Production: Sun Pictures, AVM Productions
Direction: Babu Sivan
Music: Vijay Anthony
Cinematography: Gopinath
Editing: V.T. Vijay
Vijay’s fate continues – What does this mean? It’s so simple; ‘Vettaikaran’ in no way differs from his previous films that were dissatisfying for the universal audiences. Vijay follows the same pattern of superman act of jumping from loftiest water falls with just a wound on his knee, yelling with punch dialogues and flying reverse sans gravity effects in stunt sequences.
The day Vijay stops working on these elements, he’s sure to make it big and gain yet more masses towards him. It’s worth mentioning that Vijay had whole lot of female fans, but with most of his recent films merely bounded to violence and punch dialogues, he’s loosing away the attention.
‘Vettaikaran’ has a right mix of Dharani’s ‘Dhill’ (mentor of Babu Sivan), ‘Tirupatchi’ and ‘Bhagavathy’.
The film is about Ravi (Vijay) in Tuticorin, whose only aim is to become a cop just like an IPS officer Rajendran. After passing his 12th std examination after 4 attempts, Ravi heads for Chennai with a big dream of completing his graduation and becoming a cop. He comes across his cherubic girl Susheela (Anushka) and falls in love at first sight with her.
After joining a college in Chennai, Ravi hires an auto from his girl classmate’s father (Manickam Vinayagam) for bread and butter. When things are well and fine, Ravi feels so disappointed as he isn’t able to meet his role model Devraj IPS as his house is always locked. His neighbors reveal that he has fled to Delhi on some mission and will return merely after 6 months, which is not true.
Meanwhile, he comes in for a hand-in-hand combat with a local goon Chella, who handles illegal businesses of his don father Vedanayagam (Salim Ghosh).
What follows next is a series of more clichéd storyline that can be doubtlessly predicted.
As usual Vijay dances well, utters dialogues that favors his fans and ‘Thai Kulam’. But in the second half, he starts beating the same bush of high-pitched punch dialogues. Though they aren’t more in number, the stunt sequences will really annoy you after a certain extent. Anushka, the red-hot girly makes you forget her ‘Arundhathi’ image as she gets into extreme glamour. Of course, she will leave a big lump in your throats out on erotic blast. Salim Ghosh does justice to his role, but is found repeating the same act again and again. Satyan is okay and Shayaji Shinde as a bad-turned-good cop has done a good job. The person taking on the role of Devraj IPS is great though he reminds off Nasser’s similar role in ‘Dhill’.
There are whole lots of absurdities so blatant and Babu Sivan should’ve strictly paid attention to these aspects that would have made the film finer. The second half is too lengthy with already seen ingredients of Vijay Vs Aashish Vidyarthi in ‘Bhagavathy’ and Vijay Vs rowdies in ‘Tirupatchi’. It would’ve been better if Vijay had foreshortened the stunt parts in second half. For God’s sake, he can stop conveying social messages… We’re curiously waiting for some of his best entertainers like ‘Badri’, ‘Youth’ and ‘Ghilli’.
After a long time, almost all the songs in Vijay’s film impress the audiences. Especially, he has completely changed his dancing style from his previous films.
Cinematography isn’t impressive and editing is mediocre.
On whole, Sun Pictures’ vivid promotions may turn this average film into a top-drawer, since it’s far better than some of the previous films that were released by the same production house this year.
Bottom – Line: Vijay’s fate continues























முதல்ல ஒப்பனிங்கு சாங்கு அட ஆமாங்க பைட் முடிஞ்சப் பிறகு தான் சின்னப்புள்ள மாதிரி கேள்வி கேக்க கூடாது ஆமா சொல்லிப்புட்டேன்.
எல்லாரும் போக்கிரி படத்தை கண் முன்னால கொண்டு வாங்க..முடியலையா சிவகாசி படம். ஒகே அது மாதிரி சண்டை முடிந்ததும் எல்லாரையும் போட்டு அடிச்சிட்டு இந்த பாட்டு வருது.
“நான் அடிச்சா தாங்க மாட்ட..
நாலு மாசம் தூங்க மாட்ட..”
இதை ரீமிக்ஸ் பண்ண கை துடித்தாலும் மனசு சத்தியத்தை நினைவுப்படுத்துது.முதல்ல போக்கிரி ஹேங்க் ஒவர்ல இருந்து வெளியில வாங்க. ஒவர்.
அடுத்து தலைவர்(அடுத்த தலைவர் இல்ல சரியா படிக்கவும்) சென்னை வர்றாரு இதுல திருப்பாச்சி ஞாபகம் வந்தா நான் பொறுப்பல்ல.ஹீரோயினை பாக்குறாரு.
“சின்னத் தாமரை..” என்று ஆரம்பிக்கும் பாடல்.இந்த ஒரு பாட்டை நம்பி நான் ஏமாந்துட்டேன்.அருமையான மெலடி.(மெலடி தானே கன்பார்ம் பண்ணுங்க..)
தலைவருக்கும் வில்லனுக்கும் பிரச்சனை உடனே வீடு புகுந்து அடிக்கிறாரு.(புதிய கீதை அதேதான்..).உடனே அவரை ஒரு கூட்டம் தத்துக் கொடுக்குது இல்ல எடுக்குது.(பகவதி ஞாபகம் வரணும்..).வேற என்ன பாட்டு தான்.
அது என்ன பாட்டுன்னா புலி உறுமுது புலி உறுமுது. புலிகளுக்கு எதிராக பாட்டுப் போட்டு டியுன் எழுதி இருக்கிற வரிகளைப் பாருங்க.இதுக்கும் ரீமிக்ஸ் போட கை வருது மனசு தடுக்குது.
“புலி உறுமுது..புலி உறுமுது..” யப்பா முடியல
அதுல ஒரு வரி “பாமரனின் பாமரனின் கூட்டுக்காரன்..” இவர் திறந்த ஏழைகளுக்கான கணினி மையம் அடைச்சே கிடக்கு.
சண்டை (அதுவும் மூஞ்சியில சந்தனம் பூசாம) முடிந்தப் பிறகு ஹீரோயின் கூட டூ இட் இல்லன்னா எப்படி – டூயட் பாடுறாங்க.
அதுதான் “கரிகாலன் காலப் போல..” பரவாயில்லை ரகம்.ஆனா சன் டிவி,சன் மியூசிக் இதை தூக்கி நிறுத்தும்.
அப்புரம் ஒரு பைட்.க்ளைமாக்ஸ் முன்னால ஒரு பாட்டு வேணுமே அதுதான் இது கில்லி,திருப்பாச்சி முக்கா பேண்ட் அப்படி எல்லாம் சொல்லப்புடாது.
எனக்கு சாருலதா மணியின் குரலில் இந்த பாட்டு ரொம்பவே பிடிச்சியிருக்கு.
“என் உச்சி மண்டையில சுர்ங்குது..” சுருங்குது இல்ல.படம் பாத்தா மூளை சுருங்கிரும் அது வேற விசயம்.
அப்புறம் சண்டை அழகியத் தமிழ் மகன் மாதிரி ஒட்டம்.தமிழன் மாதிரி போலீஸை அடிக்கிறது (இது நடுவில் வரும் விட்டுட்டேன்..)
அப்புறம் சுபம்.
ஏதாவது பாட்டு இடம் மாறியிருந்தா சண்டைக்கு வராதீங்க.
வேட்டைக்காரன் – அலசல்
————————-
வில்லு படத்தின் தோல்விக்கு பிறகு விஜய்க்கு வந்திருக்கும் படம்
வேட்டைக்காரன்.பாபு சிவன் இயக்கத்திலும் விஜய் அன்டோனி இசையிலும் கோபிநாத் ஒளிப்பதிவிலும் வேட்டைக்காரன் உண்மையிலேயே செம ஒபெநிங்.
விஜய்யுடன் அனுஷ்கா,ஸ்ரீஹரி,சத்யன்,சாயாஜி சிண்டே,ஸ்ரீநாத்
மற்றும் ரெட் படத்தில் வில்லனாக வருவாரே அவரும் இருக்கிறார்.
வேட்டைக்காரன் படத்தின் கதை என்ன என்றால் போலீஸ்ஆக
துடிக்கும் ஒருவனது கதை என்று சொல்லலாம்.படத்தின் முதல்
பாதி செம ஜாலியா போச்சு.விஜயின் குறும்பான நடிப்பு மற்றும்
முதல் பாட்டுக்கான ஆட்டம் செம.குறிப்பா சத்யனுக்கு கல்யாணம்
பண்ணிவைக்க இவங்க பண்ற அலைப்பறை சூப்பர்.விஜய்க்கு இந்த படத்தில் முதல் பாதியில் ஒரு பைட்தான் என்ன அதிசியம் ஒபெநிங் பைட் இல்ல.அப்புறம் ஆ ஊனு கத்தாமல் கொஞ்சம் சாந்தமா வருகிறார்.
விஜய் இதில் ப்ளஸ் டூ(நாலு வருஷம் கோட்) முடித்து கல்லூரியில்
சேரும் மாணவராக(ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!!) வருகிறார்.
அனுஷ்கா, வழக்கான விஜய் படத்தில் வந்து போகும் கதாநாயகி
தான் என்றாலும் அனுஷ்கா ஜூப்பர்.சத்யன் மற்றும் ஸ்ரீநாத்தின்
காமெடி ஓகே.அப்புறம் இந்த காலேஜ் சீனில் ஒரு மரத்துக்கிட்ட
அனுஷ்காவா கூட்டிட்டு போய் விஜய் கொடுக்கும் முகபாவங்கள்
நல்லா இருந்தது.அப்ப படம் சூப்பர்ஆ? என்று நீங்கள் கேட்டால்
இருங்க சொல்றேன்!!
படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.
விஜய்க்கு சட்டை தைக்கும் போது பட்டன் இல்லாம தச்சிட்டாங்க
போல எப்போவும் சட்டை தொறந்தே இருக்கு.அது ஏன் விஜய்
படத்தில் மட்டும் ரவுடிங்க போது மக்களுக்கு ரொம்ப தொந்தரவு
கொடுக்குராங்கனு தெரியல.அப்புறம் அந்த கையை கிழே
இறக்கியவுடன் காப்பு மேலே ஏறுமே அது ஏறுன மட்டும்
பரவாயில்லை ஒரு பெரிய கல்ல உடைப்பாரு பாருங்க கேட்டா ஹீரோயிசம்னு சொல்வாங்க!!
ரெண்டாவது பாதி, சத்தியமா முடியுல!
அந்த வில்லன் தொல்லை ரெட் படத்திலயே தாங்காது இதுல
வேற வந்து கதை சொல்லி மொக்கை போட்டுட்டு இருப்பான்,
ரொம்ப பலவீனமான வில்லன் என்றே சொல்லவேண்டும்.
அப்புறம் விக்ரமன் படத்தில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆவது
போல் இதில் விஜய் ஒரு பாட்டில் நல்ல தாதாவாக ஆகிறார்.
விஜய் ஒரே பாட்டில் வளர்வது,வில்லன் படிக்கட்டில் உட்கார்ந்து
கவலைப்படுவது,சாயாஜி மாறுவது என்று பல அதுகள் இருக்கின்றன.
அதே போல் நண்பனை கொல்வது,அனுஷாவை யார் என்று
தெரியாது சொல்வது என்பதையெல்லாம் பல படத்தில்
பார்த்த நினைவு.
ஒரு நிமிஷம் இருங்க போன் வருது…
ஜெட்லி: சொல்லு முருகா…
முருகா : படம் எப்படி இருக்குனு கேக்கமாட்டேன் எனக்கு ஒரு சந்தேகம்??
ஜெட்லி: கேளு
முருகா: ட்ரைலர்ல சின்ன தாமரை பாட்டுக்கு ஒரு விக் வச்சிட்டு
விஜய் வராரே எதுவும் மாறு வேஷத்தில் வராரா?
ஜெட்லி : டேய் நீ வேற சும்மா இருடா ஒரு பாட்டுக்கு மட்டும்
வாராரு மச்சி….சரி வை நான் அப்புறம் பண்றேன்.
எதுல உட்டேன்..ரைட், இரண்டாவது பாதி முழம் முழம்ஆக பூ
சுற்றி கொண்டே இருக்கிறார்கள்.படம் வேற மூணு மணி நேரம்
முடியல…நான் போக்கிரி படத்தை கிளைமாக்ஸ் தவிர பத்து
தடவை மேல பார்த்து இருக்கிறேன் ஆனால் வேட்டைக்காரன்
எங்கையோ தேங்கிடுச்சு.முதல் பாதி கதை இல்லை என்றாலும்
போர் அடிக்காம போச்சு ஆனால் ரெண்டாவது பாதியில் சில
இடங்களில் முக்கியமா வில்லன் வரும் இடம் ரொம்ப போர்.
சில காட்சிகளை நம்ப மனம் மறுக்கிறது.
ஜெட்லி பஞ்ச்:
வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த
மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை….
கொசுறு செய்தி:
மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க
நன்றாகவே இருந்தது.
வேட்டைக்காரன் –திரை விமர்சனம்
from CableSankar by Cable Sankar
vettaikaran-movie-posters-audio-release-02 தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகில் எந்த சினிமாவாக இருந்தாலும் புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் அதை சொல்லும் முறையிலான திரைக்கதையினால் பழைய கதையையே புதிதாய் காட்டமுடியும். திரைக்கதையினால்தான் நாம் திரைப்படங்களில் சொல்லும் பல நம்ப முடியாத விஷயங்களையும் நமக்கு தெரிந்தே திரையில் வரும் நாயகனால் முடியும் என்று நம்ப வைப்பது திரைக்கதையின் வெற்றி. உதாரணத்துக்கு பாஷா திரைப்படத்தில் படத்தின் ப்ளாஷ்பேக்கில் ரஜினியின் தற்போதைய கெட்டப்பை விட வயதான கெட்டப்பில் தான் காட்டப்படுவார். ஆனால் பளாஷ்பேக் முடிந்ததும் இளமையான ரஜினி படம் முழுவதும் வருவார். இந்த லாஜிக் மீறல்களை உணர முடியாத அளவிற்கு திரைக்கதை தீப்பிடித்தார் போல ஓடும் அதனால்தான் இன்றளவும் பாஷா மிகச் சிறந்த ஒரு படமாய் ரஜினிக்கு அமைந்தது. அதே போல் இந்தியன் தாத்தா கேரக்டர் சும்மா சர்வ சாதாரணமாய் ஆட்களை வர்மக் கலை மூலம் பிரட்டி போட்டுவிட்டு சண்டை போடுவார், ஓடுவார், கொலை செய்வார். ஆனால் ஒரு என்பது வயது பெரியவரால் அதை செய்ய முடியும் என்பதை கமலின் நடிப்பின் மூலமாகவும், அதற்கான திரைக்கதையின் மூலமாகவும் நம்மை நம்ப வைத்திருப்பார் இயக்குனர்.
சரி வேட்டைக்காரன் படத்திற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா..? நிச்சயம் இருக்கிறது. விஜய் என்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. பெரிய தயாரிப்பாளர். திரும்ப, திரும்ப வெறுத்து போகும் அளவிற்கு விளம்பரம் செய்து பரபரப்பை ஏறபடுத்தும் விநியோகஸ்தர் கிடைத்தாகிவிட்டது. இவ்வளவு நல்ல விஷயஙக்ள் எல்லாம் கிடைத்தும் ஒரு மொக்கை கதையை மீண்டும் நமக்கு அலுக்கும் திரைக்கதையில் சொல்லி ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் பதினைந்து படத்தை ஒரு சேர பார்த்த அலுப்பை ஏற்படுத்தும் வேட்டைக்காரனை தந்திருக்கும் இந்த குழுவை என்னவென்று சொல்வது? விஜய் படமென்றால் இப்படிதான் இருக்கும் இதில் என்ன எதிர்பார்த்து போகிறீர்கள்? உலக சினிமாவையா? அல்லது லாஜிக்கான திரைக்கதையையா..? என்று கேட்பீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விஜயின் எவர்கீரின் ஹிட்டுகளான கில்லியாகட்டும், போக்கிரியாகட்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும், லாஜிக் மீறல்களையும் தாண்டி ஒரு அருமையான பரபரப்பான பார்வையாளர்களை கட்டி போட்டு உட்கார வைக்கும் திரைக்கதை இருந்தது என்பதை நிச்சய்ம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
VettaikaranFront_thumb[2]
+2 நான்கு வருடம் ஃபைல் ஆன ஒரு விஜய்க்கு ரோல் மாடல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஸ்ரீஹரி, அவரை போல ஐ.பி.எஸ்ஸாகி ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று போராடி படித்துக் கொண்டிருக்கும் விஜய், ஒரு சுபயோக சுபதினத்தில் பாஸாகி ஏஸி ஸ்ரீஹரி படித்த காலேஜிலேயே போய் ஜாய்ன் செய்கிறார். சந்தர்ப்ப வசத்தால் தன் நண்பி ஒருவருக்காக ஊரில் யாருமே எதிர்க்க பயப்படும் சாய் குமாரிடம் நேருக்கு நேராய் மோதி பகையை வாங்கிக் கொள்ள, விஜய்யை என்கவுண்டரில் போட்டு தள்ள போலீஸும் அலைய, பவர் இல்லாமல் தனியனாய் இருக்கும் ஸ்ரீஹரி விஜயை அதிலிருந்து காப்பாற்றி உதவுகிறார். விஜய்யை வில்லன் கோஷ்டியினர் என்ன செய்தார்கள்? எப்படி அதிலிருந்து விஜய் தப்பித்தார் என்பதை மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக..
போலீஸ் ர்வியாக விஜய, பெரிதாய் ஏதும் செய்யவில்லை அவர் இந்த படத்தில் வழக்கம் போல ஆடுகிறார், பாடுகிறார், காமெடியாய் நடிக்கிறேன் பேர்விழி என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கண்களை சிமிட்டி, காமெடி செய்கிறார். எடிட்டர், ஒளிப்பதிவாளர் உதவியால் பரபாப்பான சண்டை காட்சியில் பங்கு கொள்கிறார். அவ்வப்போது சாமி.. சாக்கடை என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார் வேறொன்றும் பெரிதாய் சொல்வதற்கு இல்லை.
vettaikaran-movie-posters-audio-release-04 அனுஷ்க்காகாகா.. எனக்கிருந்த ஒரே ஆர்வம் இவர்தான. ஆனால் படத்தில் இவருக்கும் விஜய்க்கும் பெரிதாய் ஏதும் கெமிஸ்டிரியோ, பிஸிக்ஸ்சோ வரவில்லை. அனுஷ்காவுடன் பார்க்கும்போது தமிபியாய் தெரிகிறார். வழக்கமான பெரிய பட்ஜெட் ஹீரோயினுக்கான எல்லா விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் அவரின் ஓவர் மேக்கப் இன்னும் கெடுத்து விடுகிறது. இம்மாதிரியான ஸ்கிரிப்ட்களீல் வழக்கமாய் பார்த்த இரண்டாவது நிமிடம் காத்ல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்.
காமெடி என்கிற பெயரில், ஸ்ரீநாத், சத்யன், ஷாயாஜி ஷிண்டே, சுகுமாரி என்று ஒரே அறுவை பட்டாளம். முடியலைடா சாமி.
படத்தில் ஒரளவேணும் பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் கோபிநாத். விஜய் ஆண்டணியின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது ஹிட் ரகமாய் இருந்தாலும் படத்தில் ராங் பிளேஸ்மெண்ட். முதல் நான்கு வரிகளில் இருக்கும் பெப் அடுத்தடுத்த வரிகளில் சுருதி இறங்கி விடுகிறது.
சமீப காலத்தில் இவ்வளவு மொக்கை வில்லனை பார்க்கவில்லை. அவ்வப்போது காரில் வந்திருந்து ஹைஸ்பீடில் நிற்பதும் நுணலும் தன் வாயால் கெடும் அல்ப சப்பையாக சலிம் கவுஸ். நாலு சீனுக்கு ஒரு முறை ஒரு மாசத்தில அவன் எங்கயோ போயிட்டான், மூணு மாசத்தில பெரிய ஆள் ஆயிட்டான் என்று சொல்லிக் கொண்டிருப்பதை தவிர, வேறொன்றும் பெரிதாய் செயய்வில்லை.
இவரின் மகனாய் சாய்குமார், இவரின் ஹேர்ஸ்டைலும் பாடிலேங்குவேஜும் ஓகே. ஆனால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் அளவுக்கு மெனக்கெடுகிர்றார். படம் முழுக்க இவர் ஏதோ வெறி பிடிதார் போல கத்துகிறார்.
அவ்வளவு பெரிய கோடீஸ்வர வில்லன் படு மொக்கையாய் சாராயம் கடத்துவதும், சிட்பண்ட் கம்பெனி நடத்துவதும், போன்ற ஏப்ப சாப்பை வேலைகளாய்தான் செய்கிறாரே தவிர புதிதாய் ஏது யோசிக்க முடியவில்லையா இயக்குனரே. ? ஒருவன் சாதாரணமாய் தன் சாம்ராஜ்யத்தையே காலி செய்பவனை பற்றி முன்று மாசத்தில் பெரிய ஆளாயிட்டான் ,ஆறுமாசத்தில பெரியாளாயிட்டான் என்று கமெண்டரியையா கொடுத்து கொண்டிருப்பான். பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ.? பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்..? வழக்கமாய் என்னதான் ரவுடியானாலும், ஏழைப்பங்காளனாகவும், வில்லனை பழிவாஙக் அவனது சொத்துகளை அழிப்பதும், லாலிபாப் குழந்தை கூட அடுத்த காட்சி என்னவென்று சொல்லிவிடும்.
நல்லா ஒரு விஷயமும் இல்லையா என்றால் ஆங்காங்கே பாடல்களில் விஜ்யின் நடனமும், சின்ன சின்ன ரியாக்ஷன்களும், விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் பெரியதாய் ஜோடி சேரவில்லை என்றாலும் சில இடங்களில் பாடல்களில் அனுஷ்கா நச். அதே போல் என்னடா எல்லா விஷயத்திலும் மொக்கையாகிவிட்டானே வில்லன் என்ன செய்ய போகிறான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அமைச்சராகப் ஆயத்தமாகும் காட்சி.. அடநல்ல மூவாக இருக்கிறதே என்று லேசாய் புருவம் உயர்த்த வைக்கும் கட்சிகள்
வேட்டைக்காரன் – எலி வேட்டை
வேட்டைக்காரன் – FIR
டிஸ்கி 1: உள்ளே “நிறைய” விஷயங்கள் சொல்ல போகிறேன். அதனால் படம் பார்க்கும் ஆவல் இருந்தாலும் படித்துவிட்டு பாருங்க.
டிஸ்கி 2: நீங்க ஏற்கனவே விஜய் படம் நிறைய பாத்திருந்தீர்கள் என்றால் இந்த விமர்சனம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும். இது தான் இந்த விமர்சனத்துக்கு ஸ்பாயிலர்.
எச்சரிக்கை: படத்தின் இடையே சாதா டீ/காபி வாங்கிக் குடித்தாலும் மசாலா டீ/காபி சாப்பிட்ட உணர்வு வருவதை தவிர்க்க முடியாது.
இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்டைக்காரன்.
முதலில் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் ஒருவர் ஜோல்னா பையுடன் இறங்கி வருகிறார். பிச்சைக்காரன் தட்டை எல்லாம் குடி போதையில் உதைக்கிறார். சரி இவர் தான் வில்லன் என்று நீங்க நினைத்தீர்கள் என்றால், அங்கே தான் டிவிஸ்ட் இருக்கு. ரயில் உள்ளே ஏறுகிறார். அங்கே ரவுடி, ஆள் கடத்தல் எல்லாம் இருக்கு. உடனே இவர் ஜோல்னா பையிலிருந்து துப்பாக்கி எடுத்து அந்த ரவுடியை சுடுகிறார். இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜ் ஐபிஎஸ்(ஸ்ரீஹரி).
அடுத்து தூத்துக்குடியில் இந்த தேவராஜ் கட்டவுட் இருக்கு. எதற்கு என்று போஸ்ட் மேன் விசாரிக்க. அந்த கட்டவுட் வைத்தது விஜய். (நம்ம ஒரிஜினல் ஹீரோ)
இவரை மாதிரி என்கவுண்டர் போலீஸாக விரும்புவது தான் விஜய்யின் லட்சியம். இதுக்கு ஒரு உதாரணம். ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார். தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து(அந்த சாதாரண போலீஸுக்கு அது தேவையே இல்லை) தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் இங்கே ஒரு பாட்டு இருக்கு.
அதுல ஆலமர பள்ளிக்கூடத்தை ஆக்ஸ்போர்ட் ஆக்கறேன் என்கிறார்.
இப்ப விஜய் இந்த மாதிரி ஊதாரி தனமாக சுற்றும் போது ( அதாவது போலீஸ் ரவியாக ) எந்த சினிமா அப்பா அம்மாவுக்கு தான் கோபம் வராது? டில்லி கணேஷ் அப்பா. அப்பறம் கொஞ்சம் புதுசா ஒரு அம்மா வருகிறார். வந்து மகனுக்கு அறிவுரை. அதுக்கு விஜய் செய்யும் காமெடி என்று படம் நகர்ந்து கொண்டு இருக்கு. விஜய் தன் நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா? இருக்கவே இருக்கு. நண்பருக்கு அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.
உடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன் – இதை வேற நான் சொல்லணுமா? அதே தான். ஸ்லோ மோஷனில் அனுஷ்கா தலையை கோதிவிட்டுக்கொண்டு ரயில் ஏற புறப்படுகிறார். நம் எதிரே யாராவது அது மாதிரி வந்தால் அந்த பொண்ணை பார்த்துக்கொண்டு மற்றவர்களை தான் இடிப்போம் ஆனால் படத்தில் ஹீரோ அப்படி செய்யலாமா? (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்து ஹீரோயினை பார்த்து பாடல் காட்சியை தவிர ) வழியக்கூடாது. மற்றவர்களை பார்த்து கொண்டு இவரை அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தோளில் இடிக்கிறார். உடனே கீழே விழுந்ததை, சத்த்துகுடிங்க ( ஏன் சாத்துகுடி ? ஊர் தூத்துக்குடி அதனால) எல்லாம் பொறுக்கும் போது என்ன வரும் காதல் தான் (நமக்கு பெருமூச்சு).
இப்படி ஒவ்வொன்றாக நான் விளக்கிகொண்டு இருக்க முடியாது. நீங்களா இனிமே புரிஞ்சிக்கணும்.
இப்ப திரும்பவும் விஜய். மீண்டும் அந்த ரோல் மாடல் போலீஸாக ஆகும் படலம். அந்த தேவராஜ் +2வில் 4 முறை கோட்டு அடித்திருப்பார். இவரும் அதே மாதிரி. அவர் படிப்புக்கு ஆட்டோ ஓட்டு ஃபீஸ் கட்டினாராம். இவரும் அதே மாதிரி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து… அவர் படித்த அதே காலெஜில் – இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டியிருக்குமே! இதில பாட்ஷா மாதிரி மஞ்சள் கலர் ஆட்டோ, மஞ்சள் கலர் கர்சீப் எல்லாம். இதற்குள் விஜய் படித்துவரும் காலேஜில் ரவுடிகள் கொலை நடக்க போலீஸாக வரும் ஷாயாஜி ஷிண்டே அதை கண்டுக்கொள்ளாமல் போகிறார். அதனால இவர் கெட்ட போலீஸ். கதை இப்ப தான் பில்டப் ஆகிறது.
காலேஜ் தோழனாக சின்னிஜெயந்துக்கு வயசான காரணத்தால் வேறு ஒருவரை பிடித்திருக்கிறார்கள். இவர் காமெடி செய்ய ஸ்கோப் இல்லாத காரணத்தால் இவர் ஹேர் ஸ்டைல், கிருதா எல்லாம் கோணா மாணா என்று வெட்டி காமெடி செய்திருக்கிறார்கள்.
பாபிலோனின் தொங்கு தோட்டமும் மாதிரி தலை மயிர் வைத்துக்கொண்டு முகத்தில் நிறைய வெட்டுக் காயங்களுடன் இருந்தால் அவர் யார்? நூறு மார்க் உங்களுக்கு. சரியா கண்டு பிடிச்சீங்க. அவர் தான் படத்தின் ரவுடி வில்லன். செல்லா.
இதுக்கு முன்னாடி ஒரு பாட்டு வந்துவிட்டது அதை சொல்ல மறந்துவிட்டேன். பில்லா படத்தில் நயன் பில்லா என்ற டாட்டுவுடன் வருவாரே அதே மாதிரி இதில அனுஷ்கா இடுப்பில் வேற ஏதோ டாட்டுவுடன் வருகிறார். என்ன என்று படிப்பதற்குள் போய்விட்டது. இப்ப எடிட்டிங் எப்படி என்று தெரிந்திருக்கணுமே ?
அதுக்குள்ள பெண் காலேஜ் ஸ்டூடண்டை இந்த செல்லா ரவுடி வீட்டுக்கு கூப்பிட நம்ம விஜய் என்ன செய்வார் உடனே பொங்கி எழுகிறார். அவர் இருக்கும் பேட்டைக்கு தனி ஆளாக போய் அவரின் அடியாட்கள் ஒவ்வொருவராக வர அவர்களை தும்சம் பண்ணிவிட்டு கடைசில் இந்த ரவுடியையும் அடித்து சாத்துகிறார். அவர் அடித்து தும்சம் பண்ணிய இடத்தில் சுனாமி வந்தால் கூட அவ்வளவு அழிவு வந்திருக்காது. அவ்வளவு அழிவு ஏற்படுத்துகிறார் விஜய். மீயூசிக் கேட்கவா வேண்டும் கொடுத்த காசுக்கு விஜய் ஆண்டனி தன் பங்கிற்கு வில்லன்களை டிரம்ஸால் அடித்து சாத்துகிறார். அவர் அடித்த அடியில் எனக்கு உச்சாவே வந்துவிட்டது.
இங்கே இடைவேளி என்று நினைத்தால், அது தான் இல்லை. விஜயை உடனே போலீஸ் அள்ளிக்கிட்டு போய் என்ன செய்யும்? ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே? சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். உடனே அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். அவரை எங்கோ காட்டுப்பகுதியில் அழைத்துக்கொண்டு போக, அங்கே விஜய் தப்பிக்கிறார். உடனே அவரை போலீஸ் துரத்துகிறார்கள், இவர் ஓட, போலீஸ் துரத்த கடைசியில் எங்கே போய் நிற்பார்? தெருவில் துரத்தினால் முட்டுச்சந்தில் போய் நிற்கணும், காட்டில் துரத்தினால் கடைசியில் அருவியின் தலையில் போய் நிற்கணும் இப்ப என்ன நடக்கும் ? இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா? இப்ப கீழே போகலாம்.
கீழே போன ஹீரோ குளத்திலிருந்து குளித்து எழுதிருப்பது மாதிரி எழுதவுடன் என்ன ஆச்சரியம், (!) முகத்தில் ஒரு காயம் கூட இல்லை!! ஃபிரஷாக இருக்கார். மேக்கப்பை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.
தப்பித்த விஜய் நேராக தேவராஜ் வீட்டுக்கு போகிறார். அங்கே விஜக்கு அவர் ஹெல்ப் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். ஏன் என்று விஜய் கொதிக்க என்ன உடனே ஃபிளாஷ் பேக் தான். இது கூட நான் சொல்லணுமா. இங்கேயும் ஒரு டிவிஸ்ட் இருக்கு.
ஃபிளாஷ்பேக்கில் தேவராஜனுடைய மனைவி மக்கள் எல்லாம் கிளோஸ். இவர் கண்களும் போய்விடுகிறது என்பது மற்றொரு டிவிஸ்ட். அடுத்த டிவிஸ்ட் தேவராஜன் தான் விஜயை போலீஸிலிருந்து காப்பாத்தினார் என்ற டிவிஸ்ட் கூட இருக்கு. எப்படி என்று நீங்களே தியேட்டர் போய் பாருங்க.
உடனே பாட்ஷாவில் ரஜினி ஜனகராஜ், மற்றும் சிலருடன் வருவது போல கூட்டணி அமைத்துக்கொண்டு வில்லனை அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.அப்போது தான் படத்தில் இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பணக்கார ரவுடி. அதாவது ஜிப்பா போட்ட ரவுடி. இவரை விஜய் போய் மீட் பண்ணுகிறார். அவரும் தன்னுடைய அருமை பெருமைகளை (அதாவது வண்டவாளங்களை) விஜய்க்கு விளக்குகிறார். அதில மக்களுக்கு என்மீது பயம் என்று அடிக்கடி சொல்லி அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய ரவுடி என்று பட்டம் என்று தான் வாழ்க்கையில் சாதித்த ரகசியத்தை கிட்டதட்ட ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி சொல்லுகிறார் விஜய் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் அதை வீடியோ எடுத்து சன் டிவியில் போட்டிருந்தால் சன் டிவிக்கும் ஏ.வி.எமுக்கும் இவ்வளவு செலவு இருந்திருக்காது.
விஜய் இந்த வில்லனுக்கு படிப்படியாக தன் மீது பயத்தை உண்டு பண்ணுகிறார். வில்லனுக்கும் இவருக்கும் போர் ஆரம்பிக்கிறது. விஜயின் நண்பரை வில்லன் கொல்ல உடனே வில்லனின் மகனை ( ரவுடி செல்லா ) கொல்ல இப்படி காமெடியாக போகிறது கதை.
மெயின் வில்லனுடன் சண்டை போட்டால் அப்பறம் கிளைமேக்ஸில் என்ன செய்ய முடியும் என்று நினைத்திருப்பார் இயக்குனர். உடனே இருக்கவே இருக்கு மதுரை அங்கிருந்து ஒரு ஆளை கொண்டு வந்துவிட்டார். அவர் வந்து விஜயின் காதலியை கிட்நாப் செய்ய விஜய் காதலியை மீட்டு கொண்டு வருகிறார் என்று நான் சொல்ல வேண்டுமா? அதை செய்து விட்டு பைக்கில் ஏற்றி ரோட்டில் வரும் போது காதலி எனக்கு ஒரு கிராமத்தில் சின்ன வீடு வேண்டும், குழந்தை, தோப்பு, அமைதியான வாழ்க்கை எல்லாம் வேண்டும் என்று நடந்த பரப்பரப்பு எதுவும் இல்லாமல் சொல்லுகிறார். இங்கே தான் மேலும் ஒரு டிவிஸ்ட் இருக்கு. இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிரே ஒரு லாரி வந்து இவர்களை மோதுகிறது. என்ன நடந்ததோ என்று நாம் பரபரக்க ஃபுல் மேக்கப்புடன் “என் உச்சி மண்டையில கிரி கிரி” என்று ஒரு பாட்டு. சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப செளக்கியமான திரைக்கதை.
இனிமே வேகமா சொல்லிடறேன். எனக்கே பொறுமை இல்லை. மக்கள் தன்னிடத்தில் பயப்படுவதில்லை என்று அமைச்சர் ஆக முயற்சி செய்கிறார் வேதநாயகம். ஆவதற்கு முன்பே அராஜகம் செய்கிறார். விஜய் இவர் இருக்கும் இடத்துக்கு வர முதல் சீனில் அடிவாங்கிய அடியாட்கள் திரும்பவும் கியூவில் வந்து அடிவாங்கிறார்கள். கடைசியில் வில்லனை அடிக்கும் முன் ஒரு டிவிஸ்ட் இருக்கு போலீஸ் வந்து விஜயை பிடிக்கிறார்கள். இன்னும் டிவிஸ்ட் இருக்கு. நம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். அது தானே நியாயம் ? பழிக்கு பழி.
விஜய் நமக்கு எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போலீஸ் ஜீப்பில் போகிறார். உடனே சீட்டை விட்டு எழுதிருக்காதீர்கள், இருக்கு. விஜய் அடுத்து போலீஸ் டிரையினிங் கிரவுண்டில் இருக்கிறார். இங்கேயும் டிவிஸ்ட் இருக்கு. இவரை போலீஸ் ஆகும் படி தேவராஜ் வற்புறுத்துகிறார். ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளாமல் ( ஹேர் ஸ்டைல் போய்விடுமே ) எல்லோரிடத்திலும் உள்ளே ஒரு போலீஸ் இருக்கு என்று ஏதோ டையலாக் சொல்லிவிட்டு போகிறார். அவரை பார்த்து கண் தெரியாத தேவராஜ் சல்யூட் அடிக்கிறார். என்னை பார்த்து நீங்கள் எல்லாம் சல்யூட் அடிக்க கூடாது என்று விஜய் சொல்லிவிட்டு நகர கடைசி டிவிஸ்ட் நானும் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.
சன் பிக்சர்ஸும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். டாட்டா சுமோ போகும் போது ரோட்டில் பறக்கும் கிழிந்த பேப்பர் கூட தினகரன்.
இதை தவிர படத்தில் பஞ்சமே இல்லாமல் பஞ்ச டயலாக் இருக்கு. சன் டிவி விளம்பரத்தில் அடிக்கடி போடுவதால் அதையும் இங்கே சொல்லி மேலும் நம் மக்களை இம்சிக்க விரும்பலைங்கண்ணா!!
கேமரா, எடிட்டிங் : இதற்கு ஸ்டில் போட்டோ கிராபராக இருந்திருப்பார் போல, அதனால் எல்லா இடத்திலும் ஸ்டில் பண்ணுவது எரிச்சல்.
இசை: இருக்கு, வெளியே வந்த பிறகு காது இருக்கா என்று எதுக்கும் செக் செய்துக்கொள்ளுகள்.
இட்லிவடை மார்க் – 4.5/10
என் சீட்டுக்கு பின்னாடி இவ்வளவு நேரம் இந்த படத்தை பார்த்த எங்களுக்கு தான் நீங்க சல்யூட் அடிக்க வேண்டும் என்று ஒருவர் ஏறக்குறைய கத்தினார்.
“குடும்பத்துடன்” பார்க்கலாம். எதுக்கு குடும்பத்துக்கு மஞ்சள் கலர் என்று கேட்கார்தீர்கள் :-)
வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.
வே(ஓ)ட்டைக்காரன்
நன்றாக இருக்கும் ஒரு ஆளை தினமும் ஒருமுறை “ஏன் சார் ஒரு மாதிரி ஆயிட்டீங்க? முகமெல்லாம் வெளுத்து போனாப்ல” என்று சொல்லிக் கொண்டே வந்தால் அவருக்கு உண்மையிலேயே நாம் இப்படி ஆகிட்டோமோ! என்று தோன்றி விடும். மகன் தொலைக்காட்சியும் அந்த வேலையைத்தான் செய்கிறார்கள். வெற்றி நடை போடுகிறது என்ற விளம்பரம் நேற்று மாலையே துவங்கிவிட்டது.
படத்தின் துவக்கத்தில் வரும் “நா அடிச்சா” என்ற பாடல் வரியை “நா நடிச்சா” என்று மாற்றிவிடலாம். விஜய் அந்தளவுக்கு நம் பொறுமையை சோதிக்கிறார். ஆனால் அவரால் அவ்வளவுதான் செய்யமுடியும். ஒரு பாடலில் கலர் விக் வைத்து ஆடியதே சாதனைதான். கெட்டப் சேன்சாம். கொடுமை.
கதை. பெரிதாக ஒன்றும் இல்லை. போலிஸ் ஆக வேண்டியவன் பொறுக்கி(நல்ல)ஆன கதைதான்.
அதைஏகப்பட்டபில்டப்,சேஷ்டைகள்,கொணஷ்டைகளோடு மூன்று மணிநேரம் வேட்டையாடியிருக்கிறார்கள்.
அனுஷ்கா? விஜய்யின் பெரியக்கா மாதிரி இருக்கிறார். உயரம் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பை காட்ட வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தும் மற்றதை காட்டவில்லை என்பது எனக்கும்,கேபிளுக்கும் ஏமாற்றமே. படத்தில் நகைக்கடையில் வரும் ஒரு பிகர் உண்மையில் நன்றாக இருந்தது.
வில்லன் சலீம்கோஷ். இன்னும் வெற்றிவிழாவிலேயே இருக்கிறார். பேஸ் வாய்ஸ் போதும். பயம் காட்ட என்று நினைத்து விட்டார் போலும்.அவரை காட்டி அழும் குழந்தைக்கு கூட சோறுட்ட முடியாது. இன்னொரு வில்லன். சாய்குமார். சோப்ளாங்கியாக வருகிறார். நீளமாக வளர்த்திருப்பதை தவிர ஒரு…. ம் புடுங்கலை.
அநேகமாக பாபு இனி சிவனே என்று உட்காரும் நிலை வரலாம். மொக்கையான திரைக்கதை. வாயால் பில்டப் கொடுத்து புரொடியூச்ரை ஏமாற்றியிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் (கிடைத்தால்)
காமெடி? விஜய் பண்ணுகிறார். சிரிப்புத்தான் வருகிறது. என்ன? நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள வேண்டும்.
படத்தின் நல்ல விஷயமாக இரண்டை சொல்லலாம்.
ஒன்று : இடைவேளை
இரண்டு:முடிவு
டிஸ்கி : சைதை ராஜ் தியேட்டரில் விஜய் கட் அவுட்டிற்கு பால் ஊற்றினார்கள். அது படத்திற்கும்தான்
வேட்டைக்காரன் – அலசல்(பிற்சேர்க்கையுடன்)
வில்லு படத்தின் தோல்விக்கு பிறகு விஜய்க்கு வந்திருக்கும் படம்
வேட்டைக்காரன்.பாபு சிவன் இயக்கத்திலும் விஜய் அன்டோனி இசையிலும் கோபிநாத் ஒளிப்பதிவிலும் வேட்டைக்காரன் உண்மையிலேயே செம ஒபெநிங்.
விஜய்யுடன் அனுஷ்கா,ஸ்ரீஹரி,சத்யன்,சாயாஜி சிண்டே,ஸ்ரீநாத்
மற்றும் ரெட் படத்தில் வில்லனாக வருவாரே அவரும் இருக்கிறார்.
வேட்டைக்காரன் படத்தின் கதை என்ன என்றால் போலீஸ்ஆக
துடிக்கும் ஒருவனது கதை என்று சொல்லலாம்.படத்தின் முதல்
பாதி செம ஜாலியா போச்சு.விஜயின் குறும்பான நடிப்பு மற்றும்
முதல் பாட்டுக்கான ஆட்டம் செம.குறிப்பா சத்யனுக்கு கல்யாணம்
பண்ணிவைக்க இவங்க பண்ற அலைப்பறை சூப்பர்.விஜய்க்கு இந்த படத்தில் முதல் பாதியில் ஒரு பைட்தான் என்ன அதிசியம் ஒபெநிங் பைட் இல்ல.அப்புறம் ஆ ஊனு கத்தாமல் கொஞ்சம் சாந்தமா வருகிறார்.
விஜய் இதில் ப்ளஸ் டூ(நாலு வருஷம் கோட்) முடித்து கல்லூரியில்
சேரும் மாணவராக(ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!!) வருகிறார்.
அனுஷ்கா, வழக்கான விஜய் படத்தில் வந்து போகும் கதாநாயகி
தான் என்றாலும் அனுஷ்கா ஜூப்பர்.சத்யன் மற்றும் ஸ்ரீநாத்தின்
காமெடி ஓகே.அப்புறம் இந்த காலேஜ் சீனில் ஒரு மரத்துக்கிட்ட
அனுஷ்காவா கூட்டிட்டு போய் விஜய் கொடுக்கும் முகபாவங்கள்
நல்லா இருந்தது.அப்ப படம் சூப்பர்ஆ? என்று நீங்கள் கேட்டால்
இருங்க சொல்றேன்!!
படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல என்றாலும் முதல் பாதி ஓரளவுக்கு வேகமாவே போகிறது.இன்டெர்வல்க்கு கொஞ்சம் முன்னாடி இருந்து தான் விஜயின் விஸ்வரூபம் எட்டி பார்க்கிறது. அந்த பெரிய அருவியிலிருந்து குதிக்கிறார் அதெப்படிங்க கரெக்ட்ஆ குருவியிலும் அந்த ரயிலை பறந்து புடிக்கும் போது இன்டெர்வல் விடுவாங்க இந்த படத்திலும் அருவியில் இருந்து குதிக்கும் போது இன்டெர்வல்.ஆனா ஒண்ணுங்க அவரு குதிக்கும் போதும் ஒரே ஸ்டில்லில் தான் நிற்கிறார்.
விஜய்க்கு சட்டை தைக்கும் போது பட்டன் இல்லாம தச்சிட்டாங்க
போல எப்போவும் சட்டை தொறந்தே இருக்கு.அது ஏன் விஜய்
படத்தில் மட்டும் ரவுடிங்க போது மக்களுக்கு ரொம்ப தொந்தரவு
கொடுக்குராங்கனு தெரியல.அப்புறம் அந்த கையை கிழே
இறக்கியவுடன் காப்பு மேலே ஏறுமே அது ஏறுன மட்டும்
பரவாயில்லை ஒரு பெரிய கல்ல உடைப்பாரு பாருங்க கேட்டா ஹீரோயிசம்னு சொல்வாங்க!!
ரெண்டாவது பாதி, சத்தியமா முடியுல!
அந்த வில்லன் தொல்லை ரெட் படத்திலயே தாங்காது இதுல
வேற வந்து கதை சொல்லி மொக்கை போட்டுட்டு இருப்பான்,
ரொம்ப பலவீனமான வில்லன் என்றே சொல்லவேண்டும்.
அப்புறம் விக்ரமன் படத்தில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆவது
போல் இதில் விஜய் ஒரு பாட்டில் நல்ல தாதாவாக ஆகிறார்.
விஜய் ஒரே பாட்டில் வளர்வது,வில்லன் படிக்கட்டில் உட்கார்ந்து
கவலைப்படுவது,சாயாஜி மாறுவது என்று பல அதுகள் இருக்கின்றன.
அதே போல் நண்பனை கொல்வது,அனுஷாவை யார் என்று
தெரியாது சொல்வது என்பதையெல்லாம் பல படத்தில்
பார்த்த நினைவு.
ஒரு நிமிஷம் இருங்க போன் வருது…
ஜெட்லி: சொல்லு முருகா…
முருகா : படம் எப்படி இருக்குனு கேக்கமாட்டேன் எனக்கு ஒரு சந்தேகம்??
ஜெட்லி: கேளு
முருகா: ட்ரைலர்ல சின்ன தாமரை பாட்டுக்கு ஒரு விக் வச்சிட்டு
விஜய் வராரே எதுவும் மாறு வேஷத்தில் வராரா?
ஜெட்லி : டேய் நீ வேற சும்மா இருடா ஒரு பாட்டுக்கு மட்டும்
வாராரு மச்சி….சரி வை நான் அப்புறம் பண்றேன்.
எதுல உட்டேன்..ரைட்,
(பிற்சேர்க்கை)
நான் ஒரு வேளை விஜய் ரசிகனாக இருந்தால்:
படம் செம மாஸ்.என்ன பைட் கொஞ்சம் கம்மி.
விஜய் டான்ஸ் நோ சான்ஸ்.விஜய் காமெடி எல்லாம்
சூப்பர்.அந்த காப்பு கையில் ஏறுரா சீன்லாம் கலக்கல்.
நான் ஒரு வேளை அஜித் ரசிகனாக இருந்தால்:
என்னயா படம் இது, கையாள குத்தி கல் எல்லாம்
உடைக்கிறாரு.அதுவும் அந்த அருவியில் இருந்து
குதிக்கிற சீன் செம காமெடி அதை விட காமெடி
விக் போட்டுட்டு ஒரு பாட்டுக்கு வர்றது.சாமிக்கிட்ட
மட்டும் சந்தாம பேசுவாராம் எனக்கு என்னமோ போன
படத்துல கொடுத்த ஆப்பு தான் சாந்தமா பேச வச்சிருக்குன்னு
தோணுது!!!
நான் ஒரு சராசரி சினிமா ரசிகன் என்பதால்:
இரண்டாவது பாதி முழம் முழம்ஆக பூ சுற்றி கொண்டே இருக்கிறார்கள்.படம் வேற மூணு மணி நேரம் முடியல..
நான் போக்கிரி படத்தை கிளைமாக்ஸ் தவிர பத்து தடவை
மேல பார்த்து இருக்கிறேன் ஆனால் வேட்டைக்காரன்
எங்கையோ தேங்கிடுச்சு.முதல் பாதி கதை இல்லை என்றாலும்
போர் அடிக்காம போச்சு ஆனால் ரெண்டாவது பாதியில் சில
இடங்களில் முக்கியமா வில்லன் வரும் இடம் ரொம்ப போர்.
சில காட்சிகளை நம்ப மனம் மறுக்கிறது.
ஜெட்லி பஞ்ச்:
வேட்டைகாரனுக்கு இரண்டாவது பாதியில் எந்த
மிருகமும்(சுவாரசியமும்) சிக்கவில்லை….
கொசுறு செய்தி:
மிர்ச்சி சிவா நடிக்கும் தமிழ் படத்தின் ட்ரைலர் போட்டாங்க
நன்றாகவே இருந்தது…..
விஜய்,சன் பிக்சர்ஸ் – இவர்களில் யார் அடுத்த ராமராஜன்
ராமராஜன் படமே இல்லாத நிலையில் அவருடைய பேட்டி குமுதத்தில் வந்தது.அதில் அவர் சொன்ன ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடித்தது.”நான் தொடர்ந்து இருபத்தியாறு படம் ஹிட் கொடுத்தவன்.இதை யாராலும் முறியடிக்க முடியாது..”. இதை படித்தப் பிறகு உருண்டு புரண்டு சிரித்தேன். கூடிய விரைவில் ராமராஜனின் நிலை விஜய்க்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. விஜய்யும் பிரசாந்த்,ராமராஜன் போல ஒரு காமெடி பீஸ் ஆகாமல் இருக்க இந்த ஸ்டிரியோ டைப் படங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆனால் விஜய் ராமராஜன் ஆக விட மாட்டோம்.ராமராஜனின் கதி எங்களுக்கு தான் நேர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் அடம் பிடிக்கிறது.விதி வலியது. வேட்டைக்காரன் இப்படி கேவலமாக இருப்பது தெரிந்தும் சுறாவுக்கு வலை வீசி இருக்கிறார்கள்.
விலை தான் ரொம்ப ஜாஸ்தி.காஸ்ட்லி சுறா.நாங்க எல்லாம் காஸ்ட் கட்டிங்கில் பிழைப்பு நடத்தும் பார்ட்டிகள்.ராமராஜனாவது தொடர் ஹிட் குடுத்து சாப்பிட வழியில்லாமல் இருக்கிறார்.இவங்க எல்லாம் தொடர் மொக்கைகள் குடுத்து என்னை சாப்பிட விடாமல் செய்து விடுவார்கள் போல. ஒவராக மொக்கை படங்கள் வெளியிடாதீங்க.அப்புறம் எந்திரன் கதி அதோ கதி தான்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு இப்படி மிதமிஞ்சிய விஷத்தைக் குடுக்குறீங்களே. எந்திரன் ஆலாகாலம் விஷமாகி விடும்.
குருவி செத்துப் போச்சு.வில்லு நெளிஞ்சு போச்சு.அப்ப வேட்டைக்காரன் என்ன பண்ணப் போறான் என்று நேற்று நண்பன் சொன்னான். கோட்டிக்காரன் ஆக்கிப் புடுவான் அப்படி சொன்னேன். அதே மாதிரி ஆகிப் போச்சே மக்கா.
இனிமே எப்ப விஜய் படம் பாப்பேன்னா சாரு ஆன்லைன்ல என்னைக்கு விமர்சனம் வருதோ அன்னைக்கு தான் நானும் படம் பாப்பேன்.
ராமராஜன் செய்த தப்பு – எப்ப பாத்தாலும் பாட்டுப் பாடுறது.மாட்டைக் கூட பாட்டாலே அடக்குறது.தெம்மாங்கு பாட்டுக்காரன்,வில்லுப் பாட்டுக்காரன்,கரகாட்டக்காரன்,எங்க ஊரு காவல்காரன் இப்படி நடிச்சே காணாம போயாச்சு.
விஜய் படத்திலையும் அது தான் நடக்குது எதாவது ஊர்ல இருந்து கிளம்ப வேண்டியது – இன்னோரு ஊருக்கு போய் ஆ (இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.) ஆள் அடிக்கிறது.இதை அருண் விஜய் வரை எல்லோரும் பண்ணிட்டாங்க.அதனால் ரூட்டை மாத்துங்க.இல்ல சுறா இறாவாகிரும்.
ராமராஜனாவது எம்.பி ஆனாரு.இப்படியே நடிச்சா அப்புறம் எம்பி கூட குதிக்க முடியாது. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட தெனாவட்டு படத்துக்கும் வேட்டைக்காரன் படத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ராமராஜனுக்கு டவுசர் என்றால் விஜய்க்கு முக்கா பேன்ட். இந்த படம் நல்லா இருக்குன்னு விஜய் ரசிகர்கள் சொன்னால் அவர் இந்த மாதிரி தொடர்ந்து மொக்கை படம் கொடுத்து இன்னும் கொல்வார்.
டிஸ்கி :
பேசாமல் காதலுக்கு மரியாதை படத்தை ரீமேக் பண்ணுங்க.
சன் டிவிக்கு – பசங்க,ஈரம் அது மாதிரி படங்களை வாங்குங்க.இந்த ஈர வெங்காயத்தை எல்லாம் எடுத்து எங்களுக்கு உள்காயம் உண்டாக்காதீங்க.
வேட்டைக்காரன் – பார்டரில் பாஸ்!
ரஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!
வேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது…?
வழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி… ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…
முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.
விஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.
அனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!
முதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.
படத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா! குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு!) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு!
விஜய்?
ஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக்கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்….
சீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி – க்ளாஸ்! அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது!
வசனங்கள் – பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.
இசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல!) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.
இடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் – விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்!
வேட்டைக்காரன் – 42%
விஜயின் அவ்வ்வ்வ் மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் …… வேட்டைக்காரனை
டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில……
1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.
பார்க்காதவன் பார்க்க துடிப்பான்.
பார்த்தவன் சாக துடிப்பான்
2.டைரக்டர்:நம்மளோட அடுத்த
படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யால முதல்ல ஜோக் அடிச்சது யாரு
நீயா? நானா?
3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி
தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.
4.முதல் பரிசு அடையார்ல பிளாட்,
ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம்: சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா, விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,
அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்…
முக்கியமா உயிரோட இருக்கனும்
5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டை எப்படி தயாரிப்பார்.–
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார் (ரீமேக்)
6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
“விஜய” புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா..
படம் எப்படி ஓடும் ஐயா?
7.விஜயின் அடுத்த 7 படங்கள் வேட்டைக்காரன்,
சமையல்காரன், குடிகாரன், பைத்தியக்காரன், பிச்சைக்காரன், குடுகுடுப்பைக்காரன்
8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..
இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.
9. 140 பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.
6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.
10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன்.
உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா
நீ என்ன கொல்ல பாக்குறியே…….
11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும்
அதான் சொல்லலை.
படம் நல்லாயிருக்கான்னு சிரிப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. நான் கேட்டவரை மவுத் டாக் பாசிட்டிவ்தான். சிக்னலில் நின்ற போது பேசிக் கொண்டிருந்த இருவர், அலுவலகத்தில் மொபைலில் பேசியவர், என்னுடன் படம் பார்க்க வந்ததிலே சிலர் என எங்கும் படத்தைப் பற்றி நல்ல டாக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனக்கு பிடிக்கவில்லை என்பதால் படம் யாருக்குமே பிடிக்காது என்பதில்லை. கடைசியாக எனக்கு பிடித்த விஜய் படம், நம்புங்கள் போக்கிரி அல்ல. சச்சின். திருப்பாச்சியெல்லாம் ஏண்டா என்று வெளிவந்தேன் சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து. ஆனால் தமிழகத்தில் அதன் ரிசல்ட் பிளாக்பஸ்டர்.
வேட்டைக்காரனும் திருப்பாச்சியும் பல விஷயங்களில் ஒன்று. இரண்டுமே ஒரே ஃபார்முலா. முதல் பாதி முழுவதும் காதல்,காமெடி. இண்டெர்வல் பிலாக்கில் ஒரு ட்விஸ்ட்டோ, சவாலோ இருக்கும். இரண்டாம் பாதி ஆக்ஷன் மேளா.இது புது ரூட்டல்ல. அண்ணாமலை ரூட்தான். விஜயைத் தவிர யாரும் இப்படி ஒரு படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று கிண்டலாக சொன்னார் ஒரு பதிவர். வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்பதற்கு திருப்பாச்சி,சிவகாசி வெற்றியைத் தொடர்ந்து திருப்பதி, தர்மபுரி என்று பாதாளத்திற்கு சென்ற பேரரசுவே சாட்சி. இத்தனைக்கும் அஜித்தும், விஜயகாந்தும் மாஸ் ஹீரோக்கள்தான். விஜய்க்கு இது சரியான பாதையாகத்தான் எனக்கு தெரிகிறது. அவர் படங்கள் பெர்லின் திரைப்பட விழாவுக்கு எல்லாம் போவதில்லை. அதிகபட்சம் திருவனந்தபுரம்தான். ஆனால் பிரச்சினை திரைக்கதை. வில்லனிடம் ஹீரோ மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனம் இருந்தால் என்னால் ரசிக்க முடிகிறது.
உதாரணம் திருவிளையாடல் ஆரம்பம். ஒவ்வொரு காட்சியும் தனுஷ் தனது புத்திசாலித்தனத்தால் பிரகாஷ்ராஜை திணறடிப்பார். அப்படி ஒரு படத்தில் விஜய் நடித்தால் மரண மாஸ். ஆனால் அந்தப் படத்தில் அந்த மாஸ் மிஸ். வேட்டைக்காரனின் குறையாக நான் கண்டது இந்த புத்திசாலித்தனத்தை மட்டும்தான். மற்றபடி இசை,காமெடி, விஜயின் சேஷ்டைகள் என எல்லா டிபார்ட்மெண்ட்களிலும் படம் ஸ்கோர் பண்ணுகிறது. முதல் பாதி இரண்டே இரண்டு பாடல்கள்தான். ஆனால் 90 நிமிடம். நிச்சயம் அதை நம்மால் உணர முடியவில்லை. முதல் பாதியில் ஒரே குறை அந்த அருவி சீன். முதல் நாள் ரசிகர்களே அதை ரசிக்கவில்லை. குருவியில் செய்த அதே தவறு. மற்றபடி முதல் பாதி நன்றாகவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் ஏற்கனவே ஹிட்டடித்த புலி உறுமுது பாடல் முதலில் வருகிறது. முதலில் சின்னத்தாமரைப் பாட்டு, இரண்டாவதாக புலி உறுமுதுவைப் போட்டிருக்கலாம். படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கும். அம்மன் பாட்டு என்று கிண்டலடித்தவர் கூட திரையில் நன்றாக இருப்பதாக சொன்னார். அடுத்தடுத்த காட்சிகள்தான் வேகத்தடைகள். தன் நண்பனை போட்டுத் தள்ளிய வில்லனின் மகனை விஜய் கொல்லும் சீனில் கொஞ்சம் கூட கோபமே இல்லாமல் “உன் புள்ளைக்கு மொள்ளமாறித்தனம் கத்துக் கொடுத்த. ரவுடித்தனம் செய்ய கத்துக் கொடுத்த. நீச்சல் அடிக்க கத்துக் கொடுத்தியா” என்கிறார் சிரித்துக் கொண்டே. இதைத்தான் அதிஷா “அடிக்கிற சுனாமியில் கிடைக்கிற அல்வாத்துண்டை ரசிக்கவா முடியும்?” என்கிறார். க்ளைமேக்ஸ் மகா கொடுமை. இந்த கடைசி அரை மணி நேரத்தால் படமே மொக்கை என்கின்ற லெவலுக்கு ஆக்கிவிட்டார்கள்.விஜயின் கடைசி மூன்று படங்களிலுமே க்ளைமேக்ஸ் சப்பைதான்.
தமிழ் சினிமா கற்றுக் கொள்ளாத இன்னொரு விஷயம் நேரம். ”2.15 மணி நேரம்தான் படம் ஓடுது. அதனால் இந்த சினிமாவுக்கு போக வேண்டாமென்று” ஆ முதல் இசட் வரை எந்த ஏரியா ரசிகனும் கவலைக் கொள்வதில்லை. இருந்தாலும் 3 மணி நேரம் படம் எடுப்பேன் என்று மல்லுக்கு நிற்கிறார்கள். படம் ஜவ்வு என்று டாக் வந்தவுடன் தியேட்டரிலே எடிட்டிங் நடக்கிறது. ஜி யில் தொடங்கி கந்தசாமி, பொக்கிஷம் என இது தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. வேட்டைக்காரனையும் கொஞ்சம் வெட்டலாம். விறுவிறுப்பு கூடும்.
படத்தில் விஜயிடம் நான் ரசித்தவை: சஞ்சய் ஆடுவதை கொஞ்சம் பெருமையுடனும் நக்கலாக பார்த்து சிரிப்பது, டிரெயின் சீன்,“உங்களுக்கு ஒரு புள்ளை இருந்தா நம்பி அனுப்புவீங்க இல்ல” என்று சொல்லும் இடம், டயலாக் டெலிவரி, ”உனக்கெல்லாம் போலிஸ்காரன் பத்தாதுடா. வேற வேற வேட்டைக்காரன் தாண்டா” என்று கர்ஜிப்பது(இது டிரெய்லரில் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடவில்லை), என் உச்சி பாடலில் தலைகீழாக நடப்பது..
குருவி, வில்லு வந்த போது பதிவர்களில் ஒருவர் கூட நன்றாக இருந்ததாக எழுதவில்லை. ஆனால் வேட்டைக்காரனை லக்கி ஓக்கே என்கிறார். பரிசல் பாஸ் ஆகிவிட்டதாக சொல்கிறார். ஜெட்லீ முதல் பாதி சூப்பர் என்கிறார். சிங்கப்பூர் சேவியர் தூள் என்கிறார். இன்னும் சிலர் நன்றாக இருப்பதாகவே எழுதி இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பன் அழைத்து எத்தனை முறை பார்த்தாய் என்றான். ரெண்டு தடவடா என்றால், இப்படி ஒரு தல படம்(அவன் அஜித் ஃபேன்) வந்திருந்தால் நான் வீட்டுக்கே போக மாட்டேன். நாலு ஷோவும் பார்ப்பேன் என்கிறான். சத்யமில் வியாழன் வரை 90% ஃபுல் ஆகிவிட்டது. இது படத்தின் மவுத் டாக் வெளிவந்த பின் ரிச்ர்வ் செய்யப்பட்ட நாட்கள். ஆக வேட்டைக்காரன் விஜய்க்கு வெற்றிப்படம் என்பது உறுதி ஆகிவிட்டது. எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்பது பெரிய விஷயமே இல்லை.அதே போல்தான் மற்றவர்களுக்கும்.
வேட்டைக்காரன் எவ்வளவு பெரிய வெற்றி, விஜய்க்கு இது மறுவாழ்வா?, விஜயின் கடந்த கால தோல்விகள்.. இன்னும் பல விஷயங்களைப் பற்றிய என் பார்வை விரைவில்…
நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம்.
புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது..
அண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள்
இலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.
இது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள்.
வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் – இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யலாமே என்றால் (ஒருவேளை இத்தாலி சோனியா பிறந்த நாடு என்பதால் வேண்டாம் என்கிறார்களோ ) இல்லையாம்! சனத்துக்கு தமிழ் மீன்தான் வேண்டுமாம்.
நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும். சிறிலங்கன் எயர்லைன்ஸ் இல் பயணிக்க வேண்டாம் என்றால் அப்போது தமிழீழத்தை விட மலிவான கட்டணம்தான் முக்கியம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்றால் அப்போதும் தமிழீழத்தை விட தமிழ் மீன்தான் முக்கியம். இவர்களுக்கு ஏற்றமாதிரி புறக்கணிப்புக் கோருவதென்றால் இனி சுவிஸ் தமிழர்களே கனேடிய டொலர்களைப் புறக்கணியுங்கள் என்றோ அல்லது கனேடியத் தமிழர்களே சுவிஸ் பிராங்குகளைப் புறக்கணியுங்கள் என்றுதான் கோர முடியும்.
0 0 0
ஐரோப்பாவில் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் 3 இருக்கின்றன. அதிலொன்று இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகின்றது. இன்னொன்று கட்டண ஒளிபரப்பில் தன்னை இந்தத் தேசியம் தன்னாட்சி என்ற சிக்கல்களில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றயது பாவம் இந்தச் சனத்தை நம்பி தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற கோதாவில் இறங்கி சம்பளங்கள் கூட கொடுக்க முடியாத சிக்கலில் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் – சன் தொலைக்காட்சிக்கும் இருக்கிற வரவேற்பில் அவர்கள் தமது குழுமத் தொலைக்காட்சிகளை எட்டு பத்து என இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களது தெரிவென்பதே நிஜமாகினும் தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.
0 0 0
vijayவேட்டைக்காரனைப் புறக்கணிக்கக் கோருவோர் மீதும் கோருகிற மக்கள் மீதும் இருக்கிற என் பார்வைகள் இவைதான். ஒரு சினிமாவைப் புறக்கணிக்கக் கோருகிறவர்களும் சினிமாத்தனமாகவே கோருகின்றனர். அல்லாதுவிடின் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். ? இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் ! விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் ! சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார்! என்ற காரணங்கள் சந்தி சிரிக்க வைக்கின்றன. சீமான் விஜயை வைத்துப் படமெடுத்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
0 0 0
Facebook குறிப்புக்கள்
வேட்டைக்காரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தொலைகாட்சி படங்களை புறக்கணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் – நமது மக்களைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு ! இந்தப் புறக்கணிப்புக்களை தமிழீழத்தின் பெயரால் கோருவதும் – மக்கள் அதை கு**டியில் தட்டிவிட்டுச் சென்று பார்ப்பதுமாக இந்த வெளயாட்டு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சனம் திரும்பத் திரும்ப தமக்கு தமிழீழம் வரையறைக்குட்பட்ட வகையிலேயே தேவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அவ்வப்போது தவளைகளைப்போல அவ்வப்போது கத்திக் கொண்டிருக்கிறோம்.
* * *
தயவு செய்து ஒவ்வொரு படங்களும் இப்பிடியிப்பிடி வரும்போது தொங்கித் தொங்கிக் கத்துறதை விட்டுட்டு நேர்த்தியான முறையில் (இந்த சும்மா அதிருதில்ல ) என்ற அலுக்கோசுத்தன புறக்கணிப்புக் கோரல்களை கைவிட்டு – ஏன் இந்திய சினிமா இந்திய சுற்றுலா உட்பட்ட இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈழத்தமிழன் திரட்டப்பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என நீருபிக்க வேண்டிய தேவையையும் மக்களுக்கு சொல்லுங்கள்.
ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் திரட்டப்பட முடிகிற அளவுக்கு ஒரு சக்தியே அல்ல என்பதுதான் எனது முடிவு. அது முறியடிக்கப்படுமானால் மகிழ்ச்சி.. வேட்டைக்காரனுக்கு முன்பாக இலங்கை விமானங்கள் இலங்கை பொருட்கள் என அனைத்தையும் புறக்கணித்து நீங்கள் ஒரு சக்திதான் என்பதை நிரூபியுங்கள்..
இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்.
* * *
கனநாளாக யோசித்தேன்.. ஏன்ராப்பா இப்பிடி ஐஞ்சு சேத்துக்கும் பெறுமதியில்லாத , சும்மாவே தோற்றுப்போகப் போகிற ஒரு மொக்கைப் படத்திற்காக இப்பிடி அடிபிடிப் படுறாங்கள் என்று..
இதில ஒரு உளவியல் இருக்கு. தோற்றுப் போன இனமொன்றின் மன வெப்பியாரம் இப்பிடித்தான் டே.. அவன்தான் அடிச்சவன்.. டே இவன்தான் அடிச்சவன் என்றும் டே அவனை அடி.. டே இவனை அடி என அலைபாய்ஞ்சு கதறும். இதில ஆத்திரப்பட ஏதுமில்லை. இந்த நிலை வந்ததே என அனுதாபப்படத்தான் முடியும்.
* * *
வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..
* * *
எல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா ? அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.
* * *
கட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.
“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”
facebook கில் எனது நண்பர் ஒருவர் போட்டு இருந்த விளக்கம் Youtube கிளிப்புடன்
பாட்டுக்கு விளக்கம்வேற:-
புலி உறுமுது புலி உறுமுது (Referring to Tigers)
URUMUTHU MEANS THE TIGER IS SCARRED THAT SOMEONE IS COMING TOWARDS HIM… AND JUST TO SCARE HIM OFF… IT’S GETTING ON THE DEFENCE STANCE!!!!
புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் ((Referring to Rajapakshe) வர்றத பாத…்து
He is saying on the above sentence, Tigers are roaring when they see Rajapakshe coming….
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது (Referring to Tigers) வேட்டைக்காரன் வர்றத பாத்து (Referring to Rajapakshe)
WHEN THE TIGERS SEE RAJAPAKSHE COMING, THEY ARE GETTING SCARED, THEY ARE SHAKING, AND THEY ARE LOOSING THEIR STAND!!!!!!
பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் (Referring to Rajapakshe)
நிக்காம ஓடு. ஓடு.. ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… (Referring to Tigers)
வாறன் பாரு வேட்டைக்காரன்.. (Referring to Rajapakshe)
NOW HE IS SAYING… RUN RUN RUN EELAM TAMILS, RAJAPAKSHE IS COMING!!!!
புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்துSee More
முதலில் படத்தின் ரிசல்ட்! பின்னர் விமர்சனம்.
படம் மரணமொக்கை!. இப்படி ஒரு படம் தமிழில் எடுக்கப்படுவது இரண்டாயிரத்து இருநூற்றி முப்பத்தைந்தாவது முறையாக இருக்கலாம். திரைப்படம் எத்தனை மொக்கையாக இருந்தாலும் அதை தட்டி ஓட்டி பெண்டு நிமிர்த்தி டிங்கரிங் வேலை பார்த்து முரட்டுத்தனமாக விளம்பரம் செய்து எப்படியாவது ஹிட்டாக்கி காசு பார்த்து விடுவார்கள். இந்த படத்தையும் ஓட வைத்து விடுவார்கள். இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.
சில ஆண்டுகளுக்கு முன் மதுரையின் சினிப்பிரியா தியேட்டரில் ஏதோ ஒரு விஜய் பட ரிலீஸ். பட்டாசுகளும் பிளக்ஸ் பேனர்களும் பேண்டு வாத்தியங்களுமாக அதிரிபுதிரியாக இருந்தது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருந்தேன். கேட் வாசலில் பாவமாக சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என்னடா தம்பி டிக்கட் கிடைக்கலயா? என துக்கம் விசாரித்தேன். டிக்கட் கிடைக்காதவன் சோகம் இன்னொரு டிக்கட் கிடைக்காதவனுக்குத்தானே தெரியும், ஆனால் அவனோ அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே! என்றான். ஏன்டா அப்புறம் ஏன் இப்படி இருக்க என்றேன், எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.
இப்படிப்பட்ட இளம் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு வேட்டைக்காரன் அல்ல லட்சம் வேட்டைக்காரர்கள் தமிழ்கூறும் நல் உலகில் அன்றாடம் ரிலீஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கப்போகின்றனர். அதனால் அதுகுறித்து சமூக அவலக் கவலைகளின்றி திரைப்படம் குறித்து மட்டும் பேசுவோம்.
படத்தின் கதை உய்யாலா உய்யலாலா! சம்பவாமி யுகே யுகேவென ரவுடிகளை அழிக்க அவதாரம் எடுக்கும் ஹீரோ பற்றியதுதான். அதற்காக ஒரு சென்டிமென்ட்.கொஞ்சம் காமெடி. நிறைய மசாலா. நிறைய தலைவலி எல்லாம் சேர்த்து நம் டவுசரை அவிழ்க்கின்றனர். சம்பவாமி யுகே யுகே என்பது நிஜமாக இருந்தால் இப்படி படம் எடுத்து டார்ச்சர் கொடுக்கும் இயக்குனர்களை அழிக்க கிருஷ்ண பகவான் இன்னொரு முறை அவதாரம் எடுக்கலாம். முடியல!
ஹீரோ விஜய். இன்னும் நான்கு படம் இப்படியே நடித்தால் நாட்டு மக்கள்தொகை பெருமளவில் குறைந்து இந்தியா வல்லரசாகிவிடும். தோளை குறுக்கிக்கொண்டு கையை கும்பிடுவது போல் கோர்த்து என்னங்கண்ணா சொல்லுங்கண்ணா என்று மூக்கில் பேசி காமெடி பண்ணுகிறார். தன் சின்னகண்களை அகலமாய் திறக்க முயற்சித்து புருவம் உயர்த்தி ஏய் நேனு எவரு தெலுசா என அடித்தொண்டையில் சவால் விடுகிறார். கெட்டப்பெல்லாம் மாற்றிக்கொண்டு நன்றாக நடனமாடுகிறார். அந்த பிரவுண் ஹேர்ஸ்டைல் சகிக்கலை. படம் முழுக்க பாட்ஷா ரஜினி போலவே நடந்து ‘கொல்’கிறார். படம் முழுக்க பகவதி படத்தில் ஏற்கனவே போட்டிருந்த அதே கோட்டைப்போட்டுக்கொண்டு அதை போல புலிஉறுமுது புலி உறுமுது என நடக்கிறார். சேம் கோட் நமக்கு சேம் பிளட்! சாரி விஜய் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிலிம்!
ஹீரோயின் அனுஷ்கா , பாதி படம் வரைக்கும் விரைப்பாக அலைகிறார். பின்னர் ஆடுகிறார். ஓடுகிறார். அழுகிறார். இப்போதெல்லாம் நாயகிகள் காமெடி டிராக் போல உபயோகப்படுத்தப்படுகின்றனர். முதல் பாதி காமெடிக்கு யூஸ்ஃபுல்லாக ஏதோ பண்ணியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ செய்யப்போகிறார் என மிகவும் எதிர்பார்த்த வில்லன் , விஜயை பயமுறுத்துகிறேன் பேர்வழி என ஏதேதோ செய்கிறார். விஜய் விரைப்பாக அதைபார்த்துக்கொண்டிருக்கிறார். பயம் வரலையாம்! நமக்கு சிரிப்புதான் வருகிறது. வில்லன் கோஷ்டி சீரியஸாக செய்வதெல்லாம் நல்ல காமெடி கலாட்டா! சண்டைக்காட்சிகளிலும் காமெடிக்குப் பஞ்சமில்லை.
படத்தின் ஆங்காங்கே குட்டிகுட்டியாக நல்ல வசனங்கள் வந்து விழுகின்றன. அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்! படத்தின் பெரும் பகுதி ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டிருப்பார்கள் போல பாட்ஷா காலத்து செட்டு! இன்னும் கொஞ்சம் செலவழித்திருக்கலாம்.
ஏவிஎம் தயாரிப்பாம். ம்ம்!
வில்லுவிற்கும் குருவிக்கும் எவ்வளவோ தேவலாம். க்யூட் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம். மற்ற படி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அப்பாவி ஜனங்களுக்குத்தான் திண்டாட்டம்! சிவ சம்போ!