுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிப்பதற்கான ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. எந்தக் கடையில் அரிசி வாங்குகிறாரோ தெரியவில்லை! பெரிதும் பேசப்பட்ட ரஞ்சிதாவை படத்தில் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
மொத்த நட்சத்திரப் பட்டாளத்தையும் முந்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். உசிரே போகுதே, காட்டுச் சிறுக்கி என்று பாடல்கள் அத்தனையும் தாளம் போட வைக்கும். பின்னணி இசையில் காட்சிகளோடு ஒன்ற வைக்கிறார். கவிப்பேரரசுவின் கவிதை வரிகள் உள்ளத்தை அள்ளுகின்றன. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் அழகை மொத்தமாக காட்டியிருக்கிறார்கள்.
மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மணிரத்னம். ஓப்பனிங் சீனில் தொடங்கும் விறுவிறுப்பு கடைசி சீன் வரை தொடர்கிறது. பல இடங்களில் வசனங்கள் ஈர்க்கின்றன. படம் முழுக்க மணிரத்தினத்தின் ஈடுபாடும், உழைப்பும் வெளிப்படுகிறது. பழங்குடியினரிடம் அதிகார வர்க்கம் காட்டும் மூர்க்கத்தனத்தையும், வெறியையும் காட்சிகளாக்கியிருக்கும் விதத்தில் வீரப்பன் காடு நினைவுக்கு வந்துபோகிறது.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. நிறைகள் அதிகம் இருக்கும்போது குறைகள் எதற்கு?
ராவணன் – டண் டண் டண்
நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் விக்ரம் + மணிரத்னம் + வைரமுத்து + கார்த்திக் + ஐஸ்வர்யா
சொல்லவே தேவையில்லை படத்தின் திரைக்கதையின் அழுத்தம் பற்றி..மணிரத்னம் படம் என்றால் திரைக்கதை தழருத்தமாகவே இருக்கும்..இருக்கிறது
கதை என்று பார்த்தால் காட்டில் இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடும் முரட்டு விக்ரம் அவரது அண்ணன் பிரபு ஒருபுறமும் இவர்களை அடக்க ப்ரித்விராஜ் (என்கவுண்டர் போலிஸ்) தலைமையில் ஒரு குழு..
சந்தர்ப்ப சூழ்நிலையில் திருமகத்தன்று போலீஸால் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்படுகிறார் விக்ரமின் (வீரய்யா + வீரா) தங்கை ப்ரியாமணி.
அதற்குக்காரணமான போலீஸாரையும் தன்னைக்கொல்லத்துடிக்கும் ப்ரித்விராஜையும் விக்ரம் எப்படி பழிவாங்குகிறார்? அதில் வெற்றியடைந்தாரா என்பதே கதை..
ப்ரித்விராஜை பழிவாங்க அவரது மனைவி ஐஸ்வர்யாவை கடத்தும் ராமாயண ராவணனாக விக்ரம் தூள் கிளப்புகிறார்..அங்கங்கே பிதாமகனின் சாயல் வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை..
ஐஸ் நடிப்பில் ரொம்பவே முதிர்ச்சி தெரிகிறது..தமிழ் நடிகைகள் கொஞ்சம் பார்த்து பழகட்டும்
பிரபுவும் கார்த்திக்கும் நகைச்சுவை + நடிப்பினால் நம்மைக்கவர்கிறார்கள்..ப்ரித்வியும் தனது பங்கிற்கு நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்..
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் உலகத்தரம்..அதிலும் காட்டு லொக்கேசனும் அதன் பின்னணியில் பொழியும் மெல்லிய மழையும் கவிதை..
பழைய பழிவாங்கற் பாணிக்கதையை வேறு வேறு லொக்கேசனில் வித்தியாசமாகவும் கொஞ்சம் அழுத்தமாகவும் பதிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மணி..
ப்ரியாமணி கலகலக்க வைத்து கடைசியில் கண்ணீர் சிந்த வைக்கிறார்..
படத்தின் முதுகெலும்பு வேறென்ன இசைதான்..உசுரே போகுதே யில் தொடங்கி நான் வருவேன் வரை பாடல்களும் பின்னணி இசையும் படு நேர்த்தி..படத்தோடு ஒன்றிப்போகும் பின்னணி இசையில் ரஹ்மானின் உழைப்பு தெளிவாகத்தெரிகிறது.
தொங்கு பாலத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி பக் பக் ரகம்..பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது..அதே போலவே மற்றைய சண்டைக்காட்சிகளும்..
மொத்தத்தில் ராவணன் – பத்துத்தலை
நல்லவனுக்கு உள்ளே ஒரு கெட்டவன் இருப்பதுண்டு.. கெட்டவனுக்கு உள்ளேயும் ஒரு நல்லவன் உண்டு.. அதுதான் “ராவணன்”. முதலிலேயே தெளிவாக சொல்லி விடலாம். இது சாட்சாத் ராமாயணக் கதையேதான். “அசோகவன”ப் பகுதியை கதைக்கான கருவாக்கிக் கொண்டு கலந்து கட்டி கொடுத்து இருக்கிறார் மணி. கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் சொக்க வைக்கிறார். மகாபாரதத்து கர்ணனை “தளபதி”யாக்கிய மணிரத்னம் இந்தப் படத்தில் ராமாயணத்து ராவணனை நாயகன் ஆக்கியிருக்கிறார்.
ஊருக்கெல்லாம் நல்லவன் வீரா. ஆனால் சட்டத்துக்கு குற்றவாளி. அவனைப் பிடிக்க வரும் வரும் காவல்துறை அதிகாரி தேவ். அவருடைய மனைவி ராகினி. தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு பழிவாங்க ராகினியைக் கடத்துகிறான் வீரா. ராகினியின் மீது அவனுக்கு உண்டாகும் காதலால் அவளைக் கொல்லும் முயற்சியில் தோற்றுப் போகிறான். மனைவியைத் தேடி காட்டுக்குள் நுழையும் தேவ், கணவனின் அன்புக்கும் வீராவின் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ராகினி, ராகினியின் அன்புக்காக ஏங்கும் பழிவெறி கொண்ட வீரா.. அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலியாட்டம் தான் படம்.
இது ஐஸ்வர்யாவின் படம். அழகாக இருக்கிறார். அந்த பளிங்குக் கண்கள்.. ஆத்தாடி.. படத்துக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறார். மலையில் இருந்து கீழே குதித்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்றே போதும்.. அங்கே ஆரம்பிக்கும் “உசுரே போகுதே” பாடலும்.. பட்டாசு. அருவி, ஏரி, மழை என படம் முழுவதும் நனைந்து கொண்டே இருக்கிறார். மெதுமெதுவாக விக்ரமின் மீது ஈர்க்கப்படும் காட்சிகளிலும் அருமையாக நடித்து இருக்கிறார். என்ன ஒன்று.. படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. (தியேட்டரில் பின்னாடி உட்கார்ந்து இருந்த நண்பர்கள் வேறு “ஐயோ பாவம் அபிஷேக்” என்று கத்திக் கொண்டே இருந்தார்கள்.. அவ்வவ்..)
முரட்டு வீராவாக விக்ரம். படம் முழுக்க வியாபித்து அழகாக நடித்து இருக்கிறார். தன் மீது ஐஸுக்கு அன்பு வந்து விட்டதை உணர்ந்து கொண்டு கண்களில் ஒரு சந்தோஷத்தை காண்பிக்கிறார் பாருங்கள்.. தூள். ஆனால் இதை விடக் கடினமான ரோல்களில் எல்லாம் அவரைப் பார்த்து விட்டதால் அவ்வளவு ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை. தனக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்கக் கூடும் என்று நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார். பார்ப்போம். தேவாக பிருத்விராஜ். நல்லவனா, கெட்டவனா என்று பிரித்துப் பார்க்க முடியாத பாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார். கண்களில் சிரிப்பைத் தேக்கி வைத்துக் கொண்டே மற்றவர்களை காலி பண்ணும் காட்சிகளில் அசத்துகிறார்.
அனுமார் கார்த்தி. தனது ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். விக்ரமின் அண்ணனாக மகாகுண்டு பிரபு (விபீஷணன்?!). கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். தம்பியாக முன்னா. போலிசால் சுடப்பட்டு சாகிறார். விக்ரமின் தங்கையாக பிரியாமணி. தமிழ் சினிமாவில் இனிமேல் கேங்ரேப் என்றாலே அவர்தான் போல. பிரபுவின் மனைவியாக ரஞ்சிதா மாதாஜி ஸ்க்ரீனில் வரும்போதெல்லாம் விசில் தூள் பறக்கிறது. அரவாணியாக வையாபுரியும் இருக்கிறார்.
டெக்னிக்கல் விஷயங்களைப் பொறுத்தவரை – சர்வதேசத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா என்று பெருமையாக சொல்லலாம். சண்டைக் காட்சிகள் எல்லாமே அசத்தி இருக்கிறார்கள். குறிப்பாக பாலத்தில் நடைபெறும் கடைசி சண்டைக் காட்சி.. இணைந்த கைகள் படத்துக்குப் பிறகு இப்படி ஒரு காட்சியை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அதே போல ஓடும் டிரக்குகளில் ஏறும் மனிதர்கள், கூடாரங்களில் நடக்கும் சண்டை என எல்லாமே ரொம்ப இயற்கையாக இருக்கின்றன. சுஹாசினியின் வசனங்கள் அதிசயமாக தெளிவாக புரிகின்றன. ஒலிப்பதிவும் பயங்கரத் துல்லியம்.
படத்துக்கு மூன்று முக்கிய தூண்கள். முதலில் கலை – சமீர் சந்தா. மலையில் இருக்கும் கிராமம், அருவிக்கு ஊடே இருக்கும் கடவுள் சிலை, பாழ்மண்டபங்கள் என்று கலக்கி இருக்கிறார். இரண்டாவதாக ஏ.ஆர்.ரகுமான். பாடல்களை விடுங்கள். படம் முழுக்கவே பின்னணி இசையில் புயல் பின்னி எடுத்திருக்கிறது. கிளைமாக்சுக்கு முந்தைய காட்சியில் விக்ரமும், ஐசும் பேசிக் கொள்ளும் காட்சியின் பின்னணி இசை.. கொல்லுது… அம்சம். கடைசியாக ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன். மனத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புகள். கொஞ்சம் தவறினால் ஆள் காலி என்பது போன்ற கஷ்டமான இடங்களில் ரொம்ப சிரமப்பட்டு படம் பிடித்து இருக்கிறார்கள். வண்ணங்களால் வரைந்த அழகிய ஓவியங்கள் நம் கண்முன்னே உருப்பெற்று வந்தது போல எல்லாக் காட்சிகளுமே அருமை. படம் பார்க்கும்போது சீனாவின் யாங் ஈமு படங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
மணிரத்னம் – இவரைப் பற்றி என்ன சொல்ல? அனைவரும் அறிந்த ஒரு பொதுப் பிரச்சினையை எடுத்துக் கொள்வது.. அதனூடாக தான் ஒரு கதையை சொல்வது.. இதுதான் மணியின் ஸ்டைல். ரோஜா தொடங்கி குரு வரை இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை தெளிவாக, அழகாக செய்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் படம் கூட ஏதோ நக்சல் தலைவரின் கதை என்கிற ரீதியில் பேசினார்கள். ஆனால் இது ராமாயணப் போர்வையில் அப்பட்டமான ஒரு காதல் கதை. அதன் நடுவே சிறிது அரசியலையும் பேசி இருக்கிறார். அவ்வளவே.. முதல் பாதி நல்ல வேகம். இரண்டாம் பாதி கொஞ்சம் சுனங்கினாலும் போனது தெரியவில்லை. இறுதியில் கனத்த மனதோடு நாம் வெளியேறுவதில் தனது வெற்றியை உறுதி செய்கிறார் மணி.
ராவணன் அருமை! மணிரத்னத்தின் இன்னும் ஒரு ரத்தினம்!
ராமாயணம் + வீரப்பன் கதை + மணி = ராவணன்.விக்ரம் பாத்திர பேர் கூட ” வீரய்யன்” தான்.
சுஹாசினியின் வசனமும் மணியின் வசனங்கள் போலவே குறைவாக ஆனால் நிறைவாக பேசுகிறது.”உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா..” மணியான வசனம்.
ஐஸ்வர்யாவும்,விக்ரமும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். இறுதியில் ஐஸ்வர்யா ஜெயிக்கிறார்.
கார்த்திக் சூப்பர் comeback. ப்ரித்விராஜ் ஓகே ஆனால் சிறப்பான நடிப்பு என்றெல்லாம் இல்லை.பிரபு ரொம்ப நாளைக்கு அப்புறம் நடிக்க வாய்ப்புள்ள அண்ணன் பாத்திரம்,நிறைவாக செய்திருக்கிறார். ப்ரியாமணி கொஞ்ச நேரம் வந்தாலும் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யாவுக்கு இணையான கைதட்டல் ரஞ்சிதா திரையில் வரும் போது கிடைக்கிறது. எல்லாம் நித்யா செயல். உசிரே போகுது,கோடு போட்டா,காட்டுசிறுக்கி பாடல்கள் காட்சிகள் அருமை. படம் நெடுக சந்தோஷ் சிவன்,வி.மணிகண்டன் உழைப்பு தான் தெரிகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவு.
ரெண்டு நாள் முன்னாடி ஆன்லைன்ல உட்கார்ந்து எந்த தியேட்டர்
புக் பண்ணலாம்னு பார்த்தப்போ நமக்கு சாந்தி தாங்க மாட்டிச்சு.
அறுபது ரூபாய் டிக்கெட்டை 150 க்கும் எண்பது ரூபாய் டிக்கெட்டை
இருநூறுக்கும் விற்று கொண்டிருந்தார்கள்.
ராவணன் படத்தில் என்ன இருக்கு??
ராவணன் படம் ராமாயண கதை தான் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். எனக்கும் ராமாயணம் கதை தெரியும் ஆனா இது அந்த காண்டம் இது இந்த காண்டம்னு எல்லாம் தெரியாது….அதனால நான் இங்க ராமயணத்தை பத்தி பேச போறது இல்லை…!!
நாம இங்க சென்னையில் காஞ்சி கருவாட இருக்கோம் ஆனா படத்தில் லோகேசன் ஒண்ணும் ஒண்ணும் செம…கடைசியில் அந்த பாலம் காட்சி செம.அப்புறம் அந்த தூம்பி மூலம் அனைவரையும் காட்டுவது…எல்லாம் செம…சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் நம்மை வேறு உலகுக்கு அழைத்து போக முயற்சித்தாலும் ஆனா கதை ஓட்டம் போக விட மாட்டேன் என்கிறது என்பது தான் உண்மை.
விக்ரம், சூப்பர்ஆ பண்ணி இருக்காரு…ஆனா சில சமயம் இவரு
செய்யும் சேஷ்டைகள் வேறு மாதிரி எண்ண வைக்கிறது.
ப்ரிதிவ்ராஜ், ஓகே…கம்பீரமா இருக்கிறார். பிரபு, சில காட்சிகளில்
சிரிப்பு மூட்டுகிறார். கார்த்திக், இவர் தான் அனுமார் கேரக்டர்னு
சொல்லி மரத்துக்கு மரம் தாவி காட்டுகிறார்…வேற ஒண்ணும்
செய்யல்லை….ப்ரியாமணிக்கு பருத்திவீரன்க்கு பிறகு மீண்டும்
கேங் ரேப் அமைஞ்சுருக்கு… ரஞ்சிதாக்கு இருந்த வசன காட்சிகளை கட் செய்து விட்டார்கள் என்று புரிகிறது.முன்னா, சமாதானம்
செய்ய போகும் காட்சியில் மிளிர்கிறார்..
அப்புறம் ஒண்ணு நான் மணி ரத்னம் எதிர்ப்பாளன் அல்ல
என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன். ராவணன் படத்தில்
மணி மற்றும் விக்ரம் இன்னும் பல பேரின் உழைப்பு தெரிந்தாலும்
படம் பார்க்கும் போது எந்த ஒரு பீலிங்க்ஸும் எனக்கு வரவில்லை,
சில காட்சிகள் தவிர. அதாவது படத்தில் ஒரு உயிரோட்டம், சுவாரசியம், அடுத்தது என்ன நடக்கும் அப்படின்னு ஒரு எதிர்ப்பார்ப்பு
இல்லாமலே படம் போகிறது என்பது என் பீலிங்க்ஸ்.இங்க நான்
ஒண்ணும் சொல்லி கொள்ள விரும்பிகிறேன்…
“ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்”….
மணி ரத்னம் மேல எனக்கு ரொம்ப கோபம்ங்க….அட அது ஒண்ணும் இல்லைங்க. ஐஸ்வர்யா கண்ணு பத்தி நான் என்ன சொல்றது…
ஆனா கொஞ்சம் கெழடு தட்டிடுச்சுனு தான் சொல்லணும்.எனக்கு ஒரு கேள்வி மட்டும் தான் ” எந்த இந்தியா குடும்ப பெண்ணாவது மூன்றாம் மனிதர்(ஜான் விஜய்) வீட்டுக்கு வரும் போது லோவில் டிரஸ் போட்டு மார்பை காட்டி கொண்டி இருப்பாளா??…” எதுக்கு இந்த மாதிரி ஒரு காட்சி வைக்கணும்…..(ஏன்ப்பா சீன் இல்லைனாலும் கேள்வி கேக்குற.. இருந்தாலும் கேள்வி கேக்குற…அப்படின்னு நினைக்கிறிங்களா…ரைட் ப்ரீயா விடுங்க…!!)
படத்தில் எனக்கு சரியா சில வசனங்கள் புரியலை…ஆனா சுஹாசினி
வசனம் ஒண்ணும் அவ்வளவோ சொல்றது ஒண்ணும் இல்லை.
முதல் பாதி ஒரு எதிர்ப்பார்ப்பில் வேகமா போன மாதிரி இருந்தது…
ரெண்டாவது பாதியும் அப்படியே இருந்தது…ஆனா படம் ஓடுன
டைம் ரெண்டு மணி நேரம் பத்து நிமிடம் என்றாலும் படம்
அலுப்பை கொடுக்கிறது என்பது தான் உண்மை.தமிழில் பார்த்துட்டு ஹிந்தியில் பார்க்கணும்னு நினைச்சேன்…இப்போ அந்த எண்ணத்தை கை விட்டுடேன்….
இது உலக படம் இல்ல மணி படம், உன்னை மாதிரி மசாலா படம் பாக்குறவனுக்கு என்ன தெரியும் அப்படினு சொல்றவங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!!!
நாம தியேட்டரில் என்ன நடந்ததுனு பார்ப்போம்…..
தியேட்டர் நொறுக்ஸ்:
# சத்யம் தியேட்டரில் பொதுமக்களுக்கு முதல் மூணு நாளைக்கு டிக்கெட் ஓபன் பண்ணவே இல்லை..பல்க் புக்கிங் அப்படின்னு கம்பெனிக்கும் F.M. க்கும் கொடுத்து அவங்க ஒரு அட்டு கேள்வியே கேட்டு, பல எஸ்.எம்.எஸ் மூலம் சம்பாதித்து…. டிக்கெட் கொடுக்குறாங்க….இதுக்கும் பிளாக் டிக்கெட்க்கும் என்ன வித்தியாசம்??சத்யம் மட்டும் இல்ல பல தியேட்டர்கள் இதை தான் செய்கிறார்கள்…. யார் இதை கேட்கிறது??
# ரஞ்சிதா லைட்ஆ தலை காட்டினாலே தியேட்டரில் செம சவுண்ட்..
நல்ல வேளை வசனம் எதுவும் பேசவில்லை….
# படம் திருநெல்வேலி பாஷை என்பதால்..லே லே,,என்று வரும்..
ஒரு காட்சியில் இவனை எங்கே சுடுறதுலே என்று கேட்பார்…
இங்கே நம்ம ஆளு “அவனை #$#$#$ சுடுலே…..” என்றவுடன்
தியேட்டரில் அதிர்வலை கிளம்பியது….
# இன்டெர்வேல் அப்போ..பல பேர்…படம் புரியல….என்று பேசி கொண்டிருந்தனர்…. ஒருவர் 150 ரூபாய் தண்டம் என்று
புலம்பியப்படி சென்றார்….
# படத்தில் கடைசி காட்சியில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்…
அட நீங்க வேற…கடைசி கட்ட காட்சியில் ஐஸ்வர்யாவின் தரிசனத்துக்கு தான் அந்த கத்தல்… ரெண்டு பேர் கடைசி சீன் சூப்பர் என்று பேசிகொண்டே வந்தனர்….
# பார்க்கிங்கில் வண்டி எடுக்கும் போது ஒருவரிடம் படம்
எப்படி என்று கேட்டதற்கு…நானுறு ரூபாய் சார்…ஒரே புல்
வாங்கிட்டு வீட்ல தூங்கிருப்பேன்… என்றார்.
# சரி..நடுவயது நபரிடம் படம் எப்படி இருக்குனு கேட்போம் என்று
சும்மா கேட்டேன்….அவரு சொன்ன பதில்ல எனக்கு குபுக்னு சிரிப்பு
வந்திருச்சு….. “உசுரே போகுதே….”னு சொன்னார். சத்தியமா அந்த மனுஷன் இவ்ளோ பீல் பண்ணி இருப்பாருனு நான் நினைச்சு பார்க்கலாங்க…
பட பூஜை இருக்காது,பெருசா பக்கம் பக்கமா படத்துல நடிச்சவங்களோடபேட்டிகள் இருக்காது,இல்லேன்னா ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை டிவியில காட்சி விளம்பரமா வந்து இம்சை பண்ணாது…அவ்ளோ பரபரப்பும் இருக்காது இதெல்லாம் படத்தோட முதல் விளம்பரம் பேப்பர்ல வர்ற வரைக்கும் தான் …
“விரைவில் இசை வெளியீடு” அப்படின்னு ஒரு கால்பக்க விளம்பரம் வந்ததும் பரப்பரப்பு பத்திக்கும்…அதுக்கு பின்னாடி அந்தப் படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் அந்த பரபரப்பும்,பட படைப்பும் ஓயாது,இதுதான் மணிரத்னம் படங்கள்ல இருக்குற வெற்றி ஃபார்முலா.
அப்படி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம பேப்பர்கள்ல,வார பத்திரிகைகள்ல “விக்ரம் மணிரத்னம் படத்துல நடிக்கிறாரார்”னு ஒரு பிட் நியூஸ் வந்துச்சி…அப்போ ஆரம்பிச்ச எதிர்பார்ப்பு இந்தா இன்னிக்கு உலகமே கண்கொட்ட பார்த்துக்கிட்டிருக்குற படம் தான் ராவணன்.
படத்தோட கதை எப்படி இருக்கும்னு டைட்டில் லை வெச்சே நீங்க யூகிக்க முடியும்னாலும் முழு கதையை நானே சொல்றேன்…
திருநெல்வேலி பக்கத்துல இருக்குற விக்ரமசிங்கபுரம் ஊர்ல ரௌடித்தனம், கட்டப் பஞ்சாயத்து பண்ணி பொழப்பு நடத்துறவன் வீரைய்யா அதாவது விக்ரம்.அவன் நல்லவனா..? இல்ல கெட்டவனா..? அது உங்க முடிவு.ஊர் மக்களுக்கு அவன் நல்லவன். ஆனா அரசாங்கத்தோட பார்வைக்கு அவன் கெட்டவன்,ஒரு ரௌடி,ஒரு தீவிரவாதி.
கீழ்சாதியை சேர்ந்த விக்ரமோட தங்கச்சியான ப்ரியாமணி ஒரு பணக்கார வீட்டு பையனை லவ் பண்ணுறா…பையனோட அப்பா கைய,கால புடிச்சி எப்படியோ சம்மதம் வாங்கி தங்கச்சிக்கு ஜாம்,ஜாம்னு கல்யாணம் பண்ணுற நேரத்துல கல்யாண மண்டபத்துக்குள்ள புகுந்த போலீஸ் அதிகாரி பிரித்விராஜ் விக்ரமை கழுத்துல துப்பாக்கியால கழுத்துல சுட்டு விடுகிறார்.
போலீஸ் வந்த உடனே பயந்து போயி பிரியாமணியோட காதலன் அவளை விட்டுட்டு ஓடிப்போயிடுறான். விக்ரமோட தங்கச்சி பிரியாமணியை போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போற போலீஸ்காரங்க அங்க அவளை கெடுத்து சின்னா,பின்னா மாக்கிடுறாங்க..,இதனால மனசு ஓடைஞ்சி போற ப்ரியாமணி ஊர் கிணத்துல குதிச்சி தற்கொலை பண்ணிக்கிறாங்க.
தங்கச்சி சாவுக்கு காரணமான பிரித்விராஜை பழி வாங்க அவனோட மனைவி ஐஸ்வர்யாராயை கடத்தி காட்டுக்குள்ள கூட்டிட்டு போறாரு விக்ரம்,போன இடத்துல ஐஸ்வர்யா ரை மேல கொஞ்சம் சபலப்படுறாரு விக்ரம்.காணாமப் போன பொண்டாட்டியை தேடி காட்டுக்குள்ள வர்றாரு பிரித்விராஜ்,அவர் எப்படி தன்னோட மனைவியை அவன்கிட்ட இருந்து காப்பாத்தினார்ங்கிறது தான் ராவணன்.
படத்தோட ஓப்பனிங் சீன்ல முகத்துல கரியை பூசிக்கிட்டு சேரும் சகதியுமா,முறுக்குன மீசைகளோட ஒரு ஜாம்பவான் மாதிரி கணீர் உடம்ப வெச்சிக்கிட்டு பக்..பக்..பக்… னு பாட்டு பாடிக்கிட்டே ஆட்டம் போட்டு வர்றது சாட்சாத் விக்ரமே தான்… அசத்தலான ஆரம்பம்,அதே மாதிரி ஐஸ்வர்யாராய்க்கும் பெரிய பில்ட்-அப் ஓப்பனிங் இல்லாம அவரை விக்ரம் கடத்துற சீன்கள் அவரோட ஓப்பனிங் சீன்.
இயக்குனர் மணிரத்னம் சார்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா அவரோட ஸ்டைல் ஆஃப் மேக்கிங் தான்.அடடா..அடடா…இந்தப் படத்துல அவரு நம்ம ஒரு அழகான பச்சை,பசேல்னு இருக்குற காட்டுப் பிரதேசங்களுக்கு டூர் கூட்டிட்டு போயிருக்கருன்னு தான் சொல்லணும்.
சந்தோஷ் சிவன்,மணிகண்டன் இவங்க ரெண்டு பேரோட கேமரா கோணங்களுக்கும் திருஷ்டி தான் சுத்தி போடணும்…அந்தளவுக்கு காடுகள்,அங்க உள்ள பச்சை,பசேல்னு கண்ணுக்கு ரம்மியமா தெரியிற செடி,கொடிகள்,மலைமேடுகள்,கொட்டும் அருவி நீர்கள், எப்பவுமே அதிக வெளிச்சமும் இல்லாம,அதிக குளிரும் இல்லாம இருக்குற சீதோஷ்ண நிலை இது எல்லாத்தையும் மிக அழகா நமக்கு படம் புடிச்சி காட்டியிருக்காங்க…நீங்க ஏ.சி தியேட்டர்ல உக்காந்து படம் பாத்தீங்கன்னா தியேட்டர்ல அடிக்கிற குளிர் காத்து அப்படியே உங்களை ராவணன் படக் காட்சிகள்ல ஒன்றிப்போக வைத்து விடும்.
விக்ரம்,பிரபு,கார்த்திக்,வையாபுரி,ஜான்விஜய்,ப்ரியாமணி,ரஞ்சிதா,முன்னா இப்படி ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்துல இருந்தாலும் நம்மகிட்ட ஸ்கோர் வாங்குறது என்னவோ உலக அழகி ஐஸ்வர்யாராய் தான்.ஏன்னா விக்ரம் படத்துக்காக உடம்பி எத்துறது,குறைக்கிறது எப்படி எல்லா அர்ப்பணிப்பையும் செய்வாரு அது இந்தப் படத்திலேயும் இருக்கு.
ஆனா அதே அளவுக்கு படத்துல ஒவ்வொரு காட்சிலேயும் நடிக்கிறதுக்கு ரொம்ப சிரமங்களை எடுத்திருக்காங்க ஐஸ்வர்யாராய்.பொதுவா அழகில்லாத முகத்துல புதரை பூசி கொஞ்சம் அழகை கூட்டுவாங்க ஆனா இந்தப் படத்துல அழகான ஐஸ்வர்யாராய் முகத்துல கரி,சேறு இதையெல்லாம் பூசியிருக்காங்க…கரியை பூசிக்கிறாங்க,சேறை பூசிக்கிறாங்க,தரையில படுத்துக்கிறாங்க,கொட்டுற மழையில நனையிறாங்க,அருவி தண்ணியில குளிக்கிறாங்க,இலையில குடுக்குற சாப்பாட்டை சாப்பிடுறாங்க,பெரிய பெரிய பாறைகள்ல அசால்ட்டா நடக்குறாங்க இப்படி இயக்குனர் என்ன என்ன செய்ய சொன்னாரோ அதை எல்லாம் செஞ்சிருக்காங்க.., தான் சார்ந்திருக்குற தொழில்ல ஒரு அர்ப்பணிப்பான நடிகைன்னா அது ஐஸ்வர்யாராய் தான்னு தாராளமா சொல்லலாம்.
என்னோட உயிரை எடுக்குறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லை அது எனக்கு தான் சொந்தம்,உங்க வீட்டு பொண்ணுன்னா தங்கம்,எங்க வீட்டு பொண்ணுன்னா தகரமா…இப்படி அவரோட படங்களுக்கு எத்த மாதிரி அளவா வர்ற வசனங்கள் ஒவ்வொன்னும் ரசிக்க வெச்சிருக்கு.
ஏ.ஆர்.ரகுமானோட பின்னணி இசை முன்னணி இசையா மேரட்டலா ஆங்கிலப் படத்துக்கு இல்ல..இல்ல..அதை விட ஒருபடி மேலே போயி ஆங்கிலப்படங்களுக்கு தமிழ்ப் படங்கள் ஒன்றும் குறைந்தவை இல்லை அப்படின்னு சொல்ற அளவுக்கு ரொம்ப சிறப்பா, காட்சிகளுக்கு சரியா பொருந்துற மாதிரியான அவர் அடிச்சிருக்குற பாந்தமான பின்னணி இசை நம்ம மனச அப்படியே கொள்ளையடிச்சிட்டு போவுது.”உசுரே போவுது…” பாட்டுக்கு கண்டிப்பா நீங்க கெறங்கிப் போறது உறுதி..
கமர்சியல்,மசாலா ஐட்டங்கள்,குத்து ஸாங்,காமெடி,சண்டைக் காட்சிகள் இதெல்லாம் இல்லாம ராவா ஒரு படம் பாக்கணும்னு ஆசப்பட்டீங்கன்னா நீங்க தாராளமா ராவணன் பாக்கலாம்.
டிஸ்கி : படத்துல விக்ரம் ராவணன்,பிரித்விராஜ் ராமர்,ஐஸ்வர்யா ராய் சீதை,பழைய நடிகர் கார்த்திக் தான் அனுமன்
மணிரத்னத்தின் இன்னுமொரு மெகா முயற்சி. ராமாயணமும், மஹாபாரதமும் இன்னும் எத்தனையோ படங்களுக்கு கதை தரும் போல.. மீண்டும் ஒரு ராமாயணக் கதை கொஞ்சம் மாடர்னாக பர்னச்சாலையில் இருந்து ஆரம்பித்து ராவணன் இறப்பதுவரையாக தொடர்கிறது.
அண்ணன் விக்ரம்தான் ராவணன். ஐஷ்வர்யாதான் சீதா, கார்த்திக்தான் கிட்டத்தட்ட அனுமார், விக்ரமின் தம்பியாக வருபவர்தான் விபீஷணன்.
ராவணனால் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டு வரும் ராமர்தான் பிரித்விராஜ்.
இப்படியும் புரிந்து கொள்ளலாம்..
அல்லது
தமிழ்த் தேசியவாதியாக இறப்பதற்கு முன்னும், இன்னும் ஆக்கப்பட்ட வீரப்பர் கதையைப் போலவும் இதைப் புரிந்துகொள்ளலாம். போலிஸ் அராஜகங்களில் இருந்து மலைவாழ் மக்களை காக்கும் காவலாளியாக விக்ரமையும், முத்துலட்சுமியாக ரஞ்சிதாவையும், அவனது அடிப்பொடிகளாக பிரபு வகையறாக்களையும், சேர்க்கலாம்.
அல்லது
தங்கையைக் (பிரியாமணி) கொன்ற போலீஸ்காரர்களை பழிவாங்கும் அண்ணனின் கதையாகவும் கொள்ளலாம்.
படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மிக அழகான காடுகளிலும், அருவிகளிலும் அலைந்து திரிந்து வருகிறோம், நாம். நல்ல தியேட்டரில் பார்க்கக் கொடுத்துவைத்திருந்தால் அருவியின் சாரல் நம்மீது அடிப்பதைக் கூட உணரலாம்.
துல்லியமான ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவனும் அவரது உதவியாளர் ஒருவரும் கலக்கியிருக்கிறார்கள். நிச்சயம் எல்லோருக்கும் படத்தில் பிடித்த மிக நல்ல அம்சமாய் ஒளிப்பதிவு இருக்கும்.
இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஓரிரு பாடல்கள்தவிர மற்றதெல்லாம் சுமார் ரகம். பிண்ணனி இசை, ஓவர் சத்தம்.
சுகாசினியின் வசனங்கள் சுமார் ரகம். சந்தன வீரப்பனின் கிறுக்குத்தனமான உடல் மொழிகளுக்கேற்ற சில ஒலிகளை விக்ரம் அடிக்கடி விட்டுக்கொண்டே இருக்கிறார். ஓரளவுக்குமேல் எரிச்சல் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஐஷ்வர்யா பச்சன்.
படத்தின் மிகப்பெரிய பலம் இவரே. மிக மிக அழகாய் இருக்கிறார். எளிமையான உடையில், கண்ணை உறுத்தாத கவர்ச்சி காட்டுகிறார்.
அழகாய் இருப்பதாலோ என்னவோ, அவரது முகபாவனைகளும், அவரது உடல்மொழிகளும் மிக நன்றாய் இருக்கிறது.
விக்ரம்.
இந்த பாத்திரத்திற்கேற்ற உடல் முறுக்கும், வேஷங்களுமாக சூப்பராய் இருக்கிறார். ஐஷ்வர்யாவுடனான சொல்லாமலே காதல் காட்சிகளில் உடல்மொழிகளிலும், சிரிப்புகளுமாக கலக்குகிறார். படத்தின் இன்னொரு முக்கிய பலம் இவரே.
பிரித்விராஜ்.
மிக நல்ல நடிகர். இந்ந்தப்படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கடத்திச்செல்லப்பட்ட மனைவியை மீட்பது மட்டுமே இவரது வேலை. இவரது திரைவாழ்க்கையில் ஐஷ்வர்யாவின் ஜோடி என்பது மிக முக்கியமானதொரு விஷயமாய் இருக்கும்.
விக்ரமும், ப்ரித்விராஜும் தொங்கு பாலத்தில்போடும் சண்டை மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட். இருவருமே கலக்கியிருப்பார்கள்.
ரஞ்சிதா.
நித்தி கேசுக்குப் பின்னர் வெளியாகும் ரஞ்சிதா நடித்த படம் இது. ஐஷ்வர்யாவைவிட மிக அதிக கைதட்டல் கிடைப்பது இவருக்குத்தான். இவர் திரையில் தோன்றும் முதல் காட்சி முதல் எப்போதெல்லாம் திரையில் தோன்றுகிறாரோ அப்போதெல்லாம் கைதட்டல் காதைப் பிளக்கிறது. அருகிலிருந்த மலையாளி கூட்டம், எதுக்குடா இந்த சப்பை பிகருக்கு இந்தக் கைதட்டல் என நினைத்திருக்கும். படத்தில் ஏன் இவர் இருக்கிறார் எனத்தெரியவில்லை. இவர் இருக்கும் பகுதிகளை வெட்டியிருந்தால்கூட படத்தில் ஒரு வித்தியாசமும் இருந்திருக்காது. படத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். நித்தி கேசினால் மட்டுமா இல்லை, மணிரத்னமே போதும் என நினைத்ததாலா எனத் தெரியவில்லை.
பிரியாமணி
படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் கதையில் வரும் இவர் இருக்கும் சில நிமிடங்களில் நன்றாய்ச் செய்திருக்கிறார். போலிஸ் ஸ்டேஷனில் நடந்ததை விவரிப்பதும், அதன் பின்னர் கிணத்தில் விழுந்து இறப்பதுடன் அவரது பகுதி முடிந்து விடுகிறது. இதற்குத்தான் அண்ணன் விக்ரம் பழிவாங்கப் புறப்படுகிறார்.
கார்த்திக்
சிறிய வேடம் என்றாலும் கிட்டத்தட்ட படம் முழுக்க வருகிறார். புரியும்படி வசனம் பேசிய அவரது மிகச்சில படங்களில் இதுவும் ஒன்றாய் இருக்கும்.
மணி ரத்னத்தின் திரைக்கதை, இயக்கம், அவருக்கு அவர் நினைத்ததுபோல வந்திருக்கும் போல. ஆனால் நமக்குத்தான் ஒரு சராசரி தமிழ் படத்தை விட ஒரு படி மேலான படம் பார்த்த நிறைவு அவ்வளவே. குத்துப்பாட்டுகள், அனாவசிய சண்டைகள் ஏதுமின்றி ஒரு படம் காணக்கிடைப்பதே அரிதாய் இருக்கும் நேரத்தில் நிச்சயம் இது ஒரு இலுப்பைப் பூ சர்க்கரைதான்.
உயிரே படத்தில் எல்லையோரக் காவல்படையை வில்லனாக்கியிருந்தார். இந்தப் படத்தில் தமிழகக்காவல் துறையை வில்லனாய்க் காட்டியிருக்கிறார், மணிரத்னம்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்பு; எக்கச்சக்க பில்டப்புன்னு ராவணன் விளம்பரமும் ‘பத்து’ மடங்கு இருந்தது. மணிரத்னத்தின் மெளனம் போலவே படத்தின் ஒன் லைன்னையும் சைலண்டாக வைத்திருந்தார். கடைசியில பார்த்தா நம்ம வீரப்பன் கதைக்கே வேற மாதிரி கலர் கொடுத்திருக்கார் மணி.
படத்தின் டைட்டிலில் கதையென்று யார் பெயரையும் போடாததும் கவனிக்கத்தக்கது. வீரப்பன் கதையை இவர் எப்படி சொல்லியிருக்காருங்கறதையும் சொல்லிடுறோம்……
போலீஸால் தேடப்படும் சட்ட விரோதி வீரா (விக்ரம்) அவனையும் அவனை சேர்ந்தவர்களையும் கூண்டோடு கைலாசம் அனுப்ப மோப்பம் பிடிக்கிறார் போலீஸ் எஸ்.பி. பிருத்விராஜ். பிருத்விராஜுக்கு பயம் காட்ட அவரது மனைவி ஐஸ்வர்யாவை கடத்துகிறான் வீரா. மனைவியை மீட்பது, வீராவை தீர்ப்பது என இரட்டிப்பு வேலை வருகிறது பிருத்விக்கு. பாரஸ்ட் ஆபீசரான கார்த்திக்கின் உதவியுடன் காட்டுக்குள் நுழைகிறது போலீஸ் பட்டாளம். டுமீல் டுமீல்…. டிஸ்யூம் டிஸ்யூம்களுக்கு இடையே முடியும் க்ளைமாக்ஸில் தோற்பது யார்? என்ற சஸ்பென்ஸ் மட்டுமே இரண்டு மணிநேர படத்தில் இதயம் தொடும் இடம்.
கதையையும் காட்சியையும் விளக்கிவிட்டால் அடுத்த நொடியே அதற்கான உருமாற்றத்திற்கு தயாராகிவிடும் விக்ரம் இதிலும் தனது உழைப்பை கொட்டியிருக்கிறார்.
ஒரு காட்சியில் ராவணன் எப்படிப்பட்டவன் என ஊர் மக்களை அழைத்து விசாரிக்கிறார் ப்ருத்விராஜ்.
ராவணன் தாய் மாதிரிங்க. அவ்வளவு அன்பா இருப்பான்….
அவன் பெரிய வீரங்க அவனை யாராலும் ஒன்னும் பண்ணமுடியாது…..
ராவணன் தப்படிக்க ஆரம்பிச்சா அவ்வளவுதான் ஆட்டத்தை நிறுத்த முடியாது….
ராவணன் குழந்தை மாதிரிங்க… ரொம்ப இரக்க குணம்….
அவன் மனுஷனே இல்ல கோபம் வந்தா மிருகமா மாறிடுவான்….
என ஆளுக்கொரு வடிவம் கொடுக்கின்றனர் ராவணனுக்கு. இப்படியான தனது குணாதிசயத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும் விக்ரம் மிரட்டியிருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் அழகை பார்த்து மனம் சலனப்படுவது, இங்கேயே இருந்துடுறீங்களா? என தனது ப்ரியத்தின் முகம் காட்டுவது, ஐஸ்வர்யா தாக்க வரும்போது முகத்தில் வருடிச்செல்லும் கூந்தலின் வாசம் பிடிப்பது என மென்மையாக நடந்துகொள்ளும் விக்ரம், போலீஸ் கேம்பில் புகுந்து ருத்ரதாண்டவம் ஆடும்போது பயமுறுத்துகிறார்.
விக்ரம் மட்டுமல்ல அவரது இடத்தில் யார் இருந்தாலும் ஐஸ்வர்யாவின் அழகில் மனசுக்குள் சபல பூகம்பம் தொடர் ஆட்டம் காட்டுவதென்னவோ உண்மைதான். ராவணனின் கைகெட்டிய தூரத்தில் அழகு ராட்சஸியாக மயக்கும் ஐஸ்வர்யாவை விக்ரம், கண்ணால் மட்டும் தொட்டு பார்க்கும் இடங்கள் கவியரசரின் வரிகள்.
“என்னை உன்னால கொல்ல முடியாது…. என் உசிரு எனக்குதான் சொந்தம் அதை எடுக்க உனக்கு உரிமையில்லை..” என்றபடி மலை உச்சியிலிருந்து குதிக்கும் தைரியம், விக்ரமின் ஆளுகையில் மனசு சிறைப் பட்டுவிடாமல் தற்காத்து கொள்ளும் முயற்சி, விஷ்ணுவின் சிலை முன்னால் நின்று தான் தடம் மாறிவிடாமல் இருக்க வேண்டி தடுமாறுவது என ஐஸ்….. வெரி நைஸ்!
எஸ்.பி.யாக வரும் ப்ருத்வியிடம் அலட்டல் இல்லாத நடிப்பை பார்க்கமுடிகிறது. வீராவின் தம்பியை வரச்சொல்லி நயவஞ்சகமாய் போட்டுத்தள்ளுவதாகட்டும், வீராவுக்கு வலை விரிக்க ஐஸ்வர்யாவிடம் சந்தேக வார்த்தை சொல்லி காய் நகர்த்துவதாகட்டும் சரியாக பிரதிபலித்திருக்கிறார் நடிப்பை.
விக்ரமின் அண்ணனாக வரும் பிரபுவின் கேரக்டர் பெரிதாக பாராட்டும்படி இல்லை. கார்த்திக்கிற்கு மணிரத்னம் திருப்புமுனை தருவார் என்ற எதிர்பார்ப்பில் விழுந்துள்ளது ஏமாற்றமே. ஃபாரஸ்ட் ஆபீசர் கேரக்டரை ‘பாட்டில்’ ஆபீசர் கேரக்டராக்கி கார்த்திக்கை காமெடி பீஸாக்கியுள்ளார் மணி. விக்ரமின் தங்கையாக ஒன்றிரண்டு சீன்களில் வந்து ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்துகொள்ளும் ப்ரியாமணியின் சோகம் படம் பார்ப்பவர்களின் மனசுக்குள் ஒரு சொட்டுக்கூட ஒட்டவில்லை. நித்யானந்தா புகழ் ரஞ்சிதாவின் கேரக்டர் படத்திலும் தலைமறைவுதான்.
படத்தின் உண்மையான நாயகன் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுதான். காட்டுக்குள் கண்காட்சி நடத்தியிருக்கிறார். குறிப்பாக இந்த சீன் சூப்பர் என்று சொல்ல முடியாத அளவிற்கு எல்லா கோணங்களிலும் அற்புதம் காட்டியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.
அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான். ‘உசுரே போகுதே உசுரே போகுதே…..’, சன்னமாக ஒலிக்கும் ‘காட்டு சிறுக்கி….’ பாடல்களில் ரஹ்மானின் விரல்களுக்கு மனசு அடமானமாகிறது. அருவியின் சப்தம், நீரோடையின் சலசலப்பு, மரக்கிளை முறிந்து விழும் ஓசை என பின்னணியிலும் துல்லியம் காட்டியிருக்கிறார். கலை இயக்குனர் சமீர் சந்தாவின் கைவண்ணத்தில் எது பாறை எது செட் என்று அடையாளம் தெரியாதபடி தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமான இணைப்பை மிக நுட்பமாக, அழகாக செய்திருக்கும் எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்தையும் பாராட்டலாம்.
எல்லாம் சரி மணி என்ன பண்ணினார் என்று கேட்டால்… சங்கடம்தான் மிச்சம். ஆரம்ப காட்சியில் ஹாலிவுட்டிற்கு நிகரான மேக்கிங்கில் கவனம் ஈர்க்கும் இயக்குனர், அதன்பிறகு க்ளைமாக்ஸில் மட்டும் கவனிக்கவைக்கிறாரே தவிர இடையில் காணாமல் போய் ஏமாற்றுகிறார்.
வீரா சட்டவிரோதி என்பதற்கான காரணங்கள், அவன் அப்படி செய்த குற்றங்கள் என்ன? மக்கள் தலைவனாக வீரா உருமாறும் காரணம்? போன்றவற்றிற்கு காட்சிகளிலோ, வசனங்களிலோ எந்த தெளிவும், ஆதாரமும் இல்லாமல் இருப்பது கதையின் அழுத்தத்தை குறைக்கிறது.
ப்ரியாமணி திருமணம் நடக்கும் இடத்தின் பின்னணியில் வடநாட்டு சாயல் இருக்கிறது. திருநெல்வேலி அருகே கதை நடப்பதாக சொல்லிவிட்டு, அதற்கு சம்பந்தமில்லாத இடங்களில் படமாக்கியுள்ளது செயற்கையாக தெரிகிறது.
பிரமாதமான ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் மட்டும் இல்லையென்றால் பத்து தலையின் வலியையும் ஒத்த தலையில் கொடுத்திருப்பான் இந்த ‘ராவணன்’.
குரு,ஆய்த எழுத்து(யுவா) என 2 தோல்விப்படம் கொடுத்த பிறகும் மணிரத்னம் படத்திற்கு இன்னும் மார்க்கெட் இருக்கவே செய்கிறது.ரஜினி,விஜய் படத்திற்கு இணையாக ஈரோடு,கோவை,சேலம் எல்லா ஊர்களிலும் 4 தியேட்டர்களில் ரிலீஸ்.ஆஸ்கார் ஏ.ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் ஆல்ரெடி ஹிட்.2 வருடமாக தயாரிப்பில் இருந்த படம் என்பதால் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறி இருக்கும் வேளை.படம் எப்படி?
தங்கையை லாக்கப்பில் வைத்து கெடுத்து அவள் மரணத்துக்கு காரணமான போலீஸை பழி வாங்க அண்ணன் ஒரு போலீஸ் உயர் அதிகாரியின் மனைவியை கடத்தி மிரட்டுவதுதான் கதை.இந்த அரதப்பழசான கதைக்கு மாவொயிஸ்ட்கள் பிரச்சனை,ராமாயணக்கதை என தேவை இல்லாமல் பில்டப் குடுத்து எ(கெ)டுத்திருக்கிறார் மணி.
படத்தில் ஸ்கோர் செய்வதும்,ஐஸ்தான்.டைரக்டர் நம்பி இருப்பதும் ஐஸ்தான்.
37 வயது முதிர்கண்ணி வெடியையும்,ஒளிப்பதிவாளரையும் வைத்துக்கொண்டு மணி காட்டும் வித்தைகள் பிரமாதம்.ஐஸை புக் பண்ணும்போதே படம் முழுக்க நீங்க லோ கட் ஜாக்கெட்லதான் வரீங்க என சொல்லி விட்டார் போலும்.சோக காட்சி,சேஸிங் காட்சி,என காட்சிக்கு காட்சி
மிசஸ் ஐஸ் பச்சனின் க்ளியவேஜ் காட்சிகள்(ஐஸூக்கு குடுத்த 3 கோடி இதுக்கே சரியா போச்சு)
இந்த படத்தை ரொம்ப நம்பி ஏமாந்தவர்களில் முக்கியமானவர் விக்ரம்.
பிதாமகன் ரேஞ்சுக்கு இருக்கும் என நம்பி அவரும் ஏமாந்து நம்மையும் ஏமாற்றி விட்டார்.காட்டுவாசி மாதிரி நடந்து கொள்ளும் அவரது பாடி லேங்குவேஜ் எடுபடவில்லை.உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து அவர் டைவ் அடிக்கும் ஆரம்பக்காட்சியில் விசில் பறக்கிறது.அதற்குப்பிறகு கிளைமாக்ஸ் வரை அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி சீன் இல்லை.
தங்கை இழந்த சோகத்தில் இருப்பவர் கடத்தி வரப்பட்ட ஐஸைக்கண்டதும் காதல் கொள்வதும் நம்பும்படி இல்லை.
பிருத்வியின் பங்களிப்பு வீரா என 8 முறையும்,வீரய்யா என 4 முறையும் அடித்தொண்டையில் கத்துவதோடு முடிந்து விடுகிறது.படம் பூராவும் அவர் வீரா எங்கே என தேடுகிறார்,நாம் கதை எங்கே என தேடுகிறோம்,
உசுரே பொகுது பாடல் பாடிய விதம்,படமாக்கிய விதம் எல்லாம் டாப்.
பல இட்ங்களில் வசனம் சுத்தமாக புரியவில்லை.யாராவது பேசும்போது பேக்கிரவுண்டு மியூசிக் போட்டால் அது கிளாசிக் படம் என யார் சொன்னார்களோ தெரியவில்லை.
வசனம் சுஹாசினி.மொத்தமே 4 பக்கம் தான் வரும்.கிளைமாக்ஸ் வசனம் பிரமாதம்.
ராமன் சீதையை ராவணனிடம் இருந்து மீட்டு வரும் வ்ழியில் இருவருக்கும் நடக்கும் உரையாடல் அட்டகாசம்,சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்தே எழுதப்பட்ட அந்த உரையாடல்,
உன்னை அடிச்ச்சானா?
இல்லை
உன்னை காயப்படுத்துனானா?
இல்லை
தொட்டானா?
இந்த சீனில் ஐஸ் காட்டும் அதிர்ச்சி கிளாசிக்.
தனக்கு இந்த படம் பிரமாதமான ரீ எண்ட்ரி என நம்பி ஏமாந்தவர்கள் 2 பேர்.
1.பிரபு 2.கார்த்திக்
ரஞ்சிதா 2 சீன் வந்தாலும் என்ன ஒரு அப்ளாஸ்(உபயம் நித்யானந்தா)
உசுரே பொகுது பாடல் காட்சி திருடாதிருடா படத்தில் வரும் ராசாத்தி என் உசுரு பாட்டின் சாயல்.
கிளைமாக்சில் 2 விசயங்கள் தெளிவில்லை.
1.பிருத்விக்கு ஐசின் மேல் உண்மையாகவே சந்தேகமா?சும்மா அவரை தூண்டி விட்டு விக்ரமின் இருப்பிடம் அறிய செய்த தந்திரமா?
2.ஐசுக்கு விக்ரம் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் இருந்ததா?
பிரியாமணியின் ரேப் சீன் பெரிய பாதிப்பு வராமல் போகக் காரணம் பருத்தி வீரனில் இதை விட தத்ரூபமாக (!)பார்த்து விட்டதால்.பிரியாமணியை வைத்து ரேப் சீன் எடுக்க நினைக்கும் டைரக்டர்ஸ் கவனத்தில் கொள்ளவும்.
டும் டும் டும் ஜோதிகாவை பிரியாமணி இமிடேட் செய்கிறார்.அவரது சொந்தக்குரல் ஆண்மை கலந்த வாய்ஸ்.
மொத்தத்தில் படம் ஐசுக்காக மட்ட்மே பார்க்கலாம்.விக்ரம் ரசிகர்கள்,மணிரத்னம்ரசிகர்கள் எல்லோருக்கும் ஏமாற்றமே.
The thought that keeps occurring to you as you watch Madras Talkies’ Raavanan by ace director Mani Ratnam, is that it certainly looks very beautiful.
The forests are lush; the greenery is breath-taking; the mountains take you to a virgin world where nature is at her bold, wild and untamed best. You’re lost in a brilliantly colourful landscape of mists, waterfalls and wet boulders.
But whether the movie satisfies the enormous hype it’s generated story-wise, is something else, altogether.
The scene: The forested areas in the vicinity of Ambasamudram, or Megamalai, as it’s so eloquently expressed in the local papers. Areas that are inaccessible to outsiders; only the local residents know the place; even then, its treacherous.
The players
Raavanan: Veera aka Veerayyan (Vikram), the man who rules practically every frame, as it were. In the beginning, he comes across as rather schizophrenic. His weird gestures, staccato dialogue delivery and sudden mood shifts are a bit difficult to understand, and it takes you a good deal of time to assimilate his character. But he’s easily the backbone of the film; the reason the story even moves, falteringly from scene to scene.
Intensely loyal to his people, his background is supposed to be a gory one. For he’s committed crimes too horrible to contemplate. What we’re shown, though, is only a part of them, his retribution for his sister’s death. What he did before that is anyone’s guess, and it’s not nearly so frightening as you’re led to believe.
Rama: Dev Prakash (Prithviraj), the dashing, handsome archetypal hero who’s destined to destroy evil. He’s an encounter specialist with 28 successes to his credit. Again, no details are forthcoming. He’s the divine incarnation and that’s pretty much it.
He wears shades, swings a gun with elan and enlists as many of the forest aides as he can in his search for his captured wife. He’s supposed to love her, and his motive in reaching Veera is avenging his wife’s capture but what you see doesn’t seem to correspond to love.
Aishwarya Rai Bachchan in Vikram RaavananSeetha: Ragini (Aishwarya Rai-Bachchan), a dazzlingly lovely porcelain doll who wears surprisingly low-cut salwar kameezes that show more of her than ideal, is a cop’s wife.
There’s a hurried song, Kalvare, that shows her love for her husband and she does exhibit her loyalty to him throughout the film but it’s does secondhand, in the way she resists Veera’s attempts to subdue her.
Her dialogues are corny, artificially arrogant; one of her first lines is to taunt Veera with a recital that’s so jarring you can barely believe it.
In name, she defies him, jumping off waterfalls and fasting, but though she looks quite the angel in distress, she’s a little too self-possessed to make an impact. You somehow get the feeling that nothing horrible is going to happen to her, and you’re right.
Her change of heart is predictable. At no point does she arouse your sympathy and after a point, her stricken face becomes tedious to watch. She speaks Tamil, but she may as well have spoken Hindi despite Rohini’s excellent dubbing. Her dialogue delivery is cringe-worthy.
Hanuman: Gnana Prakasam (Karthik) is one of the few genuinely likeable characters in the film. He drinks, jumps around, chatters incessantly, and though obviously belongs to Dev’s “side,” is absolutely fearless when it comes to meeting Veera on his own home-ground. He’s in character, sympathetic as the situation demands it, and comes across as realistic, despite the caricature-like portrayal.
Kumbakarnan: Singarasu (Prabhu) is Veera’s brother, who stands by him through thick and thin. Though he has little screen-space, he portrays the gruff toughie with a heart of gold so well that it warms your heart. His job is to stay by Veera’s side, come what may — and he does it well.
Surpanaka: Priya Mani, the National Award winner lives up to her reputation as she plays Vennila, the betrayed sister and the reason for Veera’s supposedly horrible rampage against the police. Epics paint her as evil, and with designs on Rama but this story shows her almost as a heroine, and completely lust-free.
Vibeeshanan: Munna plays Sakkarai, a brief role of a peace-maker. But his role is so brief that it’s almost pointless though his part in the tale is surprising, and makes Rama appear even blacker than necessary.
Considering such a solid background, obviously talented actors and beautiful settings, not to mention Santhosh Sivan and V Manikandan’s scintillating cinematography, Sreekar Prasad’s slick editing, A R Rahman’s neat score (both background and songs), Sameer Chanda’s brilliant art-work, one expected an epic. Not so.
The screenplay, instead of cruising along, stutters and stammers. Suhasini’s dialogues make you cringe, and wonder if you’re in some Japanese play. The intention is to make Veera the hero but it’s been done at the expense of Dev, the Rama of the epic, who behaves so cruelly and with such pointless arrogance that one gets irritated.
There are no twists and turns, nothing in the narration that shows intelligence leaving the viewer detached, with nothing to relate to.
One major redeeming factor, however, is Vikram, the man who carries the film on his shoulders, and touches you in the last ten minutes. The vulnerability in his eyes show you what he’s capable of, given the chance.
The other is Priya Mani, who makes it work despite the tiny screen-space she’s allowed. The secondary characters work better than the principals, who seem stilted.
Raavanan is a beautiful travel package that shows you the best of Mother Nature, and considerably less of human nature. Go with low expectations, for it has lots of style but little substance.
An excessive ornateness of visual elegance, technical excellence and stunning delineations of characters marks ‘Raavanan’ as a most estimable chef-d’oeuvre of Manirathnam. Yeah! ‘Raavanan’ is a modernized tale of Hindu Mythology ‘Ramayanam’ as even the minute details have been adapted to the present-age issues. Let’s not relate it with sociological aspects of ‘Maoists’ or LTTE…
It’s a story that revolves around every character involved in this drama with own ideologies, justifications and conflicts.
Perhaps, this must gone far ahead of your perception levels or you may kink up this as an articled research.
To start off with, the film’s synopsis is similar is so simple, but the Mani’s treatment of getting you straight into the conflict right on the 10th minute of the show is magnificent.
Cops are mercilessly massacred; their lives are endangered vividly in the region of Vikramasingapuram by a specific community, Raghini (Aishwarya Rai Bachchan), wife of honest cop Dev (Prithviraj) is kidnapped.
Veeraiyya (Vikram) is the man behind this drama and he has his own plans of seeking revenge. But this isn’t patently all about retaliating for the loss, but a strange yet powerful drama of relationship that plunges between the Hunter and Hunted.
A story told in short, depth and crispness always wins the heart of audiences. If so, Manirathnam scores brownie points over the attribute as ‘Raavanan’ is just 130mins in duration.
The complete first hour travels with the establishment of characters and the contradictions involved with them. But the intriguing part starts off post-intermission. You have couple of peppy festive numbers ‘Kodu Potta’ and ‘Keda Kari’ with stunning choreography and a mind-blasting stunt on the Bridge (again symbolizing a bridge in Ramayanam) by Peter Hein adds more momentum. Especially, the heart-wrenching climax with A.R. Rahman’s vocalism sets you on for an emotional trauma.
At last, it’s a best thing to give away a standing ovation for the entire team for their earnest efforts to deliver an exceptionally best show. Aishwarya Rai Bachchan must thank Manirathnam for offering her knifelike distinction from her previous films. Marked by unusually impressive acting, she walks with unstoppable applauses during climax. Just watch her imitating Vikram’s mannerisms and the very next moment your hearts would skip a beat.
Thanks to Manirathnam! Nice to see Vikram without his ‘Chiyaan’ in title cards and of course he isn’t the same Chiyaan as you saw him over his past movies. He has pretty lot of chances to fetch the best honors while Prithviraj makes a best attempt to keep him along with the bandwagon of lead characters. His role is trivialized and looses out importance at some point. Somehow, the penultimate sequences with Vikram and Aishwarya Rai brings out some estimable gestures.
Prabhu’s meaty role embellishes the script while Karthik’s portrayal as modern day Hanuman (flying across trees right at the introduction) is fine. The ultimate show is evident on his conversation with Vikram and Prabhu to sort down the issue. Munna deserves special mention and this guy must now carefully choose the best scripts to get his fortunes prolonged.
On the flip side, the continuities do miss at some point just as Prithviraj with and without beard at fraction of seconds. Manirathnam seems to have been uninterested over the picturing of ‘Usure Pogudhey’ as the footages repeated over and again throughout the track. Background score on percussions and unique instrumental styles are a special treat for his buffs. Santhosh Sivan and Manikandan – two pillars of visual enhancement have shown a diligent work. Sreekar Prasad’s editing is neat and the cuts necessary at every situation has been exactly done.
A moment to relish for the audiences if they were looking for a good cinema… Elite audiences can opt for this show and so the ‘B’ centre audiences, but the following level audiences may or may not grasp this to be a cake meant for them to taste.
What works: Everything on narrative and technical aspects
What doesn’t work: Sort of discontinuities and nothing else…
Verdict: A FILM TOLD IN MANIRATHNAM’S WAY
Banner: Madras Talkies, Big Pictures
Production: Manirathnam
Story, Screenplay and Direction: Manirathnam
Dialogues: Suhasini Manirathnam
Music: A.R Rahman
Cinematography: Santhosh Sivan
Editing: Sreekar Prasad
Starring: Vikram, Aishwarya Rai, Priyamani, Prithviraj, Prabhu, Karthik, Munna, Ranjitha.
Direction: Mani Ratnam
Music: A R Rahman
Production: Madras Talkies
Let’s get this straight. Raavanan is not Mani Ratnam’s attempt to venerate the epic villain whose name the movie is titled after. It’s not also a study on complex human relationships weighed down by trust, conviction or quandary. It’s a pure cinematic retreat spanning across the dense jungles of Southern and Central India with exceptional cinematography (Santosh Sivan and
Raavanan
Manikandan), by-now cult songs (A R Rahman) and interesting performances by its lead actors. And the significance of the movie appears in the same order mentioned above.
Mani’s conviction of illustrating an unachievable love story between the two leads (Aishwarya Rai and Vikram) is palpable from the very start of the movie. However, the blossoming of love doesn’t quite form the back bone of Raavanan so much. The movie digresses into other aspects – a man hunt, flash backs, revenge drama and so on and so forth. The man hunts lack dexterity, the revenge drama that is triggered by the death of Vikram’s sister seems engineered and Prithviraj often comes across as stiff – showing unnecessary tautness in the character that is probably designed to defy emotions (may be because he is in his Khakis?).
But all that is absolved, as the movie stunningly unfolds often drenching itself in the monsoonal deluge making you feel rain-soaked. If you have any doubt about Mani’s eternal love affair with rain, Raavanan stands as a remarkable testimony. It rains in the song sequences, in encounters and in emotional scenes. And at other instances, the sky is constantly downcast as if threatening to pour down. And the cinematography captures it all in delightful exuberance.
For the most part, Vikram owns the movie seizing it magnificently even from Mani’s own hands. His love blooms out of astonishment at the outwardly courage displayed by Aishwarya Rai and he makes those scenes persuasive for the viewer. He infuses life into the character and shows no jaggedness, falling for a married woman thus replicating, probably the characters of Raavanan. Suhasini’s profound dialogues come in handy in many places and the viewer is made to read between lines quite often.
Aishwarya Rai’s semblance of the late Padmini is unmistakable, it could be her dialogues or the way she manages her composure attentively even in the hardest of terrains the character puts her through. The lady sure has attempted to reach on par with Vikram in performance in many sequences. Kudos to Mani for a dignified portrayal of his lead woman. There is a refreshing strength in Ragini’s character brought out well by Aishwarya.
Prithvi plays a toughie police officer and somehow his character portrayal leaves a few questions unanswered: for instance, his love for Aishwarya Rai is weighed down by his commitment and that singular fact does not come across convincingly.
Priyamani plays the ill-fated Vennila and leaves a lump in your throat. Karthik in his second innings steals the show. Prabhu and Munna play support roles that ebb and flow with the movie.
Cinematography by Santosh Sivan is brilliant and has rendered the perfect support for Mani. His probing lens takes the audience through the thick jungles, the mighty waterfalls and the rough terrains of India. Music and art direction play equally momentous role in Raavanan as its lead actors. If not for Rahman’s songs and background score, Vikram’s unrequited love wouldn’t have been so painful for us. The songs have already been much debated about and leave no scope for further discussion. One word though: it’s not for nothing “Usure Pogude…” has achieved a cult status. You tend to try hard not to fall in love but fail with the song as Vikram heaves a sigh of relief, having seen Aishwarya Rai breathing and alive after a steep fall.
Sameer Chanda’s art direction complements the ruggedness and splendid beauty of the nature in the jungles so well you refuse to believe anything is man-made.
A major drawback is the lack of ‘Tamil’ feel in the film and its music; it more appears for the audience north of Vindhyas in many places. What Mani loses out is the pace over the later part of the first half; he gains it back with a major twist in the climax. Although you have a few questions about the incidents leading to the finale, those are done away with – thanks to the elegiac climax.
Verdict: Watch Raavanan, it’s visually poetic!
Banner: Madras Talkies, Big Pictures
Production: Manirathnam
Story, Screenplay and Dialogues: Manirathnam
Dialogues: Suhasini Manirathnam
Music: A.R. Rahman
Cinematography: Santhosh Sivan
There isn’t anything much you can expect from this master of contemporary cinema. Stunningly spectacular visuals, Sleek and stylish technical aspects, crispy narration, powerful characters and the actors making every gesture look perfect. What else does a perfect cinema need than this?
Manirathnam’s ‘Raavanan’ is remarkably great as it surpasses out to the highest degree of exceptional arenas.
Just as our viewers wanted a short and sweet review, we bring you an exclusive analysis in shorter notes.
The story of Raavanan goes this way…
Veeraiyya aka Veera (Vikram), an outlaw and untamed personality rules the entire region of Vikramasingapuram. Here the cops have got nothing to do with their law and justice as everything comes under him. Deva (Prithviraj), a honest cop is on the verge of pulling down his realms. Regrettably, it results in the death of Veera’s sister (Priyamani) and the revengeful act now sets open a chain of events. Raghini (Aishwarya Rai Bachchan), Dev’s wife is kidnapped and what unfolds next is a series of events that plunges open an emotional drama between these characters.
A creme de la creme show by Manirathnam… First of all, we must appreciate him for directly taking us into the story. 5 minutes into the film, you’ve the complete prologue as Mani attempts for a novel kind of narration and the characters stand out more than their star values.
Aishwarya Rai was reported to be dubbing with her voice, but it sounds like actress Rohini has done it at few points. Vikram’s characterization of ‘Raavana’ persona has been splendidly depicted. Just as the 10 different people define in their own terms as a nice guy, talented literary figure, jovial person with sense of humor and so on, it’s completely amazing. Prithviraj’s delineation as mythological Rama is apt and his action during penultimate sequences of doubting his wife for a cause is justifying. Karthik as Gnyanaprakasham, a forest officer strides with his own acts.
But when compared to his previous film ‘Maanja Velu’, he doesn’t get more footage, but his role is best as Prabhu. Nice to see this duo Karthik-Prabhu once played lead roles together in Manirathnam’s yesteryear blockbuster ‘Agni Natchathiram’ together again. Priyamani’s role hasn’t got much to do with this film and it could have been done by any other actress, even a newcomer. John Vijay’s role as Prithviraj’s assistant is good. Ranjitha doesn’t appear more than 3 shots.
The climax portion is the best of 130mins as the film the performance level of Aishwarya Rai and Vikram are top-class. Remember this; none could’ve done such a best acting than them at this place. Thanks to Manirathnam for a best casting.
A.R. Rahman has pulled all his best efforts in the background score. Especially, it’s nice to hear the song ‘Kattu Sirukki’ in a different tone in backdrop. A.R. Rahman’s additional song in the climax is blissful and it’s sure to soak your eyes. Santhosh Sivan and Manikandan have canned their shots with unique styles and there are many places where you can distinctly spot them. Sreekar Prasad’s editing during the first 15minutes and last 15mins is fantabulous. Choreography in all the songs, particularly ‘Kodu Potta’ is stupendous while ‘Usure Pogudhey’ has some repeated shots in visuals.
The continuities do miss at few spots and Manirathnam could have corrected it down on the editing table with good transitions and even the final shot of climax is more abrupt.
On the whole, ‘Raavanan’ is a film that doubtlessly offers something new, fresh and exceptional. But it would be an aggrandizing aspect to say that it’s the ever best of Manirathnam. Sorry, the film isn’t best than some of his yesteryear showpieces, but can be regarded as one intensely emotional film.
Verdict: ‘Raavanan’ defines New-Age Cinema
நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ், கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா
வசனம்: சுஹாசினி
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம்: மணிரத்னம்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்-பிக் பிக்சர்ஸ்
பிஆர்ஓ: நிகில் முருகன்
பொதுவாகவே கதைக்காக ரொம்ப மெனக்கெடாத மணிரத்னம், இந்த முறை வால்மீகி- கம்பரின் ராமாயணம், சமகால ராபின்ஹுட்டான சந்தனக் காட்டு வீரப்பன் கதை என கலந்து கொடுத்துள்ள ‘வீரப்பாயணம்’, இந்த ராவணன்!.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக ஹை-கிளாஸ் இயக்குநராக ஆராதிக்கப்படும் ஒரு கலைஞரிடமிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கும் இந்த நேரடி தமிழ்ப் படம், தமிழ்ப் படமாக வந்திருக்கிறதா என்பதுதான் கேள்வி!.
பழங்குடி மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் வீரா (விக்ரம், அதாவது ராவணன்). அண்ணன் சிங்கம் (பிரபு- அதாவது கும்பகர்ணன்), தம்பி சக்கரை (முன்னா- அதாவது விபீஷணன்), தங்கை வெண்ணிலா (ப்ரியாமணி- அதாவது சூர்ப்பணகை) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. அவனுக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்.
அவனை வேட்டையாட சிறப்பு அதிரடிப்படை வருகிறது, தேவ் (பிருத்வி ராஜ்-அதாவது ராமன்) என்ற அதிகாரி தலைமையில். இந்த ராமனின் காதல் மனைவி ராகினி (ஐஸ்வர்யா ராய்- அதாவது சீதா). இந்த ராம சேனையில் அனுமாராக கார்த்திக் வருகிறார்.
வீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை போட்டுத் தள்ளப் பார்க்க, குண்டு காயத்துடன் அவர் தப்பிக்கிறார். உடனே அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிப் போகும் அதிரடிப் படையினர், அவளை கற்பழிக்கிறார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
அந்த கோபத்தில், போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்திப் போகிறார் வீரா. உடனே அவளைத் தேடி போலீஸ் அதிகாரி தேவ் பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார்.
ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான். அதை மறுக்காமல் அமைதி காக்கிறாள் ராகினி.
ஒரு கட்டத்தில் வீராவின் தம்பியையும் போலீஸ் அதிகாரி கொல்கிறான். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் போலீஸும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான போலீஸ் அதிகாரி தேவை கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பிவிடுகிறான்.
கணவனோடு ரயிலில் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும் ராகினியின் கற்பை சந்தேகப்படுகிறார் கணவர் தேவ். இதனால் கோபமடையும் ராகினி மீண்டும் வீராவிடமே திரும்புகிறாள் ராகினி… அதன் பிறகு நடப்பது தான் க்ளைமாக்ஸ்.
படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை ஏகப்பட்ட குளறுபடிகள்…
நடப்பது தமிழ்ப் பழங்குடியினரின் கல்யாணம்… பின்னணியில் காசி, மதுரா நகரங்களில் உள்ளது போன்ற மாட மாளிகைகள், கூட கோபுரங்கள்… திருநெல்வேலிக்குப் பக்கத்தில் உள்ள அம்பாசமுத்திரத்தில் ஏது இதெல்லாம் என்ற கேள்வி நெஞ்சுக்குள் எழ அதை கப்பென்று அமுக்கிவிட்டு அடுத்தக் காட்சிக்குப் போகிறோம்.
ஹோ வென்ற இரைச்சலுடன் அருவி… கட்டற்று ஓடும் வெள்ளத்துக்கு நடுவே ஒரு மெகா சைஸ் சிலை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில். வெள்ளத்தின் இன்னொரு பக்கம் கோட்டை கொத்தளம் மாதிரி செட்டப். நாயகனோ போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி… இப்படி சமீர் சந்தாவின் கலை இயக்கத்தில் எக்கச்சக்க ஓட்டைகள். தன்னை முன்னிருத்தும் அவரது முயற்சியில் காட்சிகள் தோற்றுப் போவதை கவனிக்கவில்லையே!.
திடீர் திடீரென்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை என கதாபாத்திரங்களின் ஸ்லாங் மாறிக் கொண்டே இருக்கிறது… வசனங்களில் அபத்த நெடி. யார் எழுதியது… ஆ… சுஹாசினி. ரொம்பக் கொடுமை!.
எத்தனை அடி உயரத்திலிருந்து குதித்தாலும், எரியும் பாலத்திலிருந்து விழுந்தாலும் கதாநாயகனுக்கோ, வில்லனுக்கோ சின்ன சிராய்ப்புதான். ரியலிஸம்?.
தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்க, அவன் மனைவியைக் கடத்தி வந்த ஹீரோ, பின்னர் அந்த நினைப்பை தூக்கிப் போட்டுவிட்டு குடி- கும்மாளம், தூக்கி வரப்பட்ட இன்னொருத்தன் மனைவி மீது காதல் என அலைபாய்கிறான்…
அட, கூடப் பிறந்த தம்பியை அதே போலீஸ்காரன் போட்டுத் தள்ளியும் கூட, அவன் மனைவி மீது கொண்ட ஆசையால், அவனைத் தப்பிக்க வைக்கிறான் ஹீரோ… ஆனால் ‘தாய் மாதிரி’ அன்பானவன் என்று அதே பாத்திரத்துக்கு பில்ட் அப் வேறு!
ரஹ்மான் இசையில், கெடா கெடா கறி, வீரா வீரா என இரண்டு பாடல்கள் அட்டகாசம். எல்லோரும் ஓஹோவென்று கொண்டாடும் உசுரே போகுதே… பாடல் நன்றாக இருந்தாலும், பாடப்படும் சூழல் படத்தின் மீதான மதிப்பைக் குறைக்கிறது. அதுஎன்ன காட்டுப் பகுதி பயணம் என்றால் இன்ஸ்டன்டாக ஒரு கிழவி ஈனஸ்வரத்தில் முனகுவதாக ஒரு பின்னணி?.
தமிழ் உணர்வோ, தமிழருக்கான குறியீடுகளோ, தமிழ் இடவமைப்பு பின்னணியோ இல்லாமல் இருப்பதால் ஏதோ வேறு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற உணர்வு.
க்ளைமாக்ஸ் காட்சி படு சொதப்பல். ரயிலில் கணவனோடு போகிறாள் மனைவி… கணவனுக்கு அவள் நடத்தை மீது சந்தேகம். உடனே ரயில் சங்கிலியைப் பிடித்து நிறுத்துகிறாள். இறங்கி நேராக தன்னைக் கடத்தியவனிடம் போய், ‘என்னைப் பற்றி என் புருஷன்கிட்ட என்ன சொன்னாய்?’ என்று கேட்பதாகக் காட்சி. நம்பகத்தன்மை என்பதை விட… சிறுபிள்ளைத்தனமான சித்தரிப்பு என்பதே பொருத்தம்.
குறைகள் மட்டுமேவா என்றால்… நிறைகளும் உண்டு.
அதில் முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு. தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே ஜில்லிடும் அளவு தத்ரூபமான ஒளிப்பதிவு.
அடுத்து விக்ரமின் நடிப்பு. அது ஒரு முழுமையற்ற பாத்திரம், பெரிய ஈர்ப்பைக் கிளறாத ஒன்றுதான் என்றாலும் அதற்காக அபாரமாக மெனக்கெட்டிருக்கிறார் அந்த மனிதர்.
ஐஸ்வர்யா ராயின் அழகை அள்ளி அள்ளித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஐஸும் அம்சமாக வருகிறார். அந்த இறுதிக் காட்சியில் விக்ரம் மீது அவருக்கு காதல் வரும் உணர்வைக் காட்டியுள்ள விதம் க்ளாஸ். ஆனால் ப்ருத்வி ராஜூக்கு ஜோடியாக.. நல்லாவே இல்லை!.
மலையாளம் கலந்த தமிழில் சதா கத்திக் கொண்டே வரும் ப்ருத்வி ராஜ் வந்தாலே அலர்ஜியாகி விடுகிறது.
கம்பீர எண்ட்ரிக்கு காத்திருந்த கார்த்திக்கை காமெடி பீஸாக்கிவிட்டிருக்கிறார் மணி ரத்னம். ஏற்கெனவே குண்டாக இருக்கும் பிரபுவை மகா குண்டாகக் காட்டியுள்ளார். ஆனாலும் நடிப்பு மிகவும் ரசிக்கும்படியாகவே உள்ளது.
பெரிய பில்டப் தரப்பட்ட ரஞ்சிதாவை ஸ்கிரீனில் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மசாஜ், ஒரு ஜலக்கிரீடை காட்சியுடன் அவரை பேக்கப் பண்ணிவிட்டார் போலிருக்கிறது.
நாயகன், பம்பாய் என மணி ரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களோடு ஒப்பிடாமல் பார்த்தால், டைம் பாஸ்!
ராமாயணம் காவியத்தில் ராமர் தான் ஹீரோ. ராவணன் படத்தில் ராவணன் தான் ஹீரோ(விக்ரம்).
ராவணனை ஹீரோவாகக் காண்பித்தால் ராமரை வில்லனாகக் காண்பிக்க வேண்டும். காண்பித்துவிட்டார்கள். ராமாயணத்தில் சீதை பத்தினி, ராமர் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதால் உடனே அக்னியில் குளித்து தான் ஒரு பதிவிரதை என்று நிருபித்தாள்.( இதனால் சாலமனுக்கும், லியோனிக்கும் இன்றும் பிழைப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது. )
இது ஜீன்ஸ், டி.சர்ட் யுகம், இதில் ராமர் சந்தேகப்பட்டால் சீதை உடனே டிரயின் செயினை பிடித்து இழுத்து ராவணனே மேல் என்று அங்கே சென்றுவிடுகிறாள். இந்த ஷாக்கை கொஞ்சம் கதையுடன் கொடுத்திருக்கிறார் மணிரத்தனம். நிச்சயம் இந்த படம் ஹிந்து சைட்டில் நல்ல ‘ஹிட்’ வாங்கும். சந்தேகம் இல்லை.
படம் ஆரம்பிக்கும் போது சில காட்சிகளை காண்பித்து நம்மை கதைக்குள் அசால்டாக இழுக்கிறார். அந்த காட்சிகளை போகிற போக்கில் கதையில் காண்பித்துவிட்டு நம்மை பிரமிக்க வைக்கிறார்.
ராவணனின் தங்கையாக வரும் சூர்பனகை (ப்ரியாமணி) குரல் நிஜ சூர்பனகைக்கு டப்பிங்கொடுக்கலாம். சில காட்சிகளில் வந்தாலும் நன்றாகச் செய்துள்ளார். ராமாயணத்தில் லக்ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுப்பார். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக போலீஸ்காரர்கள் கூட்டு சேர்ந்து அவளைச் சூறையாடுகிறார்கள். ராவணன் தான் செய்யும் அட்டுழியங்களுக்கு ஒரு பலமான ஃபிளாஷ்பேக் வேண்டமா? அதுதான் இது.
ஐஸ்வரியா ராய் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வருவது போல வருகிறார். முதல் காட்சியில் ஏதோ செம்மொழி வசனம் பேசும் போது தியேட்டரில் சிலர் விசில் அடிக்கிறார்கள். வசனம் சுஹாசினி. கோவைக்கு ஒரு டிக்கெட் பார்சேல்!.
மற்றபடி ஐஸ் வழக்கமாக வரும் மணிரத்தனம் ஹீரோயின். (தமிழ் போலீஸுக்கு வாக்கப்படும் ஹீரோயின் எல்லாம் ஒன்று பரதநாட்டியம்/பாடல் கிளாஸ் எடுப்பார்கள், இல்லை ஸ்கூல் டீச்சராக இருப்பார்கள்). ஐஸுக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும், விக்ரம், பிரிதிவிராஜ் போன்றவர்களுடன் நடிப்பதால் இளமையாகவே இருக்கிறார்.
பல காட்சிகளில் அந்தப் பூனை கண்களே நடித்துவிடுகிறது. விக்ரம் மீது காதல் (அல்லது Crush?) கொள்ளும் காட்சிகள் கவிதை. (தமிழ் நாட்டுப் பெண்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்).
பிரிதிவிராஜ் ராமர் வேஷம் போட்டதாலோ என்னவோ மீசை இல்லாத போலீஸ் எஸ்.பி.யாக வருகிறார். ஏனோ மீசை இல்லாதால் வீரம் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது. சில சமயம் முகம் மொழுக்கு என்று ஐஸுக்கு போட்டியாக கூட இருக்கிறது.
விபீஷணன் கதாப்பாதிரம் கூட வருகிறது. ராவணனின் தம்பியாக. சமாதானம் பேச வரும் இவரை ராமர் போட்டுத்தள்ளுகிறார். ராமரை வில்லனாகக் காண்பிக்கும் இன்னொரு இடம் இது.
கார்த்திக் அனுமான் கதாப்பாதிரத்தில் ஜோக்கராக வருகிறார். சாரி குதிக்கிறார். ஹனுமான் என்ற காரணத்துக்காக ஆரம்பக் காட்சிகளில் தாவித்தாவிக் குதிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர். பிரபு சில காட்சிகளில் கண்களுக்கு மை தடவிக்கொண்டும் சில காட்சிகளில் தடவாமலும் முதல் முறையாக நடித்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.
வழக்கமான மணிரத்தின பாடல் காட்சிகள். சில காட்சிகளில் ஐஸ்ஸின் தலை மயிர் காற்றில் ஆடுவது கூட ஏதோ படத்தில் பார்த்த மாதிரி இருக்கே என்று சொல்ல வைக்கிறது.
விக்ரம் சில காட்சிகளில் கந்தசாமி+பிதாமகன் மிக்ஸ் சேஷ்டை செய்வது கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. காட்டுவாசிகள் எல்லாம் அப்படி தான் இருப்பார்களோ. யார் கண்டது!!
பாடல் கேட்பதைக் காட்டிலும் படத்துடன் பார்ப்பது நன்றாக இருக்கிறது. சில இடங்களில் ரஹ்மான் தெரிகிறார், பல இடங்களில் மணிரத்னம் தெரிகிறார்.
மலைமீது இருந்து விக்ரம் குதிப்பது, ஐஸ் விழுவது, இரண்டு மலைகளுக்கு இடையில் இணைந்த கைகள் படத்தில் வரும் கிளிப் ஹாங்கர் காட்சி சாகசங்கள் எல்லாம் முன்பே நான் பார்த்ததால் ’அட’ என்று சொல்ல வைக்காவிட்டாலும் எடுத்த விதத்துக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது.
படம் முழுக்க ’ராம்போ’ படம் பார்ப்பது போல இருப்பதாலோ என்னவோ சில ஃபிளாஷ் பேக் காட்சிகள் காண்பிக்கும் போது அப்பாடா என்று ரிலாக்சாக இருக்கிறது. காடுகளில் எப்போதும் மழைக்கொட்டிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ தியேட்டரில் குளிருக்கு அடிக்கடி டாய்லெட் போகிறார்கள். இன்னொரு தமிழ் டைரக்டராக இருந்தால் இந்த மழையில் ஐஸை முழுவது நனைத்து பிழிந்து காயபோட்டிருப்பார்கள். நல்ல வேளை மணிரத்னம் அதை செய்யவில்லை.
உடைந்து போன ரங்கநாதர் சிலைக்கு முன் வரும் வசனங்கள் ரங்கநாதரைப் போல கவர்ச்சியாகவும், கமல் படத்தில் வரும் இண்டலிஜெண்ட் வசனம் போலவும் இருக்கிறது. ஒரு புதுமையான காட்சியும் இருக்கிறது. ஒரு கையை வெட்டி அதை இன்னொரு கையால் பிடுத்துக்கொள்ள வைக்கும் ரத்த காட்சி. பார்க்கும் போது மனம் பதறுகிறது, எப்படி இந்த காட்சிக்கு ’U’ சான்றிதழ் தந்தார்கள் என்று.
இட்லிவடை மார்க் 6.5/10
படத்தில் அடிக்கடி கைத்தட்டல் வாங்குவது ரஞ்சிதா தான்! தமிழ் நாட்டு மக்களுக்கு தான் என்ன ஒரு ஞானம்! என்ன ஒரு ஞாபகசக்தி !
மஹாபாரதம், ராமாயணம் முடிந்துவிட்டது அடுத்து என்ன கதை மணி சார் ?
* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.
* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் – இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.
* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.
* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.
* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.
* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.
* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.
* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.
* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.
* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.
* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.
* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.
* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.
* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.
* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.
* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!
* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.
* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.
ராவணன்: காவிய மறுப்புனைவும் புனைவை மீறாத விவாதமும்
‘வியரிலல்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த உயரிலங்கை அரையன்,வானினொடு நீரும் இயங்குவோர்க்கு இறைவனான இராவணன்’
பல சைவசமயத் தேவாரப் பாடல்களில் மட்டுமே இராவணனைப் பற்றிய உயர் மதிப்பீடுகளைக் காண இயலும். தென்னிந்தியர்களின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊடுருவல் ஆரியர்களின் ஆதிக்க விரிவாக்கமும் தென்னிந்தியர்களின்(திராவிடர்கள்) கலாச்சார வெளிகளை அபக்கரித்தலும், திராவிட நிலப்பின்புலங்களை அழித்தலும் என விமர்சிக்கப்படுகிறது. இன்றும் இராவணனை அரக்கனாகவும் அசுரனாகவும் பத்து தலை நிரம்பிய கொடியவனாகவும் சித்தரிக்கும் இராமயணக் காவியத்தை வடநாட்டு ஆரியர்கள் அந்தத் தென்னிந்திய நிலத்தையும் மக்களையும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும்; ஒடுக்கவும்; அடிமைப்படுத்தவும் புனைந்துள்ளார்கள் என்கிற சர்ச்சை நிலவுகிறது.
இராமயாணக் காவியத்தை முழுவதும் எந்தப் பக்கமும் சாராமல் அந்தப் பிரதியை அணுக நேர்ந்தால், அது முழுக்க ஆணாதிக்க சமூகத்தை வளப்பட செய்யும் அதிகார குரல்களை ஆங்காங்கே நிறுவப்பட்ட ஒரு பிரதியாகவும் பெண்களை மீட்பதும் பரிசோதிப்பதுமான கருவியாகப் பாவிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்தக் காவியத்தைப் படித்து வளர்ந்த பின்விளைவுகளை இன்றைய சமூக நடப்பிலும் பல விடயங்களில் மறுமதிப்பீட்டின் மூலம் உணர வாய்ப்புண்டு. இராமாயணத்தை ஒரு பக்தி குறீயீடாகவும் அழித்தல் கடவுளின் ஆன்மீக வருகையின் பதிவாகவும் அதை மிக நுணுக்கமாக வழிப்படுதலுக்குரிய கருவியாகத் தென்னிந்திய மக்களுக்கு வழங்கியவர்கள் ஆரியர்கள் எனும் சர்ச்சையும் தொடர்ந்து திராவிட உணர்வுடையவர்களால் முன்வைக்கப்படுகிறது.
இராவணன் அன்று:
இலங்கை மண்ணைச் செழிப்புமிக்க தேசமாகவும் வளமிக்க பூமியாகவும் வளர்தெடுத்த சிறந்த அரசன் எனவும் கலைகளில் சிறந்த தேர்ச்சியுடைய மன்னனாகவும், பக்தி மிகுந்த சிவப்பக்தனாகவும் முக்கியமான சில பதிவுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் திராவிட விவாதங்களிலும் இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் இராவணனை (தென்னிந்திய மண்ணின் அரசனை) ஒரு ஆன்மிக புனைவாக மட்டுமே இராமாயணத்திற்குள் நுழைத்து அவனுக்கு ஏற்பட்ட மரணத்தையும் நியாயப்படுத்தும் இடமானது ஆரியர்களின் மிக முக்கியமான திட்டம் என்றே சொல்லலாம். ஆகையால்தான் இராவணனை இதற்கு முன்பே மகா விஷ்ணுவின் அவதாரத்தால் கொல்லப்பட்டு இறந்துபோன இரன்ய கசிப்புவின் இன்னொரு அவதாரம் எனவும், இவன் முன்பே சனாதன முனிவர்களால் சபிக்கப்பட்டவன் என்றும் அந்தப் பிறவி கடனைத் தீர்க்கவே கொடியவர்களாக அவதாரங்கள் எடுத்து 7 முறை மகா விஷ்ணுவால் கொல்லப்பட்டு மீண்டும் வைக்குண்டம் அடைவான் எனவும் இன்னொரு புனைவு இராவணின் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவை யாவும் வரலாற்றில் இராவணன் குறித்து திணிக்கப்பட்ட கட்டமைப்புகளா? அல்லது புராணம் என்பதே வெறும் கட்டுக்கதைகளின் கோர்வையா? அல்லது பார்ப்பன வெறியைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காகப் பக்தி எனும் அடையாளத்தின் மூலம் விரிவாக்கப்பட்ட புனைவு பிரதியா?
இதைத் தொடர்ந்து விவாதித்தால், வழக்கமாக நிகழ்ந்தும் நிகழ்ந்து சலித்துப் போன கடவுள் இருக்கிறாரா என்கிற சந்தேகத்தில் முடிந்துவிடும் எனும் எண்ணமும் தோன்றுகிறது. ஆனால் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த ஒரு தமிழன். வடநாட்டு பக்தி பிரதிகளில் இராவணன் கேலிக்குரிய 10 தலை அசுரனாகக் காட்டப்பட்டிருப்பதும் உண்மை. மேலும் இராமன் என்கிற கடவுளின் அவதாரத்தால் அவன் கொல்லப்படுவதுதான் தர்மம் எனவும் நியாயம் வலுவாகக் கற்பிக்கப்பட்டு நிறுவப்பட்டிருப்பதும் உண்மை.
மனிரத்னத்தின் ராவணன்:
சிதைக்கப்பட்ட தென்னிந்தியாவின் தொன்ம அடையாளத்தைத் தனது படத்தின் மூலம் மீட்க முயலும் ஒரு முயற்சியைத் செய்திருக்கிறார். வரலாற்றையும் புரானத்தையும் காவியத்தையும் மறுபுனைவு செய்து பார்ப்பதில் மனிரத்னத்திற்குத் தனித்த ஆளுமையும் அடையாளமும் தமிழ் சினிமாவில் இருக்கிறது. வரலாற்றை மீட்டுணர்ந்த படமாக இருவர் படத்தையும், காவியத்தை மறுபுனைவு செய்த தளபதி படத்தையும் குறிப்பிடலாம். அதே களத்துடன் பார்ப்பன பிரதிகளில் கொடியவான சித்தரிக்கப்படும் இலங்கை மண்ணைச் சேர்ந்த இராவணனை மீள்புனைவு செய்து அவனைத் தென்னிந்திய வரலாற்றின் முக்கியமான அடையாளமாகத் திராவிட மனங்களுக்குப் புது தெம்பை அளிப்பது போல மீட்டெடுத்திருக்கிறார் மனிரத்னம்.
காட்டுவாசிகளின் நாட்டாமையாகவும் அவர்களுக்கு நல்லது செய்யும் நாட்டாரியல் கதைநாயகனுக்குரிய அடையாளமாகவும் விக்ரம் வீராசாமியாகப் படைக்கப்பட்டுருக்கிறார். (நாயகன் படத்தின் கமலை மீண்டும் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு மட்டுமே எழுகிறது) வீராசாமியின் தங்கை பிரியாமணியின் திருமண நிகழ்வில் சலசலப்பை ஏற்படுத்துவதோடு, அவனைக் கழுத்திலும் சுட்டுவிடுகிறார்கள் காவல் படை(பிருத்திவிராஜ் தலைமையில்). மேலும் பிரியாமணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுக்க மாற்றி மாற்றி கற்பழித்துவிடுவதோடு அவளின் தற்கொலைக்கும் காரணமாகிவிடுகிறார்கள். காட்டுவாசிகளின் மீதான அதிகாரிகளின் ஒடுக்குமுறையைக் கண்டிக்கும் வகையில் பிருத்திவிராஜ் என்கிற உயர் அதிகாரியின்( புராணப்படி இவர்தான் இராமன்) மனைவியைக் கடத்துகிறான் ராவணன்.
வனத்தினுள் அவளைக் கடத்திச் செல்லும் ராவணனைப் பின்தொடர்ந்து விரட்டுகிறது காவல்படை. படம் முழுவதும் வளம் மிகுந்த அடர்ந்த வனத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வனத்தில் (அசோக வனமாகவும் கற்பித்துக் கொள்ளலாம்) சீதையின் கதைப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் ராவனணனுக்கும் இடையில் நிகழும் உரையாடலும் உணர்ச்சி போராட்டமும் இராமாயணத்தில் புனையப்பட்ட ஒழுக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக நிகழ்த்தப்படுகிறது. இராமாயணத்தில் இறுதிவரை மாசுப்படாத கதைப்பாத்திரமாகச் சீதை படைக்கப்பட்டிருப்பதைக் கொஞ்சமும் தனது திரைப்படத்தில் சிதைக்காமல், கடத்திச் செல்லும் விம்ரமின் சுண்டு விரல்கூட அவள் மீது படாதவாறு அமைத்து சமூகம் நம்பியிருக்கும் ஒழுக்கக் குறியீட்டைக் காப்பாற்றியுள்ளார் மணி.
ஆனால், ஐஸ்வர்யாவின் வீரத்தையும் தற்கொலை முயற்சியின் காட்சியையும் நேரில் கண்டு பதறும் ராவணனுக்கு அவள் மீதான உணர்வு மாறுப்படும் இராசயண தருணத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஓர் அதிகாரியின் மனைவி என்கிற பிம்பம் களைந்து அவளின் புற உலகத்தைச் சூன்யமாக்கிவிட்டு, அவளை தன் மனதைச் சலனப்படுத்திய ஒற்றைப் பிம்பமாக ராவணன் தரிசிக்க முயல்வதோடு தனக்குள் இருக்கும் வளர்க்கப்பட்டிருக்கும் ஒழுக்க அமைப்புடனும் போராடுகிறான். (சூர்ப்பநகைத் தாக்கப்பட்டதன் மூலம் கோபமுறும் இராவணன் இராமனைப் பழி வாங்குவதற்காகச் சீதையைக் கடத்தி வருவதோடு அவளின் அழகிலும் மயங்கிவிடுவதாகப் புராணம் சொல்கிறது) ஆனால் புராணத்தில் எவ்விடத்திலும் ஒழுக்க ரீதியில் இராவணன் தனக்குள் போராடுவதை அல்லது சீதையின் மீது ஏற்பட்ட உணர்வைத் தர்க்கம் செய்வது போன்ற கதைகள்/சந்தர்ப்பங்கள் இடம்பெறவில்லை. இப்படத்தில் மணிரத்னம் மாற்றான் மனைவியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பை உணர்வைத் தொடர்ந்து அகப்பிரச்சனையாக, அகப்போராட்டமாக அதைக் கடைசிவரை மீறாத படைப்பாகக் காட்டியிருக்கிறார். அதாவது குற்றம் இழைத்தவன் இராவணன் என்கிற பழி சுமத்தலுக்கு எதிராக மறுபுனைவின் மூலம் இராவணன் உண்மையில் நல்லவன் என்கிற செய்தியைச் சொல்ல முற்படுகிறார் என்பதாகப் படத்தைப் புரிந்துகொள்ளலாம்.
ஒளிப்பதிவும் கதைக்களமும் கலையும்
இப்படத்தில் ஒளிப்பதிவையும் கலையையும் தனித்துவமான பலமாகவும், படத்தின் கருவை மெய்ப்பிக்கும் யதார்த்தங்களை மீறாத உணர்வாகவும் அடையாளப்படுத்தலாம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு இப்படத்தில் விருதுக்குரிய மதிப்பீடுகளையும் கடந்து ஒரு வனத்தின் வாழ்வை இதுவரை தமிழ் சினிமாவில் காணாத இயற்கையின் பரிணாமங்களை முன்வைக்கும் மிக முக்கியமான முயற்சியாக உணர முடிகிறது. இன்னமும் அந்தக் காட்டுவாசிகளின் வனத்தின் அடர்ந்த உலகத்திலிருந்து மீள முடியாத ஒரு நெருக்கமான புலனைக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அவரின் காட்சி பதிவுகள் பலரைப் பிரமிக்க வைக்காமல் போயிருக்கக்கூடும். எந்த இடத்திலும் தமிழ் சினிமாவில் இடம்பெறும் வழக்கமான காட்சி அமைப்புகளும் ஒளிப்பதிவும் அதிரடியும் இல்லாமல், ஏதோ ஒருவகையில் நம் புருவங்களை உயர்த்த செய்யும் அசாத்திய காட்சிகள் படம் முழுக்கப் பயணிக்கின்றன.
குறிப்பாக நதிக்கு நடுவில் பாதி உடைந்து நீளமாகப் படுத்திருக்கும் மகா விஷ்ணுவின் கருமையான சிலையும், அதன் மீது தெறித்து வீழும் நதியின் சாரலும், அந்தச் சிலைக்கு முன் நின்று தன்னை இன்னமும் காப்பாற்றி வைத்திருக்கும் இந்தக் கோபத்தை என்னிடமிருந்து பறித்துவிடாதே என மன்றாடும் ஐஸ்வர்யாவும், ஒரு சாரல் போல மனதைச் சலனிக்கச் செய்கிறார்கள். தொடர்ந்து ஐஸ்வர்யா மலை உச்சியிலிருந்து நீர்பாதாளத்தை நோக்கி குதிக்கும் காட்சி எந்தத் தொழில்நுட்ப ஒப்பனைகளும் நெருடலை ஏற்படுத்தாத வகையில் பதிவு செய்திருக்கிறார்கள். அவருடன் சேர்ந்து பார்வையாளர்களும் நீர்வீழ்ச்சியைப் போல பாதாளத்தில் குதிப்பது போன்ற அனுபவம் ஏற்படும். இது காமிராவின் அசைவும் நகர்வும் கையாளப்பட்டிருக்கும் விதத்தின் திறமையைக் குறிக்கிறது.
இப்படத்தில் பணியாற்றிய கலை குழு, வனத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் காட்டுவாசிகளின் குடியிருப்பு பகுதிகளை அதே போல உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். காட்டுவாசிகளின் நடவடிக்கைகளையும் வாழ்விடங்களையும் கலை ஆய்வின் மூலம் அறிந்துகொண்டு பதிவாக்கியதாகப் புரிந்துகொள்ள நேரிடும். மழை நேரத்தில் காட்டுவாசிகளின் இருப்பிடத்திற்குள் நுழையும் அதிகாரிகளின் கொடூரமான செயல்களை அதன் உக்கிரம் குறையாமல் அதிகாரத்தின் தொனிக்கு பிரேம் போட்டு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குனர்.
பின்னனி இசையும் பாடல்களும் வழக்கமாக ரஹ்மான் அவர்களின் இசை தனித்துவத்தை மீண்டும் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பின்னனி இசை காட்சியுடன் இயந்து யதார்த்தத்தையும் காட்சியின் உணர்வையும் புரிந்துகொண்டு சம அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பாடல் சீடியில் இடம்பெறாத ரஹ்மான் பாடிய படத்தின் இறுதி பாடல் படம் முடிந்தும் ஒருவித துன்பத்தின் கொண்டாட்ட உணர்வை உள்ளுக்குள் ஏற்படுத்துவது போல தோன்றுகிறது.
இரு தேசிய விருது பெற்ற நடிகர்களும் இடம் பெறும் ஒரு காட்சி ராவணன் படத்தில் தவிர்க்க முடியாத வலியைத் தருவதாக அமைந்திருக்கிறது. காவல் அதிகாரிகளால் பலமுறை கற்பழிக்கப்பட்ட பிரியாமணியும் விக்ரமும் பேசுவதாக இடம்பெறும் அக்காட்சியில், கொஞ்சம் நேரம் என்றாலும் இருவரும் மிகச்சிறப்பான அலட்டல் இல்லாத நிதர்சன உணர்வுகளையும் முகப்பாவனை மூலம் உணர்வை உந்தி வெளித்தள்ளும் விதத்தையும் செய்து காட்டி அசத்திவிட்டார்கள்.
படத்தில் புகுத்தப்பட்டிருக்கும் அரசியல்:
இருவர் படத்தின் மூலம் திராவிட அரசியல் கட்சிகளின் வளர்ச்சியையும் அந்தக் கட்சியின் மூலம் வளர்ந்த இரு முக்கியமான பிம்பத்தையும் காட்டி, இது வெறும் கற்பனை கதை என நழுவிய மணியின் அரசியல் பிரயோகம் இப்படத்திலும் இராவணுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுருக்கிறது. இப்படத்தில் ராவணன் ஐஸ்வர்யாவைக் கடத்துவதற்குப் பிரியாமணிக்கு நிகழ்ந்த கொடூரம்தான் காரணம் எனப் புரிந்துகொண்டு வெளிவருகையில், காட்டுவாசிகளின் மீது தொடுக்கப்படும் அதிகாரிகளின் அதிகார நடவடிக்கைகளையும் மேட்டுக்குடி மக்களுக்கு கீழ்தட்டு மக்களின் மீது இருக்கும் ஒடுக்கும் மனபான்மை குறித்தும் படத்தில் பேசப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் தவறுவதற்கும் வாய்ப்புண்டு. படம் பார்த்த சிலரிடம் படத்தைப் பற்றி கேட்டபோது இதைப் பற்றி யாரும் சிறிதளவும் குறிப்பிடவில்லை.
குறைகள்: நிறைய இடங்களில் நெருடலாகவும் சில இடங்களில் நகைச்சுவைகளாகவும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பழைய நடிகரான கார்த்திக்கை அனுமானாகக் காட்ட வேண்டும் என்கிற வெறியில் அவரைக் குரங்கு போல அங்குமிங்கும் தாவவிட்டு அவரின் மீதான மதிப்பைக் குறைக்கும்படி படைக்கப்பட்டிருப்பது நெருடலாக அமைந்திருக்கிறது. மேலும் ராவணன் கதைப்பாத்திரத்திற்குக் கொடுக்கப்பட்ட கவனமும் நேரமும் காட்டுவாசி மக்களின் வாழ்க்கைமுறையின் மீதும் அவர்களின் வன வாழ்வின் மீதும் காட்டி கதைக்களத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்திருக்கலாம்.
மேலும் ராவணன் சில இடங்களில் காவல் அதிகாரிகள் தேடும் மக்களுக்கான நாட்டாமையாக மட்டுமே மிளிர்கிறார். சில இடங்களில் ஏற்கனவே பார்த்து சலித்துவிட்ட பிதாமகன் விக்ரம் போல தெரிகிறார். பிருத்திவிராஜ் கதையுடன் சற்றும் பொருந்தாமல் தள்ளி நின்றிருப்பதை உணர முடிகிறது. மீசை வழித்த அழகான வாலிபன் போல, காதல் படங்களின் கதைநாயகன் போல வலம் வருவதாகத் தோன்றுகிறது.
“நான் ஒடுக்கப்பட்ட கிராமத்தான்” எனும் வசனத்தை ராவணன் குறிப்பிடுவதைக் கொஞ்சம் வரலாற்றை நோக்கி பின்னுக்கு நகர்த்தினால், இலங்கை மண்ணைச் சேர்ந்த ராவணனையும் இன்றளவும் பாசிச அரசினால் கடுமையான ஒடுக்குதலுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆளான கொலைநிலமாகக் கருதப்படும் இலங்கையும் தமிழர்களையும் நினைவுப்படுத்த முடிகிறது. இறுதி காட்சியில் ராவணன் காவல் அதிகாரி படைகளால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டு மலையின் உச்சியிலிருந்து சரிந்து விழும் காட்சி, வரலாற்றில் தமிழன் எப்பொழுதுமே ஒடுக்கப்படுவான் அல்லது கொல்லப்படுவான் என்கிற நிதர்சன வலியை உணர்த்தி மனம் முழுவதும் பரவி நேர்மையற்ற அரசியலையும் அதிகாரத்தையும் காட்டுகிறது. கணத்த மனதுடன் அந்த உண்மையைச் சுமந்து கொண்டு வெளியில் வரநேர்வதன் கையறுநிலையை வேறு எப்படிச் சொல்வது?
ராவணனைப் படைக்க விரும்பிய மணிரத்னம், அந்தப் பாத்திரத்தைக் காவிய பிம்பமான இராவணனை மீட்பதாக மறுபுனைவு செய்தும், ஆதி புனைவின் ஒழுக்கத்தை மீறாமல் மறுபுனைவையும் அதே போல படைத்து நியாயப்படுத்தியும் அது வெற்றிப் பெறாதது போன்ற விமர்சனத்தையே தருகிறது. ராவணன் வெறும் முயற்சி மட்டுமே.
வால்மீகியோ, கம்பரோ இருந்திருந்தால் கேஸ் போட்டு ஜெயிக்க முழு வாய்ப்புள்ள வகையில் ராமாயணத்தை, நவீன சினிமா மொழியில் மணிரத்னம் எடுத்திருக்கும் படம் – ராவணன்.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ரித்விராஜ், ப்ரியாமணி, பிரபு, கார்த்திக் – இவர்கள் யாருக்கும் இல்லாத ஆரவாரம் தியேட்டரில் ரஞ்சிதாவுக்கு தான் இருந்தது.
விக்ரம் ஆரவாரத்தோடு நடித்திருக்கிறார். ஆனாலும், இதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இதை எப்படி அபிஷேக் செய்திருப்பார் என காண ஆர்வமாக இருக்கிறேன்.
ஐஸ்வர்யாவுக்கு வயதாகிவிட்டது. எந்திரனில் தலைவர்தான் யங்காக இருப்பார் என நினைக்கிறேன்.
ராமாயண சம்பவங்களையும், கதாபாத்திரங்களையும் படம் முழுக்க குறியீடுகளாக வைத்தது சரிதான். அதற்காக, கார்த்திக்கை அனுமனாக காட்டுகிறேன் என்று மரம் மரமாக தாவ விட்டது, சிறுப்பிள்ளைத்தனமாக இருந்தது.
படத்தின் ப்ளஸ்கள் – ஒளிப்பதிவு, இசை, கலை. படத்தின் ஆரம்பத்தில் வரும் ஷாட்கள் உலகத்தரம். உதாரணத்திற்கு, படகிலிருந்து கழுகு பறக்கும் காட்சி, தண்ணீருக்குள் இருந்து தோணியை படகு நொறுக்கும் காட்சி, மரக்கிளையில் இருக்கும் புட்டானை கடக்கும் காட்சிகளை சொல்லலாம். நாம் ஏற்கனவே வேறு படங்களில் பார்த்த இடங்களாக இருந்தாலும், உடைந்த சிலை, மண்டபங்கள் என செட் போட்டு புதியதாக ஒரு உலகத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர். உடைந்த பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, நல்ல படமாக்கம்.
உடை வடிவமைப்பும், சில பின்னணி இடங்களும் ஹிந்தி டப்பிங் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது.
சிடியில் வந்ததை தவிர எக்ஸ்ட்ரா சில பாடல்களை வழக்கம்போல் படத்தில் அமைத்திருக்கிறார் ரஹ்மான். மிரட்டும் இசை. ஏற்கனவே சிலது கேட்ட மாதிரி இருந்தாலும். காற்று, மழை என காட்டுக்குள் ஈரமாக உட்கார்ந்திருக்கும் உணர்வு பல இடங்களில் வருகிறது.
இப்படி தொழில்நுட்ப சைடில் ஸ்ட்ராங்காக இருந்தும், தெரிந்த கதையென்பதால் சீட்டில் அழுத்தி உட்கார வைப்பது சிரமம்தான். எனக்கு சமீபகாலங்களில் மணிரத்னத்தின் எந்த படமும் முதல் முறை பார்க்கும்போது பிடித்ததில்லை. இதுவும் அப்படியே.
வழக்கம்போல ரொம்பவும் ரிஸ்க்கான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மணி. ராவணன் நல்லவன், ராமன் (கிட்டத்தட்ட) நல்லவனில்லை எனும் “ராவண காவியம்” சொல்லியிருக்கிறார் இந்தமுறை.
இராமாயணத் தொடர்புகளைத் தாண்டிப் பார்த்தோம் என்றால் படத்தில் பேச பல விஷயங்கள் உண்டு.
மக்களுக்கு நல்லவன், போலீசுக்குக் கெட்டவன் என்று ஒரு ரிபெல் கதாபாத்திரம் விக்ரமுக்கு. அம்பை, வி.கே.புர சுற்றுவட்டாரக் காடுகள் அவரது வாசஸ்தலம். விக்ரமை வேட்டையாட வருகிறார் எஸ்.பி. பிருத்விராஜ்.
தன் தங்கை முடிவிற்குக் காரணமான பிரித்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயைக் கடத்துகிறார் விக்ரம். பிரித்விராஜ் மனைவியைத் தேடுகிறார். காட்டிலே அந்தப் பதினான்கு (!!) நாட்களில் விக்ரமுக்கு ஐஸ் மேல் ஈர்ப்பு ஏற்பட, அது கொஞ்சம் கொஞ்சமாய் டெவலப் ஆக….அதன் பின் யார் யாருக்கு என்ன ஆச்சு, எப்படி போச்சு என்பதுதான் படம்.
மணியிடமிருந்து விக்ரமுக்கு இது டூ லேட் சான்ஸ். இருந்தால் என்ன? தந்த கதாபாத்திரத்தை பிரித்து மேய்ந்திருக்கிறார் விக்ரம். கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, வையாபுரி, இவர்களும் உண்டு படத்தில்.
ரொம்பவெல்லாம் சிக்கலாக்காமல், விக்ரமின் ஐஸ் மீதான இந்த விவகார ஈர்ப்பை ரொம்பவும் நீட்டி முழக்காமல், குறிப்பாய் அவர் விரகதாப உணர்வுகளை நுண்மையாகப் பதிவு செய்யாமல் படம் தந்திருப்பது ராவணனின் குறிப்பிடத்தக்க பிளஸ். “கோடு போட்டா” பாடல் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடல்களும் படத்துடன் பின்னிப் பிணைந்து வருவது நல்ல திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.
ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் இசைத்தட்டில் இருந்ததை விடவும் திரையரங்குகளில் தனியே ஈர்க்கிறது. குறிப்பாக பாடகர் கார்த்திக் “உசுரே போகுதே” என்னும்போது நமக்குத் தலை சுழல்கிறது.
ஆரம்ப காலம் தொட்டு மணியின் படங்களில் கேமரா எப்போதுமே தனிக் கவனம் பெற்றிருக்கும். ராவணன் மட்டும் விதிவிலக்கா என்ன? முழுக்க முழுக்க அவுட்டோரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ்சிவனின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.
சுஹாசினியின் வசனங்கள் படத்தின் மற்றுமொரு பலம். (எய்யா இப்பிடி முந்திக்கிட்டீறேன்னு கேக்கணும், என்னக் கொல்லப் பெறந்த பெரிய ஆசாமி யாருன்னு இப்பல்லா புரிஞ்சுது, நான் SP கட்சிதான் ஆனா ஓட்டு உனக்குத்தான்).சிக்கலான சில இடங்களில் கூட நாசூக்காக அல்லது நுணுக்கமாக வசனம் கையாளப்பட்டுள்ளது.
அங்கே இங்கே குறைகளும் உண்டு. எனினும் படத்தின் பிளஸ்களுக்கு எடை அதிகம். வியாபார ரீதியாகப் பார்த்தால் இப்படம்…… அட அதை விடுங்க, அது எதுக்கு நமக்கு. அதை மணி சார் பார்த்துப்பார்.
பி.கு: இராமாயண ஒற்றுமைகளை இணைய உலகில் எல்லோரும் கவனித்து பிரித்து மேய்கிறார்கள். இந்த ஒரு ஒற்றுமையையும் மணி விட்டு வைக்கவில்லை. லக்ஷ்மணன் (ஹேமந்த்) சூர்ப்பனகை (ப்ரியாமணி)மூக்கைத் திருகுகிறார். அடடா…என்ன சொல்ல.
An Interesting Film.. The movie starts with a very thin line separating Good and Evil. By the end, we are left wondering about human nature, and if there is really such a line… Wish there was more “characterization” before the opening scene though…
A lot of Ramayanam Characters — Priyamani as Soorpanagai (Not evil though!), Karthik as Hanuman, Munna — as Indrajit.
Watch out for Subtleties… The Director seems to have lost some aspect of the big picture, but individually, very interesting…
Again, Vikram being my fav. actor, and Maniratnam my fav. directore, I might be biased :)
மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிற படம். சமீப காலங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் சிட்டி பார்டர் தியேட்டர்களை சேர்த்து சுமார் 35க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வெளியாகியிருக்கும் படம். இப்படி ரசிகர்கள் மட்டுமில்லாமல், மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ராவணன்.
எல்லோருக்கும் தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.
வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான். பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.
வீராவாக விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும் பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல் மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன் இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டும். ஐஸ் மேலிருக்கும் காதலை கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸில் ஐஸ் திரும்பி வந்ததும் அவர் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் இருக்கிறதே.. உலகத்தரம். மனுஷன் பின்னியெடுக்கிறார். ஆனால் “பக்..பக்’கென கோழி கத்துவது போலும், டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய் தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை. அதெல்லாம் அவரை ஒரு டெரராக காட்ட நினைத்தது வி.இ.நீராய் தான் முடிந்திருக்கிறது.
ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம், கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம், நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால் என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம் முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.
எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல் வன்மத்துடன் அலைகிறார். ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன் குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டனின் கைவண்ணம். படம் முழுவதும் ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க வைக்கும். ஆனால் பாடல் போஸ்ட் ஆன இடம் தான் கொஞ்சம் வழுக்கல். பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்.
ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே. ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.
மணி ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல் மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை. ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட ஆரம்பிக்கும் பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி.. சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில் காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ் ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள் மணிக்கே உரித்தானது.
எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான். முதல் பாதியில் கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம் பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது.
ராமனின் மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.
எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய் சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..
படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும் அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி, பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப் செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது.
கார்த்திக் கேரக்டர் தான் அனுமன் கேரக்டர் என்று பிரிதிவிக்கு காட்டில் வழி காட்டும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு ஆரம்ப காட்சியில் மரத்துக்கு மரம் தாவி காட்ட வேண்டிய நிர்பந்தம். அதை விட காமெடி ஐஸ் இருக்கும் இடத்தில் அவர் புருஷன் அனுப்பிய ஆள் அடையாள அட்டை வேண்டுமானால் காட்டுகிறேன் என்று சொல்லுமிடம், அதே போல் ப்ரியாமணியை போலீஸார் தூக்கிக் கொண்டு போகும் போது சூர்பனைகையை தான் இது என்பதை சொல்லாமல் சொல்வதை போல, “இப்ப என்ன செய்யட்டும் உன் மூக்கை அறுக்கட்டுமா” என்று போலீஸ் பேசும் வசனம் எல்லாம் மணி சார்.. உங்களிடமிருந்தா..?
அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம், என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன். இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.
ராவணன் – A Extrodinary Film Without Life
டிஸ்கி: நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்.
சத்யவான் சாவித்திரியை ‘ரோஜா’வாகவும் மகாபாரதத்தை ‘தளபதி’யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன் விட்டுவைப்பானேன் என்று ஒர் அகால நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். விளைவு ராவணன்.
நல்ல குணாதிசயங்கள் கொண்டிருக்கிறவரை ஹீரோவாக சித்தரிப்பதெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டதால் நவீன நடைமுறைக்கேற்ப காலங்காலமாக நாட்டார் கதைகள் முதற்கொண்டு கதாகாலட்சேபங்கள் வரை நமக்கு ‘கெட்டவனாவே’ சித்தரிக்கப்படும் ராவணனை ‘நாயகனாக’ சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆனால் இந்த காரியத்தை பல வருடங்களுக்கு முன்பே ஆர்.எஸ்.மனோகர் அவரது புராண நாடகத்தில் நிகழ்த்தி விட்டார். ராவணன் ஒரு சிறந்த இசைகலைஞன் என்பதும் கடுமையான தவவலிமை மூலமாக ஈஸ்வரனுக்கு நிகராக ‘இராவணேஸ்வரனாக’ விளங்கினான் என்பதுமாக அந்த ஆளுமையின் பல நல்ல விஷயங்கள் அந்த நாடகத்தின் மூலமாகவே எனக்கு தெரிய வந்தது.
மணிரத்னம் தனது ‘காவிய வில்லனை’ எப்படி சித்தரித்திருக்கிறார் என்று ஆவலோடு சென்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. மணிரத்னத்தின் அடிப்படை பிரச்சினையே எந்தவொரு தீவிரமாக சமூகப்பிரச்சினையையும் மேலோட்டமான பாவனையோடு அணுகி அழகுணர்ச்சியால் அமுக்கி அதை ரொமாண்டிசைஸ் செய்து அதன் மைய அழுத்தத்தை மழுங்கச் செய்வது. ஏனெனில் அவரின் பெரும்பாலான மேட்டுக்குடி பார்வையாளர்களிடம் இந்த வகையான சாக்லெட்தான் செல்லுபடியாகும் என்பதை அவர் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். ரோஜா படத்தின் மூலம் அவர் தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு தனது படங்களை எப்படி வெற்றிகரமாக மார்க்கெட் செய்வது என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் மையம் கொண்டிருக்கிறது. எனவேதான் முதலாளித்துவத்தின் அழுத்தமான பிம்பமான திருபாய் அம்பானியை நாயக ஆராதனை செய்ததும் அதில் வரும் ஒரு கம்யூனிஸ பாத்திரத்தை ‘கையாலாகதவனாய்’ கிண்டலடித்ததும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாசனையுடன் கூடிய இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான ‘வீரய்யா’ பழங்குடி கிராம மக்களின் பிரதிநிதியாக அதிகார மையத்தை எதிர்த்து புரட்சி செய்பவனாகவும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் அதற்கான எந்தவிதமான தடயங்களோ அழுத்தமான காட்சிகளோ படத்தில் இல்லவே இல்லை. மொத்தப்படமுமே ஏதோ லயோலா கல்லூரியின் பணக்கார மாணவர்கள் பழங்குடி மக்களாக வேடமிட்டு ஆடும் ‘கல்ச்சுரல் டிராமா’ போலவே இருக்கிறது. (‘கோடு போட்டா’ என்கிற பாடல் மிகச் சிறந்த உதாரணம்) முன்பே சொன்னது போல பழங்குடி மக்களின் பிரச்சினைகளைத் தொடாமல் அவர்களின் நிலப்பரப்பை பார்ம் ஹவுஸ் போல் மிகை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து பார்வையாளனுக்கு எந்த அசெளகரியத்தையும் தர விரும்பாமல் கிளுகிளுப்பாக அமர வைத்திருக்கிறார். ஒருவேளை மும்பை தாராவி மக்களின் பின்புலத்தில் ஒரு சமீப படத்தை உருவாக்கினாரெனில் குழந்தைகள் வீட்டின் முன்னாலேயே மலம் கழிப்பதை ‘லாங் ஷாட்டிலும்’ மலத்தின் மீது மொய்க்கும் ஈயின் இறக்கைகளை ‘டைட் குளோசப்’ ஷாட்டிலும் அழகுணர்ச்சியுடன் காட்டுவாராக இருக்கும்.
ஓர் உண்மையான கலைஞனுக்கு சமூகப் பிரச்சினைகள் குறித்த இருக்க வேண்டிய அடிப்படை கோபமும் அறவுணர்ச்சியும் பொறுப்புணர்வும் மணிரத்னத்திடம் இல்லை. ஷங்கர் போன்று வணிகரீதியாக வெற்றி பெறுகிற, தொழில் நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கிற இயக்குநர்களின் பட்டியலில் அவர் பெயரைச் சேர்க்கலாமே ஒழிய ஒரு படைப்பாளியாக, கலைஞனாக அவரின் பெயர் இடம் பெறுவது சந்தேகமே.
மணிரத்னத்தின் படங்களிலிருக்கும் மையப்பிரச்சினை குறித்து மேற்சொன்னவாறான விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் திரைக்கதை எனக்கு எப்போதுமே திருப்தியையும் பிரமிப்பையும் இதுவரை ஏற்படுத்தியிருந்தது. சிறந்த இந்திய திரைக்கதையாசிரியர்களின் பட்டியலில் பிரதான இடத்தையே அவருக்குத் தர நான் விரும்புவேன். திரைப்பட ஊடகத்தின் அடிப்படை வடிவத்திற்கு முரணாக, நாடகத்தின் செல்லூயாயிட் வடிவமாக சலிக்காமல் நீள நீளமாக உரையாடிக் கொண்டிருந்த சினிமாவை காட்சிகளால் நகர்த்திச் செல்ல முயன்ற முதன்மையான இயக்குநர்களில் மணிரத்னத்தின் பங்களிப்பு அசாத்தியமானது. ஆனால் ‘ராவணனில்’ அந்த தகுதியையும் இழந்து பரிதாபமாக நின்றிருக்கிறார் இயக்குநர்.
‘முதல் வரியிலிலேயே கதையைச் சொல்ல ஆரம்பித்து விடு’ என்கிற சுஜாதாவின் வழிகாட்டுதலுக்கேற்ப படம் ஐஸ்வர்யா ராய் கடத்தப்படும் ஆரம்பக் காட்சிகளிலேயே விறுவிறுப்பாக துவங்குகிறது. ‘அட’ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் படம் அந்த இடத்திலிருந்து இடைவேளை எனும் கற்பிதம் வரை துளிக்கூட நகரவில்லை. அதற்குப் பின்பு ஐஸ்வர்யா ஏன் கடத்தப்பட்டார் என்பது பார்வையாளனுக்கு விளங்க வைக்கப்பட்ட பிறகுதான் அந்த சம்பவத்தின் அழுத்தமும் நியாயமும் அவனுக்கு புரிகிறது. அதுவரை ராவணன் சீதையை நோக்கி ‘எச்சில் தெறித்து விடாமல்’ கற்போடு ஜொள் விட்டுக் கொண்டிருப்பதை திரும்ப திரும்ப சலிக்கும் வரை பார்க்க நேர்கிறது. ஒரு காட்சியில் கை மேலே பட்டு விடாமல் அரை அடி உயர்த்தி ஐஸ்வர்யாவின் மார்புகள் உட்பட உடம்பு முழுவதும் தடவுகிறார் விக்ரம். இதற்கும் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் போது பூ வந்து மறைக்கும் காட்சிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.
காட்சிகளை உருவாக்கும் விதத்தில் பழைய மணிரத்ன படங்களில் இருக்கும் மெனக்கெடலும் நம்பகத்தன்மையும் இல்லை. பழங்குடி மக்களும் ஐஸ்வர்யாவை மீட்க வந்திருக்கும் அதிரடிப்படையும் மோதும் வெடிகுண்டு காட்சிகள் மிக அமெச்சூராக இருக்கிறது. இதை விட ரோஜா’வின் ஆரம்பக் காட்சிகள் பல மடங்கு தரத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டிரு்நதன. தருக்க ரீதியாகவும் நிறைய சருக்கல்கள். தன் தங்கையை கற்பழித்த மரணத்திற்கு காரணமான காவல் அதிகாரியை வீரய்யா அப்படியா வெறுமனே நிர்வாணப்படுத்தி உயிரோடு விட்டு விடுவான்’ என்பது பாத்திர வடிவமைப்பின் நம்பகத்தன்மையைக் கேலி செய்கிறது.
இந்த ‘திரைக்கதை’ விஷயத்தில் முதன்முறையாக மணிரத்னத்தின் படத்திலிருந்து அதிருப்தியாக வெளியே வந்தேன். என்றாலும் ஐஸ்வர்யா விக்ரம் மீது அதுவரை கொண்டிருக்கிற வெறுப்பிலிருந்து விடுபட்டு மெல்லிய நேசம் ஏற்படுத்திக் கொள்கிற அந்த பரிணாமத்தின் பயணத்தை சிறப்பாகவே கொண்டு வந்திருக்கிறார்.
()
ஒரு கதாபாத்திரத்திற்காக இப்படியா ஒருவன் உயிரைக் கொடுத்து நடிப்பான்? பாலா மாத்திரம் இந்த வைரத்தை கண்டுபிடிக்காமலிருந்தால் இன்னும் எத்தனை வருடத்திற்கு நிலக்கரியாக அல்லல்பட்டிருப்பாரோ? படத்தின் மிகப்பெரிய ஆறுதல் விக்ரம்தான். ஆனால் பிதாமகனில் சித்தரிக்கப் பட்டிருக்கிற அதே மாதிரியான ஆக்ரோஷ பாத்திரத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் சீக்கிரம் சலித்துப் போய்விடும் அபாயத்தை அவர் உணர வேண்டும். மணிரத்னமாவது இவரின் பாத்திரத்தை வேறுவிதமாக வடிவமைத்திருக்கலாம். இந்தி வடிவத்தில் இவர் பிருத்விராஜின் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இதற்காகவாவது இந்தி வடிவத்தை பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் இருமொழி படப்பிடிப்புகளும் நிகழ்ந்த நிலையில், இரண்டு முரண்பட்ட பாத்திரங்களுக்கு அடுத்தடுத்த கணங்களில் தாவிக் குதிப்பது மிகச் சிரமமான காரியம். ஒரு பாத்திரத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே இன்னொரு பாத்திரத்தின் வடிவமைப்பிற்கு மாறுவது அத்தனை எளிதான காரியமல்ல.
ஐஸ்வர்யா சில பிரேம்களில் தற்செயலாக அழகாய் இருக்கிறார்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் உலக அழகி பட்டம் பெற்று ஒரு மாமாங்கம் ஆகிறதே? ஏன் இதை மணிரத்னம் உணரவில்லை. மணிமணியாக எத்தனை திறமையான இளம் நடிகைகள் இருக்கிறார்கள்? அவர் ‘எந்திரனில்’ ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) இதில் ஏன்? 14 நாட்கள் தொடர்ந்து காட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் பல காட்சிகளில் அநியாய புத்துணர்ச்சியுடனும் ஒப்பனையுடனும் இருப்பது பொருத்தமாக இல்லை. கிளைமாக்சில் விக்ரமுடன் உரையாடும் அந்த காட்சிகளில் மாத்திரம் அவரின் முகபாவங்களும் நடிப்பும் சிறப்பாக இருந்தது.
ஓர் ஆக்ரோஷமான காவல் அதிகாரி பாத்திரம் பிருத்விராஜிற்கு. பாவம் அமுல் பேபி மாதிரியான முகத்தை கூடுமானவரைக்கும் கடுமையாக வைத்துக் கொண்டு அவர் நியாயம் செய்திருக்க முயன்றாலும் எடுபடவில்லை. ஒரு பாத்திரத்தின் சிறந்த வெளிப்பாட்டிற்கு casting எத்தனை முக்கியம் என்பதற்கு மிகச் சிறந்த எதிர்உதாரணம் பிருத்விராஜ். ராவணன் ஒரு வேளை ‘ஹோமோ’வாக இருந்திருந்தால் ஐஸ்வர்யாவை விட்டு விட்டு இவரைத்தான் கடத்தியிருப்பான். அத்தனை மென்மையாக மொழுமொழு வென்றிருக்கிறார்.’ஏன் உங்க கை இத்தனை முரடு’ என்று வசனம் வைத்து இந்தக் குறையை சமன் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.
பிரபு & கார்த்திக். ‘அய்யோ ராமா’வென்று ஓவென்று கத்த வேண்டும் போலிருக்கிறது. பிரபுவையாவது ஒழிந்து போகிறதென்று சகித்துக் கொண்டு தொலைக்கலாம். கார்த்திக்கின் அக்கிரமம் தாங்கவேயில்லை. அக்னிநட்சத்திரம், மெளனராகம்… என்று ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்த கார்த்திக், ‘வெத்தலை போட்ட ஷோக்கில்’ இருந்து கொழகொழவென்று பேச ஆரம்பித்ததிலிருந்தே அவர் மவுசு போய்விட்டது. நீண்ட இடைவேளைக்குப் பின்பு திரையில் வந்து அதேமாதிரியே வெறுப்பேற்றியிருக்கிறார்.
ரஞ்சிதா வரும் மிக மிகச் சொற்ப காட்சிகளில் பார்வையாளர்கள் காரணமேயின்றி கொலைவெறியுடன் திரையரங்கில் கத்துகிறார்கள். எல்லோருக்குமே அதன் காரணம் புரிந்திருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் மனோபாவ அடிப்படையிலான கூட்டுப் புணர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. பாவம் அந்தப் பெண். இனிமேல் பொதுவெளியில் குறைந்தபட்சம் தமிழகத்தில் அவர் உலவவே முடியாது போலிருக்கிறது. தமிழப்பண்பாட்டை ஒருபுறமும் பாலியல் வறட்சியின் விகாரத்தை மறுபுறமும் சுமக்கும் தமிழர்களுக்கு அவரையும் சாமியாரின் ஆண்குறியையும் இணைக்காமல் இனி யோசிக்கவே முடியாது. காமிராவை ஒளித்து வைப்பவர்கள் இனி மேலாவது சற்று தார்மீக ரீதியாக சிந்தித்துப் பார்க்கலாம்.
சில காட்சிகளிலே என்றாலும் சத்தமேயில்லாமல் மிக இயல்பாக அரவாணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி.
ரஹ்மான் ‘உசுரைப் போக்கி’க் கொண்டு உருவாக்கின பாடல்கள் பெரும்பாலானவற்றை வழக்கம் போலவே சொற்பமாக நசுக்கி நசுக்கி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ‘உயிரே’ படத்திலிருந்தே இந்த அராஜகம்தான். அப்படியெனில் மிகத் தைரியமாக பாடல்களே இல்லாமலே படத்தை வடிவமைத்திருக்கலாமே? ஆனால் அதற்காக ஆடியோ வருமானத்தையும் ரஹ்மானின் பிம்பம் வணிகத்திற்கு உபயோகப்படுவதையும் விட முடியாது. கஷ்டம்தான். கூழுக்கும் மீசைக்கும் ஆசை. கூடவே பலியாயிருப்பது வைரமுத்துவும்.
வசனம் சுஹாசினியாம். ‘மணிரத்ன’ வாசனையுடன் எழுதியிருக்கிறார். பல இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. ஐஸ்வர்யா கடத்தப்படும் ஆரம்பக் காட்சியிலேயே துளி பயமின்றி கடத்துகிறவனை நோக்கி ‘செம்மொழி’யில் ஏதோ கூறுகிறார். ‘ரோஜா’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி, எரியும் தேசியக்கொடியின் மீது விழுந்து அணைப்பது போன்று இதுவும் லாஜிக்கை தூக்கிப் போட்டு மிதிக்கிற காமெடியாக இருக்கிறது.
()
இந்தப்படத்தை காண்பதற்கு ஒரே ஒரு மிகப் பெரிய நியாயமான காரணமிருக்கிறது என்றால் அது படத்தின் ஒளிப்பதிவாளர்களுக்காகத்தான் (சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன்).
ஏறக்குறைய முழுத்திரைப்படமும் வனத்தின் பின்னணியில் நிகழ்கிறது. அருவியின் குளிர்ச்சியையும் இலைகளின் பச்சை வாசனையையும் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஐஸ்வர்யா மேலிருந்து விழும் காட்சியிலும் விக்ரம் விழும் இறுதிக் காட்சியிலும் மரப்பாலத்தின் மீது நிகழும் சண்டைக் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக பங்காற்றியிருக்கிறது. கான்கீரிட் பொந்துகளில் வாழும் நாம் இயற்கையின் எத்தனை அற்புதமான விஷயங்களை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன. ஒரு காட்சியில் அருவியின் நீர்ப்பரப்பின் மீது விக்ரமும் சில குழந்தைகளும் ஆட்டம் போடும் போது தினமும் முக்கால் பக்கெட் நீரில் குளிக்க வாய்த்த எனக்கு ஏறக்குறைய எனக்கு அழுகையே வந்துவிட்டது.
காலங்காலமாக அவர்கள் வாழும் இம்மாதிரியானஅருமையான வாழ்க்கையையும நிலப்பரப்பையும், வணிக முதலாளிகளும் அரசாங்கமும் கூட்டுச்சதியுடன் கேட்கும் போது உடனே நகரத்திற்கு ஓடிப் போய் அங்கே பிச்சையெடுத்தோ கூலி வேலை செய்தோ, ‘நகரமயமாகி’ விட வேண்டுமாம். அப்படி செய்யவில்லையெனில் அவர்கள் உடனே ‘பயங்கரவாதி’களாகி விடுகிறார்கள். தங்களின் உரிமையை வேறுவழியின்றி ஆயுதங்களின் துணையுடன் கேட்டால் அரசு தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து அவர்களை நசுக்கி அப்புறப்படுத்துகிறது. இந்த கசப்பான உண்மையை இயக்குநர் ஓரமாக ஒரு காட்சியில் கூட வைக்கவில்லை. ‘ஒடுக்கப்பட்டவன்’ என்று விக்ரம் சில சமயம் சொல்வதெல்லாம் சம்பிரதாயமான பாவனையில் இருக்கிறது.
ப்ரியாமணியின் திருமணக்காட்சிகளின் போது அமைந்திருக்கிற பின்னணிக் காட்சிகள் அந்தச் சூழலுக்கு முரணாக இருந்தாலும் கலை இயக்குநரின் உழைப்பைத் தெரிவிக்கிறது.
()
மணிரத்னம் தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மிக அர்ப்பணிப்புடன் ஒரு படத்தையாவது வரும் காலங்களில் இயக்க வேண்டும்.
நினைத்துப் பார்க்கிறேன். அவரின் ‘நாயகன்’ திரைப்படம் வந்த சமயத்தில் குறைந்தது பத்துமுறைக்கும் மேலாக பார்த்திருக்கிறேன். வீட்டுக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும் என்னை ‘வேலு நாயக்கராக’ உருவகம் செய்து கொண்டு ‘கெத்தாக’ நடந்து வருவேன். சோற்றுக்காக அப்போது செய்து கொண்டிருந்த பணியை உதறிவிட்டு, குறைந்தது ராமநாராயணிடமாவது உதவியாளராக எப்படியாவது ‘சினிமா’வில் சேர்ந்து விட வேண்டும் என்று யோசிக்க அளவிற்கு உத்வேகத்தை கொடுத்த படம் அது.
தமிழச்சினிமாவில் ஒரு சத்யஜித்ராயோ, ரித்விக் கடக்கோ, அகிரா குரசாவாவோ இனியாவது வருவார்களா அல்லது அது மெல்ல வெறும் பகற்கனவாகவே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை.
சின்ன வயசில சித்திரக்கதை புத்தகங்களில் அல்லது கட்டுக்கட்டாக ராஜாஜியின் ராமாயாண புத்தகத்தில் படித்தவர்கள் எங்காவது பிரசங்கங்களில் அல்லது ஆன்மீக சொற்பொழிவுகளில் ராமாயண கதை கேட்டவர்கள் என எங்களுக்கு தெரியாத ராமாயணமா என நினைப்பவர்கள் ஓகே படம் பாரக்கதேவையில்லை…
கதை மூலம் – வான்மீகி முனிவர் & கம்பர்
திரைக்கதை வசனம் இயக்கம் – மணிரத்னம் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
இசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
பாத்திரங்கள்
நவீன ஸ்ரீராமன் – பிருத்விராஜ்
சீதாதேவி – ஐஸ்வர்யாராய்
பத்துத்தலை நல்ல ராவணன் – சீயான் விக்ரம்
சூர்ப்பனகை – பிரியாமணி
அனுமார் – கார்த்திக் இவர் படத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது குறுக்காலே படுத்திருந்து பின்னர் குரங்கு போல தாவி வரும் காட்சிகளில் இவர்தான் அனுமார் என்று சொல்லி விடுகிறார்கள்
கும்பகர்ணன் – பிரபு குண்டாக இருக்கிறார் என மணிரத்னம் தெரிவு செய்தாரோ என்னமோ…
விபீஷணன் – மன்னிக்கவும் என்னால் அடையாளம் காணமுடியவில்லை !!
சந்தோஷ் சிவனின் ரசனைமிக்க ஒளிப்பதிவில் இசைபுயலின் உள்ளத்தை அள்ளி செல்லும் இசையில் மணிரத்னம் வழங்கியிருக்கும் இந்த நவீன ராமாயணத்தை ஒரு வீரனுக்குள் ஒழிந்திருக்கும் காதலை விக்ரமின் அற்புதமான நடிப்பின் வாயிலாக பார்க்க விரும்புவர்களுக்கு இது மணிரத்னத்தின் இன்னுமொரு ரோஜா.
என்னை பொறுத்தவரை படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவில் மிக அற்புதமான லொகேஷன்களில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. ஒவொரு லொகேஷன்களும் விழிகளை விரியச்செய்கின்றன. சந்தோஷ்சிவனின் கமெரா கோணங்களும் அசைவுகளும் முக்கியமாக விக்ரம் ஆற்றின் நடுவே தெப்பத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் காட்சி ப்ருத்விராஜ் சிகரெட்டால் பத்திரிகையில் வந்த முகங்களை சுடும் காட்சி என்பன சொல்லும் படியான உதாரணங்கள்.. இவரின் சிறைச்சாலை தளபதி உயிரே இருவர் அசோகா போன்ற படங்கள் பார்த்தவர்களுக்கு இன்னுமொரு அனுபவம் . படத்தின் முழு பிரேம்களையும் ஸகிறீன் சொட் எடுத்தால் வாழ்க்கை பூரா ஒவ்வொண்ணா வால்பேப்பராக போட்டுக்கொண்டே இருக்கலாம் .
முக்கியமாக அந்த கிளைமாக்ஸ் … ம்ஹூம்.. இது வரை எந்த தமிழ் படங்களிலேயோ ஏன் இந்திய படங்களிலேயோ கூட பார்த்ததில்லை.
கோபமான முகத்துடன் படம் முழுக்க ஈரமாக ஐஸ்வர்யாராய்.. வீரமும் தாபமும் ஆக்ரோஷமும் நிறைந்த விக்ரம்.. நடிப்பில்… எனக்கு சொல்ல தெரியாதுங்கோ அதால விட்டிற்றன் .. மனுசன் .. கலக்கியிருக்கிறார் . பிருத்விராஜ் கொடுத்து வைத்தவர் பிரசாந் அப்பாஸ் அஜித் வரிசையில் ஐசுடன் டூயட் பாடியவர்களின் வரிசையில் சேர்ந்து புகழ் தேடிக்கொண்டார்.
வழக்கமான மணிரத்னங்களின் படத்தில் வரும் ரெயில் காட்சியும் தப்பாமல் வருகிறது உயிரே படத்தில் தைய தையா பாடலில் வருவது போன்ற காட்சி அதே இடத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இசைபுயல் ஆரம்பத்திலேயே அதிரடியாகவருவார் படம் முழுக்க அடிக்கடி நினைவுபடுத்திகொண்டே இருந்தார் காட்டுசிறுக்கி பாடல் ஒருமுறை பின்னணியில் அடிக்குரலில் வரும் அனுபவித்து பாருங்கள்.. நான் மிஸ்பண்ணுவதாக நினைப்பது பாடல்காட்சிகளை காட்டுசிறுக்கி முழுமையாக இல்லை. உசிரே போகுதே பாடல் முதன் முறையாக மணிரத்னத்தின் படத்தில் திரைக்கதை ஓட்டத்துடன் பொருந்தி வராத பாடலாக எனக்கு தோன்றியது.
நவீன ராமயணம் சூர்ப்பனகையின் காதலிலும் மற்றும் வபீஷணனின் மனமாற்றத்துக்கு பின்னரும் முழுமையாக வேறுபடுகிறது. பாத்திரங்கள் அதேபோல படைக்கப்படிருப்பது சுவாரஸ்யமாக இருகிறது.
இந்த படத்தில் உள்குத்து அரசியல் ஏதும் இருக்கோ எனக்கு தெரியாதப்பா நான் படத்தை நன்றாக ரசித்தேன். விஜய் ரசிகர்களுக்கும் இந்த ரசிகர்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது அமைதியாக அடிதடி இல்லாமல் வந்து போனார்கள் ஐஸுக்கும் இசைப்புயலுக்கும் டைட்டிலில் விசில் குடுத்தார்கள். ஒரு வயது போன ஒருவர் இடைவேளையில் எழுந்து சென்றபோது மணிரத்னத்தின் இன்னொரு குப்பை என்றார் … எப்படி என்று தெரியவில்லை ..
மொத்தத்தில் வழமையான மணிரத்னம் படங்கள் போல படம் எத்தனை முறையும் பாரக்கலாம் ..
முதலில் இது இராவணன் என்கிற சராசரி தமிழ்த் திரைப்படம்தான் என்கிற நோக்கில் கொஞ்சம் படிக்கலாம்..!
எல்லை மீறிய காதலைக் காட்டியாகிவிட்டது. சத்தியவான் சாவித்திரியைப் புரட்டியாகிவிட்டது. மகாபாரத்தை பல முறை படித்தாகிவிட்டது. பகவத்கீதையை காண்பித்தாகிவிட்டது.. கடைசியாக இந்த இராமாயணத்தையும் தொட்டுவிட்டால் இதிகாசங்கள் கதை முடிந்துவிடும் என்கிற நினைப்பில் மணிரத்னம் இத்திரைப்படத்தை எடுத்தாரோ என்னவோ..?
இராமாயணம்தான் பேஸ்மெண்ட் என்று தெரிந்தவுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் அனைவருக்குமே கதையும், கதையின் முடிவும் தெரிந்துவிட்டது..! ஆனால் மணி மீதான நல்ல அபிப்ராயத்தில் மேக்கிங் எப்படி என்பதை பார்ப்பதற்காகவே பெரும் கூட்டம் செல்கிறது என்று நினைக்கிறேன்..!
பழங்குடி மக்களுக்கு தளபதியாக இருக்கிறான் வீரா என்கிற வீரய்யா(விக்ரம், – ராவணன்). இவனது அண்ணன் சிங்கம்(பிரபு- கும்பகர்ணன்), தம்பி சக்கரை(முன்னா-விபீஷணன்), தங்கை வெண்ணிலா(ப்ரியாமணி- சூர்ப்பணகை) இவனை வேட்டையாட வருகிறார் தேவ்(பிருத்விராஜ்-ராமன்). இந்த ராமனின் காதல் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்-சீதா). ராமனும், ராவணனும், சீதையும் இருக்கும்போது அனுமானும் இருந்துதானே ஆக வேண்டும். அது கார்த்திக். இப்படி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்.
என்னதான் வீரய்யாவை ஊர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாலும், சட்டத்தின் முன் அவன் ஒரு தேடப்படும் குற்றவாளி. தனது இன மக்களை அழித்த அதிகாரவர்க்கத்தை அவன் எதிர்த்து போராடுகிறான். அதற்கு அவனது இன மக்கள் பெரும் ஆதரவு தருகிறார்கள்.
அதிகாரத்திற்கும், மக்களுக்குமான போட்டியில் வீரய்யாவின் தங்கை வெண்ணிலா அவளது திருமண தினத்தன்றே போலீஸாரால் கற்பழிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறாள். இந்தச் சோகத்தைத் தனது அண்ணன் வீரய்யாவிடம் சொல்லியவிட்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் வெண்ணிலா.
இதற்குப் பழிக்குப் பழி வாங்க அதிகாரி தேவின் மனைவி ராகினியை கடத்திக் காட்டுக்குள் கொண்டு செல்கிறான் வீரய்யா. தனது மனைவியைத் தேடி பெரும் படையுடன் காட்டை முற்றுகையிடும் தேவ் மற்றும் காவல்துறையினருக்கும், வீரய்யா மற்றும் அவனது இனத்து மக்களுக்கும் இடையில் நடக்கும் அக்கப்போரே மிச்சம், மீதியான கதை..!
இந்திய திரைப்பட உலகின் இயக்கத்தில் தான் ஒரு குரு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மணிரத்னம். பிரேமுக்கு பிரேம் காட்சிகளை வித்தியாசப்படுத்தியிருக்கும் மணி, சராசரி ரசிகனுக்குள் ஒரு ஈர்ப்பை உற்பத்திதான் செய்திருக்கிறார். இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பவர்கள் விக்ரம், ஐஸ்வர்யா, ஒளிப்பதிவாளர்கள் மணிகண்டன், சந்தோஷ் சிவன், எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத், கலை இயக்குநர் சமீர் சந்தா மற்றும் ஏராளமான துணை நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும்தான்..!
தன்னைத்தானே முரடனாகவும், ஒடுக்கப்பட்டவனாகவும், தாழ்த்தப்பட்டவனாகவும், முட்டாளாகவும் காட்டிக் கொள்ளும் விதமாக விக்ரமின் இயல்பும், பேச்சும் அமைக்கப் பெற்று அவருடைய பாடி லாங்குவேஜில் அத்தனை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்..!
வழக்கமான மசாலா படங்களில் தேன் தடவிய தேள் கொடுக்கைக் காட்டும்விதமான காட்சிகளில் நடித்து வந்ததற்கும், இங்கே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும், ராபின்ஹூட் வகையறாவாக தன்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அவருடைய கேரக்டர் இருப்பதினால் அதனை மீறாமல் அதற்குள்ளேயே வட்டமிட்டிருக்கிறார்..!
ஐஸ்வர்யாவை விரும்புகிறாரா இல்லையா என்பதைக்கூட வெளிப்படுத்திக் காட்ட முடியாமல் தவிக்கின்ற தவிப்பையும், “இங்கேயே இருந்துவிடேன்” என்று அவர் சொல்கின்ற காட்சியும், “இருந்து விடுகிறேன்” என்று ஐஸ்வர்யா சொல்கின்ற காட்சியிலும் காட்சியோடு ஒன்றத்தான் வைக்கிறார்..!
ஏற்கெனவே ‘சேது’விலும், ‘பிதாமகனி’லும் பேசாமலேயே நடித்துக் காட்டியிருக்கும் விக்ரமிற்கு இதில் கொஞ்சம் அதிகமான உடல் நடிப்பைக் காட்ட வேண்டிய நிலைமை.. ஆனாலும் அந்த ‘டண்டண்டக்கா’ வார்த்தை உச்சரிப்பும், திருப்பித் திருப்பித் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் முறையும் எரிச்சலைக் கூட்டியதையும் மறுக்க முடியாது..
இறுதிக் காட்சியில் ஐஸ்வர்யாவை பார்த்த மாத்திரத்தில் அவர் கொள்ளும் மகிழ்ச்சியும், ஆனந்தமும்.. அதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பும் மீண்டும் ஒரு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கும்..!
ஆனால் அதனை உறுதியாக வாங்கியே தீருவது என்கிற லட்சியத்தில் உழைத்திருக்கிறார் ஐஸ்வர்யா.. இந்த அழகு தேவதைக்கு வயதாகிவிட்டது என்பது பிரேமில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், நடிப்பு என்ற ஒன்று அதன் முகத்திலேயே குடி கொண்டிருப்பதை மணிரத்னம், ஷங்கர் அளவுக்கு பாலிவுட் இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை..!
முதல் முறையாக விக்ரமிடம் இருந்து தப்பிக்க வேண்டி ஆற்றில் குதித்துவிட்டு கரையேறும் நிலையில் முகத்தை மட்டும் காட்டும் அந்த ஷாட் ஒன்றே போதும்..!
“உங்க பிரச்சினைல பொம்பளைங்களை எதுக்கு இழுக்குறீங்க?” என்று கேட்டு கோபப்படும் ஐஸ்வர்யாவையும், “தின்னாத் தின்னு திங்காட்டி போ..” என்று சொல்லிவிட்டு பிரபு சோற்றை வைக்கும் வேகத்தில், அதனை எடுத்து முழுங்கும் வேகத்திலும் நடிப்பென்னவோ அம்மணிக்கு பிய்த்துக் கொண்டு வருகிறது..!
விக்ரமின் மீதான தனது ஈர்ப்பு கூடிக் கொண்டே போவதை அந்தப் பாடல் காட்சியில் நின்று காட்டுவதிலும், பிரியாமணியைக் கற்பழித்த இன்ஸ்பெக்டரை காப்பாற்றத் துடிக்கின்ற வேகத்திலும் ஐஸோ ஐஸூ..!
“அவருக்கு ஒண்ணும் ஆகலியே..” என்று திரும்பித் திரும்பிக் கேட்பதாகட்டும்.. “நான் இங்கேயே இருக்குறேன். ஆனா அவரை விட்டிருவீங்களா?” என்று கேட்கும்போது அவரிடத்தில் இருக்கும் இரட்டை மனப்போக்கை வெளிக்காட்டுகின்ற காட்சியும்….
தான் இருக்கின்ற பிரேம்களில் முழுக் கவனத்தையும் ஈர்த்திருப்பது என்னவோ ஐஸ்வர்யாதான். இது ஒன்றே போதும்.. ஐஸின் ரசிகர்கள் இந்தப் படத்தில் அவருடைய நடிப்பிற்காக நி்ச்சயம் அவரைக் கொண்டாடலாம்..
அடுத்தது பிருத்விராஜ்.. எவ்வளவு தடுத்தாலும் மலையாள வாடை அடிப்பதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் முதிர் கன்னியான ஐஸுக்கு, தம்பி மாதிரியான பிருத்வியை போட்டதை மலையாள மார்க்கெட்டுக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்..!
ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ் எப்போதுமே பிய்த்து வாங்குவார். உடன் பிருத்வியுடனும் அப்படியேதானா..? “எங்க நான் வைச்சுப் பார்க்குறேன்..” என்று ஐஸின் நெஞ்சில் கை வைக்கின்ற காட்சியில் தியேட்டரை திட்டித் தீர்த்தது பிருத்வியை..!
கேரக்டர்படி தனது நடிப்பை இயக்குநர் எதிர்பார்த்ததுபோல் கொட்டிக் காண்பித்திருக்கிறார்.. அவரது அப்பாவின் வெகு இயல்பான நடிப்பை மலையாளத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன்..! இன்றைக்கு இவருக்கும் அது தானாகவே வருகிறது..! வந்திருக்கிறது..!
ரயிலில் ஐஸிடம் கேட்கின்ற கேள்வியை சலனமேயில்லாமல் தனது காதலி, மனைவி என்றெல்லாம் தோணாமல் விசாரணை அதிகாரியைப் போல அவர் பேசுகின்ற பேச்சும், ஐஸின் பதிலும் கச்சிதம்..! வண்டியை விட்டு இறங்குகின்ற அந்தக் காட்சி வரையிலும் அதுவொரு கவிதைதான்..!
அனுமார் வேடம் என்றால் மரம் விட்டு மரம் தாவித்தான் ஆக வேண்டுமோ.. கார்த்திக்கு அதனைக் கொடுத்து தாவ விட்டிருக்கிறார்கள்.. ஆனால் என்னவோ படத்தில் எனக்கு எரிச்சலைக் கொடுத்த கேரக்டர் இது ஒன்றுதான்..!
எல்லா கேரக்டர்களின் ஸ்கெட்ச்சுகளையும் அக்குவேறு, ஆணிவேறாக அலசியிருக்கும் மணி, கார்த்திக்கில் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார். தனது அணியில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டரையே சந்தேகக் கண்ணோடு பார்த்து உளவாளி என்று கண்டுபிடிக்கும் பிருத்வி, கார்த்திக் மீது காட்டும் டிபார்ட்மெண்ட் பாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
வீரா பற்றித் தெரிந்த மலைவாழ் மக்கள் அனைவரும் டாக்குமெண்ட்ரி ஸ்டைலில் பிருத்வியிடம் பற்ற வைக்கும் காட்சியில் அருகிலேயே அமர்ந்து கமெண்ட் அடிக்கும் கார்த்திக்கின் செயல் எரிச்சலைத்தான் தந்தது..! இதனாலேயே வீரா பற்றிய அறிமுகம் மனதில் நிற்க முடியாமல் தத்தளிக்கத் துவங்கியது முதல் சில நிமிடங்களிலேயே..!
“எந்தக் கடைலதான் அரிசி வாங்குறாருன்னு தெரியலை” என்று கோடம்பாக்கமே வருடக்கணக்காக புலம்பும் அளவுக்கு தனது உடலை பிட்னெஸாக வைத்திருக்கும் அண்ணன் பிரபு கும்பகர்ணன் கேரக்டர்.. தம்பிக்காக.. என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற அந்தக் கேரக்டரில் குறையொன்றுமில்லை..!
ஆனால் இவரது மனைவியாக வரும் ரஞ்சிதா தோன்றும் காட்சியிலெல்லாம் தியேட்டரில் கை தட்டல் தூள் பறந்தது. யாருக்குமே கிடைக்காத கைதட்டல் இது. ரஞ்சிதாவே நேரில் பார்த்தால் அழுதுவிடுவார். யாராவது போனை போட்டுச் சொல்லுங்கப்பா..!
வெண்ணிலாவான முத்தழகி.. இவரும் கார்த்தியும் இனிமேல் ஒன்றுதான்.. மேற்கொண்டு புதிதாக எதையும் இவர்களிடமிருந்து கறக்க முடியாது போலிருக்கிறது..! ஆனாலும் அந்த தெனாவெட்டு தமிழ்ச் சினிமா கதாநாயகிகளிடம் பிரியாமணியிடம் மட்டுமே முத்திப் போன முருங்கைக்காய் போல் இருக்கிறது..!
விக்ரமை முறைத்துக் கொண்டு தனது வருங்கால கணவனைக் காப்பாற்ற நினைக்கும் முயற்சியிலும், “என் புருஷனை பார்த்தீங்களா மதினி.. பயந்துக்கிட்டு ஓடிட்டாரு. இப்படியொருத்தனை புருஷனா அடையறதுக்கு நான்தான் கொடுத்து வைச்சிருக்கணும்..” என்ற அமைதியான புலம்பலின்போதும் ‘பருத்திவீரன்’ முத்தழகிதான் தெரிந்தார்..!
விபீஷணனாக முன்னா.. ஐஸ், விக்ரம் தவிற வேறு யாருக்கும் குளோஸப் ஷாட்களை அதிகம் வைக்காமல் தவிர்த்திருப்பதால் இவர்களது நடிப்பையெல்லாம் இவர்கள் பேசிய வசனங்களே மென்று தின்று தீர்த்துவிட்டன..!
படத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் ஒளிப்பதிவாளர்களும், கலை இயக்குநரும்..!
இந்த மாதிரியான லொகேஷன்களில் ஷூட் செய்தால் எப்படி இயற்கை ஒளி கிடைக்குமோ அதனையே மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.. போலீஸாரின் டெண்ட் கொட்டகைகள் மாடுகளை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கும்போது கேமிராவி்ன் ஸ்பீடே காட்சியை நகர்த்துகிறது..!
ஒவ்வொரு லொகேஷனிலும் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் உள்ளது ஒளிப்பதிவு. இரண்டு ஒளிப்பதிவாளர்களும் எதை, எதை ஷூட் செய்தார்கள் என்பது தெரியாததால் இருவருக்குமே நமது பாராட்டுக்கள்..!
மணிக்கு மிகவும் பிடித்தமான மழையும், இருட்டுமாக படத்தில் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதை பார்க்கின்றபோது இது தமிழ்ப் படம் போலத் தோன்றவே இல்லை. இந்த ஒரு வித்தியாசமான அனுபவமே இந்தப் படத்தை தூக்கி நிறுத்தப் போகிறது..!
அத்துவானக் காட்டுக்குள் அந்த சிலையை எப்படி நிறுவினார்கள் என்றுதான் தெரியவில்லை. அசத்தல்.. ஒவ்வொரு காட்சிக்கும் கலை இயக்குநரின் உழைப்பு கச்சிதம்.. போலீஸின் டெண்ட்டில் அரிக்கேன் விளக்கைக்கூட விட்டு வைக்காமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்..!
சிற்சில இடங்களில் லொகேஷன்களின் அற்புதமான காட்சியமைப்பில் நமது பார்வை கேரக்டர்களைத் தவிர்த்து பிற இடங்களின் மேல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை..
இரண்டு மலைகளுக்கு நடுவில் பாலத்தைக் கட்டி அதில் எடுத்திருக்கும் சண்டை காட்சிகள்.. சிறுவர்களைக் கவர வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆனால் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கும்விதம் பாராட்டுக்குரியது..!
வழக்கம்போல மணியின் சிந்தர்சைஸர் ஒலிப்பதிவு..! வசனம் என்னவோ நாலு பக்கமே இருந்தாலும் அதனை உச்சரிப்பது நாலு டெசிபலில் மட்டுமே என்றால் எப்படி..? பாதி வசனங்கள் யாருக்குமே புரியவில்லை..! இந்தப் படத்தின் வசனத்தை புத்தகமாக வெளியிட்டால் மட்டுமே முழுமையான வசனங்களை தெரிந்து கொள்ள முடியும்..!
வழமைபோல அதே “எங்க? ஏன்..? எப்படி..? எதுக்கு..?” என்ற ஒற்றை வரி டயலாக்குகளுடன் திருநெல்வேலி ஸ்லாங்கு்ம் சேர்ந்து கொள்ள ஆளாளுக்கு அதனை ஸ்டைலிஷ் செய்து கொடுத்திருக்கிறார்கள்.. தமிழகத்தின் மெட்ரோ சிட்டிகளைத் தவிர மற்ற இடங்களில் ஊருக்கு ஒன்றிரண்டு தியேட்டர்களில்தான் சவுண்ட் சிஸ்டம் பக்காவாக உள்ளது. இந்தப் படத்தை திண்டுக்கல் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்..! ம்ஹூம்..!
“உசிரே போகுதே” பாடல் உயிரைக் குடிக்கிறது என்று பலரும் எழுதிக் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருக்க.. அந்தப் பாடலின் முதல் சரணம் மட்டுமே ஓரிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. அதுவும் கடைசியில்தான் அது இந்தப் பாடல் என்பதே புரிவதைப் போல் அமைந்திருந்தது நமது துரதிருஷ்டம்..!
பின்னணி இசையில்தான் பிய்த்திருக்கிறார் ரஹ்மான்..! ஆர்ப்பாட்டமான இசை..! படத்தின் கதைக்குத் தேவைக்கேற்ப பின்னணி இசையும் இழைந்து வந்திருக்கிறது.. முதல்முறையாக தமிழ்ப் படத்தின் பின்னணி இசையில் ரஹ்மான் என்னைக் கவர்ந்திருப்பது இந்தப் படத்தில்தான்..!
படத்தில் தென்பட்டதெல்லாம் நிறைகள்தானா..? மணிரத்னம் என்பதால் இப்படியா என்றெல்லாம் நினைக்கலாம்..! குறைகள் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு எனக்கெல்லாம் தகுதியும் இல்லை. அனுபவமும் இல்லை.. எனது பார்வையில் கருத்தாக மட்டுமே முன் வைக்கிறேன்..!
முற்பாதியில் கதை எதை நோக்கி நகர்கிறது என்பதே தெரியாத அளவுக்கு ஐஸ், விக்ரமை சுற்றியே போய்க் கொண்டிருக்க.. அந்த ஜெட் வேகம் ஐஸின் மெழுகு உரித்த பொம்மை முகத்தினாலேயே கிடைத்துவிட்டது..! ஆனால் கதை..?
ஐஸை கடத்தியதே பிரியாமணியின் சாவுக்கு பழிக்குப் பழி வாங்கத்தான் என்பதையே இரண்டாவது பாதியில்தான் சொல்கிறார்கள். இதிலேயே கதை நம்மிடமிருந்து எங்கோ வெகுதூரமாக போய்விட்டது. இதனை முற்பகுதியிலேயே ஐஸ்வர்யா, “உங்க சண்டைல பொம்பளைங்கள எதுக்கு இழுக்குறீங்க..?” என்று கேட்கும்போதே வைத்திருந்தால் அட்லீஸ்ட் நம் மனதில் கர்ச்சீப் அளவுக்காவது கதை டச் ஆயிருக்கும்…!
அதுவும் பிரியாமணியின் கதையை பிளாஷ்பேக்கில் சொல்லுமிடத்தில் காட்சியமைப்பு படு சொதப்பல்..! விக்ரமின் கத்தல்.. ஐஸின் கதறல்.. பிரபுவின் உறுமல் என்று மூன்றும் மாறி மாறி கட் டூ சீன்களாக வந்து தொலைக்க.. ஏதோ டாக்குமெண்ட்ரி பார்த்தது போலாகிவிட்டது..!
படத்தின் கதைக்குச் சம்பந்தமில்லாமல் லொகேஷன்கள் மாறுவது பிரியாமணியின் கல்யாணத்தின்போதுதான்..! கலை இயக்குநரின் கலை வித்தையை நாம் அங்கே ரசிக்கலாம். ஆனால் இடறுகிறதே..!
பரமாத்மாவாக நிம்மதியாக இருக்கும் வைகுந்தப் பெருமாளிடத்தில் போய் ஐஸ் புலம்புகின்ற காட்சியில் ஏன் இவ்வளவு கொடூரமான வசனங்கள்.. “கெட்டவங்களை கெட்டவங்களாவே வைச்சிரு.. நல்லவங்களை நல்லவங்களாவே வைச்சிரு” என்று..! இதனை சுஹாசினியிடம் கேட்டுப் புண்ணியமில்லை. ஒரிஜினல் வசனகர்த்தாவிடம்தான் கேட்க வேண்டும்..
திடுதிப்பென்று ஐஸின் பாரதியாரின் பாடலையும் மீதிப் பாடலை வீரா சொல்கின்ற இடத்தில் “ரோஜா” படத்தில் அரவிந்த்சாமி “ஜெய்ஹிந்த்” என்று சொல்கின்ற எபெக்ட்டை மணி எதிர்பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. படு சொதப்பலாகிவிட்டது அந்தக் காட்சி..!
“நான் பட்டியான்.. கிராமத்தான்.. ஒடுக்கப்பட்டவன். படிக்காதவன்.. முட்டாள்.. ஒண்ணுமில்லாதவன்..” என்றெல்லாம் தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் வீராவின் கோபம் எதைப் பற்றியது.. யாரைப் பற்றியது.. என்பதையே டச் செய்யாமல் அவனை வீரனாக மட்டுமே சித்தரிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறார் இயக்குநர்.
ஐஸை விக்ரம் விரும்புகிறாரா இல்லையா என்பதைப் போல் கதையை மாற்றிவிட.. இது பழி வாங்கும் கதையில் இருந்து புதிய காதல் கதையாகி கிளை பரவி வேர்விட்டதில் நொறுங்கிப் போனது மணி வடிவமைத்த கதையின் பேஸ்மெண்ட்..!
என்ன இருந்தாலும் ஒரு நல்ல கதையை இப்படிச் சிதைத்திருக்கக் கூடாது..! இப்படி நானும், நீங்களும் புலம்பினாலும் இந்தப் படத்தின் கதைக்குச் சொந்தக்காரர் யார் என்பது டைட்டிலில் தெரியாததால் இயக்குநர் மணியையே இதற்குச் சொந்தமாக்கி அவர் மீதே பழியைச் சுமத்துவோம்..!
படத்தில் எத்தனையோ நிறை, குறைகளைப் பற்றிச் சொன்னாலும் இயக்குநரும், அவர்தம் குழுவினரும் காட்டியிருக்கும் உழைப்பைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது..! எத்தனை நாட்கள் ஷூட்டிங் என்றாலும் இத்தனையிலும் பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்பதும், அழுவதுமாக மூன்று மொழிகளுக்கும் முகத்தைக் காட்டியிருக்கும் ஐஸ்வர்யா என்னும் தங்கத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்.. எப்படித்தான் அவரால் முடிந்ததோ..?
இத்தனை லொகேஷன்களில் ஷூட்டிங் நடத்தி ஒரு வியத்தகு மேக்கிங்கை வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்றால் தென்னிந்திய திரைப்பட ஊழியர்களின் திறமையை என்னவென்று சொல்வது..? அத்தனை பேருக்கும் எனது அப்ளாஸ்..!
தமிழ், தெலுங்கு, இந்தி என்று அப்போதைக்கு அப்போதே அதே லொகேஷன்களில் உடனுக்குடன் காட்சிகளை ஷூட் செய்திருக்கிறார்கள் என்றால் மணிரத்னத்தின் புயல் வேக உழைப்பும், அவருடைய யூனிட்டாரின் திறமையும் இந்திய திரைப்பட உலகத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான்..!
இத்தோடு இத்திரைப்படத்தின் பெருமைகளை நிறுத்திக் கொண்டு இதற்குள் பொதிந்திருக்கும் அரசியல் செய்திகளைப் பார்ப்போம்..!
ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டுமென்று நானே பல முறை எனது பதிவுகளில் எழுதியிருக்கிறேன்..! “உன்னைப் போல் ஒருவனில்” வலையுலகமே ஆட்டமோ ஆட்டம் ஆடியபோது “இரண்டு வசனங்களை மட்டுமே வைத்து படம் மொத்தத்தையும் எடை போடக்கூடாது” என்று சொன்னேன்.
இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்து அப்படியே தோசையைத் திருப்பிப் போட வேண்டிய கட்டாயம்..!
‘ரோஜா’, ‘தளபதி’, ‘பம்பாய்’, ‘இருவர்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஆய்த எழுத்து’, ‘தில்சே’ என்று தனது படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு சென்சிட்டிவ் பிரச்சினைகளைத் தொட்டுச் செல்லும் மணிரத்னம், அதன் காரணம் என்னவாக இருக்கும் என்பதை மட்டும் கவனமாக டச் செய்யாமல் தன்னை வெறும் பார்வையாளனாக மட்டுமே வைத்துக் கொண்டு நடிகர்களைக் கொண்டு அதனை எதிர் கொள்ளும் தனி மனிதர்களின் பிரச்சினைகளாக உருவாக்கிக் கொண்டே சென்றுள்ளார். இதிலும் அதே கதைதான்..!
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உச்சக்கட்ட வெறியில் ஆட்டமோ ஆட்டம் என்று ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பூர்விகச் சொத்தான காடுகள், மலைகள், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படும் இந்த அதிகார வர்க்கத்தின் ஒரே குறிக்கோள்.. சட்டம், நீதிமன்றம் என்ற ஒன்றையே இந்த அப்பாவி மக்களின் கண்களில் காட்டாமல் இவர்களைக் கொன்றொழிப்பதுதான்..!
தண்டகாரண்யாவிலும், நந்திகிராமிலும் நடந்தவைகள் ஒன்றுதான்..! நந்திகிராம் அளவுக்கு தண்டகாரண்யாவின் நடந்தவைகள் பிளாஷ்லைட்டுக்கு கொண்டு வரப்படாததன் காரணத்திலும் பல அரசியல்கள் உள்ளன..!
இந்தப் படத்தின் கதைப்படி பழங்குடியினர் எதற்காக ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டும்..? அதிகார வர்க்கம் எதற்காக அவர்களைப் பழி வாங்கத் துடிக்க வேண்டும்..? அந்த மக்களுடன் இயைந்து அவர்களுக்கு வேண்டியவைகளைச் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்திருக்கும் அதிகார வர்க்கம், அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. காப்பாற்றத் துடிக்கும் இளைஞனாக வீரய்யா.. இது இந்தியாவில் இப்போது பற்றியெரிந்து கொண்டிருக்கும் பொதுவான பிரச்சினை..
தேவ் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரிக்கும், வீரய்யா என்பவனுக்கும் சொந்தமாக வாய்க்கால், வரப்புத் தகராறு. அதனால் மனைவி கடத்தல் என்று கதையைக் கொண்டு போயிருந்தால் இது கிட்நாப்.. மனைவியின் கள்ளக்காதல் என்றாகி படம் வேறு திசையில் பயணித்திருக்கும்…!
ஆனால் கதை, தற்போது நாட்டின் கவனத்தைத் திசை திருப்பியிருக்கும் மாவோயிஸ்ட்டுகளைத் தொட்டுக் கொன்று சென்றுள்ளது.. ஆனால் அதனை அப்படியே பாதியிலேயே விட்டுவிட்டு அந்த வீரய்யாவின் தனிப்பட்ட காதல் பிரச்சினையை பெரிதாக்கி.. எஸ்.பி.யின் மனைவியை மீட்பது என்ற ஒற்றை வரி பிரச்சினையையும் பெரிதாக்கி.. வேறு இடத்திற்கு கொண்டு போக முனைந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை..!
வீரப்பன் வேட்டையிலும் இதே கதைதானே நடந்தது.. சாதாரணமாக இருந்த வீரப்பனை துப்பாக்கி ஏந்திய வீரப்பனாக உருமாற்றியது இந்த பாழாய்ப் போன அதிகார வர்க்கம்தானே.. இராமாயணக் கதையோடு இழையோடும் வகையில் விபீஷணனாக முன்னாவை சமரசத்திற்கு அனுப்பி வைக்கும் இடத்தில், வீரப்பன் வேட்டையும் என் ஞாபகத்திற்கு வந்தது.
வீரப்பனின் தம்பி அர்ஜூனனையும் இதேபோல் கைதிகள் பரிமாற்றத்திற்காக சமரசப் பேச்சு நடத்த அனுப்பி வைத்தார் வீரப்பன். அதற்குள்ளாக வீரப்பனின் பிடியில் இருந்தவர்கள் தப்பியோடி வந்துவிட.. போலீஸின் பிடியில் இருந்த அர்ஜூனன் சித்ரவதை செய்யப்பட்டு விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்..! இது அதிகார வர்க்கம் செய்த நயவஞ்சகத்தனம்..! அதேதான் முன்னாவுக்கும் நடந்தது..! பிரியாமணியின் கணவனுக்கும் நடந்தது..!
தனது மனைவியை மீட்பது ஒன்றே லட்சியம் என்ற நிலையில் இருக்கும் எஸ்.பி. தேவ், ஒரு கையை இழந்து துடித்துக் கொண்டிருக்கும் அந்த மாப்பிள்ளையை அந்தக் கோலத்திலும் சித்ரவதை செய்யும் மனநிலைக்கு போகிறாரே.. இதைத்தானே வீரப்பன் வேட்டையிலும் நமது காவல்துறை செய்தது..! படம் ரீலுக்கு ரீல் சுட்டிக் காட்டுவதெல்லாம் இந்த அரசியலைத்தான். ஆனால் அது நிஜமில்லை என்ற பொய் முகமூடியைப் போட்டு மறைத்துக் கொண்டுள்ளார் மணி. ஏன்..?
எத்தனை நல்ல சந்தர்ப்பம் மணிக்கு..? இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..!
ஆனால் மணி இதற்குள் ஆழமாகப் போக விரும்பாமல் அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் இருந்து தப்பிக்க நினைத்து ஐஸ்வர்யாவை நினைத்து வீரா ஏங்குவதைப் போலவும், வீராவை நினைத்து ஐஸ்வர்யா தவிப்பது போலவும் கதையைத் திருப்பிவிட கதை கந்தலாகிவிட்டது..!
மக்களுக்கு நன்மை செய்யவிருப்பவன், செய்து கொண்டிருப்பவன் என்கிற மேன்மையை அவன் மேல் திணித்து வைத்துவிட்டு, அடுத்த ரீலிலேயே அடுத்தவன் மனைவி மேல் ஆசைப்படுபவனைப் போலவும் காட்டிவிட்டால் சராசரியான ஒரு பார்வையாளனுக்கு அந்தக் கேரக்டர் மீது என்ன ஈர்ப்பு வரும்..?
தீவிரவாதிகளாக யாரும் இங்கே பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அப்படியொரு சூழலில் இருக்கும் அந்த மக்களிடையே அது பற்றிய சிந்தனை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக்கூட காட்டாமல் அவர்களுடைய வாழ்க்கை முறையை சந்தோஷமும், கூத்தும், கும்மாளமுமாக மாற்றிக் காண்பித்ததில் படத்தின் டெம்போ குறைந்ததுதான் மிச்சம்..!
பிரியாமணியின் மாப்பிள்ளை எந்த இனம் என்பதை கல்யாணத்தில் காட்ட நினைத்த மணி அது ஒரு வர்க்க பேதத்தையும், ஜாதி வித்தியாசத்தையும் குறிப்பதை மாப்பிள்ளை வீட்டாரை அடையாளப்படுத்துவதிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. துப்பாக்கிச் சூடு, அதிகார வர்க்கத்தின் தாக்குல் என்றவுடனேயே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் சிட்டிலைட் மனப்பான்மையை அந்த மாப்பிள்ளையின் மூலமாக வெளிக்காட்டியிருக்கிறார் மணி. இந்த ஒன்றுதான் இத்திரைப்படத்தின் மூலம் அவர் செய்திருக்கும் ஒரேயொரு நல்ல விஷயம்..!
ஆதிக்க சக்திகளின் அபகரிக்கும் குணம், பன்னாட்டு நிறுவனங்களின் அகசாய சூறையாடல்.. இதற்கு ஒத்துப் போகும் அதிகார வர்க்கம்.. இவர்களை எதிர்க்கும் அப்பாவி மக்களின் போராட்டம் என்று ஐஸ்வர்யா என்கிற பெண்ணின் கடத்தல் மூலமாக இந்தக் கதை சொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் இந்தியாவின் ரத்தினமாக சொல்லப்பட்டிருப்பார் மணிரத்னம்.
ஆனால் ஒரு திரைப்படத்தை செய்நேர்த்தியோடு செய்து முடித்திருப்பதில் மட்டுமே, மணி தனது பெயரை நிலை நாட்டியிருப்பதால் துரதிருஷ்டவசமாக இந்தியத் திரையுலகத்தின் ரத்தினம் என்ற பெயர் மட்டுமே அவருக்குக் கிடைத்திருக்கிறது..! வருந்துகிறேன்..!
இராவணன் – கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்..!
ராவணன் கதாப்பாத்திரம், எங்கு இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது தெரியுமா , நக்சல் தலைவர் COBOT GHANDHI என்ற கதாப்பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது . அப்படி நக்சல் தலைவன் விக்ரம் என்று காட்டும் பொழுது , அவன் ஏன் அப்படி ஆனான் அவனை மக்கள் ஏன் தலைவனாய் கடுவுளாய் நினைக்கிறார்கள் என்று சொல்லி இருக்கவேண்டாமா ????? இது ஒரு பாமரனக்கு கூட தெரியும் ஆனால் மணி சார் இயல்பாகவே அதை தவிர்த்தான் உள் நோக்கம் என்ன .மணி சார் ஒன்றும் இதெல்லாம் தெரியாதவர் அல்ல ,corporate கம்பனியுடன் கூட்டணி போட்டு எப்படி உழைக்கும் மக்களுக்கான படம் எடுக்கமுடியும் நண்பரே .
சரி வடக்கிழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா ?????????? 1958 ஆம் ஆண்டு அரசு ஒரு சட்டம் போட்டது இச்ச்சட்டதின்படி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது. இந்த சட்டத்தின் பெயர் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம்..
இதை போல் இருக்கும் பொழுது என்ன நடக்கும் ஒரு பெண் அழகாய் இருந்தால், அவள் அண்ணனை உள்ளே போட்டுவிட்டு , அதிரடி படை அனுபவிப்பார்கள் . இந்த மாதிரி அடக்கு முறை நம் தமிழ்நாட்டில் உள்ளதா ???? மணி சார் போல சத்யம் திரையரங்கு மக்களுக்கு படம் எடுப்பவர்களுக்கு இது புரியாது என்றே நினைக்கிறேன் . அங்கே சட்டம் எப்படி உள்ளது , அந்த சமூகம் எவ்வளவு அடக்குமுறை உள்ளது , மக்கள் ஏன் அங்கு நக்சலாய் மாறுகின்றனர் ,என்பதை தவிர்த்து விட்டு , அது என்னமோ பழிவாங்கும் கதை
போல , நாயகன் நாயகி விக்ரம் மூவருக்குள் நடக்கும் தாப போராட்டம் போல சித்தரித்தது உள்ளடக்கத்தில் எந்த விதத்தில் நியாயம் . மணி சார் சொல்வதை போல வெறும் நாயகனின் தங்கை மட்டுமா கற்பழிக்க படுவார் . இது பிரச்னையை எளிமை படுத்துவதை போல் உள்ளது அல்லவா?????
மக்கள் பிரச்னையை பலவீன படுத்திவிட்டு , நாயகன் தங்கை கெடுக்கப்படுகிறாள் , அதனால் அவர் போராடுகிறார் என்று காட்டுவது சிறு பிள்ளைத்தனம் , இது எல்லாம் மணி சார் அவருக்கு புரியாதா ????? ஆனால் கைகோர்த்திருப்பது முதலாளிகளுடன் , எப்படி அவரால் இதை செய்ய முடியும் . சரி வடகிழக்கில் தண்டகாரண்யாவில் மலையை “வேதாந்தா” என்னும் கம்பெனி வாங்க நினைக்கிறது , அது கனிம வளம் உள்ள பகுதி , உண்மையில் மக்களை விரட்டினால் தான் அந்த இடத்தை கைப்பற்ற முடியும் என்பதே உண்மை , அதனால் மக்களை விரட்டும் பணி, “OPERATION GREEN ஹன்ட்” என்னும் பெயரில் , நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் பொதுமக்களை வேட்டையாடுகின்றன. சரி அந்த மக்கள் ஒடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் ஏன் தீவிரவாதியாய் சித்தரிக்க படவேண்டும் , அவர்கள் மண்ணிற்காக போராடுகிறார்கள் .
இதில் என்ன தவறு , இதை எல்லாம் துளிக்கூட காத்த மணி சார் , இதை பூசி மொழுகுகிறார் , அவன் மக்கள் தலைவன் என்று எளிமையாய் மறைத்து விட்டார் .இது தான் மணி டச் முக்கியமான விடயங்களை மணி தொடுவதில்லை .
ஐரோம் சர்மிளா என்ற கவிஞர் பத்து வருடமாய் உண்ணா விரதம் இருக்கிறார் , அவரை பற்றி ஏற்க்கனவே பதிவு போட்டு இருக்கிறேன் . சாமானியன் எனக்கே அந்த விடயம் தெரியும் பொழுது மணி சார் அவருக்கு தெரியாதா .ஒரு தலைவனது தங்கை மட்டுமே கெடுக்கபடுவாளா????? ஈழத்தில் எத்தனை சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர் , ஒரு சமூக பிரச்னையை தனிமனித பிரச்சனையாக சித்தரித்து , அவர்களுக்கு ஏற்படும் கோபதாபத்தை காட்டியதில் முக்கிய
பிரச்சனைகளை மறைக்கப்பார்க்கிறார் மணி .
சில ரசிகர்களுக்கு ஒரு பொது புத்தி உண்டு பேரரசு படம் பார்த்தால் அவனை எள்ளி நகையாடுவர் , நாங்க பார்த்தா மணிரத்னம் படம் மட்டுமே பார்ப்பேன் என்கிறார்கள் . ஒருவர் புலிகேசி பதிவில் பதில் போடுகிறார் படத்தின் தொழில் நுட்ப விடயங்களை நீங்கள் பாராட்டி இருக்கலாம் . ஒரு மயானம் அழகாய் இருக்கிறது என்பதற்காக நாம் எல்லாம் பிணமாய்
படுத்துக்கொள்வோமா …….. ஒரு அழகான ஒரு அழகான கிண்ணத்தில் விடம் இருந்தால் குடிப்பீர்களா ???? என்ன …….நான் ஒரு சாமனியன் என்னிடம் வந்து மணி சார்
படம் நன்றாய் இருக்கிறது என்றால் , நான் திருப்பதி , திருப்பாச்சி பார்த்து இருக்கிறீர்களா என்று கேட்டு கலாய்ப்பது உண்டு . குளிர் சாதன அறையில் உட்க்கார்ந்து கொண்டு ஈழத்தை பற்றியும் , தண்டகாரண்யா பற்றியும் படம் எடுக்க முடியாது . அப்படி உண்மையிலேயே அப்படி அதை பற்றி கலை மக்களுக்காய் இருக்கவேண்டும் என்றால் அந்த மக்களிடம் கலக்க வேண்டும் .
அந்த மக்களிடம் பேசவேண்டும் . அவர்கள் சொல்வதில் தான் உண்மை நிலைமை தெரியும் பின்பு படம் பிடிக்கவேண்டும் நேர்மையாய் . மணி சார் ஏன் இந்த கதைக்களம் எடுத்தார் , ஏன் இதே ராமாயண புனைவை ஒரு SOFTWARE கம்பெனி வைத்துக்கொண்டு எடுக்கலாமே , ஏன் என்றால் இப்பொழுது அவர் வணிகம் அதிகம் , அதனால் இந்தி மக்களின் ஒட்டு மொத்த மக்களுக்கும் புரியும் படி ஒரு கதைக்களம் வேண்டும் , ஏன் என்றால் அப்பொழுது தான் கல்லா கட்ட முடியும் . தமிழிற்கு விக்ரம் , ஹிந்தி பச்சன் குடும்பம் , மலையாளம் பிரிதிவிராஜ்
என்று கணக்கு போடுக்கிறார் மணி , ஏன் இந்த புனைவை வேறு ஒரு கதைகளத்தில் சொல்லலாமே . இடம் திருநெல்வேலி என்கிறார் , திருநெல்வேலி இப்படி தான் இருக்கிறாதா என்ன ????? அவருக்கு தேவை இரண்டு மக்களுக்கும் புரியும் கதைக்களம் , அதனால் தான்
அவர் தேசிய பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு படம் செய்கிறார் .
அருந்ததி ராய் எழுத்தாளர் , அவர் எழுத்துக்கள் எங்கு இருந்து வருகிறது ,அருந்ததி ராய் காட்டிற்குள் செல்கிறார் , மக்களை சந்திக்கிறார் எழுதுகிறார் , அதுவே உண்மையான கலைக்கு அழகு .மக்கள் பிரச்னையை தனிமனித கோபதாபம் என்று சிறுமை படுத்தி அப்பகுதி மக்களை கேவலப்படுத்திருக்கிறார் மணி சார் .
என்னை ஐஸ்வர்யா ராய் வசீகரிக்க வில்லை , அருந்ததி ராய் மட்டுமே வசீகரம் செய்கிறார் .
ஏன் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தின் ஆரம்பத்தில் வெடி சத்தங்களுக்கு நடுவே பொருத்தமே இல்லாமல் “வெள்ளை பூக்கள்” எனும் மெலொடி பாட்டு வருகிறது? ஏனென்றால் அப்படி தான் ‘அப்பொகெலிபிஸ் நவ்’ படத்தின் முதல் காட்சியில் வருகிறது. ஏன் ராவணா படத்தில் மலைவாழ் மக்கள் அனைவரும் சாயம் பூசிக்கொள்கிறார்கள்? ஏனென்றால் அப்படி தான் ‘அப்பொகேலிப்டோ’ படத்தில் பழங்குடியினர் சாயம் பூசிக்கொள்கிறார்கள்..
ரிலைன்ஸ், சோனி போன்ற முதாலாளிகள் பணம் பார்க்க வேண்டும் என எடுக்கப்படும் படம் எப்படி இருக்கும்? மேட்டுகுடிகளின் மனநிலையை சந்தோஷபடுத்தி பணம் பார்க்க நினைக்கும் திரைக்கதை எப்படி இருக்கும்? உழைக்கும் மக்களை ஏமாற்றி, கடவுள் எனும் மாயாஜால வித்தைகள், ‘அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்’ என காதல் கலந்து, தென் நாட்டு மக்களை வானரங்களாக்கிய ராமாயணம் போல் தான் இருக்கும்.
இதன் கதை, திரைக்கதை போன்றவற்றை அலசி ஆராய்தாயிற்று. மேக்கிங் சூப்பர் தான், மேட்டுகுடிகளின் மலத்தை தங்கதட்டில் வைத்து கொடுத்திருக்கிறார் மணிரத்த்னம்.
ரோஜா படத்தில் ‘ஆசாதி” என் கத்திவிட்டு இன்னொரு காட்சியில் இந்திய கொடியை வைத்து மாய்மல வித்தை காட்டினாரே. பம்பாய் படத்தில் ராம் சேவகர்களை கண்டிக்காமல் பாபர் மசுதி இடிப்பை மழுங்கடித்து இந்துவையும் முஸ்லிமையும் கைகோர்க்க சொன்னாரே மணிரத்தனம், போகிறபோக்கில் பழங்குடிகளின் பிரச்சனை எப்படி சொல்லிருப்பார்?
வீரையான் எனும் கதாப்பாத்திரம் வழியாக மிக திட்டவட்டமாக காட்டிவிட்டார், பழங்குடிமக்கள் காட்டுமிராண்டிகள், அறிவில்லாதவர்கள் , முரடர்கள் என்ன ஒரு படி மேலே போய் பெண் பித்தர்கள் அடுத்தவன் மனைவிக்கு அளைபவன், என்பது தான் மிச்சம்.
மணிரத்தனம் பார்த்த சாரதியாய் 5 குதிரை பூட்டிய தேரில் உட்கார்ந்துகொண்டு 5 குதிரைகளையும் அதன் இஷ்ட்டத்திற்கு ஓட வைத்ததின் லட்சனம் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி வண்டி, எந்த பக்கம் போகிறெந்தென்றே தெரியவில்லை.
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால், முற்போக்கு வாதியாக சமுக கலைஞனாக காட்ட்டிகொள்ள பழங்குடி மக்களின் சமுக பிரச்ச்னை, அம்பானிக்கு சலாம் போட அவர்களை காடுமிடராண்டியாகுவது என நேர்மையான “நடுநிலைமையை ” கடைபிடித்திர்க்கிறார் தோழர் நந்தனின் அப்பா..
படத்தில் வரும் நாயகி எந்த கட்டதிலும் மார்பை காட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். மழை, கத்தல், சாயம், அமெச்சுர்த்னம் என சகல விதங்களிலும் எரிச்சல். இசை தேறுகிறது.
ஒட்டுமொத்த்மாக பழங்குடிகளின் பிரச்சனை மழுங்கடிக்கப்படுவதலோ அல்லது மேட்டுகுடி நியாம கற்பிக்கபடுவதாலோ, பழங்குடிகள் காட்டுமிரான்டிகளாக காட்டுபடுவதோலோ, ரஞ்சிதா வரும்போதெல்லாம் சரசரி ரசிகன் சத்தம் போட்டு தன் காம வறட்சியை போக்கிக்கொள்வதை போல மணிரத்னம் ராவணன் படம் எடுத்திருக்கிறார்..
படம் முடிந்து வெளியே வந்த போது காதில் விழுந்த சில கமெண்டுகள்:
” இந்தப் படம் எடுக்கறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேணாம்.”
” என்னாங்கடா இது லிங்குசாமி படத்துல வர்ற மாதிரி இருக்கு அவ்வளோ உசரத்தில் இருந்து குதிச்சா ஒரு சின்னக் காயம் கூடவா படாது?ஸ்விம்மிங் பூல்ல குளிச்சுட்டு வர்ற மாதிரி ஜம்முனு வர்றாய்ங்க! ”
“நல்ல வேளை கார்த்திக்குக்கு வால் ஒன்னு மாட்டி விடலை”
“வீட்ல உக்காந்து ஃபுட்பால் பார்த்திருக்கலாம்”
” இந்த படம் பாக்க வந்ததுல நடந்த நல்ல விஷயம் செம்மொழி பாட்டை பெரிய ஸ்கிரீன்ல பார்த்தது தான்!”
ராவணன் ஸ்டில்களில் சில, ரஷோமோன் படத்தின் ஸ்டில்களைப்போல இருந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.ராமாயணத்தைக் கொஞ்சம் புதுசாக சொல்லியிருப்பார்களோ என்று. ஆனால் ஓபனிங் சீனில் வீரா ராகினியை(ஐஸ்வர்யா பச்சன்)கடத்தும் போது அவர் பாரதியார் பாடல் பாடுவதும் அதற்கு வீரா மறுபடியும் பாரதியார் பாட்டு பாடுவதும்…சினிமாத்தனத்தின் உச்சம்.ரோஜா படத்திலயே நல்லாக் கடத்தினீங்களேய்யா..!
ராவணனின் கதையை சொல்வது என்று முடிவெடுத்த பின் அந்த ஒரு கேரக்டரையாவது கொஞ்சம் குழப்பமில்லாமல் சொல்லியிருக்க வேணாமா?விக்ரம் அடிக்கடி டுர்ர்ர்..டன்டணக்க டண்டனக்க…என்கிறார்,பக் பக் பக் என்கிறார்.கந்தசாமி ஷூட்டிங்கிலிருந்து கடத்திக் கொண்டுவந்து நடிக்க வைத்திருப்பார்கள் போல.படத்துக்கு படம் இப்படியே செய்துகொண்டிருந்தால் மனிதர் கொஞ்ச நாளில் வாத்தாகவோ சேவலாகவோ மாறிவிடும் அபாயம் உள்ளது.டைட்டிலை நியாயப் படுத்துகிற மாதிரி அடிக்கடி “பத்து தலை…பத்து தலை”என்று வசனங்கள் வேறு.விக்ரம் இன்னும் தமிழ் ஜனங்கள் இது போன்ற மேனரிசங்களை ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பாரானால், ரொம்ப கஷ்டம் பாஸ். ஆனால் சில காட்சிகளில் எக்ஸ்பிரஷன்கள் அசத்தல்.
பிருத்விராஜ் அழகாக இருக்கிறார்.நன்றாக உறுமுகிறார்,ஆவேசமாக ஆக்ரோஷம் காட்டுகிறார்.இப்படியே நடித்தாரானால் இவருக்கும் நல்லது நமக்கும் நல்லது.சில காட்சிகளில் வீரா வீரா என்று கத்துவதை மக்கள் ரசித்தார்களானால் அடுத்தபடியாக சிங்கம் மாதிரி படங்களில் நடித்து நம்மை துன்புறுத்தக் கூடும்.
ராகினியாக முன்னாள் உலக அழகி.யாராவது இவருக்கு முன்னாள் உலக அழகி என்று ஞாபகப்படுத்தினால் நல்லது.சேட்டு வீட்டு ஆண்ட்டி மாதிரி இருக்கிறார்.கள்வரே கள்வரே என்று ராவண சேனைகளின் நடுவே பாடுவாரென்று எதிர்பார்த்துப் போனால் ஏமாந்து போவீர்கள்.அந்த அற்புதமான மெலடிக்கு சம்மந்தமில்லாமல் பரத நாட்டியம் ஆடி வதைக்கிறார்.வடிவேலுவெல்லாம் என்ன ஜுஜுபி..ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவும் விக்ரமிடம் சீரியஸாக பக் பக் பக் என்று சொல்லும்போது வயிற்றைப் புண்ணாக்குகிறது.கிளைமாக்ஸிலும் உடைந்த சிலையின் முன் வேண்டிக்கொள்ளும் போதும் பழைய ஐஸ்.
ராவணனின் அண்ணனாக பிரபு (கும்பகர்ணன்…???!தம்பியாக காட்ட முடியாதில்லையா!)
சூர்ப்பனையாக ப்ரியாமணி.அதை விட அதி முக்கியமான கேரக்டரில் ரஞ்சிதா. இந்தப் படத்தில் இவருக்கு என்ன கேரக்டர் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு சிறப்புப்பரிசு கொடுக்கலாம். ஒரு டயலாக் கூட பேசாத இந்த கேரக்டருக்குத்தான் என்ன மாஸ்? சான்ஸே இல்லை…தமிழன் தமிழன் தான்!
முக்கியமாக குறிப்பிடவேண்டியது வசனங்கள். சுஹாசினி ஜெயா டி.வி.யில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தராசில் ஒவ்வொரு படத்தையும் எடை பார்த்துக் கை வலிக்க எழுதியிருப்பார் போல.திடீரென்று திருநெல்வேலி பாஷை பேசுகிறார்கள்.திடீரென்று சாதாரணமாக பேசுகிறார்கள்.தலை சுத்துகிறது நமக்கு.மேடம் விமர்சனம் பண்ணுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
மணிரத்னம் சார்! பாடல் காட்சிகளை படம் பிடித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்காமல் பிண்ணனியில் ஓட விட்டதுக்கும் இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்டை வைத்து படம் எடுத்ததற்கும் பாராட்டுக்கள்.உங்கள் படத்தில் எல்லோருக்கும் பிடித்தது ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகளும் திரைக்கதையுமே. இந்தப் படத்தில் திரைக்கதை, விக்ரமும் பிருத்விராஜும் ஒரு உடைந்த பாலத்தில் தொங்குவார்களே…அதைவிட மோசமாக தொங்கிக்கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு டெம்ப்ளேட் கதையிலேயே இவ்வளவு சொதப்பலா என்று தான் ஜீரணிக்க முடியவில்லை.
படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு – லொகேஷனும்,காமிராவும் பிண்ணனி இசையும்.சந்தோஷ் சிவன் மிரட்டியிருக்கிறார்.தமிழ் சினிமாவில் இதவரைக்கும் படம் நெடுக சலிக்காமல் அழகாக காட்டைக் காண்பித்ததாக நினைவில்லை.
கடைசியாக கிளைமேக்ஸில் சி.டி யில் வராத பாடல் ஒன்று திரையில் பிண்ணனியில் வருகிறது.அற்புதம்!
ராவணன் பார்த்தேன் – பார்த்தேன் என்பதை தவிர்த்து எந்த பெரிய அனுபவப் பகிர்தலும் தரவில்லை.
ராமாயணம் , மகாபாரதம் இந்த இரு இந்திய காவியங்களும் இன்று வரை நம் அறம், கலாச்சாரம், வாழ்வியல் என எல்லாவற்றிலும் பங்கு கொண்டிருப்பவை.
இவை இரண்டுமே ஒட்டு மொத்த பாரதத்தின் மனசாட்சியின் ஒரு கூறு. அதனாலயே இவை மேலும் மேலும் அகழப்படுகின்றன,விவாதம், விமர்சனம், தத்துவ தரிசனம் என இவ்விரு மாபெரும் கதைக்களங்கள் முடிவில்லாமல் இந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அதில் ஒரு மிக வலுவற்ற முயற்சி மணிரத்னத்தின் ராவணன். ராவணனின் நிலையை பற்றி இந்த நவீன யுகத்தில் அவனது நியாயங்களை முன்வைக்கிறது. மனிதர்கள் கருப்பு வெள்ளை இல்லை. அவர்கள் ஒற்றை தலைக்குள் பத்து தலைகள் இருக்கும் என சொல்கிறது.
இதில் நவீன அரசியலும் உள் நுழைந்து நாம் நம்பிக் கொண்டு இருப்பவை எல்லாம் நமக்கு சொல்லித்தரப்படிருப்பவை என எச்சரிக்க முயல்கிறது. நமக்கு ஹீரோக்களாகத் தெரியும் ராணுவம், போலிஸ் மாவோயிஸ்டுகளுக்கு, வீரப்பனுக்கு,பூலான் தேவிக்கு, சில சமூகப் போராளிகளுக்கு, சில ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வில்லன்களாக தெரிகிறார்கள் ஏன்? அவர்கள் பார்வை கோளாறா? நமதா? அல்லது நாம் ஒரு பகுதி உண்மைக்கு மட்டுமே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமா? ராமாயணம் மூலம் முக்கிய சமூக கேள்விகளை எழுப்ப முயல்கிறது.
ஆனால் சொல்ல வந்த தத்துவத்தில் முழுமை அடையாமல், சொல்லும் மனிதர்களை தட்டையான கருப்பு வெள்ளை சாயத்தோடு சொல்லி, எந்த வகையிலும் மூலக் காவியத்தை மீள் வாசிக்கும் திறன் இல்லாமல், சமூக கேள்விகளை அறச்சீற்றம் அற்ற சவசவத்தனதுடன், காதலின் தீவிரம் கைகூடாமல் என எந்த வகையிலும் தன்னை உருவாக்கி கொள்ள திராணியற்ற ஒரு திரைப்படமாக உள்ளது ’ராவணன்’.
மற்றபடி காட்டின் ஆன்மாவை காமிரா மட்டுமே உள்வாங்கி கதை தவறவிடுவதால் பயனற்றுப் போகும் அழகியல் குறித்த வருத்தம் , மிக மோசமான வசனங்கள், கேட்டுப் பழகிய இசை– என திரையரங்கு விட்டு வெளி வந்த அடுத்த வினாடி ‘ராத்திரிக்கு என்ன டிஃபன், ஷாப்பிங் போக ஆட்டோ பிடிக்கனும் ’ என சட்டென மறைந்து போனது ஒரு பெருங்காவியத்தின் மீள் பதிவு.
நேற்று ராவணன் படம் பார்த்தோம், சொல்ல வார்த்தைகளே இல்லாத படைப்பு. யாரையும் விட்டுப் புகழ வாய்ப்பில்லை. மொத்தத்தில் மணிரத்தினம் அவர்களுக்கே அத்தனை பாராட்டுக்களும் என திரும்பினால்., இசையிலிருந்து; ஒளிப்பதிவிலிருந்து; இடம் தேர்விலிருந்து; அலங்காரத்திலிருந்து; நடிப்பிலிருந்து; வசனத்திலிருந்து … அப்பப்பா… காலம் மாறிப் போச்சின்னு சொல்லி குத்துப் பாட்டு போட்டால் தான் படம் ஓடும் என்பவர்களுக்கு புத்தியிலுரைக்கும் படம்.
பெருசா மாடன் படம் எடுத்துவிட்டேனென பீத்திக் கொள்பவர்கள் மணிரத்தினத்திடமிருந்து பாடம் பயின்றுக் கொள்ளலாம். வெளியில் கேட்டிடாத புன்னகையாக ஒருபுறம் புத்தியை பிரண்டாமல் உள்நுழைகிறது படம். மறுபுறம் நம் இன்ப தமிழில் கலப்படமில்லா பிரம்மாண்ட படைப்பாக புருவம் உயர்த்த வைக்கிறது. ஒடுக்கப் பட்ட மக்களின் கர்ஜனையை நடிப்பில் பிரதிபலித்து அம்மக்களுக்காய் இறக்கம் கொள்ள செய்கிறார் விக்ரம்.
அழகான பெண்ணை பார்க்கையில் மதி மயங்கும் மனிதனின் கட்டுப் பட்டிடாத இயல்பு குணமும், அதையும் மீறி தனக்குரியவள் அவளில்லையென ஒதுங்கி நின்று காயப் படுத்தாமல் கொச்சையுறாமல் அன்பினை மட்டுமே தனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் யதார்த்தத்தையும், அதை உணர்ந்து; மறுக்காமலும் ஏற்காமலும் தன்னிலை மாற்றிக் கொண்டிடாமலும் ’அவனை புரிந்து; அனுதாபத்தை அன்பாக மனதில் நிறைத்துக் கொள்ளும், ’ஒரு பெண்ணின் உணர்வும் விக்ரம் ஐஸ்வர்யா ராயினாலும், ஒளிப்பதிவாலும், இசையாலும், இயக்கிய திறனாலும் மிக அழகாக உணர்த்தப் பட்டுள்ளது படத்தில்.
ஒரு பக்க நியாயமாக மண்ணில் புதைந்துள்ள வரலாற்றை; யாரையும் உறுத்தாமல் சொல்கிறது படம். காட்டில் வாழ்ந்த வீரப்பனின் கோபத்திற்கு நியாயத்தையும், உலகிற்கு தெரியாமல் போன அவர் செய்த நல்லவைகளையும் படம் நினைவு படுத்துகிறது. யாரோ ஒரு (காவலாளியை) லட்சிய இளைஞனை அழைத்து அவன் ஒரு குற்றவாளி அவனை பிடிப்பதே நம் தேசத்திற்கு நல்லதென தன் பக்க தவறுகளை மறைத்து, ‘ஒரு நல்லவனை வைத்தே நல்லவனையும் அழிக்கும் அரசியலை நினைவுறுத்துகிறது படம்.
பாடலை பற்றி நிறைய சொல்லலாம். வைரமுத்துவை இது தான் வைரமுத்து எனும் பாடல் வரிகள். ஆட்டமும் பாட்டமும் கும்மாளமுமாக வாழ்ந்தாலும் இடையே நீதிக்கும் நியாயத்திற்கும் அன்பிற்கும் கட்டுப் பட்டு எதற்குமே குறையாதவன் தமிழன் எனும் பாங்கை ஆங்காங்கே காட்சிகளிலும் நிறைய பாடலிலும் உணர வைக்கிறார்கள் படக் குழுவினர். பாடலும் இசையும் வரியும் படத்தின் முழு பலம். அவசியத்திற்குரிய இடத்தின் பாடல்கள் அல்லது பாடல்களுக்கேற்ற சலிப்பில்லாத கதையமைப்பு ரசனை குறையாமல் படம் பார்க்க வைக்கிறதெனலாம். உசுரே போகுதே.. உசுரே போகுதே.. பாடல் கேட்கையில் உயிர் மென்று தின்கிறது.
சொல்லவும் பாராட்டவும் வாழ்த்தவும் நிறைய உள்ளது ராவணா படத்தில். குறிப்பாக இசையும், பாடல் வரிகளும், ஒளிப் பதிவும், பாத்திர தேர்வும் சிறப்பு. ஒரு ஆங்கிலக் கலப்பில்லாத ஆங்கிலப் பட தரத்தில் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வு. அந்த ’யாத்தே…’ அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டது. படம் பார்த்து விட்டு வெளியேறுகையில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் அளவிற்கு தமிழன் எத்தனை சுத்தமான உயர்வான மனதை கொண்டுள்ளானென, தமிழரை நினைத்து பெருமை கொள்ள வைக்கிறது படம்.
கள்வரே.. கள்வரே.. பாடலில் ஒரு தம்பதியரின் முந்தைய வாழ்க்கையை அழகிய பாடலும் நடனமுமாக காட்டி முடிக்கும் உத்திக்கு இயக்குனரை பாராட்டுவதா, ஐஸ்வர்யா ராயை பாராட்டுவதா அல்லது திரைக்கு பின்னால் இயங்கிய இப்பாடலுக்கான நடன ஆசிரியை சொபனாவை பாராட்டுவதா என வியக்க வைக்கிறது.
இசைப்புயல் படத்திற்கென உழைத்திருக்கிறார். அவரின் மெனக்கெடல் அவர் மனதை போலவே படத்திற்கு வெற்றியை தந்திருக்கிறது. இசை இசை இமாலய அளவு உயர்ந்துள்ள ரசனை மிக்க இசையின் நகர்வுகளே படமெங்கும் வியாபித்து நம் இதயம் பிடித்து கசக்கிப் பிழிகிறது. இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொள்கிறது.
ஒளிப்பதிவு பெட்டி திமிறி சுழன்று காட்சிகளை அள்ளி கண்களில் புகுத்தாமல், ரசனையில் மனம் உள்வாங்கிக் கொள்ளும் விதமும், அதை இசையில் கோர்த்தெடுத்த விதமும், அதற்கு முகபாவம் காட்டும் விக்ரமும் ஐஸ்வர்யா ராயும்.. பிரபு கார்த்திக் பிரிதிவி இன்னும் பிற அத்தனை பேரும் அப்பப்பா… இது தான் மணிரத்தினமென சொல்லாமல் சொல்கிறது படம்.
ஒவ்வொரு பாத்திரமும் படத்தை இரண்டு மூன்று நாளைக்காவது நினைக்க வைக்கும் என்பது உறுதி. மொத்தத்தில்… வைரமுத்துவின் தண்ணீர்தேசம் நாவல் படித்து முடித்து சில நாட்கள் கடலில் கிடந்த கதையாய், ராவணின் இது போன்ற ஒழுக்கத்தை, ஒரு பக்க நியாயத்தை எண்ணி; அத்தனை பேரின் உழைப்பிற்குள்ளும் நனைகிறது மனசு!!
வெளியில் தெரியாமல் திரைக்குப் பின் உழைத்த இதர பல படைப்பாளிகளுக்கு, இத்திரைப்படக் குழுவிற்கு பாராட்டவும் வாழ்த்தவும்.. உலகளாவி நிறைய பேர் இருப்பார்கள்.. நன்றி சொல்லவே நான் கடமை பட்டேன்!
கதை, திரைகதை – வால்மீகி மற்றும் கம்பன்
வசனம் -சுகாசினி
இசை -ரகுமான்
ஒளிப்பதிவு -சந்தோஸ் சிவன் , மணிகண்டன்.
நடிப்பு
இராவணன்- விக்ரம் ,
ராமன்-பிரிதிவிராஜ்,
சீதை-ஐஸ்வர்யா ராய்,
அனுமன்- கார்த்திக் ,
கும்பகர்ணன் என்று வைத்துக்கொண்டால் – பிரபு.
சூர்பனகை-ப்ரியாமணி..
இயக்கம்– மணி ரத்னம்
வழக்கமாய் மணி ரத்னம் தனது படங்களுக்கு கதைக்கு மெனக்கெட மாட்டார்..
திரைக்கதைக்கும் அதை காட்சிப்படுத்தளுக்குமே அதிகம் மெனக்கெட்டிருப்பார்.. ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த படத்தில் திரைக்கதையை கம்பனிடம் ஒப்படைத்துவிட்டு காட்சிப்படுதுதலில் மட்டும் கவனத்தை செலுத்தி அதை தன ஒளிபப்திவாளர்களின் திறமையுடன் செவ்வனே செய்தும் காட்டியுள்ளார்…
ஒவ்வொரு கட்சியும் பார்ப்பதற்கு ஐஸ்வர்யவைவிட அழகாய் இருக்கு…
கதையும் திரைக்கதையும் நமக்கு ஏற்கனவே பரிச்சயப்பட்டதல் .. நடித்தவர்களையும் இன்ன பிற விஷங்களையும் அலசுவோம் …
விக்ரம்
மனுஷன் எங்கட நடிப்பு சோறு கிடைக்கும் என்றே பசியோடு அலைவார் போலும்.. க்ளைமாக்ஸ் சண்டையில் , ஐஸ்வர்யாவிடம் தன கூடவே இருக்க போட் ல சுத்திக்கிட்டே பேசும் இடம், இண்டர்வல் க்கு முன்னால் தன் போட்டோவை பார்த்து சிரிப்பது , ட்டன் ட்டன்ன்ன் , பக் பக் என்று கத்தும் போதும்,, மிரட்டும் போதும், கடைசியில் ஐஸ்வர்யா திரும்பி வரும் போது காட்டும் முகபாவம் எல்லாமே முதல் தரமான நட்டிப்புதான், என்றாலும்
இந்த தாகம் கொண்டு அலையும் நடிகனை மணிரத்தனம் சரியாக வேலை வாங்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது..
பிதாமகனிலும் , பீமாவிலும் இருந்த அந்த நெருப்பு இந்த நடிப்பில் சற்றே குறைவாதை எனக்குப்படுகிறது ..
அபிஷேக் அநேகமாய் விக்ரமை விட நல்லா நடிசிருப்பாருனு நினைக்கறேன்..
நண்பன் முத்துப்பாண்டி ஹிந்தியில் பார்த்துவிட்டு சொல்லும் வரை காத்திருப்போம் ..
ஐஸ்வர்யாராய்
படத்தில் அம்மணியின் ஆளுமைதான் அதிகம் .. காடு மலை எல்லாம் ஏறி இறங்கி கஷ்டப்பட்டு இருக்கார்..விக்ரமிடம் தான் இங்கேயே இருந்தால் அவரை விடு விடுகிறாயா என கேட்பது , ப்ரியாமணியின் பிளாஷ் பேக் கேட்டுவிட்டு சாமியிடம் பேசுவது .. அழுதாலும் சிரிச்சாலும் பாதி மார்பு தெரியும் படியே இருப்பது என தனக்கு கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்….
விக்ரமுக்கும் சரி ப்ரிதிவிரஜ்க்கும் சரி இவருடன் நடிப்பதில் அது என்னோமோ சொல்லுவாங்களே வேதியிலோ இயற்பியலோ சற்றே குறைவுதான்.
இதிலும் அபிஷேக் முந்துவார் என்பது என் கணிப்பு ..
ப்ரிதிவி
கதையின் நாயகன் , கதாநாயகன் என்று இரு விஷயம் இருந்தால்.. ப்ரிதிவிராஜ் இந்தப்படத்தின் கதாநாயகன்.. அதாவது நல்லவனாக சித்தரிக்கப்பட்ட ராமன் கதாபத்திரம்.. இவர் எப்போதும் போலவே சிறப்பாக நடித்திருந்தாலும் கை அறுபட்டு தொங்கும் ஒருவனை அறுப்பட்ட கையையே நசுக்கி கோபப்படும் பொழுது நல்லா நடிச்சிருக்கார் .. இதை ஹிந்தியில் விக்ரம் நடிக்கிறாராம் அநேகமாய் விக்ரம் முந்திவிடுவார்.
கார்த்திக் & பிரபு
சொல்லிகொள்ளும் படி ஒன்றும் செய்யவில்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.. மரத்துக்கு மரம் தாவுவது , ஜீப்பில் மேல படுத்துக்கொண்டு பயணிப்பது, ‘கண்டேன் ராகினியை” என்பதால் கார்த்திக் அனுமன்.. என் நேரமும் சாப்பாடு என்றிருப்பதால் பிரபு கும்பகர்ணன் ( அவருதாங்க என் நேரமும் தூங்குவரம்ல…)
ப்ரியாமணி
பரிதி வீரனில் அமீர் காட்சிப்படுத்தி நம்மை கதற வைத்ததை , இந்த படத்தில் ப்ரியாமணி நடித்தே காட்சிப்படுத்துகிறார்… ஆனாலும் தியேட்டரில் பருத்தி வீரனின் வசனத்தை கத்தினார்கள் …. ஒரு வேலை அந்த படத்தை நினைத்தே நடிதிருப்பரோ என்னோவோ ..
இசை -
பாடல்களை விட ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது..
அதும் கடைசியில் விக்ரமை சுடும் போது வேறு இசை இல்லாமல் வெறும் குண்டு துளைக்கும் சப்தம் மட்டும் கொடுத்ததில் அந்தக்காட்சியின் இறுக்கம் அதிகரித்தது..
ஒளிப்பதிவு..
இவர்கள் இல்லையெனில் இந்த படம், பப்படம் ஆகியிருக்கும் ..
வசனம்
சுகாசினி அவர்களே.. படத்திற்கு வசனம் அதிக தேவை இல்லைதான் … தேவை படும் போதாவது நல்லா இருக்க வேணாமா… சுஜாதா சார் வசனம் எழுதும்பொழுதே மணிரத்னம் படம் என்றால் பக்கத்துக்கு சீட்ல இருக்க ஆளுகிட்ட கேட்டுத்தான் நானெல்லாம் புரிஞ்சுக்குவேன்..
உங்கள தராசின் ஒரு பக்கத்தில் உக்கார வச்சாலும் அடுத்த பக்கம் உக்கார வைக்க தமிழ் திரை உலகில் ஆள் இல்லை என்பதால் …. உங்களை வசனம் எப்படி எழுதுவது என கற்றுக்கொள்ள அண்ணன் பேரரசுவிடம் செல்லுங்கள் எனப்பனிக்கிறேன்…
இயக்கம்
மணிரத்தினத்தின் அணைத்து படைப்புகளும் எனக்குப்பிடிக்கும்.. இந்த படமும் நல்லாத்தான் இருக்கு….
மணிரத்னம் அவர்களே இந்தப்படத்தில் நீங்கள் ஒரு படைப்பாளியாக என்ன செய்து உள்ளீர்கள் என்பதுதான் என் ஆதங்கக் கேள்வி..! உங்களிடம் கேட்க என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளது அதை ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன் .
படம் பார்த்து விட்டு வெளியில் வந்த உடன் அடுத்த ஷோ விற்கு நிற்கும் ரசிகன் என்னிடம் கேட்டான்…
படம் எப்படி இருக்கு என்று …..
நான் ‘ பார்க்கலாம்’ என்றேன்..
நான் ‘சூப்பர இருக்குனு ‘ சொல்லியிருக்க வேண்டாமா ..!
நீதி—தியேட்டருக்குப் போய் பார்க்க வேண்டிய படம் தான்….
utter waste movie.first of all story narration s weak,screenplay worst,background score not up to the mark and mainly the film doesnt have the taste of tamil films bcoz it was mainly concentrated on hindi the north indian tribals.vikram k.in hindi also it s very worst bcoz of abhi,he dunno to act anti hero subject.after watching the movie one can feel tat is it really a mani film?
A BEST MOVIE NAME RAVANAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAN. IT WAS A BEST MOVIE. I HAVE SEEN MORE THAN 2 TIMES WITH MY FAMILY AND FRIENDS AND BOY FRIEND. KEEP IT UP ALWAYS.
A CLASSIC LOVE STORY FROM MANI SIR… WHICH MEANS…
LOVE IS A BATTLE HERE NO ONE WINS BUT EVERY ONE MUST FIGHT UNTIL THERE LAST BREATH…
SREE…
The film is very good in the department of Choreography, music and story inspiration . but fails to make much impact because of the Dialogues of the film that are like Twitter language ( Too short to bring feelings in the dialogue delivery. I watched both the version of the movie i.e. in Tamil and Hindi.
In Tamil, the line ‘Danganakka Danganakka’ used by Vikram (Veera) while in a joshile mood is very much appealing because of Vikram’s smooth delivery of it.
But in Hindi, when Abhishek bacchan (Veera) do the same (Pap Pap Papap Pum), it actually irritates the audience. Aishwarya is good in both the versions. The characters of Govinda and Ravi Kishen in Hindi are plus point to the movie.
If the movie goes for nomination for best actor award in Hindi and Tamil, I am sure Vikram will get the award because of effortless great acting.
The minus point is that the movie is too crispy and has no follow up shots. after the main scene. One get a feeling of visiting a art exhibition while watching this film. And there are very few apart from art lovers who loves visiting art exhibition. In Tamil, one can watch the movie twice. But in Hindi, it can watched once.
I expected Lot From This Movie …
But it disappointed me …..
Nice Review. Just returned after FDFS. 1st Half is boring. Worst screen play. Doesn’t look like a work of ace director. Dialogues as usual not clear. 2nd half is ok. Especially fight sequence and finishing shots. U can watch movie for best visuals and acting. Couple of songs are swallowed. Nothing else to say.
Worst movie disaster.especially in tamil.i watched both versions.movie lacks traditional tamil filmy experience.story no doubt nothing new.worst climax.is the movie directed by mani or someone?
படம் முழுக்க மழை. அல்லது நசநசவென்று ஈரம். படம் பார்த்தவர்களுக்கே சளி பிடிக்கும்போது இரண்டு ஆண்டுகளாக நடித்தவர்களுக்கும், கேமிராமேனுக்கும், இயக்குனருக்கும், யூனிட்டுக்கும் காசநோயே வந்திருந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மணிரத்னம் இனி ஆங்கிலப் படங்களை ஹாலிவுட்டுக்கு போய் இயக்கலாம்.
இப்படிப்பட்ட லொகேஷன்களை எங்கேதான் இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்திருந்தார்களோ. படம் முழுக்க கருப்பு. நிறம் ஒரு குறியீடாக இருக்கலாம். பாறைகளில் விழுந்து, புரண்டு, உருண்டு, ஓடி, குதித்து நடித்த விக்ரமுக்கும், ஐஸ்வர்யாராய்பச்சனுக்குமே ஏராளமான சிராய்ப்புகள் என்றால், கேமிராவை முதுகில் தூக்கிக்கொண்டு படம்பிடித்த ஒளிப்பதிவாளர் என்ன கதி ஆகியிருப்பார்?
பாரதிராஜா உச்சத்தில் இருந்தபோது ஒருமுறை பேட்டி கொடுத்தார். “மணிரத்னத்தைப் பார்த்தா பயமாயிருக்கு. மேக்கிங்லே மிரட்டுறாரு”. அப்போது மணிரத்னம் அக்னிநட்சத்திரம், நாயகன் எடுத்திருந்தார். பாரதிராஜா இராவணனை பார்த்தால் என்ன சொல்வாரோ? இந்திய சினிமா படைப்புத்திறனின் உச்சம் இப்படம். தி ஒன் அண்ட் ஒன்லி மணிரத்னம்.
இயக்கமும், கேமிராவும், நடிகர்களும் இராவணனில் பாராட்டுகளை சுலபமாக கூடை கூடையாக அள்ளிச்செல்வார்கள். உயிரோட்டமுள்ள செட்டுகளை அமைத்த கலை இயக்குனர் பாவம். ஓவர் ஒரிஜினாலிட்டியோடு செட் போட்டுவிட்டதால், அவையெல்லாம் செட்டுதானென்று கூட பார்வையாளனால் உணரமுடியாது.
சினிமா என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு பார்வையாளனை மிரட்டவைக்கும் ஊடகம் என்று நம்பும் நண்பர்கள் இத்தோடு இப்பக்கத்தை மூடிவிட்டு ‘மணிரத்னத்துக்கு ஆஸ்கர் கொடுக்கணும்’ என்று சிந்தித்துவிட்டு, வேறு வேலையை பார்க்கச் செல்லலாம். இல்லை இந்திய சினிமா கதை சொல்லும் ஊடகம் என்று சொல்பவர்கள், மேற்கொண்டு விமர்சனத்தை தொடரலாம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ஒரு இயக்குனர் இருந்தார். அவர் பெயர் மணிரத்னம். நடுத்தரக் குடும்ப உணர்வுகளை, சிக்கல்களை அழகாக படம்பிடிப்பார். இளையராஜா என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். அவரும், இவரும் இணைந்து தந்த படங்கள் இன்றுவரை சூப்பர்ஹிட்டு. மிகச்சரியாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென ஓரிரவில் அந்த தமிழ் இயக்குனர், இந்திய தேசிய இயக்குனர் ஆகிவிட்டார். அதற்குப் பின்னர் அவர் ’அலைபாயுதே’ என்று ஒரே ஒரு தமிழ்ப்படம் எடுத்ததாக தெரிகிறது. இந்திக்காரத் தோழர்களே! எங்கள் ஊர் மணிரத்னத்தை மும்பையிலோ, டெல்லியிலோ பார்த்தால் கொஞ்சம் நினைவுப்படுத்துங்கள். சென்னை என்று ஒரு ஊரும் இந்தியாவுக்குள் இருக்கிறது.
இராவணனின் பிரச்சினைகள் என்னென்ன?
முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமானால், நேட்டிவிட்டி. படத்தில் காட்டப்படும் பழங்குடியினர் ஒருவேளை சட்டீஸ்கரிலோ, உத்தரகாண்டிலோ, மேற்குவங்காளத்திலோ இருக்கலாம். திருநெல்வேலி என்று காதுகுத்துவது எந்த ஊர் ஞாயம்? அப்போகலிப்டோ படத்தை தமிழில் டப் செய்து டிவிடியில் பார்ப்பதைப் போன்ற ஃபீலிங்.
அடுத்ததாக கதை. போஸ்டரிலோ, டைட்டிலிலோ ‘கதை’ என்ற பதத்தை பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இல்லாத ஒரு சமாச்சாரத்தை யாராவது எழுதினார்கள் என்று வீணாக பொய் சொல்வானேன் என்று மணிரத்னம் நினைத்திருக்கலாம். பத்து தலைகளும் பல்லிளிக்கிறது.
வசனம் : சுஹாசினி மணிரத்னம். அய்யோ. அய்யோ. உப்புசப்பில்லாத ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ’லே’ போட்டுவிட்டால் திருநெல்வேலி பாஷையாம். இயக்குனர் ஹரிக்கு திருநெல்வேலி டவுனில் சிலை வைக்கலாம். திருடா திருடி ஹீரா மாதிரியே ஐஸ்வர்யா ராய்பச்சன் கத்துகிறார். பச்சன் மட்டுமா கத்துகிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ், ப்ரியாமணி என்று படத்தின் எல்லா பாத்திரங்களுமே கத்தி, கத்திதான் பேசுகிறார்கள். வன்முறையான படத்தில் கத்தியை சரியாக காட்டவில்லை என்பதால், ஆளாளுக்கு கத்தி தொலைக்க வேண்டுமா? கத்தி தொலைத்தாலும் பரவாயில்லை. புரியும்படியாகவாவது கத்தியிருக்கலாம். தமிழ்படத்துக்கு தமிழில் சப்டைட்டில் போடவேண்டிய அவலநிலை இராவணனால் ஏற்பட்டிருக்கிறது.
திரைக்கதை. முதல் காட்சியில் ஐஸ்வர்யா கடத்தப்படுகிறார். போலிஸ் தேடுகிறது. இந்தக் கட்டத்தை தாண்டி ஒரு காட்சிக்கூட முதல்பாதியில் இல்லவே இல்லை. இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் ஆறுதல். நீளமான, மெதுவான க்ளைமேக்ஸ். ஈரானியப் படங்கள் பார்ப்பதை தடைசெய்தால்தான் இந்திய திரைக்கதை ஆசிரியர்கள் உருப்படுவார்கள்.
இசை. வசனத்தைதான் கத்திப்பேசி காதுவலி ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால் இசையும் கூடசேர்ந்து ஒத்து ஊதியிருக்கிறது. பாடகர்கள் எல்லாருமே பல டெஸிபல்கள் சாரீரத்தை கூட்டிதான் கத்தித் தீர்த்திருக்கிறார்கள். அருவிச்சத்தம் அபாரமானதுதான். அதையே டி.டி.எஸ்.ஸில் பன்மடங்கு ஒலிகூட்டி படம் முழுக்க கொடுத்துக் கொண்டேயிருந்தால் ரசிகர்கள் பாவமில்லையா?
அட்டகாசமான மேக்கிங். மிக மோசமான உள்ளடக்கம். மணிரத்னம் இனி படமெடுக்காமலேயே இருக்கலாம். நாங்களும் நாயகன், தளபதி, மவுனராகம், அக்னிநட்சத்திரம் புகழ்பாடியே காலத்தை ஓட்டலாம்.
இராவணன் – பத்து மடங்கு தலைவலி!
1. For Mani Ratnam fans, this one is reason enough, but for you sceptics out there, here are nine more!
2. If you thought Iruvar, Roja and Bombay were Mani Ratnam’s best, Raavan/ Raavanan is going to stun you! Says who? Just about everybody who has worked for the project! “Mani Ratnam has made this film like a penance. Mani Ratnam, Vikram and Aishwarya Rai will definitely get National Awards,” said lyricist Vairamuthu.
3. Mani Ratnam’s Raavanan is also special for its huge star cast: Vikram, Aishwarya Rai, Prithviraj, Karthik, Prabhu, Priyamani, Munna, John Vijay in Tamil and Abhishek Bachchan, Aishwarya Rai, Vikram, Govinda, Ravikissen, Priyamani, Nikhil Dwivedi in Hindi (Raavan).
4. Most parts of the movie were shot in deep interiors of dense forests. Our hero plays a tribal chief!
5. Shyam Kaushal has choreographed the thrilling climax fight. “The shooting for Raavan began in January 2009 in Kolkata, then Ooty, and the climax was shot on Malsej Ghat, where there’s a scene on bridges 2,000 feet above mountains. Mani loves challenges and likes challenging his actors and technicians too. His quest for perfection puts them through a grueling routine,” he said.
6. For the first time, Vikram simultaneously plays two diametrically different roles in two languages of the same film. Vikram play the role of Dev (Ram) in Hindi and Beera (Raavan) in Tamil.
7. Aishwarya plays the role of Ragini, a spunky classical dance teacher. The first look of the movie shows her dancing gracefully in a song.
8. Interestingly, Aishwarya Rai will dub in her own voice for the Tamil version while Vikram is all set to speak Hindi in Raavan.
9. Another highlight is Prabhu and Karthi, co-stars in the blockbuster Mani Ratnam movie Agni Natchathiram, they team up again for the same director after a long gap.
10. A.R. Rahman’s chart-busters, Vairamuthu’s adorable lyrics, Santhosh Sivan’s marvellous camera work and to top of all, ‘The Mani Ratnam factor’. Well Raavanan is definitely one of the most-anticipated films of the year. So get ready for some action this Friday (June 18, 2010).
Mani Ratnam returns to spread magic (or a blunder, as this review progresses) with his ‘Raavanan’ after a splendid show in the form of ‘Guru’. Well lets be positive to some extent now, his team is world class, with Santosh Sivan behind the lens, Srikar Prasad on the editor’s table and A R Rahman handling the music and besides that the stellar star cast! The movie looked like a bouquet of flowers but only the fragrance seemed to fade!
Now moral of the story – Never go by hype! Wondering why we started with the moral so soon, well that is what ‘Raavanan’ is all about! It is a celluloid adaptation of ‘Ramayana’ written by sage Valmiki (and interestingly, no name is displayed for ‘the story’ when the titles are showed.) with modern publicity techniques that will attract the audience. Let’s get to the analysis part and wrap this review up as soon as possible, because the movie is just above 2 hours. And about wrapping it soon, anyone among the audience will tell you to get out of the hall as soon as possible once the movie is over!
Mani Ratnam, the master of creating art on celluloid has possibly over worked to make a disappointment! He is class apart no doubt but his class on screen is visible only in parts. He has delicately portrayed bits and pieces of modern day Ramayana. Well nothing offending here but Ramayana is a story that is imbibed in to our lives from childhood, seems like this movie was shot to associate every scene with the happenings in the holy epic.
Characterisation and Performances
Suhasini Maniratnam pens the dialogues of the movie. Her dialogues are intelligent, credible and most importantly, conveying information. Characters and their strengths are informed through these wonderful dialogues. The homework seems to have been done well. Mani Ratnam has sketched his characters amazingly. Every character has a purpose and every actor behind the character has been rightly cast. . Leave alone the fact he was inspired from Ramayana but here in this, the Raavanan is the hero. The title role is played by Vikram (like you didn’t know). He is Veera alias Veeraiah. A tribal leader who’s fighting for their rights. He is strong, genuine and loyal to his tribe. Even other characteristics of his are mentioned through an enquiry scene where the police talk to the tribals to find out what kind of a person this Veera is. Vikram’s performance is simply electric.
The next in line is Prithvi Raj, who’s the dynamic Superintendent of Police. He is oozing with confidence as an actor and his chemistry with Aishwarya Rai Bachchan is good enough on screen. He makes it quite obvious as being the Rama in this story. So you know the strings attached.
Aishwarya Rai Bachchan’s characterization is simple. She is a loving wife who has been abducted (did we leak the story now?) and her expressions from thereon are simply amazing. She is beautiful on screen (sure is) and has come out with a noticeably extraordinary performance. Only a certain part of the credit goes to her, the rest goes to Mani for getting the best out of her.
The other supporting characters like Karthik( apparently Hanuman) as a forest officer, Prabhu as Vikram’s older brother, Munna as Vikram’s younger brother and others are impressively handled characters. The director has made sure all the characters receive the deserved importance. Mani Ratnam is the master unarguably; he has made sure the actors have their presence felt on screen.
At this predicament of the review, Priya Mani as Vikram’s step sister has done a commendable job. Her character as a bold sister to the strong brother is much appreciable. Her performance will definitely be applauded and as she’s playing the same role in the Hindi version, she has made an excellent start in her Bollywood journey.
Technicalysis
Technically speaking, Editor Srikar Prasad has sharp scissors. The screenplay in the first half, though nothing has been conveyed and is an utter waste of film reels, his editing is near precision. Stunts and bomb work by Peter Heines and Shyam Kaushal deserve appreciation and so is art director Sameer’s work, given the fact that most of the movie was shot in and around water. The tribal village, the police camp, a bridge and a marriage set were simply amazing and he would be one technician to make note of. The fight on the bridge just before the climax is an edge-of-the-seat scene that has been well shot and well directed.
But there is one man who will be applauded for his work (perhaps the only respite in the movie) is Santosh Sivan and his camera work! Mani’s movies always have natural lighting and Santosh has used it to good effect. Green pastures, water falls, rivers, trees, and all that nature can offer in a forest are radiantly shown. Hats off Santosh, you’ve done a splendid job!
Winding up this section, A R Rahman’s music is classy. His tribal beats merge with the movie’s theme. His rerecording could have been better but nevertheless, a great show! Hard work from cast and crew is evident in the movie, given that the movie was shot under incessant rain, blood s**king leeches etc, but what does it count for?
The Minuses
The list of minuses is being reduced with a lot of deliberation. Mani Ratnam has pictured beautiful movies in the past. ‘Raavanan’ was termed his magnum opus, etc but sorry it didn’t seem like one. The screenplay was a let down with only few scenes showing his directing supremacy. He has done another ‘Roja’ with only Aishwarya replacing Arvind Swamy and a few minor alterations. The movie was lost somewhere. May be because the first half was a major let down and the second half carried a lot to show (or burden) the audience.
ராவணன் இது வித்யாசமான ராமாயணம்
காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்திற்கும், காவல்துறைக்கும் இடையே நடக்கும் மோதலில் பகடைக்காயாய் சிக்கும் ஒரு பெண். அந்த பெண்ணாலயே அந்த மோதல் எந்த நிலையில் போய் முடிகிறது என்பதுதான் ராவணனின் கதை சுருக்கம்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் விக்ரம் காவல்துறையால் தேடப்படும் ஒரு குற்றவாளி. விக்ரமின் கொட்டத்தை அடக்க அந்த ஊருக்கு வரும் காவல்துறை அதிகாரி பிரித்திவிராஜ், அவருடைய மனைவிதான் ஐஸ்வர்யாராய்.
விக்ரமை கைது செய்ய நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் பிரித்திவிராஜ், விக்ரமின் தங்கை பிரியாமணியின் திருமணத்தின் போது, விக்ரமை தாக்குகிறார். இந்த தாக்குதலில் குண்டு அடிப்பட்டு தப்பித்து விடுகிறார் விக்ரம். அந்த நேரத்தில் விக்ரமின் தங்கை பிரியாமணியை சூரையாடுகிறது போலீஸ். இதற்கு பழிவாங்க பிரித்திவிராஜின் மனைவி ஐஸ்வர்யாராயை கடத்துகிறார் விக்ரம். கடத்தப்பட்ட மனைவியை மீட்கவும், விக்ரமை கொல்லவும் ஒரு படையுடன் காட்டுக்கு பிரப்படுகிறார் பிரித்திவிராஜ். அப்படி புறப்பட்டவர் காட்டு ராஜாவாக வளம்வரும் விக்ரமை பிடித்தாரா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்க, ஐஸ்வர்யாராயை கடத்திச்சென்ற விக்ரமுக்கு ஐஸ்வர்யாராயல் ஏற்படும் மாற்றமும், அதற்கு ஐஸ்வர்யாராயின் ரியாக்சனும் படத்தை மற்றொரு பாதையில் பயணிக்க வைக்கிறது. ஒரு வழியாக
விக்ரமின் பிடியில் இருந்து வெளிவரும் ஐஸ்வர்யாராயை, பிரித்திவிராஜ் ஏற்றுக்கொண்டாரா? இல்லையா?, என்ற கேள்வியுடன் முடிகிறது இராவணன் படம்.
எந்த சினிமாத்தனமும் இல்லாமல் படம் எடுத்த எடுப்பிலே கதைக்குள் பயணிக்கிறது. காவல்துறை அதிகாரியின் மனைவி கடத்தல், அவரைத் தேடி காவல்துறை காட்டுக்குள் பயணிப்பது என்று படம் விறுவிறுப்புடன் நகர்கிறது. உயரமான அருவி, அடர்ந்த காடு, என ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பிரமிக்க வைக்கிறது.
சுஹாசினியின் வசனங்களில் இருக்கும் கூர்மை, அந்த வசங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளில் இல்லை. “மேல்தட்டு மக்கள் இப்படித்தான், நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்” என்று அடிக்கடி வசனம் பேசும் விக்ரம் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை. எடுத்துக்கொண்ட கதை வீரியமானதாக இருந்தாலும், திரைக்கதை அந்த வீரியத்தோடு இல்லாமல், ஐஸ்வர்யாரால் விக்ரம் ஈர்க்கப்படுவதையே மையமாகக்கொண்டு முடிகிறது.
விக்ரம் முரட்டு உடம்போடு ஒரு காளையைப்போல வளம் வருகிறார். ஆவேசமாக பேசுவது, தன் தங்கை போலீஸால் அலங்கோலப்பட்டு வரும் போது கண் கலங்குவது, அதே சமயம் ஐஸ்வர்யாராயின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு குழம்புவது என அசத்துகிறார்.
தாஜ்மாஹாலுக்கு அழகு குறைந்தாலும் குறையலாம்! ஐஸ்வர்யாராய்க்கு அழகு குறையாது போலிருக்கிறது. அப்படியே அதே ஐம்பது எடை தாஜ்மஹாலாகவே இருக்கிறார்.விக்ரமுக்கு பயப்படமால் எதிர்த்து நிற்கும் ஐஸ்வர்யா, விக்ரமின் பேச்சில் சலனம் ஏற்பட்டு அதற்கு அவர் கொடுக்கும் முகபாவனை பிரமாதம். அதே சமயம் மலை ஏறுவது, விக்ரமை தாக்குவது என படத்தின் மற்றொரு ஹுரோ போலவே வலம் வருகிறார்.
அமைதியான முகத்துடன் உலாவும் பிரித்திவிராஜ் எதிரிகளை வேட்டையாடும் போது ஆக்ரோசமான போலிஸாகிறார். பிரபு, கார்த்திக் என அவர் அவர் வேலைகளை சரியாக செய்யும் கதாபாத்திரங்கள். இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கும்படி இருக்கிறது பிரியாமணியின் கதாபாத்திரம்.
இயக்குநரின் திரைக்கதைக்கு, தங்களின் கேமராவின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ்சிவன் மற்றும் மணிகண்டன். அருவிகளின் ஆக்ரோசத்தையும், காட்டின் அபாயத்தையும் தத்ரூபமாக காட்டிய இவர்களது கேமராக்கள் ஐஸ்வர்யாராயின் அழகையும் அபாரமாக காட்டியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நம்மை இன்னும் இருக்கையின் நுனியில் அமர செய்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி இருந்தாலும், படத்துடன் பார்க்கும் போது இன்னும் கூடுதல் சிறப்பு பெருகிறது. பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
காவல்துறைக்கும், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் ராவணன். இந்த கதைகளத்தை ரசிகர்களின் மனதில் பதியவைக்க இயக்குநர் மணிரத்னம் எடுத்துக்கொண்ட முயற்சியும், உழைப்பும் கதாபாத்திரங்களின் வாயிலாகவும், காட்சிகளின் வாழிலாகவும் தெரிகிறது.
சீதையை மட்டும் அல்ல ரசிகர்களின் மனதையும் கவருவான் இந்த ராவணன்.
ராவணன் – ராமாயணம் Touchpoints
1. கதாபாத்திரங்கள் ஒற்றுமை.
2. அன்று தசரதனின் மூன்றாவது மனைவி செய்த சூழ்ச்சியால் 14 வருடங்கள் வனவாசம் போகிறான் ராமன். இன்று உடன் வேலை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஒரு பெண்ணுக்கு செய்த சூழ்ச்சியால், மனைவியைத் தேடி 14 நாட்கள் வனவாசம் போகிறான் நவீன ராமன்.
3. அன்று, அனுமார் இலங்கையில் சீதையை சந்தித்து பின் வாலில் தீப்பற்றி இலங்கை எரிந்தது. இன்று, கார்த்திக், விக்ரமை சந்தித்தபின் தம்பி சாகிறான். காட்டுக்குள் நடக்கும் நேரடி சண்டையில் தீப்பற்றி எரிகிறது.
4. சீதை அழகில் மயங்கி, அவளை கவர்ந்ததால் ராமர் எதிரியாகிறான். இன்று, ராமன் எதிரியானதால், சீதையைக் கவர்ந்து, பின் அவள் அழகில் மயங்குகிறான்.
5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான்.
6. அனுமார் சீதையை சந்திப்பது, சூர்ப்பநகை மூக்கை மோப்பநாய் மாதிரி செய்வது, கும்பகர்ணன் சாப்பட்டு தட்டுடன் எப்போதும் திரிவது, தம்பி விபீஷ்ணன் என மற்றவற்றை அனைவரும் எழுதிவிட்டனர்.
நகைமுரண்கள்:
1. கல்யாணத்தன்று ஓடிப் போன மாப்பிள்ளையை, கோழை பேடி எனக்காட்ட ஐஸ்வர்யாராயின் உடையுடன் கட்டித் தொங்கவிடப்பட்ட இடம்.
2. காட்டுக்குள் ஒரு நாள், ஷேவிங் நுரையுடன் இருக்கும்போது, வெளியே ஏற்பட்ட தகராறினால் ஷேவிங் நுரையைத் துடைத்துவிட்டு போய்விடுவார் ப்ரித்விராஜ். மீண்டும் ஐஸ்வர்யாராயை சந்தித்தபோது, அவர் கேட்ட கேள்வி, “இது தான் நீங்க என்னைப் பிரிஞ்சி 14 நாள் வளர்த்த தாடியா?”
3. ராவணன் மேல் ஆரம்பத்தில் நெருப்பாய் உமிழ்ந்த வெறுப்பு கடைசியில் அன்பில் முடிகிறது. ராமன் மேல் கடவுளாக இருந்த அன்பு, கடைசியில் வெறுப்பாய் முடிகிறது.
4. மிஷனின் ஆரம்பத்தில், 14 மணி நேரத்தில் சீதையை பிடித்துவிடுவதாக சொல்லும் ராமன் மொத்தத்தில் எடுத்துக் கொள்ளும் காலம் 14 நாட்கள்.
5. 10 தலை ராவணனின், பத்து குணாதிசியங்களை அதாவது நல்லவன், மக்களுக்கு உதவுபவன், அடிக்கடி காமெடி செய்வான், பெண்கள் விரும்பும் அழகன் என இதே போல் பத்து பேர் வந்து சொல்கின்றனர். அதில் ஒருவன் மட்டும் கெட்டவன் என்கிறான். அந்த கெட்டவனை மட்டும் ராமன் பார்க்கிறான். மற்றவற்றை சீதை பார்க்கிறாள்.
எக்ஸ்ட்ரா மேட்டர்ஸ்:
1. பருத்திவீரனில் இருந்து அதே காட்சியை, அதே டோனில் “வலிக்குதுடாஆஆ” என புலம்பும் ப்ரியாமணி
2. ஐஸ்வர்யாராயின் ட்ரெஸ். முகத்தில் தெரியும் வயது, தலைக்கு கீழே தெரியவில்லை. கடைசி சுரிதாரிலாவது ஒழுங்காக தெரிவார் என்று பார்த்தால், அங்கேயும் மணிரத்னம் தெரிகிறார்.
3. இளம்வயது பெண்களுக்கே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ப்ளஸ் ஸாரி, ஆண்ட்டி லுக் கொடுக்கும் என என்னைப் போன்ற சினிமா பார்ப்பவனுக்கே தெரியும்போது, ஒரு காட்சியில் ஐஸ் ஆன்ட்டிக்கு அதே காஸ்ட்யூம் கொடுத்த டிசைனர் வாழ்க!
4. விக்ரம். என்ன புஜங்கள்? சாதாரணமாக கையை உள்வாங்கி மடக்கி இருக்கும் காட்சியிலேயே, ச்சும்மா திமிறிக் கொண்டிருக்கிறது.
5. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், நாடோடி தென்றலாக ரஞ்சிதா. அதே ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன். ஆடு தான் மேய்க்கவில்லை. நித்தியை மேய்த்துக் கொண்டிருப்பார் போலும்.
மத்தபடி வேறெதும் நோட் பண்ணலீங்க….
Never expected this from mani ratnam. This will be the worst ever in his movies. 1 out of 5. That too for Cinemtography. Locations are good, esp. climax stunt (credit goes to peter hayne). No story, so cant expect much in acting. Though songs were good, not used fully. A.R.R works wasted. BGM’s sounds natural. Overall, waste of money and time. fcuk….
hi…raavanan is 100 times better than raavan……..vikram’s characterisation is flawless in both hindi and tamil….ofcourse his physique and his natural dialogue delivery made him up against abishek and also tan tan is better than pap pap… he have to work hard on his acting….in forthcoming subjects…
VERY VERY BAD MOVIE. NOT AT ALL GOOD. PLEASE DO NOT WATCH IT!!!!! WASTE OF MONEY
I watched both version, for me, superb, I love the tamil version. But i dont understand y people make a mindset with full of expectation for this movie. Yes, it is maniratnum’s movie. Forgot abt his previous movies… and stop comparing with his old movies…
Guys, Raavanan (Tamil) was really superb. Some of u r making negative comments is due to ur viewing habits of indian cinema that is full of songs that unrelated to story, too much of unwanted comedies and too much of violence.
In this movie, Mani sir brought the characters to live as what will really happen in real like when one is kidnapped. The cinematography, screenplay and the songs were truly amazing. Guys did u’ll notice the songs in this movies were in sync to the situation and not like the regular tamil movie were u can see the actor/acterss dancing in unrelated places.
Overall Raavan can br watched many times and one more thing, Aishwarya as really stunned me by her beauty till today. This time Aishwarya really touched me in the last part of the movie. Seriously Raavanan can go for Oscar for Best Foriegn Film.
Best in Tamil and just above better in Hindi. Vikram rocks. Mani has given it everything, what it need to be the years best. Must see.
This is a visual treat! The story telling is done beautifully and the actors have out-performed themselves. Abhishek, Aishwarya & Vikram have done full justice to the characters…can’t miss this!!
simple and sample of all indian films, mani is great very hard worker,1 more natinal award waiting for cyan vikram,A.R.Rahman done a good job in this movie,santhosh sivan ,manikandan really very very wonderful and thankful persons, VAIRAMUTHU ungal eluthukku en usir poguthaiya, en thai kodutha pallai nee un thamilukkai ketkirai, entha udampil uthiram uraiyum varai unnai intha manam maravathu ayya.Aiswarya rai 1000 varathaikal antha otrai parvaiil peralaghi innum 100 thalaimurai kandu rasikakudomo endru 1 acharyam
If you hoped (like me) Mani Ratnam would improve on his film making, move away from usual stereotypes, and be bold enough to challenge ingrained stereotypes, forget all about it when it comes to Ravan(an)!
In his lately well-established trend, he chooses not 1 but 2 well-known stories and fuses them for his storyline! The film is thus a peculiar tale of Ramayan(a) meets Veerappan and the utterly unoriginal plot and role portrayals flit from one story to the other.
Combine this with ‘tableau’ like scenes, ultra theatrical unconvincing dialogues, 2 dimensional uninspiring characters, cringe worthy acting and ill timed comedy for the most part, and unremarkable music.
There is some obvious symbolism of characters (Karthik / Govinda as Hanuman, ‘Veera’s 2 brothers for ‘large’ Kumbakaran(a) and ‘wise’ Vibheeshan(a)), scenes (array of stones where Ragini calls out to her husband akin to bridge built by Ram(a) to reach Lanka), dialogue references (number 14 depicting Ram(a)’s banished years in the forest) and colours (ill-reputed black for ‘Veera’ and auspicious white / yellow / red for ‘Ragini’).
The only redeeming features were the beautiful scenery of Kerala and Aishwarya’s costumes!
What a disaster! He couldn’t have done worse if he’d tried…
ராவணன் – Master piece of MONEY ரத்னம்
அப்படித்தான் தோன்றுகிறது. இதுவரை மணிரத்னம் இயக்கிய செய்திப் படங்களிலேயே ‘ராவணன்’ @ ‘ராவன்’தான் மிகச் சிறந்த படம். உலகமயமாக்கலின் வழியே ‘வளர்ந்த’ ஒரு மனிதனின் வளர்ச்சி அல்லது அடுத்தக் கட்ட ‘பாய்ச்சல்’…அப்படித்தான் தோன்றுகிறது. இதுவரை மணிரத்னம் இயக்கிய செய்திப் படங்களிலேயே ‘ராவணன்’ @ ‘ராவன்’தான் மிகச் சிறந்த படம். உலகமயமாக்கலின் வழியே ‘வளர்ந்த’ ஒரு மனிதனின் வளர்ச்சி அல்லது அடுத்தக் கட்ட ‘பாய்ச்சல்’ என்பது இப்படித்தான் இருக்கும்.
நேற்று டிவிட்டரில் அமிதாப்பச்சன் எழுதியதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ”’ராவன்’ படமாக்கப்பட்ட விதம் ஒரு பெரிய ஆச்சர்யம். இந்தப் படத்தைப் பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம். மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக் களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம் மிக்கது. அவரது படைப்புகள் உற்சாகம் தருபவை. ஆனால் ‘ராவன்’ மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. 10 தலை ராவணனை கண் முன் நிறுத்துவதற்காகத்தான் அபிஷேக் பாத்திரம் பலவித குணங்கள் கொண்டதாக சித்தரிக்கப்பட்டது. கடைசியில் அவன் ஒரு உறுதியான முடிவுக்கு வரும்போது, அந்த பத்துத் தலைகளும் (குணங்களும்) உதிர்ந்துபோய் ஒற்றைத் தலை நிற்கும். ஆனால், அதற்கான காட்சிகள் இப்போது படத்தில் இல்லாததால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது. இதுவே படத்துடன் ஒன்ற விடாமல் செய்துவிட்டது…”
அமிதாப்பச்சன் எழுதியதன் சாராம்சம் இதுதான். இதை வாசித்துவிட்டு மணிரத்னம் நிச்சயம் கோபமோ, வேதனையோ அடைந்திருக்கமாட்டார். பதிலாக நிறைவுடன் ஒரு புன்னகையை சிந்தியிருப்பார். காரணம், ‘ராவணன்’ @ ‘ராவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும் ‘காவியம்’. எந்த நோக்கத்துக்காக இத்திரைப்படம் உருவானதோ, அந்த நோக்கத்தை துல்லியமாக, வெகு நுட்பமாக நிறைவேற்றியிருக்கும் படம். படத்தை ‘உருவாக்கியிருக்கும் படைப்பாளியான’ மணிரத்னமும் சரி, தோராயமாக 120 கோடி ரூபாயில் இப்படத்தை தயாரித்திருக்கும் அனில் அம்பானியும் சரி, வெளிநாட்டு உரிமையை பேரம் பேசாமல் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கும் சர்வதேச ‘சோனி’ நிறுவனமும் சரி, மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இந்தளவுக்கு இப்படம் வெற்றி பெறும், ரசிகர்களின் மனதில் ‘விதைக்க நினைத்த விஷயத்தை ஆழமாக பதிய வைக்கும்’ என்று பணத்தை முதலீடு செய்த இவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவே நிம்மதியாக இருக்கிறார்கள். ‘உழைத்த களைப்புத் தீர’ மணிரத்னமும் இப்போது லண்டனில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதே லண்டனில்தான் வேதாந்தா நிறுவனத்தின் தலைமையகமும் இருக்கிறது. ஒரிசாவில் பழங்குடியினர் அதிகமாக வாழும் வனப்பகுதிகளில் உள்ள வனங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுக்க ரூ.50,000 கோடிக்குக் குத்தகை எடுத்திருப்பது இந்த வேதாந்தா நிறுவனம்தான். அதனால்தான் இந்நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் அதே லண்டனில் மணிரத்னம் ஓய்வெடுத்து வருகிறார்.
மணிரத்னம் என்றுமே மிகச் சிறந்த இயக்குநராக பரிணமித்ததில்லை. அந்தந்த காலகட்டத்து உற்பத்திக்கு ஏற்ப ஒரு பிராமணனை அறிவாளி என பார்ப்பன ஊடகங்களும், ஆதிக்க சாதிகளும், ஆளும் வர்க்கங்களும் முன்னிலைப்படுத்தும். ‘இயக்குநர் சிகரமாக’வும் ‘சிந்தனை சிற்பி’யாகவும் கே.பாலசந்தர் உருவானதும் அப்படித்தான். உலக இயக்குநராக மணிரத்னம் புகழப்படுவதும் அப்படித்தான்.
முன்னொரு காலத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பு அரசின் சாதனைகளை வலியுறுத்தும் செய்திப் படங்கள் ஒளிபரப்பாகும். கால ஓட்டத்தில் அப்படியொரு சம்பவம் தொடராமலேயே போய்விட்டது. அந்த வெற்றிடத்தை திரைப்படங்கள் மூலமாகவே நிரப்பியவர் என மணிரத்னத்தை சொல்லலாம். ஒருவகையில் இவரது ‘வளர்ச்சி’ என்பது இந்தியாவில் ‘சட்ட அனுமதியுடன்’ நிகழ்ந்த உலகமயமாக்கலுடன் தொடர்புடையது. அதனாலேயே மணிரத்னத்தின் திரைப்பட காலகட்டத்தை இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு முன் – உலகமயமாக்கலுக்கு பின் என பிரிக்கலாம் என்று தோன்றுகிறது.
உலகமயமாக்கலுக்கு முந்தைய மணிரத்னத்தின் சாதனைப் படமாக சொல்லப்படுவது ‘நாயகன்’. இது, பம்பாயில் – அதாவது மும்பையில் – கடத்தல் தாதாவாக கோலோச்சிய வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் . இதை அமெரிக்க ஹாலிவுட் படமான ‘காட்ஃபாதர்’ சாயலில் எடுத்திருப்பார். இந்த இடத்தில் மும்பையில் பூர்வீக வரலாற்றை குறித்து கொஞ்சமாக பார்த்துவிடுவது நல்லது.
இந்தியாவில் மாபெரும் தொழிற்சங்கங்களை வலுவாக கொண்ட மாநகரமாக மும்பை இருந்தது. சுதந்திர போராட்ட காலத்தில் இத் தொழிற்சங்கங்கள் தீரத்துடன் போராடின. அதனாலேயே தேசப்பிதாவும், தேச மாமாவும் இத் தொழிற்சங்கங்களை ஆதரிக்கவில்லை. பதிலாக காட்டிக் கொடுக்கும் வேலைகளையே செய்தார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றியதற்கு ஒருவகையில் மும்பை தொழிற்சங்கங்களே காரணமாக இருந்தன. அப்படிப்பட்ட தீரமிக்க தொழிலாளர்களை கொண்ட மாநகருக்குள் பிழைக்கச் சென்ற ஒரு நபர், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கிரிமினலாகி ஏழை – கூலி தொழிலாளர்களுக்கு கடவுளானான். அவனது வரலாற்றை உணர்ச்சியுடன் ‘செய்திப் படமாக’ எடுத்ததன் மூலம் உலகெங்கும் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு மணிரத்னம் ஒரு செய்தியை உணர்த்தினார். ‘ஐயா, இப்ப மும்பைல தொழிலாளர்கள் தீரமா இல்ல… போராட்டமெல்லாம் நடத்தமாட்டாங்க… நீங்க தாராளமா முதலீடு செய்ய வரலாம்…’
‘ஆமாங்க… எங்க மாநகரம் இப்ப மாறிடுச்சு… தயவுசெஞ்சு முதலீடு செய்ய வாங்க…’ என்ற கெஞ்சலுடன் இச்செய்திப் படத்தை உலகெங்கும் கொண்டு செல்வதற்கான முயற்சியில் மத்திய அரசும் இறங்கியது. விருது வழங்கியும் கவுரவித்தது. இதற்காகவே காத்திருந்தது போல், முதலாளித்துவ நாடுகளும் களத்தில் இறங்கின. ஏறக்குறைய இந்தியாவில் உலகமயமாக்கல் நடைமுறைக்கு வந்ததற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ‘நாயகன்’ வெளிவந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ‘நாயகன்’ செய்திப் படம் உணர்த்தியது போலவே எதிர்ப்புகளோ, தொழிற்சங்க போராட்டங்களோ எழுச்சியுடன் இல்லை என்பதை ‘அனுபவப் பூர்வமாக’ உணர்ந்த ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்கா, தனது ஊதுகுழலான ‘டைம்ஸ்’ பத்திரிகையின் மூலம், உலகின் தலைசிறந்த 100 படங்களில் ஒன்றாக இச்செய்திப் படத்தையும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது.
உலகமயமாக்கல் இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில் மணிரத்னம் எடுத்த செய்திப் படம் ‘ரோஜா’.
சுற்றுலாத்தளமாக இந்திய நடுத்தரவர்க்கத்தை மகிழ்த்த ‘காஷ்மீர்… பியூட்டிஃபுல் காஷ்மீர்’ இப்போது ‘தீவிரவாதிகளின்’ பிடியில் இருக்கிறது. அதை மீண்டும் சுற்றுலாத்தளமாக மாற்றவேண்டும். அப்போதுதான் ‘தேனிலவுக்கு’ அங்கு செல்லமுடியும் என்ற கருத்தை செய்திப்படமாக எடுத்தப் படம் இது. அதனால்தான் 20.09.1992 – 27.09.1992 ‘ஆனந்தவிகடன்’; மற்றும் 13.09.1992 ‘கல்கி’ இதழுக்கு அளித்த பேட்டியில் ”அங்க காசுமீர்ல ஏதோ எல்லைப் பிரச்னை இருக்காம்பா” என்று மேலோட்டமாக ஒதுக்கித்தள்ளும் நடுத்தரவர்க்க மக்களுக்கு, ‘தீவிரவாதத்தை’ உணர்த்த இப்படத்தை எடுக்க தான் முன்வந்ததாக மணிரத்னத்தால் சொல்ல முடிந்திருக்கிறது.
காஷ்மீர் என்பது என்ன? ஓபராய்க்கு நட்சத்திர ஓட்டல்; இந்திய அரசுக்கு அந்நியச் செலாவணி சுரக்கும் காமதேனு; இந்திய இராணுவத்துக்கு எதிரிகள் நிறைந்த போர்முனை; ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட தேசபக்தர்களுக்கு ஹனிமூன் மையம்; வைரமுத்துவுக்கு ‘படகுவிட ஆசை’ வரும் இடம்; மணிரத்னத்துக்கு அருமையான அவுட்டோர் லொகேஷன்; காஷ்மீர் மக்களுக்கோ ஆக்ரமிக்கப்பட்ட தாய்நாடு…
இந்த உண்மையை செல்லுலாய்டு சமாதி கட்டி அதன் மீது ‘ரோஜா’வை பூக்கச் செய்ததுடன் சத்தியவான் – சாவித்திரி கதைக்கு ‘காஷ்மீரை’ களமாக்க முயன்றதுதான் மணிரத்னத்தின் ஆகப் பெரிய ‘திறமை’. காஷ்மீர் போராளிகள் இஸ்லாமியர்கள். தவிர பாகிஸ்தான் எதிர்ப்பில்தான் இந்திய தேச பக்தியின் கற்பு நிரூபிக்கப்பட வேண்டும். அதை ‘அருமையாக’ மணிரத்னம் செய்திருப்பார். இதற்கு உதாரணமாக இப்படத்திலிருந்தே இரு காட்சிகளை சொல்லலாம்.
கதாநாயகனை போராளிகள் அடித்துத் துவைப்பார்கள். அருகே போராளிகளின் தலைவர் அமைதியாக நமாஸ் செய்து கொண்டிருப்பார். இக்காட்சி பிரிவினை வாதத்துக்கு எதிரான விமர்சனம் அல்ல. இஸ்லாமிய மதத்தின் மீதான தாக்குதல். ரத்தவெறி பிடித்த தாக்குதல் அருகிலேயே நடக்கும்போது சஞ்சலமற்று, இரக்கமற்றுத் தொழுகை நடத்தும் மதம்தான் இஸ்லாமிய மதம் என்பதை ரசிகர்களின் உள்ளத்தில் விஷமாக ஏற்றிய காட்சி இது.
இன்னொரு காட்சி. போராளிகள் இந்திய தேசியக் கொடியைக் கொளுத்துவார்கள். நமத்துப்ப் ஓயிருந்த கதாநாயகனின் தேசபக்தி உடனே கொழுந்துவிட்டு எரியும். கொடி மீது விழுந்து புரண்டு தீயை அணைப்பான். போராளிகள் அவனை அடிப்பார்கள். பின்னணியில் ‘தமிழா… தமிழா… நாளை நம்நாளே…’ பாடல் ஒலிக்கும். கொளுத்தியது இந்தியக் கொடியை. விழுந்து புரண்டு அதை கதாநாயகன் தடுக்கக் காரணம் இந்தியன் என்ற உணர்வு. ஆனால், பாடலில் மட்டும் தமிழனை கூப்பிடுகிறார் வைரமுத்து. இதைத்தான் ஐந்தாம்படை வேலை என்பார்கள்.
மேலே குறிப்பிட்ட ‘ஆனந்தவிகடன்’ இதழில் வாசகர் ஒருவர் சொன்ன கருத்தை வெளியிட்டிருப்பார்கள். ”டாகுமெண்டரியாக வரவேண்டிய ஒரு சப்ஜெக்டை ரசிக்கும்படி சினிமாவாகக் கொண்டுவர மணிரத்னத்தால்தான் முடியும்!”
அடுத்து ‘பம்பாய்’ செய்திப்படம். இந்து – இஸ்லாமியர்களுக்கு இடையே முபையில் நிகழ்ந்த கலவரத்துக்கு அடித்தளமிட்டவன் பால்தாக்கரே. இரண்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை தனது ‘சாம்னா’ பத்திரிகையில் பிரசுரித்தான். தொழிற்சங்க தகராறில் நடந்த கொலைக்கு மதச்சாயம் பூசி, ‘அடுத்து வருகின்ற சில நாட்கள் நம்முடையவை’ என்று தலையங்கம் எழுதியதன் மூலம் படுகொலையை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தவன் இவன்தான். அதேபோல், ‘போதும் வெறியர்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) உரிய இடத்தை நீங்கள் காட்டிவிட்டீர்கள்’ என படுகொலையை முடித்து வைத்ததும் இதே பால்தாக்கரேதான். ஆனால், பாபர் மசூதி இடிப்பிற்கு பின் இஸ்லாமியர்கள்தான் கலவரம் செய்தார்கள்… அவர்களேதான் கலவரத்தை முடித்து வைத்தார்கள் என்று ‘பம்பாய்’ செய்திப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.
வேண்டுமானால் ‘பம்பாய்’ படத்தை ஒருமுறை பாருங்கள். பாபர் மசூதி இடிப்பு என்ற மிருகத்தனமான கொலைவெறியாட்டம், எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் தலைப்புச் செய்தியாக ஓடும். அதனையடுத்து ‘யா அல்லா’ என்ற பெருங்கூச்சலுடன் திரை உயிர்பெறும். இஸ்லாமியர்கள் கடைகளை தாக்க ஆரம்பிப்பார்கள். போலீசை தாக்குவார்கள். இந்தச் செய்திப் படத்தில் கலவரம் இப்படி தொடங்குவதாகத்தான் காட்டப்பட்டிருக்கும்.
அதேபோல் கலவரம் முடியும் இடம்…. இந்து மதவெறித் தலைவரின் கார் வரும். பிணக்காடாகக் காட்சியளிக்கும் தெருவைப் பார்த்து மேல்துண்டால் மூக்கைப் பொத்திக் கொள்வார். லேசான துயரம் அவர் முகத்தில் தோன்றி மறையும்.
அடுத்து அழுகுரல் ஒலிக்கும் ஒரு தெருவுக்குள் இஸ்லாமிய மதவெறித் தலைவர் இறங்கி நடப்பார். காயம் பட்டு கிடக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையைப் பார்த்தவுடன் ‘யா அல்லா’ என்று கதறுவார். உடனே ‘பஸ்… பஸ்…’ (போதும் போதும்) என்று தன் கையை உயர்த்துவார்.
ஆக, ‘யா அல்லா’ என்ற கோபக்குரலுடன் இஸ்லாமியர்கள் கலவரத்தை தொடங்குவார்கள். அதே ‘யா அல்லா’ என்ற வருத்தம் தோய்ந்த குரலுடன் கலவரத்தை முடிப்பார்கள்.
இப்படி இந்துக்களை நல்லவர்களாக காட்டித்தான் ‘பம்பாய்’ செய்திப் படத்தை மணிரத்னம் எடுத்திருப்பார். அதனால்தான் -
”’ரோஜா’வுக்கு அத்வானியின் பாராட்டைப் பெற்ற மணிரத்னம், ‘பம்பாய்’க்கு தாக்கரேயின் ஆசியையும் வாழ்த்தையும் பெற்றிருக்கிறார்.
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ மிகச் சிறந்த படம். நான் படத்தை பார்த்தேன். சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்னேன் – அவ்வளவுதான். பம்பாய் கலவரத்துக்காக நான் வருந்துவது போல் ஒரு காட்சி வருகிறது. அது உண்மையல்ல; நான் எதற்காகவும் வருந்தவில்லை. கலவரத்தை சிவசேனை ஆரம்பிக்கவில்லை. நாங்கள் பதிலடித்தான் கொடுத்தோம்… (மற்றபடி) இது மணிரத்னம் உருவாக்கியுள்ள அற்புதமான படம். படத்தை நான் வெகுவாக ரசித்தேன்…”
என்று 1995 மார்ச் 31 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு தாக்கரேவால் பேட்டி தர முடிந்தது.
இப்படி வரலாற்றை திருப்பி, மக்கள் மனதில் எந்த எழுச்சியும், போராட்டமும் நடைபெறாமல் தடுக்கும் செய்திப் படங்களை, தொழில்நுட்பத்துடன் உருவாக்கும் மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்தான் ‘ராவணன்’ @ ‘ராவன்’.
உலகமயமாக்கல் என்பது மாநில, தேச நலன்களைத் தாண்டி ஏகாதிபத்தியத்தை நோக்கி நகர்வது. மணிரத்னம் அப்படித்தான் இந்தியதேசியத்திலிருந்து ஏகாதிபத்தியம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.
‘ராவணன்’ @ ‘ராவண்’ படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களும் ஒரே குரலில் சொல்லும் – ஒப்புக் கொள்ளும் – விஷயம், ‘லொகேஷன் சூப்பர்… கான்க்ரீட் காடுகளில் மூச்சுத் திணறி வாழும் நமக்கு இப்படியொரு இடம் இருப்பது பொறாமையை தருகிறது…’
இதுதான் இந்தப் படத்தின் வெற்றி. மணிரத்னம் உணர்த்த வந்த விஷயம் அதுதான்.
தண்டகாரன்யா, சட்டீஸ்கர் போன்ற மாவோயிஸ்ட் அமைப்பு வலுவாக இருக்கும் பகுதியில் இயற்கை இப்படித்தான் இருக்கிறது. பழங்குடி மக்களுக்கு அதை ரசிக்கவோ, அனுபவிக்கவோ தெரியவில்லை. நாம் நாகரீகமானவர்கள். இயற்கையை ரசிக்கும் மனசு நம்மிடம் உண்டு. அருவியில்… பாறையில்… மலையில் நின்றபடி காதலி அல்லது மனைவியை பார்த்து ‘உசுரே போகுதே…’ என காதல் சொட்டச் சொட்ட பாட்டுப் பாட வேண்டும்… எந்நேரமும் மழை, தூறல். உயிர் குடிக்கும் காட்டு விலங்குகள் இல்லை… இப்படிப் பட்ட இடத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்க்கையை ரசிக்க வேண்டும். கவிதை எழுத வேண்டும். கதை எழுத வேண்டும். வற்ற வற்ற புணர வேண்டும்… இதற்கு தடையாக இருக்கும் பழங்குடியினர்களை அடித்து விரட்ட வேண்டும். கொல்ல வேண்டும்…
இதைத்தான் ‘ராவணன்’ @ ‘ராவன்’ படம் ரசிகர்களின் மனதில் பதிய வைக்கிறது.
பசுமை வேட்டை என்ற ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் நடவடிக்கையை ஆதரிக்க தூண்டுகிறது.
எம்.பி.ஏ. பட்டதாரியான மணிரத்னத்துக்கு சந்தையை எப்படி கையாள்வது என்று தெரியும். நுகர்வு கலாசாரத்தை எப்படி கொழுந்து விட்டு எரிய வைக்கவேண்டும் என்று தெரியும்.
மனைவியை அல்லது காதலியை முத்தமிடக் கூட இந்த பற்பசையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதை விதைப்பது முதல், பெரும்பான்மையான மக்களுக்கு கழிவறை கூட இல்லாத நாட்டில், மேல்தட்டு மக்களின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய நடிகர் அப்பாஸும், விஜய் ஆதிராஜும் மைக் சகிதமாக ‘ஹார்பிக்’குடன் வரும் விளம்பரப் படங்கள் வரை எதை உணர்த்த முயல்கிறதோ -
அதையேதான் மணிரத்னமும் தனது செய்திப் படங்கள் மூலம் உணர்த்துகிறார். வசனம் மூலம் எதையும் உணர்த்துவதில்லை. பதிலாக காட்சிகள் வழியே ‘விதைப்பார்’.
‘ஹமாம்’ சோப்பை வாங்க வைப்பதற்காக ‘ஆட்டோல கூட வர பசங்க சரியில்லை…’ (என்ன சாதியோ?) என்றெல்லாம் கேள்வி எழுப்பி, மக்களை வர்ணாஸ்ரம பிடியில் இறுக்கமாக பிணைத்து சோப்பை வாங்கச் செய்வது போலவேதான் ஆபரேஷன் க்ரின் ஹண்டுக்கு ஆதரவு திரட்டியிருக்கிறார்.
‘ராவணன்’ @ ‘ராவன்’ படத்தில் ஊசி முனையளவு கூட பழங்குடியினரின் பிரச்னைகளோ, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த முயலாத அரசின் கையாலாகத்தனமோ சொல்லப்பட்டிருக்காது. வசனம் வழியாக மட்டுமல்ல, காட்சி மூலமாகவும். பதிலாக இயற்கை வளங்களை, செல்வங்களை மனதை ஆக்ரமிக்கும் வகையில் படம் பிடிக்கப்பட்டிருக்கும். இப்படியொரு சொர்க்கத்தை நாகரீகமற்ற பழங்குடியின மக்கள் அனுபவிப்பதா என்ற கேள்வியை வலுவாக படம் பார்ப்பவர்களின் மனதில் எழுப்பும். இதன் மூலமாக ஆபரேஷன் க்ரீன் ஹண்டை நியாப்படுத்தும்.
அதனால்தான் அழுத்தமாக ‘இது மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்’ என்று சொல்ல முடிகிறது. ஏகாதிபத்தியத்தின் காலை கழுவ அருமையான வாய்ப்பு இந்த ‘மாஸ்டர் பீஸ்’.
அருவி, காடு, சேறு… எங்கு நடந்தாலும் உலக அழகியின் சருமம் பளபளக்கிறது. அதேபோல் உங்கள் சருமமும் பளபளக்க ‘ஃபேர் அண்ட் லவ்லி’யை பயன்படுத்துங்கள்… என விளம்பரம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஆனால், ஒருவேளை ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் மூலம் மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்பட்டு, பழங்குடியின மக்கள் தங்கள் பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்டாலும் -
அந்தப் பகுதிக்கு நடுத்தர மக்கள் செல்லமுடியாது. ஒருபோதும் அது சுற்றுலாத் தளமாக மாறாது. இந்த உண்மையை மக்கள் உணராதபடி இச்செய்திப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெறும் லொகேஷன்கள் தண்டகாரன்யா, சட்டீஸ்கர் போன்ற பகுதிகளில்தான் இருக்கிறது என்று அவசியமில்லை. படப்பிடிப்பை எங்கு வேண்டுமானாலும் நடத்தியிருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதிகளும் இருக்கின்றன’ என்பதை ரசிகர்கள் மனதில் விதைத்திருக்கிறார். வேதாந்தா நிறுவனம் மகிழாமல் வேறென்ன செய்யும்?
தென்னாப்பிரிக்காவில் சுகாதாரம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹாலிவுட் நடிகைகள் ஈடுபடுவது போல் ஐஸ்வர்யாராய் இப்படத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனில் அம்பானி மகிழத்தானே செய்வார்?
‘காஷ்மீர் பிரச்னை குறித்து அறியாத’ தமிழக நடுத்தரவர்க்க மக்களுக்கு எல்லைப் பிரச்னையை புரிய வைக்க ‘ரோஜா’ செய்திப் படத்தை இயக்கிய மணிரத்னம், ‘ஆபரேஷன் க்ரின் ஹண்ட் குறித்து அறியாத இந்திய நடுத்தரவர்க்க மக்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் குறித்து புரிந்துக் கொள்வதற்காக ‘ராவணன்’ @ ‘ராவன்’ செய்திப் படத்தை இயக்கி இருக்கிறார்.
சொல்வதற்கில்லை. வேதாந்தா நிறுவனத்தின் முதலீட்டில் அடுத்த (செய்திப்) படத்தை மணிரத்னம் இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
Cast: Vikram, Aishwarya Rai-Bachchan, Prithviraj, Prabhu, Karthick, Priyamani and others
Music: A R Rahman
Cinematography: Santosh Sivan
Screenplay-direction: Maniratnam
Produced by: Madras Talkies
Has Mani Rathnam’s much awaited Raavanan lived up to the expectation? After watching the movie one can easily say yes but not without some disclaimer. ‘Raavanan’, the story of a girl caught in the battle between the exploitative executives and the tribal people, has come out to be a awesome experience in terms of visual beauty, music, and performances. However, one would expect that the movie could have been more gripping if the director had paid more attention to the backdrop of the protagonist Veeraiyaa, the leader of the people in the forest.
Let us have a look at the story. The film opens with spectacular shot of the forest and the hills. The kidnap of Ragini (Aishwarya Rai-Bachchan) by Veera (Vikram sans ‘Cheeyan’!) takes place and the dealy hunt by Ragini’s husband cum DSP Dev (Prithviraj) starts. Veera kidnaps Ragini to avenge Dev, who had devastated the life of his sister (Priyamani). Veera, who wants to teach Dev a lesson by eliminating his wife, falls for the beautiful girl. Raahini, on the other hand, understands the purpose of the fight by Veera against the police force and develops sympathy for him.
Could Dev achieve his mission of getting his wife back and killing Veera? What happens to the changing chemistry between Veera and Ragini? Who wins the battle? What is Ragini’s decision when she is under the cloud of suspicion? Watch the movie to find out the answers.
The movie makes an impact right from the first scene with the eerie surrounding of the Adhirappalli water falls and the speed of the tide of the river. Mani gets into the of the story without wasting time. The kidnap, the hunt and the oscillation of Veera’s mind towards Ragini set the tone for the movie. Ragini’s romantic life and the tragedy of Veera’s sister add more dimensions to the script. The suspicion factor works as a crucial aspect that makes the story intriguing. The visual beauty thanks to Santhosh Sivan’s amazing work and the revolutionary music by music wizard A.R. Rahman add immense value to the movie.
Mani Rathnam is so good a director that he never shows his identity on the surface. As always, he makes his script and characters do the job. Suhasini’s dialogues are sharp and sensitive.
On the flip side, except for Veera, Ragini and Dev, other characters have not been etched well. The portrayal of the background of Veera and his people leaves much to be desired. These aspects play a negative role on the overall impact of the otherwise well made film.
Aishwarya Rai’s screen amazing presence and astonishing acting are the major plus points of the movie. The majestic beauty with grace has set new standards for heroines by doing almost everything viz., oozing glamour with grace, expressing anger with conviction, depicting subtle emotions in a marvelous way, and trying to match the hero in physical endurance (trekking etc,). The way the captive’s feeling of anger towards her captor changes into that of admiration has been perfectly expressed by the beauty queen.
Vikram, as the Veera, is a treat to watch. His body language, expressions and dialogue delivery are stunning. His expressive eyes show varied feelings of anger, agony, lust, desperation and disappointment with amazing ease. He is equally good in action sequences and that of the emotional ones. The scene when his eyes show the instant attraction towards his captive is outstanding.
Prithviraj does his job well but his romantic moments with Aishwarya are found wanting. Karthick and Prabhu have done justice to their roles. Priyamani, in a brief appearance, is quite impressive. Her narration of the molestation in police station moves the audience.
Santhosh Sivan has made the movie as an art piece. He has captured the beauty of the forest and Aishwarya quite well. Vairamuthu’s lyrics sound good while A R Rahman plays a major role for the impact of the movie with his amazing tunes and back ground score. The songs Usurey Pogudhey and Kattu Chirukki have been beautifully picturised.
Mani’s Raavana is an enjoyable movie in many respects despite the director’s failure to depict the battle between the system and the people in the forest convincingly.
Tags: Vikram, Aishwarya Rai, Priyamani, Prithviraj, Prabhu, Karthik, Vaiyapuri, Raavanan, Mani Ratnam, A.R Rahman
Music and Cinematography were awesome. Must watch file in Tamil. Mani , you are rocking!!!
THE MOVIE IS VISUALLY STUNNING…BEST WORK FROM AR RAHMAN, SANTHOSH SIVAN, VIKRAM, AISH…ALL THE BEST MANI SIR…
Really, Sam? NYT and Los Angeles Times didn’t find any “plagiarism” in Raavan. Why, you know better, don’t you? Mani Ratnam is still a great director. Verify your facts before you post comments. Shree, one sees what one wants to see. I think you wanted to see Ash, so you did. I saw Vikram, Prithvi, Prabhu, Karthik, Priyamani and the Green. I agree with the reviewer. Though there were many scenes with the tribals, they weren’t quite effective. An FYI, Manikandan was the cinematographer for the first half of the film. That’s not something you can afford to miss. I wish to see the change in the crew-info. Thanks!
This is a boring movie i have ever seen. Waste of money and time . The firs half is very slow and the screenplay/ dialogues are very disappointing. A BIg flop!!!
Thanks to our great Director MrManirathnam.Its a great movie to watch.We can not expect a movie like Director Hari’s movie from Mani Rathnam.People should understand this first.Audience need to have a mind to watch this kind of great movie.In my opinion this is the best from Mani Rathnam. Usure Poguthe song is the best song of this year. Rahman did excellent job in this movie.Photography will get award for this movie for sure. Thanks for Mr Mani Rathnam .
It was a dissapoinment to watch Ravanan overall but hats off for his choice of spectacular location and his art of film making. As a fan of Maniratnam im truly dissapointed. Bad dialogue Vikram’s bak bak bak was iritating. Karthik was made fool in this movie,why Mani made him jump around totally unrealistic. The scene in the bridge is awesome thts wat we want to see in Indian cinema. The ending was totally predictable. Prithviraj acting is good. Vikram no doubt is good but a little overacting and Aiswarya as well. The choice of dialogue for her is bad.